புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 8 I_vote_rcap 
4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 03, 2011 6:07 pm

First topic message reminder :

Nalla Tamil Arivom - purananuru

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே

பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Feb 19, 2012 1:04 pm

போர்வீரனின் பொருளாதார நிலைமை

நாட்டுக்கு போர் பல புரிந்து, பல பதக்கங்கள் பெற்றாலும், பெருமைகளை வென்றாலும் போர் வீரர்களின் பொருளாதார நிலைமை பின் தங்கி தான் உள்ளது. போர், போர்ப்பயிற்சி, விளையாட்டு, கேளிக்கை என்று அவனது காலம் செல்வதால் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணம் குறைந்துவிடுகிறது. அல்லது நம் நாடு, நம் மக்கள் நம்மை அரசு கவனிக்கும் என்று எண்ணி தங்களை கவனிக்க விட்டு விடுகின்றனர். போரில் வீரத்துடன் போரிடும் வீரனுக்கு வழங்கப்படும் சலுகைகள் பெரும்பாலும் போர்முனை பாரா போர்வீரனுக்கோ, அல்லது அங்கு ராணுவத்தில் வேலை செய்யும் வேறு வகை பணியாளர்கள் தான் அனுபவிக்க வேண்டிய சூழல் அமைகிறது. பிணங்களில் சட்டை பைகளிலும் காசு கிடைக்குமா என்று எண்ணும் மனிதனைப் போல், சிலநேரங்களில் இவர்களின் சலுகைகளிலும் ஊழல் செய்து பணம் பறிக்கும் அரசியல்வாதிகள் தான் இன்று நிலவுகிறது. அன்றைய தமிழகத்தில் ஊழல் இல்லையென்றாலும் வீரத்துடன் போரிட்ட தமிழக வீரன் பணம் பொருளுக்கு ஆசைப்படவில்லை, தன் சுய தேவைக்கு வேண்டிய பணத்தையும் சம்பாதிக்கவில்லை என்று இந்தப் பாடல் கூறுகிறது. தனக்கு கிடைத்ததையும் அடுத்தவருக்கு கொடுத்து, பிறரிடம் இருந்து கடன் வாங்கி தன் குடும்பத்தை காக்கும் போர் வீரனின் நிலைமையை இந்த புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது.

பாடல் 24: வரகின் குப்பை (புறம் 327)
பாடியவர் : பெயர் தெரியவில்லை
திணை : வாகை துறை : மூதின் முல்லை

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி,
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே

பொருள் விளக்கம்

எருது கால்களைக் கொண்டு உழாமல், இளைஞர்கள் காலால் மிதித்து பதப்படுத்திய சிறு விளைநிலத்தில் விளைந்த, புல் உடன் ஒத்து இருக்கும் குப்பை போன்ற வரகு பயிர்கள். இதில் இருந்து விளைந்த கொஞ்சம் அளவு உள்ள வரகை கடன் வாங்கியவருக்குக் கொடுத்தது போக மீதி இருக்கும் கொஞ்சம் வரகையும் தன் இல்லத்தை தேடி வரும் பசித்த பாணனுக்கு கொடுத்து உதவுவான் இந்த வீரன். அதுவும் தீர்ந்து விட்டால் வறுமையுடன் இருக்கும் தன் மனைவி, குழந்தை, சொந்த பந்தங்களுக்கு உதவுவதற்கு கடன் கொடுக்கும் அற்பர்களிடன் சென்று மீண்டும் கடன் வாங்குவான். போர் வந்தால் பெரு நில மன்னனுக்காக போரிட்டு வெற்றி பெரும் வீரம், நம்பிக்கை அவனிடம் உள்ளது. வெற்றிப் பெற்று மன்னனிடம் இருந்து கொண்டு வரும் பொருளைக் கொண்டு அவனது கடன் அடைப்பான்.

பாடலின் சிறப்பு :

எருது கொண்டு உழும் அளவுக்குக் கூட இந்தப் போர் வீரனுக்கு நிலம் இல்லை. வெறும் காலால் உழுது வரகு விதைக்கிறான். புல் போன்று இருக்கும் விளைந்து இருக்கும் குப்பையில் இருந்து கிடைக்கும் கொஞ்சம் வரகை (கேழ்வரகு) எடுக்கிறான். அதில் கிடைத்ததை கடன் வாங்கியவனுக்கு கொடுத்து விடுகிறான். இருக்கும் மிச்சதையும் வீட்டு வாசலில் வந்து காத்து இருக்கும் பாணனுக்கு கொடுத்து விடுகிறான். தன் தேவைக்கு மறுபடி கடன் வாங்குகிறான். நெல் விளைவிக்கும் அளவுக்கு நிலமும் இல்லை, வசதியும் இல்லை. வசதி குறைந்த காலத்திலும் தன்னை நாடி வந்த ஒருவனுக்கு இருப்பதை கொடுக்கும் உண்ணத குணம் அவனிடம் இருக்கிறது. போர் வந்தால் மட்டுமே பொருள், அது இல்லாத காலத்தில் போர் வீரர்கள் வறுமையில் இருந்தனர் என்பதை இந்த பாடல் மூலம் உணரலாம்.

தொடரும்........

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 2:51 pm

மன்னனின் இழப்பு

போர் வெற்றியை மட்டும் தருவதில்லை, பல உயிர்களின் இழப்பையும் தருகிறது. வீரம், ஆண்மை, பெருமை, பீடு, குடிமரபு என்ற பல பேசினாலும் இழப்பு இழப்பு தான், ஈடு செய்ய இயலாதது மனித உயிரின் இழப்பு. வெற்றிக் கொண்டாட்டம், கூத்து, கள், களிப்பு என்ற வாழ்க்கை போரின் ஒரு புறம் இருந்தாலும், மறு புறம் அமங்கலி, தந்தை இழந்தவன், கை இழந்தவன், கால் இழந்தவன் என்ற நிலையும் இருக்கிறது. அன்று மட்டுமல்ல, இன்று வரை.........

இப்படி நடந்த ஒரு வீரப் போரில் உயிரை இழந்து இருக்கும் மன்னனின் நாட்டில் இருக்கும் கவலையான நிலைமையை இந்த புறப் பாடல் விளக்குகிறது.

பாடல் 25: முல்லையும் பூத்தியோ (புறம் 242)
பாடியவர் : குட வாயிற் தீரத்தனார்
பாடப்பட்டோன் : ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான்
திணை : பொதுவியல் துறை : கையறுநிலை

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.

பொருள் விளக்கம்

போருக்குச் செல்லும் இளைஞர்கள் சூட மாட்டார்கள், வளையல் அணிந்த பெண்கள் சூட மாட்டார்கள், நல்ல யாழ் கொண்டு பாட்டுப் பாடி மக்களை, மன்னனை மகிழ்விக்கும் பாணனும் சூட மாட்டான், அவன் துணைவி பாடினி (பாணினியும்) சூட மாட்டாள், இப்படி யாரும் சூடாமல் இருக்கும் இந்த ஒல்லை ஊரில் வீணாக ஏன் பூத்துக் கிடைக்கிறாய் முல்லைப் பூவே.... தன் ஆண்மையின் வீரத்தால் எதிரிகளைக் கடந்து வலிமையான வேல் எறியும் பெருஞ் சாத்தான் இறந்த பின்னும் பூத்தியோ முல்லைப் பூவே........கவலையில் கலை இழந்து இருக்கும் இந்த ஒல்லை ஊரில் யார் உன்னைச் சூடப் போகிறார்கள்..

புறம் வளரும் ........

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Mar 25, 2012 6:12 pm

நல்ல தமிழ் அறிவோம் - இலக்கியம் அறிதல் மிகப் பெரிய மானுட செயலாக இப்போது இருக்கிறது. தங்களின் தமிழ்ப் பணி மாந்தர்தம் தமிழறிவு தாகப் பிணிக்கு மருந்தாக அமைந்துள்ளது.

இயல்பாய் கவிதைகள் நவீனம், புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ என எழுதும் எனக்கு இந்த இலக்கியங்களைப் புரட்டும் போது வாழ்நாள் இன்னும் நீடித்திருக்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறேன். அத்துணை இலக்கியங்களையும் இந்த வாழ்வு முடிவத்ர்க்குள் படித்தாகவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 9:38 pm

சூடாத முல்லையைப் பாடி ஒல்லையின் போர்க்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய போர்நிறுத்தப் பாடல் அருமை. இதே போல ஒளைவையார் தூது சென்ற பாடல் இரண்டு உள்ளன புறநானூற்றில். பொதுவாக காதலும் வீரமும் மட்டுமே சங்க காலம். அதில் புலவர்கள் மன்னனின் வீரத்தைப் பாடிப் பாடி உசுப்பேற்றி விடுவார்கள் எனறு பரவலாக நிலவி வரும் கருத்துக்குப் புரனானது இப்பாடல்கள்.

அழகிய தேவையான பதிவுக்கு நன்றி சதாசிவம். நன்றி

[You must be registered and logged in to see this link.]
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 25, 2012 9:42 pm

உண்மையாகவே அருமையான பதிவு. மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 26, 2012 3:58 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்ல தமிழ் அறிவோம் - இலக்கியம் அறிதல் மிகப் பெரிய மானுட செயலாக இப்போது இருக்கிறது. தங்களின் தமிழ்ப் பணி மாந்தர்தம் தமிழறிவு தாகப் பிணிக்கு மருந்தாக அமைந்துள்ளது.

இயல்பாய் கவிதைகள் நவீனம், புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ என எழுதும் எனக்கு இந்த இலக்கியங்களைப் புரட்டும் போது வாழ்நாள் இன்னும் நீடித்திருக்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறேன். அத்துணை இலக்கியங்களையும் இந்த வாழ்வு முடிவத்ர்க்குள் படித்தாகவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

மிக்க நன்றி ஐயா,
தமிழில் அற்புதமான நூல்கள் பல உள்ளன, இன்றைய தலைமுறைக்கு இவற்றை எடுத்துச் சொல்வது நம் கடமை. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, கல்வி கரையில, கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கின் பிணி பல என்ற நாலடியார் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 26, 2012 4:00 pm

Aathira wrote:சூடாத முல்லையைப் பாடி ஒல்லையின் போர்க்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய போர்நிறுத்தப் பாடல் அருமை. இதே போல ஒளைவையார் தூது சென்ற பாடல் இரண்டு உள்ளன புறநானூற்றில். பொதுவாக காதலும் வீரமும் மட்டுமே சங்க காலம். அதில் புலவர்கள் மன்னனின் வீரத்தைப் பாடிப் பாடி உசுப்பேற்றி விடுவார்கள் எனறு பரவலாக நிலவி வரும் கருத்துக்குப் புரனானது இப்பாடல்கள்.

அழகிய தேவையான பதிவுக்கு நன்றி சதாசிவம். நன்றி

நன்றி ஆதிரா,
அகமும் புறமும் தமிழின் இரு கண்கள், இந்த கண்ணில் கனிந்த கவிதைகளை மேலும் கற்போம்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 26, 2012 4:01 pm

sinthiyarasu wrote:உண்மையாகவே அருமையான பதிவு. மகிழ்ச்சி

நன்றி
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 31, 2012 6:19 pm

வளவன் ஏறா வான ஊர்தி

போரில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவது மட்டும் ஒரு மன்னனின் வாழ்க்கை இல்லை. அதைத் தாண்டி அறம், வேள்வி, மக்கள் நலப்பணி என்று பல கடமைகள் உள்ளது. இப்படி உள்ள கடமைகள் செய்து புகழ் பட வாழ்ந்தவர்களே சிறந்த மன்னன், பலர் பிறக்கிறார்கள் பலர் இறக்கிறார்கள், ஆனால் புகழ் பட வாழ்ந்தவர் ஒரு சிலரே, அவருக்கு தான் சொர்க்கம் புக வானத்தில் இருந்து வான ஊர்தி வரும் என்று இந்தப் புறப் பாடல் புகல்கிறது.

பாடல் 26: புலவர் பாடும் புகழ் (பாடல் 27)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி
திணை:
பொதுவியல் துறை : முதுமொழிக் காஞ்சி

சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக

பொருள் விளக்கம்

சேற்றில் பிறந்த நூறு இதழ் கொண்ட தாமரையை ஒத்து இருக்கும் நூற்றுக்கணக்கான மன்னர்களில் பெரியவர், சிறியவர், வேண்டியவர், வேண்டாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று வேற்றுமைப் பார்க்காமல் பசுவுக்கும் நீதியளித்த மனுநீதி சோழன் போல் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்கும் சிறந்த சோழ குடியில் பிறந்தவன் நீ. அப்படிச் சிறந்த சோழ குடியில் பிறந்து அரச வாகை சூடியவர்களை நினைக்கையில் புகழும், புலவர்களால் பாடல் பெற்றவர்கள் ஒரு சிலரே, தாமரையின் இலை போல் எதற்கும் பயன் படாமல் வீணாகக் சென்றவர் பலர்.

அறம், ஈகை, வேள்வி செய்து மக்களால் போற்றப்பட்டு புலவர்களால் பா மாலை சூடிய புகழ் உடைய மன்னர்கள் செய்வினை முடிந்து இறக்கும் தருவாயில் அவர்களை சொர்கத்துக்கு வானத்தில் இருந்து வரும் வளவன் இல்லா (ஓட்டுனர் இல்லா) வான ஊர்தி வந்து அழைத்து செல்லும் என்று அறிவுடைய பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன் . மக்களுக்கு தந்தை போல் இருக்கும் என் தந்தையே, சேட்சென்னி நலங்கிள்ளி. வளம் பெற்றவன் குறைந்து போதலும், குறைவாக இருப்பவன் வளம் பெறுதலும், பிறந்தவன் இறப்பதும், இறந்து போன உயிர் மீண்டும் பிறந்து வருதலும் உண்மை. இதை கல்வி கற்றும் உணராதவரையும் உணரச் செய்து, நிலவை தலையில் ஏந்தி இருப்பவன் காக்கும் இந்த உலகத்தில் வசதி படைத்தவர் ஆயினும், வசதி குறைந்தவர் ஆயினும் உன்னை நம்பி முகம் வாடி வந்தவருக்கு அருளும் வள்ளல் நீ. இதற்கு மாறாக உன் குணத்துக்கு மாறுபட்டு உனக்கு எதிரினறாய் இரப்பவருக்கு கொடுக்காமல், ஈத்துவக்கும் இன்பத்தை உணராது இருப்பவர் கொடாமல் இருக்கும் கெட்டவர்களில் வல்லவர் ஆகுக. நீ கொடுத்து உதவும் நல்லவர்களில் வல்லவன் ஆவாய்.

பாடலில் சிறப்பு

வான ஊர்தி கண்டு பிடிக்கா காலத்துக்கு முன் காலத்திலே தமிழன் வளவன் ஏறாத வான ஊர்தியைப் பற்றி பாடி இருக்கிறான். தமிழனின் அறிவு, அளவு கடந்த கற்பனை இதில் விளங்குகிறது. ஒரு சில நூற்றாண்டுக்கு முன்னர் ஆகாய விமானம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் அதை கற்பனையில் வரைந்த ஐரோப்பிய ஓவியரை வியந்து பார்க்கும் நம் தமிழக இளசுகள் பல நூற்றாண்டுக்கு முன்னர் பைலட் இல்லாது தானாக இயங்கும் விமானத்தை பாடிய தமிழரின் கற்பனையை, அறிவியல் அறிவை வியந்து பார்க்க வேண்டும். புகழ் பெற்ற குடியில் பிறந்தாலும் மக்களுக்கு நன்மை செய்து வாழ்பவனே சிறந்த மன்னன், அவனுக்கே சொர்க்கத்தின் வாசல் திறந்து இருக்கும் என்றும் இந்தப் பாடல் கூறுகிறது.

புறம் வளரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:57 pm

கடைசி பாடலுக்கான விளக்கம் மிக அருமை அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக