ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தான் 25 காசு பேசுகிறேன்..

+3
மகா பிரபு
realvampire
ரஞ்சித்
7 posters

Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by ரஞ்சித் Sat Jul 02, 2011 4:06 pm

சிறு பிள்ளைகளின் உள்ளங்கையில் கூட, அடம்பிடிக்காமல் உட்கார்ந்து கொள்ளும் தன்னடக்கம் மிக்கவன் நான். கீழே விழுந்தால் கூட ஓங்கி ஒலிக்காமல், மெல்ல சிணுங்குவேன். அன்று...ஆடவரின் சட்டைப் பைக்குள் நான் இருந்தால், அவர்கள் மகாராஜா. குட்டி குட்டி வட்டமாய், சுற்றி சுற்றி வந்த என்னை பெருமைமிக்க இந்திய அரசு இன்று, செல்லாக் காசாக்கி விட்டது.
ஆம்...நான் தான் 25 காசு பேசுகிறேன்... இன்னமும் உங்கள் வீட்டில் நான் இருக்கிறேன். உங்களிடமிருந்து விடைபெறும் முன், என்னைப் பற்றி, நான் வாழ்ந்த காலத்தைப் பற்றி கூறுகிறேன்...படிக்கிறீங்களா?பிரிட்டீஷார் என் மதிப்பறிந்து, ஏக மரியாதை செய்தனர். அது ஒரு கனாக்காலம். ஒரு நாள் முழுக்க வயலில் வேலை செய்தால், என்னையே கூலியாக தந்தனர். அந்தக் கூலியில் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, அரிசி, பலசரக்கு பொருட்களை வாங்க உதவினேன். மற்றவர்களைப் போல வெறும் இரும்பல்ல, நான். நிக்கலும், வெள்ளியும் கலந்த கலவை. விலைமதிப்புள்ளவன். கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக என்னை உண்டியலில் இடும் போதெல்லாம் நான் சந்தோஷப்பட்டேன். இறைவனுக்காக என்னை அர்ப்பணிக்கின்றனரே என்று. வெள்ளியால் ஆன என்னை மட்டும் தனியாக பிரித்து, பொருட்கள் செய்ய பயன்படுத்திக் கொண்டனர். அந்தளவிற்கு பெருமையானவாக இருந்தேனே...

வியாபாரிகளிடம் அதிகளவில் சேரும் என் இனத்தவரை, வங்கியில் மூட்டையாக கொண்டு போய் தான் சேர்த்தனர். வங்கியாளர்களும் முகம் சுளிக்காமல், எங்களை எண்ணி மதிப்பிட்டனர். அப்போதெல்லாம் வெற்று காகிதத்திற்கு (ரூபாய்) அதிகம் பெருமையில்லை. 1956 ல் ஒரு பவுன் தங்கத்தின் விலையே 63 ரூபாய் தான். என்னை விலையாக கொடுத்து, தியேட்டரில் சொகுசான "பாக்ஸ்' இருக்கையில் அமர்ந்து சினிமாவை ரசித்தனர். டவுன் பஸ்சில் "25 காசு டிக்கெட்'...உங்களுக்கு ஞாபகமில்லையா? என்னை தந்தால், ஒரு "சென்ட்' பாட்டில், சீருடை தைக்க பயன்படும் ஒரு கஜம் காடாத்துணி, 60 பக்க நோட்டு வாங்கலாம்.
எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், ஒரு ரூபாயுடன் என்னையும் சேர்த்து, "ஒன்ணேகால் ரூபாயை குலதெய்வத்திற்கு முடிஞ்சு போடுங்க' என்றுக்கூறி, எனக்கு பெருமை சேர்த்தனர். முன்பெல்லாம், இறந்தவர்களின் நெற்றியில் என்னை வைத்த காலமும் உண்டு. அது போய் பல வருஷம் ஆச்சு..எனக்கு மதிப்பு குறைய ஆரம்பிச்ச பிறகு நெற்றியில என் இடத்த அண்ணன் ஒரு ரூவா பிடிச்சிடுச்சு. அந்த காலத்தில் என்னை வெள்ளி காசாக உருவாக்கி, மதிப்பு கொடுத்தனர்.

1931க்கு பின், பித்தளை, இரும்பு, குரோமியம் கலந்த காசாக மாற்றி, எனது மதிப்பை குறைத்தனர். அப்போது எனக்கு "நாலணா' என்று பெயர். அரைபடி பொறிக்கடலை, அச்சுவெல்லம் வாங்கும் அளவிற்கு எனக்கு மதிப்பு இருந்தது. அப்போது எல்லாம் என்னை ஓட்டலில் தந்தால் திருப்தியாக வயிராற சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டவர்கள்... இவ்வுலகைவிட்டு விடைபெற்றுவிட, நான் மட்டும் விதிவிலக்கா என்ன?எல்லோரும் ஏற்றி விட்ட விலைவாசியால்... இங்கு இனி என்னை தந்தால் என்ன கிடைக்கும்? எனவே நான் நிரந்தரமாக முடக்கப்பட்டு விட்டேன். இனி, எங்கோ ஓர் மூலையில் அருங்காட்சியகத்தில் மட்டுமே என்னை காணமுடியும். இனி உங்களை பொறுத்தவரை, நான் ஒரு செல்லாக் காசு.

தினமலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty Re: நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by realvampire Sat Jul 02, 2011 4:15 pm

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. India25pa1959
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty Re: நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by மகா பிரபு Sat Jul 02, 2011 4:25 pm

புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty Re: நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by SK Sat Jul 02, 2011 4:30 pm

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty Re: நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by உமா Sat Jul 02, 2011 4:44 pm

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196 நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 677196
நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி....
இப்போ 25 பைசா, அடுத்து 50 பைசா, அடுத்து வந்துக்கொண்டே தான் இருக்கும், ஆனால் அப்போ நாம் இருக்க மாட்டோமே....
நான் தான் 25 காசு பேசுகிறேன்.. 755837



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty Re: நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 4:47 pm

"நாலணா" இந்த சொல்லும் விரைவில் மறைந்து விடும் அடுத்தது "எட்டனா" தான்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty Re: நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by ANTHAPPAARVAI Sat Jul 02, 2011 4:56 pm

கவலைப் படவேண்டாம் 25 பைசா!

நாங்கள் ஒரு நாளும் உங்களை மறக்க மாட்டோம். ஒரு பைசாவைக் கூட நாங்கள் இன்னும் மறக்கவில்லை, உங்களையா மறந்து விடுவோம்!

என்ன... உங்கள் பெயரை சொல்லி எங்களை பலர் ஏமாற்றப் போகிறார்கள் என்பது தான் உண்மை!

பல பொருள்களின் விலை நிர்ணயத்தில் நீங்கள் இடம் பெறுவீர்கள். ஆனால், யாரும் உங்களை (மீதியை) எங்களுக்குத் தரவே மாட்டார்கள்!!

சென்று வாருங்கள்!! மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

நான் தான் 25 காசு பேசுகிறேன்.. Empty Re: நான் தான் 25 காசு பேசுகிறேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum