ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்

+3
பிரகாஸ்
வித்யாசாகர்
சிவா
7 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Mon Sep 14, 2009 4:22 am

தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள்

298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள், ஏ, ஒ, உம் முதலியவைகளாம்.

299. ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.

தேற்றம் உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.
வினா நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா
எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.
பிரிநிலை அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.
எதிர்மறை நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.
இசைநிறை ’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.
ஈற்றசை ’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.

300. ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிhடமறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.

சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். உயர்வுசிறப்ப ஒரு பொருளினது இழிவைச் சிறப்பித்தல. இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.

(உதாரணம்)

ஒழியிசை படிக்கவோ வந்தாய். இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
தருவதால் ஒழியிசை
வினா குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என
வினாப் பொருளைத் தருதலால் வினா.
உயர்வு சிறப்பு ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு
இழிவு சிறப்பு ஒஓ கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு சிறப்பு
எதிர்மறை அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை
தெரிநிலை ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாத் தெரிநிலை.
கழிவு உறுதியுணராது கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி யுணராரோ எனன்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல்
பிரிநிலை இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவணைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை
அசை நிலை காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை.

301. உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.

எச்சம், இறந்தது தழீஇய எச்சமும், எதிரது தழீஇய எச்சமும் என இரு வகைப்படும்.

உதாரணம்.

எதிர்மறை களவு செய்யினும் பொய்கூறலை யொழிக.
இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத்
தருதலால் எதிர்மறை
உணர்வு சிறப்பு குறவருமருளுங்குன்றம். இங்கே குன்றியுனுயர்வைச் சிறப்பித்தலால் உயர்வுச் சிறப்பு.
இழிவு சிறப்பு புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை. இங்கே உடம்பினிழிவைச் சிறப்பித்தலால் ஐயம்.
ஐயம் அவன் வெல்லினும் வெல்லும். இங்கே துணியாமையை உணர்தலால் ஐயம்.
எச்சம் சாத்தனும் வந்தான். இங்கே கொற்றன் வந்ததன்றி என்னும் பொருளைத்தந்தால் இறந்தது தழீஇயவெச்சம். இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத்தந்தால் எதிரது தழீஇயவெச்சம்.
முற்று எல்லாரும் வந்தார். இங்கே எஞ்சாப்பொருளைத் தருதலால் முற்று.
எண் இராவும் பகலும். இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண்;.
தெரிநிலை ஆணுமன்று, பெண்ணுமன்று. இங்கே இன்னதெனத் தெரிவித்து நிற்றலால் றெரிநிலை
ஆக்கம் பாலுமாயிற்று. இங்கெ அதுவே மருதுமாயிற்று என்னும் பொருளைத்தருவதால் ஆக்கம்.

302.எதிர்மறை வினை அடுத்து வருமிடத்து முற்றும்மை எச்சவும்மையுமாம்.

உதாரணம்.
எல்லாரும் வந்திலர். அவர் பத்துங் கொடார்.

இங்கே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள் படதலால், எச்சவும்மையுமாயிற்று.

303. எச்சவும்மையாற் றழுவப்படம் பொரட் சொல்லில் உம்மையில்லையாயின், அச் சொல் எச்ச வும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படும்.

உதாரணம்.
சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான்.
இங்கே சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள்

304. என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும் வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும் ஆகிய ஏழபொருளிலும் வரும்.

உதாரணம்.
வினை மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான் இங்கே வினையோடியைந்தத.
பெயர் அழுக்கா றெனவொரு பாவி. இங்கே பெயரோடியைந்நது.
எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து, இங்கே என்ணோ டியைந்தது.
பண்பு வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ டியைந்தது.
குறிப்பு பொள்ளென வாங்கே புறம் வேரார். இங்கே குறிப்போ டியைந்தது.
இசை பொம்மென வண்டலம்பும் புரிகுழலை. இங்கே இசையோ டியைந்தது.
உவமை புலி பாய்தெனப் பாய்ந்தான். இங்கே உவமையோ டியைந்தது.

என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க

305. மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.

உதாரணம்.
நிலலென்ற நீரென்றா தீயென்றா
நிலலென்னா நீரெனாத் தீயெனா
நிலனொடு நீரொடு தீயொடு

306. பெயர்ச் செவ்வெண்ணும், எண்ணிடைச் சொற்கள் ஏழனுள்ளும் ஏ, என்றா, எனா, என்னு மூன்றும், தொகைச் சொற் பெற்று வரும். உம், என்று, என, ஒடு, என்னு நான்கும், தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்.

பெயர்ச் சொவ்வெண்ணாவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்றொக்கு நிற்ப வருவது.

(உதாரணம்)

செவ்வெண் சாத்தன் கொற்ற னிருவரும் வந்தார்.
ஏகாரவெண் சாத்தனே கொற்றனே யிருவரும் வந்தார்.
என்றாவெண் சாத்தனென்றா கொற்றனென்றா விருவரும் வந்தார்.
எனாவெண் சாத்தனெனாக் கொற்றனெனா விருவரும் வந்தார்.
உம்மையென் சாத்தனுங் கொற்றனு மிருவரும் வந்தார்.
என்றெண் சாத்தனென்று கொற்றனெனன் றிருவருளர்.
எனவென் சாத்தனெனக் கொற்றனெனன விருவருளர்.
ஒடுவெண் சாத்தனொடு கொற்றனொ டிருவருளர்.
உம்மையெண் சாத்தனுங் கொற்றனும்; வந்தார்.
என்றெண் நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்றளவறு காயமென் றாகிய வுலகம்.
எனவெண் நிலவென நீரெனத் தீயெனக் காற்றென வளவறு காயமென் வாகிய உலகம்.
ஒடுவெண் நிலனொடு நீரொடு தீயொடு காற்றொ டவளறு காயமொடாகிய வுலகம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Mon Sep 14, 2009 4:23 am

307. என்று, என, ஒடு என்னும் இம் மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும் பொருட்டோறு நிற்றலேயன்றி ஒரிடத்து நிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து மற்றைப் பொருடோறும் பொருந்தும்.

உதாரணம்.

என்றெண் வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். இங்கே என்றென்பது வினையென்று பகை யென்று என நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.
எனவெண் பகைபாவ மச்சம் பழியென நான்கு - மிகவாவா மில்லிறப்பான் கண். இங்கே என என்பது, பகையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது..
ஒடுவெண் பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து - மிருடீர வெண்ணிச் செயல். இங்கே ஒடுவென்பது பொருளோடு கருவி யோடு காலத்தோடு வினையோடு இடனொடு என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.

308.வினையெச்சங்கள், எண்ணப்படுமிடத்து ஏற்பன வாகிய எண்ணிடைச் சொல் விரியப் பெறும், தொகாப்பெற்றும், ஒரிடத்து நின்று பிரிந்து கூடப் பெற்றும் வரும். அவை தொகைபெறுதலில்லை.

உதாரணம்.

உம்மையெண் - கற்றுங் கேட்டுங் கற்பனை கடந்தான்
என்றென் - உண்ணவென் றுடுக்கவென்று வந்தான்
எனவெண் - உண்ணவென வுடுக்கவென வந்தான்
செவ்வென் - கற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான்
பிரிந்து கூடு மென் - உண்ண வுடுக்கவென்று வநதான்

309. அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.

உதாரணம்.
அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான்
எக்கொற்றன், கொற்றனா, யாவன்

310.கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

உதாரணம்.

ஐயம் இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இற்கே குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.
அசைநிலை கற்றதனா லாய பயனென்கொல். இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை

311. மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றும், பிறிதும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு இனமாகிய மறுதலை வினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய பிறிது.

(உ-ம்)


வினைமுற்று மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது. இஙங்கே கருதிய வினையாவது நல்வினையை வினைந்தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலை வினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலைவினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. மற்றென்றது, இங்கே விரையாதறிவாம் என்னும் மறுதலைவினையைத் தருதலால், வினைமாற்றுப் பொருளில் வந்தது.
பிறிது ஊளிற் பெருவலியாவுள மற்றொன்று, இங்கே கருதியதாவது ஊழொன்றென்பது.
அதற்கினமாகிய பிநிதாவது ஊழல்லதொன்றென்பது மற்றென்றது இங்கே ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருதலால் பிறிதென்னும் பொருளில் வந்தது.
அசை நிலை மற்றென்னையாள்க. இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தபப்பட்டு நிற்றலால் அசை நிலை

312. மன் என்னும் இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசை நிலையுமாகிய ஐந்து பொருளையும் தலுஷரும்.

உதாரணம்.

ஒழியிசை கூரியதோர் வாண்மன் இங்கே இரும்பை அறத்துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை
ஆக்கம் பண்டு காடுமன் இங்கே இன்று வயலாயிற்று என்னும் ஆக்கர் பொருளைத் தருதலால் ஆக்கம்
கழிவு சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே. இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு.
மிகுதி எந்தை யெமக்கருளுமன இங்கே மிகுதியும் அருளுவன் என்னும் பொருலைத் தருதலால் மிகுதி
அசைநிலை அதுமற் கொண்கன்றேரே. இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.

313. கொன் என்னும் இடைச்சொல், அச்சமும், பயனிலையும், காலமும், பெர்மையும் ஆகிய நான்கு பொருளையுந் தரும்.

உதாரணம்.

அச்சம் கொன்வாளி இங்கே அஞ்சும் வாளி என்னும் பொருளைத் தருதலால் அச்சம்.
பயனின்மை கொன்னே கழிந்தன் றிளமை இங்கே பயனின்றிக் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் பயனின்மை.
காலம் கொன்வரல் வடை இங்கே காதலர் நீங்கிய காலம் அறிந்து வருதலையுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம்
பெருமை கொன்னுர் துஞ்சினும் இங்கே பெரிய வூருறங்கினும் என்னும் பொருனைத் தருதலாற் பெருமை


314. அந்தில் என்னும் இடைச்சொல், ஆங்கென்னும் இடமும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளைத்தரும்.

உதாரணம்.

ஆங்கு வருமே - சேயிழை யந்திற் கொழுநற் காணிய இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால் ஆங்கு.
அசை நிலை அந்திற் கழலினன் கச்சினன் இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.

315. மன்ற என்னும் இடைச் சொல், தெளிவுப்பொருளைத் தரும்.

உதாரணம்.

தெளிவு இரத.தலி னின்னாது மன்ற இங்கே தலையாக என்னும் பொருளைத் தருதலாற் றெளிவு.

316. அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கௌ; என்னும் பொருளிலும், எரையசைப் பொருளிலும் வரும்.

உரையசை - கட்டுரைக்கண் வரும் அசை நிலை
ஒன்று சொல்வேன் கேள் - அம்ம வாழி ’’தோழி“
உரையசை - ’’ அது மற்றம்ம’’

317. ஆங்க என்நும் இடைச் சொல், உரையசைப் பொருளில் வரும்.

உதாரணம்.
உரையசை - ’’ஆங்கத்திறனல்ல யாங்கழற’’

318. ஆர் என்னும் இடைச் சொல், உயர்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.

உயர்த்தற்பொருட்டு வரும் போது ஒரமைச் சொல்லீற்றில் வரும். அசை நிலையாகும் போது உம்மை முன்னும், உம்மீற்று வினைமுன்னும் வரும்.

(உதாரணம்)


உயர்தற் பொருள் தொல்காப்பபியனார் வந்தார். தந்நையார் வந்தார்.
அசை நிலை பெயரினாகிய தொகையுமா ருளவே. இங்கே ஆர் அசை நிலையாக உம்மை முன் வந்தது. எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே. இங்கே ஆர் அசைநிலையாக உம்ம{ற்று வினைமுன் வந்தது.

319. தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.

உதாரணம்.

இடப்பன்மை - சோழநாட்டி லூர்தொறுஞ் சிவாலயம்
தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளறும்

தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.

320. இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.

உதாரணம்.

காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்

321. முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.

உதாரணம்.

காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான்
இடம் - முன்னிருந்தான், பின்னிருந்தான்

முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.
விகாரப்பட்டும் வழங்கும்.

322. வளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.

உதாரணம்.
வளா விருந்தான், சும்மா வந்தான்

323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னம் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.

விகப்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.

உதாரணம்.

ஆவது - தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு
ஆயினும் - வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன்
தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானா

324. அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

325. சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

326. கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

327.ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
-----

தேர்வு வினாக்கள்
298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச் வொற்கள் எவை?
299. ஏகாரவிடைச் சொல் எப்பொருளைத் தரும்?
300. ஒகார விடைச்சொல் எப்பொருளைத் தரும்? சிறப்பு எத்தனை வகைப்படும்? உயர்வு சிறப்பாவது யாது? இழிவு சிறப்பாவது யாது? இங்கே சிறப்பித்தலென்றது என்னை?
301. உம் என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் hரும்? எச்சம் எத்தனை வகைப்படும்?
302. ஒரு பொருளில் வரும் உம்மை மற்நொரு பொருளையுந் தருமோ?
303. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட் சொல்லில் உம்மையில்லையாயின் அச்சொல் எச்சவும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படுமோ ஈற்றிலே சொல்லப்படுமோ?
304. என, என்று என்னும் இரண்டிடைச்சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்?
305. எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொற்கள் எவை?
306. எவ்வௌ; எண்கள் தொகைச் சொற் பெற்று வரும்? எவ்வௌ; வெண்கள் தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்? பெயர்ச் செவ்வெண்ணாவது யாது?
307. எண்ணிடைச் சொற்கள் எணப்படும் பொருடோரும் நிற்கவே பெறுமோ?
308. வினை, எணப்படுமிடத்து, எண்ணிடைச் சொற் பெறாதோ?
309. அ, இ, உ, எ-ம். ஆ, யா, எ-ம். வரும் இடைச் சொற்கள் எவ்வௌ; பொருனைத் தரும்?
310. கொல் னெ;னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்?
311. மற்று என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? இங்கே வினை மாற்றென்றது என்ன? பிறிதென்றது என்ன?
312. மன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்?
313. கொன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்?
314. அந்தில் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருளைத் தரும்?
315. மன்ற என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் தரும்?
316. அம்ம என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்?
317. ஆங்க என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்?
318. இது உயர்தற் பொருட்டு வரும் போது எவ்விடத்து வரும்? அசைநிலையாகும் போது எவ்விடத்து வரும்?
319. தொறும், தோறும், என்னும் இரண்டிடைச் சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? முன், பின், என்னம் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்?
320. இனி என்னும் இடைச் சொல் எப்பொருளைத் தரும்?
322. வாளா, சும்மா என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்?
323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? விகற்பமாவது என்ன?
324. இரக்கப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்?
325. இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
326. அச்சுப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
327. அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Mon Sep 14, 2009 4:24 am

குறிப்பின் வரும் இடைச்சொற்கள்

328. அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.

329. துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.

330. பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.

தேர்வு வினாக்கள் - 328. ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 329. அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை? 330. விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை?

இசைநிறை

331. ஒடு, தெய்ய என்பன, இசை நிறையிடைச் சொற்களாம்.
-----

தேர்வு வினா

இசைநிறைச் சொற்கள் எவை?


அசைநிலை

332. மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல்லாம்.

333. மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசையிடைச் சொற்களாம்.

334. யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும் இருபத்தொன்றும், மூவிடத்துக்கும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.
------

தேர்வு வினாக்கள்
332. வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல் எது?
333.முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்கள் எவை?
334. மூவிடத்துக்கும் வரும் அசையிடைச் சொற்கள் எவை?
இடையியல் முற்றிற்று



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Tue Sep 15, 2009 2:53 am

2.4. உரியியல்

335. உரிச்சொல்லாவது, பொருட்கு உரிமை பூண்டு நிற்கும் பண்பை உணர்த்துஞ் சொல்லாம்.

336. உலகத்துப் பொருள், உயிர்ப் பொருளும், உயிரல் பொருளும் என, இரு வகைப்படும்.

337. இப்பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண்புந் தொழிற்பண்பும் என இரு வகைப்படும்.

338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகளாவன: அறிவு, அச்சம், மானம், பொறுமை, மயக்கம், வருப்பு, வெறுப்பு, இரக்கம், நன்மை, தீமை முதலியனவாம்.

339. உயிர்ப்பொருள்களின் றொழில் பண்புகளாவன: உண்ணல், உடுத்தல், உறங்கள், அணிதல், தொழுதல், நடத்தல், ஆக்கல், காத்தல், அழித்தல் முதலியனவாம்.

340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகளாவன: பல்வகை வடிவங்களும், இரு வகைநாற்றங்களும், ஐவகை நிறங்களும், அறு வகைசுவைகளும், எண்வகைப் பரிசங்களுமாம்.

பல்வகை வடிவங்களாவன: வட்டம், இருகொணம், முக்கோணம், சதுர முதலியன.

இருவகை நாற்றங்களாவன: நறு நாற்றம், தீநாற்றம் என்பவைகளாம்.

ஐவகை நிறங்களாவன: வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்பவைகளாம்.

அறு வகைசுவைகளாவன: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்பவைகளாம்.

எண்வகைப் பரிசங்களாவன: வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழு மெனல், சருச்சரை என்பவைகளாம்.

341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுக்கும் உரிய தொழிற்பண்புகளாவன: தோன்றல், மறைதல், வளர்தல், சுரங்கள், நீங்கள், அடைதல், நடுங்கள், ஒலித்தல் முதலியவைகளாம்.

342. மேற்கூறிய குணப்பண்பும், உண், உறங்கு முதலிய முதனிலையளவிற் பெறப்படுந் தொழிற்பண்பும், ஆகிய பொருட் பண்பை உணர்த்துஞ் சொற்கள் வினைச் சொற்கள் எனப்படும்.

343. இவ்வுரிச் சொற்கள், ஒரு குணத்தையும் பல குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும்.

344. சால், உறு, தவ, நனி, கூர், கழி, என்பன, மிகுதி என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம்.

உதாரணம்.
சால் - தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
உறு - உறுயுனறந் துலகூட்டி
தவ - ஈயாது வீயு முயிர் தவப் பலவே
நனி - வந்து நனி வருந்தினை வாழிய நெஞ்சே
கூர் - துணிகூ ரெவ்வமொடு
கழி - கழிகண் ணோட்டம்

345. செழுமை என்பது வளனுங் கொழுப்பும் என்னும் இரு குணத்தை உணர்த்தும் உரிச்சொல்லாம்.

உதாரணம்.
வளம் - செழும் பல் குன்றம்
கொழுப்பு - செழுந் தடிதின்ற செந்நாய்

இவ்வாறே ஒரு குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும் உரிச்சொற்களெல்லாவற்றையும் நிகண்டு வாயிலாக அறிந்து கொள்க.
-----

தேர்வு வினாக்கள்
335. உரிச் வொல்லாவது யாது?
336. உலகத்துப் பொருள் எத்தனை வகைப்படும்?
337. இப்பொருள்களுக்குரிய பண்பு எத்தனை வகைப்படும்?
338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகள் எவை?
339. உயிர்ப் பொருள்களின் றொலிற்பண்புகள் எவை?
340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகள் எவை?
341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னம் இரு வகைப் பொருள்களுக்குமுரிய தொழிற்பண்புகள் எவை?
342. தொழிற் சொல்லை மேலே வினைச் சொல்லென்றும் இங்கே உரிச்சொல்லென்றுஞ் சொல்லியது என்னை?
343. இவ்வுரிச் சொற்கள் பொருட் குணங்களை எவ்வாறு உணர்த்தி வரும்?
345. பல குணங்களை உணர்த்தும் உரிச் சொல் எது?


உரியியல் முற்றிற்று.

சொல்லதிகாரம் முற்றுப் பெற்றது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Tue Sep 15, 2009 2:55 am

3. தொடர்மொழியதிகாரம்
3.1 தொகை நிலைத் தொடரியல்

346. தொடர் மொழியாவது, ஒன்றோடொன்று பொருள் படத் தொடர்ந்து நிற்கும் இரண்டு முதலிய சொற்களினது கூட்டமாம்.

347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி, தொகைநிலைத் தொடர், தொகா நிலைத் தொடர் என இரு வகைப்படும்.

348. தொகைநிலைத் தொடராவது, வெற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே கெட்டு நிற்ப, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொற்றன்மைப்பாட்டுத் தொடர்வதாம்.

ஒரு சொற்றன்மைப்பட்டுதலாவது பிளவு படாது நிற்றல்.
----

தேர்வு வினாக்கள்
346. தொடர் மொழியாவது யாது?
347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி எத்தனை வகைப்படும்?
348. தொகைநிலைத் தொடராவது யாது?

தொகைநிலைத் தொடர்ப்பாகுபாடு



349. அத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என, அறு வகைப்படும்.
-----

தேர்வு வினா
349. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?


வேற்றுமைத் தொகை

350. வேற்றுமைத் தொகையாவது, ஐ, முதலிய ஆறு வேற்றுமையுருபும் இடையிலே கெட்டு நிற்கப், பெயரோடு பெயரும் பெயரோடு பெயரும் பெயரோடு வினை வினைக்குறிப்புப் பெயர்களுந் தொடர்வதாம்.

உதாரணம்.
நிலங்கடந்தவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தலைவணங்கினவன் - மூன்றாம்; வேற்றுமைத்தொகை
சாத்தன்மகன் - நான்காம் வேற்றுமைத்தொகை
ஊர்நீங்கினவன் - ஐந்தாம் வேற்றுமைத்தொகை
சாத்தன்கை - ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றக்கூகை - ஏழாம் வேற்றுமைத்தொகை

கையையுடைய களிறு என்பது கைக்களிறு எனவும், பொன்னாற் செய்தகுடம் என்பது பொற்குடம் எனவும், வருவன, உருபும் பொருளும் ஒருங்கு கெட்ட வேற்றுமைத் தொகை எனக் கொள்க.

351. ஐயுருபுங் கண்ணுருபும், தொடர் மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும்.

உதாரணம்.
கடந்தானிலம் - ஐயுருபு தொக்கது
இருந்தான்மாடத்து - கண்ணுருபு தொக்கது

இவ்வாறு வருவனவெல்லாம், உருபு கெட்டு நிற்கினும் ஒரு சொற்றொன்மைப் படாது பிளவுபட்டு நிற்றலினாலே, தொகாநிலைத் தொடரெனவே கொள்ளப்படும்.

352. வேற்றுமையுருபுகள், விரிந்து நிற்குமிடத்து எப்பொருள் படுமோ அப்பொருள் படுமிடத்தே, தொக்கு நிற்கப் பெறும்; அப்பொருள் படாவிடத்தே தொக்கு நிற்கப் பெறவாம்.

உதாரணம்.
சாத்தனை யடித்தான் என ஐயுருபு விரிந்து நிற்குமிடத்துச் செயப்படு பொருள் படுதல் போலச் சாத்தானடித்தான் என ஐயுருபு தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஐ யுருபு தொக்கு நிற்கப்பெறா தென்றறிக.

சாத்தனொடு வந்தான் என ஒடுவுருபு விரிந்து நிற்குமிடத்து உடனிகழ்ச்சிப் பொருள் படுதல்போலச் சாத்தன் வந்தான் எனத் தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஒடுவுருபு தொக்கு நிற்கப் பெறாதென்றறிக.
------

தேர்வு வினாக்கள்
350. வேற்றுமைத் தொகையாவது யாது?
351. தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும் உருபுகள் உளவோ?
352. வேற்றுமையுருபுகள் எவ்விடத்துந் தொகாப்பெறுமோ?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Tue Sep 15, 2009 2:56 am

வினைத் தொகை


353. வினைத் தொகையாவது, பெயரெச்சத்தின் விகுதியுங் காலங்காட்டும் இடைநிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச் சொற் றொடர்வதாம்.

உதாரணம்.

நேற்றுக் கொல் களிறு
முன் விடு கணை இறந்தகால வினைத்தொகை
இன்று கொல் களிறு
இப்பொழுது விடு கணை நிகழ்கால வினைத்தொகை
நாளைக் கொல் களிறு
பின் விடு கணை எதிர்கால வினைத்தொகை

இவை, விரியுமிடத்துக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும், எ-ம். விட்ட, விடுகின்ற, விடும். எ-ம். விரியும் எனக் கொள்க.

கொள்களிறு, விடுகணை என்றாற் போல் வன, முக்காலமும் பற்றி வரின், முக்காலவினைத் தொகை எனப்படும்.

வருபுனல், தருகடர், நடந்திடு குதிரை என வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வரும்.
-----

தேர்வு வினாக்கள்
353. வினைத் தொகையாவது யாது?
கொல்களிறு முதலியன, முக்காலமும் பற்றி வரின், எவ்வாறு பெயர் பெறும்?
வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வருமோ?


பண்புத் தொகை

354. பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் உருபு கெட்டு நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப்பெயர் தொடர்வதாம்.

பண்பு, வண்ணம் ,வடிவு, அளவு, சுவை, முதலியனவாம்.

ஆகிய என்பது, பண்புக்கும், பண்பிக்கும், உளதாகிய ஒற்றுமையை விளக்குவதோரிடைச் சொல்.

(உதாரணம்)

செந்தாமரை
கருங்குதிரை வண்ணப் பண்புத்தொகை
வட்டக்கல்
சதுரப்பலகை வடிவுப் பண்புத்தொகை
ஒருபொருள்
முக்குணம் அளவுப் பண்புத்தொகை
துவர்க்காய்
இன்சொல் சுவைப் பண்புத்தொகை

இவை, விரியுமிடத்துச் செம்மையாகிய தாமரை, வட்டமாகிய கல், ஒன்றாகிய பொருள், துவர்ப்பாகிய காய் என விரியும்.

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் பண்புருபு கெட்டு நிற்கப், பொதுப்பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருண்மேல் வந்து தொடர்வதாம்.

உதாரணம்.

ஆயன் சாத்தன் - பொதுப்பெயரோடு சிறப்புப் பெயர்
சாரைப்பாம்பு - சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர்

இவை விரியுமிடத்து, ஆயனாகிய சாத்தன், சாரையாகிய பாம்பு என விரியும். ஆயன் சாரை என்பன பண்பல்லவாயினும் பண்பு தொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவது மாகிய இயைபுபற்றி , இவை போல்வனவும் பண்புத்தொகை எனப்பட்டன.
-----

தேர்வு வினாக்கள்
354. பண்புத் தொகையாவது யாது? பண்பென்பன எவை?
ஆகிய என்பது என்ன சொல்?
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது யாது?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Tue Sep 15, 2009 2:59 am

உவமைத் தொகை

355. உவமைத் தொகையாவது, போல முதலிய உவமவுருபு கெட்டு நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொற்றொடர்வதாம்.

இவ்வுவமை, வினை, பயன், மெய், உரு, என்பன பற்றி வரும்.

(உதாரணம்)

புலிக்கொற்றன் - வினையுவமைத் தொகை
மழைக்கை - பயகுவமைத் தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருபுவமைத் தொகை

இவை விரியுமிடத்துப், புலிபோலுங் கொற்றன், மழை போலுங் கை, துடி போலு மிடை, பவளம் போலும்வாய் என விரியும்.
-----

தேர்வு வினாக்கள்
355. உவமைத்தொகையாவது யாது?
இவ்வுவமை எவை பற்றி வரும்?


உம்மைத் தொகை

356. உம்மைத் தொகையாவது, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகையளவைகளாற் பொருள்களை அளக்குமிடத்து, எண்ணும்மை இடையிலும் இறுதியிலுங் கெட்டு நிற்கப், பெயரோடு பெயர் தொடர்வதாம்.

உதாரணம்.

இராப்பகல்
ஒன்றேகால் எண்ணலளவையும்மைத் தொகை
கழஞ்சேகால்
தொடியேகஃசு எடுத்தலளவையும்மைத் தொகை
கலனேதுணி
நாழியாழாக்கு முகத்தலளவையும்மைத் தொகை
சாணரை
சாணங்குலம் நீட்டலளவையும்மைத் தொகை

இவை விரியுமிடத்து, இராவும் பகலும், ஒன்றுங் காலும், கழஞ்சுங் காலும், காலனுந் தூணியும், சாணுமரையும் என விரியும்.

357. உயர்திணை யொருமைப்பாலில் வரும் உம்மைத் தொகைகள், ரகரமெய்யுங் கள்விகுதியுமாகிய பலர்பால் விகுதியுடையனவாய் வரும்.

உதாரணம்.
சேரசோழ பாண்டியர்
தேவன்றேவிகள்

அஃறிணையொருமைப் பாலிலும் பொதுத் திணை விகுதி பெறாதும், பெற்றம் வரும்.

உதாரணம்.
நன்மை தீமை நன்மை தீமைகள்
தந்தை தாய் தந்தை தாய்கள்
------

தேர்வு வினாக்கள்
356. உம்மைத் தொகையாவது யாது?
357. உயர்திணையொருமையில் வரும் உம்மைத் தொகைகள், ஒருமை விகுதியோடு நிற்குமோ பரர்பால் விகுதி பெறுமோ?
அஃறிணை யொருமைப் பாலிலும் பொதுத்திணையொருமைப் பாலிலும் வரும் உம்மைத்தொகைகள் பன்மைவிகுதி பெற்ற வரவோ?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Tue Sep 15, 2009 3:03 am

அன்மொழித் தொகை


358. அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம் பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் படத், தொகுவதாம்.

உதாரணம்.

1 பூங்குழல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலை கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலினையுடையாள் என விரியும்

போற்கொடி என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைக்கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாலாகிய தொடியினையுடையாள் என விரியும்

கவியிலக்கணம் என்பது நான்காம் வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கவிக்கிலக்கணஞ் சொல்லப்பட்ட நூல் என விரியும்.

பொற்றாலி என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாகிய தாலியினையுவடயாள் என விரியும்.

கிள்ளிக்குடி என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கிள்ளியினது குடியிருக்குமூர் என விரியும்.

கீழ்வயிற்றுக்கழலை என்பது ஏழாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கீழ் வயிற்றின்கண் எழுந்த கழலைபோல்வான் என விரியும்.

2 தாழ்குழல் என்பது வினைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தாழ்ந்த குழலினையுடையாள் என விரியும்.

3 கருங்குழல் என்பது பண்புத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கருமையாகிய குழலினை யுடையாள் என விரியும்.

4 தேன்மொழி என்பது உவமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தேன் போலு மொழியினை யுடையாள் என விரியும்.

5 உயிர்மெய் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது உயிருமெய்யுங் கூடிப்பிறந்த எழுத்து என விரியும்.
------

தேர்வு வினா
358. அன்மொழித் தொiயாவது யாது?


தொகைநிலைத் தொடர் மொழிகள் பலபொருள் படுதல்
359. தொகைநிலைத் தொடர் மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, ஒரு பொருளைத் தருவன வன்றி, இரண்டு முதல் ஏழெல்லையாகிய பல பொருள்களைத் தருவனவும் உளவாம்.

உதாரணம்.
(1) தெய்வ வணக்கம் - இரண்டு பொருள்
1. தெய்வத்தை வணங்கும் வணக்கம், 2. தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம்.

(2) தற்சேர்ந்தார் - மூன்று பொருள்
1. தன்னைச் சேர்ந்தார், 2. தன்னோடு சேர்ந்தார், 3. தன்கட் சேர்ந்தார்.

(3) சொல்லிணக்கம் - நான்கு பொருள்
1. சொல்லினதிலக்கணம், 2. சொற்கிலக்கிணம், 3. சொல்லின் கணிலக்கணம் 4. சொல்லினதிலக்கணஞ் சொன்ன நூல்.

(4) பொன்மணி - ஐந்து பொருள்
1. பொன்னாலாகிய மணி, 2. பொன்னாகிய மணி, 3. பொன்னின் கண் மணி, 4. பொன்னோடு சேர்ந்த மணி, 5. பொன்னு மணியும்.

(5) மர வேலி - ஆறு பொருள்
1. மரத்தைக் காக்கும் வேலி, 2. மரத்திற்கு வேலி, 3. மரத்தினது வேலி, 4. மரத்தின புறத்து வேலி, 5. மரத்தாலாகிய வேலி, 6. மரமாகிய வேலி.

(6) சொற்பொருள் - ஏழு பொருள்
1. சொல்லாலறியப்படும் பொருள், 2. வொல்லினது பொருள், 3. சொற்குப் பொருள், 4. சொல்லின் கட் பொருள், 5. சொல்லும் பொருளும், 6. வொல்லாகிய பொருள், 7. சொல்லானது பொருள்.
------

தேர்வு வினாக்கள்
359. தொகை நிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, அவைகளுள், ஒரு பொருளைத் தருவனவன்றிப் பல பொருள்களைத் தருவனவும் உளவோ?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Tue Sep 15, 2009 3:05 am

தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள் சிறக்கும் இடங்கள்

360. தொகைநிலைத் தொடர்மொழிகளுள்ளே, வேற்றுமைத் தொகையிலும், பண்புத்தொகையிலும், முன் மொழியிலாயினும், பின் மொழியிலாயினும் பொருள் சிறந்து நிற்கும்; வினைத் தொiயிலும், உவமைத் தொகையிலும், முன் மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்; உம்மைத் தொகையில் அனைத்து மொழியிலும் பொருள் சிறந்து நிற்கும்; அன்மொழித் தொகையில் இரு மொழியுமல்லாத புற மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்.

(உதாரணம்)

வேங்கைப்பூ, வெண்டாமரை என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம் முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.

கண்ணிமை, செஞ்ஞாயிறு என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலகுதலின்றி நிற்றலால், பின் மொழிகளிற் பொருள் சிறந்தன.

ஆடு பாம்பு, வேற்கண் என வரும் வினைத் தொகை எவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம்முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.

இராப்பகல், சேரசோழ பாண்டியர் என வரும் உம்மைத் தொகைகளிலே, அனைத்து மொழிகளும் இனம் விலக்கலும் விலாக்காமையுமின்றி நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தன.

பொற்றொடி, உயிர்மெய் என வரும் அன்மொழித் தொகைகளிலே, வொல்லுவொனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருண் மேலதகாது, இவ்விரு மொழியுமல்லாத உடையாண் முதலிய புறமொழிப் பொருண்மேலேதாதலால், அப்புற மொழிகளிற் பொருள் சிறந்தன.
-----

தேர்வு வினா
368. தொகைநிலைத் தொடர்மொழிகளுள், எந்தெந்தத் தொடரில் எந்தெந்த மொழியிற் பொருள் சிறந்து விளங்கும்?


தொகைநிலைத் தொடரியல் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by சிவா Wed Sep 16, 2009 6:14 pm

3.2. தொகாநிலைத் தொடரியல்

361. தொகாநிலைத் தொடராவது, இடையே வேற்றுமையுருபு முதலிய உருபுகள் கெடாமலும்., ஒரு சொற்றன்மைப்படாமலும், சொற்கள் பிளவு படத் தொடர்வதாம்.
----

தேர்வு வினா
தொகாநிலைத் அதாடராவது யாது?



தொகா நிலைத் தொடர்ப்பாகுபாடு



362. அத்தெபாக நிலைத்தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும்.

உதாரணம்.

1 சாத்தன் வந்தான் எழுவாய்த் தொடர்
2 சாத்தா வா விளித்தொடர்
3 குடத்தை வனைந்தான்
வாளால் வெட்டினான்
இரப்போர்க்கீந்தான்
மலையினிழிந்தான்
சாத்தனது கை
மணியின்க ணொளி வேற்றுமைத் தொகா நிலைத் தொடர்
4 உண்டான் சாத்தன்
குழையன் கொற்றன் வினைமுற்றுத் தொடர்
5 உண்ட சாத்தன்
காரிய சாத்தன் பெயரெச்சத் தொடர்
6 உண்டு வந்தான்
இன்றி வந்தான் வினையெச்சத் தொடர்
7 மற்றொன்று இடைச் சொற் தொடர்
8 கடிக்கமலம் உரிச்சொற் தொடர்
9 பாம்பு பாம்பு அடுக்குத் தொடர்


363. வேற்றுமைத் தொi, விரிந்த விடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராம். வினைத் தொகை, விரிந்த விடத்து பெயரெச்சத் தொகாநிலைத் தொடராம். பண்புத்தொகையும், உண்மைத் தொகையும் விரிந்த விடத்து முன்னது இடைச்சொற்றொடரும், பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சச் தொடருமாம். அன்மொழித் தொகை விரிந்தாவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் முதலேற்பனவாம்.
-----

தேர்வு வினாக்கள்
362. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
363. வேற்றுமைத் தொகை விரிந்த விடத்து என்ன நிலைத் தொடராம்? வினைத் தொகை விரிந்த, விரிந்த விடத்து என்ன தொகாநிலைத் தொடராம்?
பண்புத் தொகையும், உம்மைத் தொகையும் விரிந்த விடத்து என்ன தொடராம்? உவமைத் தொகை, விரிந்த விடத்து என்ன தொடராம்?
அன்மொழித் தொகை, விரிந்த விடத்து என்ன தொடராம்?


எழுவாய்த் தொடர்க்கும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை

364. எழுவாய்க்கு வினைமுற்றைப் வினைமுற்றைப் பயிலையாகக் கொள்ளுமிடத்து, வினைமுதல் விசேடணமாக வினைமுக்கிய பொருளாம்.

உதாரணம்.
சாத்தன் வந்தான்: இங்கே சாத்தன் இது அசய்தான் என வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.

வந்தான் சாத்தன்: இங்கே சாத்தன் இது அசய்தான் என வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.

தேர்வு வினா - 364. சாத்தான் வந்தான் என்னம் எழுவாய்த் தொடர்க்கும், வந்தான் சாத்தன் என்னும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை என்ன?

இடைப்பிற வரல்

365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, வருமொழியோடு இயைத்தக்க பிற செற்கள் வரவும் பெறும்.

உதாரணம்.
1 சாத்தன் (வயிரார) உண்டான்
அறத்தை (அழகுஅபறச்) செய்தான்
வாளான் (மாய) வெட்டினான்
தேவர்க்கு (செல்வம் வேண்டிச்) சிறப்பெடுத்தான்.
மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான்
சாத்தனது (இத்தடக்கை) யானை
ஊர்க்கண் (உயர்ந்த வொளி) மாடம்
சாத்தா (விரைந்து) ஒடி வா வேற்றுமையுருபு
2 வந்தான் (அவ்வூர்க்குப்போன) சாத்தன் வினைமுற்று
3 வந்த (வடகாசி) மன்னன் பெயரெச்சம்
4 வந்து (சாத்தனின்றவனூர்க்குப்) போயினான் வினையெச்சம்


உண்டு விருந்தோடு வந்தான் என்னுமிடத்து, இடையில் வந்த விருந்தென்னும் சொல் வருமொழியோடு இயைதலன்றி, விருந்தோடுண்டு வந்தான் என நிலைமொழியோடும் இயைதலால், இது போல்வன இடையில் வரப்பெறாவென்றறிக.
-----

தேர்வு வினாக்கள்
365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, பிற சொற்கள் வருதல் உண்டோ?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலக்கணச் சுருக்கம் - Page 5 Empty Re: இலக்கணச் சுருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum