ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
தினமலர் ஆன்மீக கதைகள் Poll_c10தினமலர் ஆன்மீக கதைகள் Poll_m10தினமலர் ஆன்மீக கதைகள் Poll_c10 
heezulia
தினமலர் ஆன்மீக கதைகள் Poll_c10தினமலர் ஆன்மீக கதைகள் Poll_m10தினமலர் ஆன்மீக கதைகள் Poll_c10 
mohamed nizamudeen
தினமலர் ஆன்மீக கதைகள் Poll_c10தினமலர் ஆன்மீக கதைகள் Poll_m10தினமலர் ஆன்மீக கதைகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் ஆன்மீக கதைகள்

Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:47 am

கடுகுக்குள் கடலை புகுத்துங்கள்

சென்னை நகரத்தின் சுறுசுறுப்பான பகுதியில், சாலையோர கடை போட்டு செருப்பு வியாபாரம் செய்தான் கந்தசாமி. கடைக்கு வெளியே நின்று கூவிக்கூவி அழைப்பான். கண்டுகொள்வார் யாருமில்லை. வெறுத்துப் போனான். கடை வாடகைக்கு என்ன செய்வதென்ற நிலை. வயிற்றுக்கு கடும் திண்டாட்டம். ""இனியும் நம்மால் முடியாது'' என்று தொழிலை விட்டே "ஜகா' வாங்கி விட்டான்.
அதே கடையை வாடகைக்கு எடுத்தான் சின்னசாமி. அதே தொழிலைச் செய்ய ஆரம்பித்தான். அவனுக்கும் அதே நிலைதான்! ஆனால், மனம் கலங்கவில்லை. அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டான்.
""காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் இந்தத் தெரு வழியாக வாக்கிங் வரும் முதல் 10 நபர்களுக்கு ஷு இலவசம்'' என விளம்பரம் செய்தான்.
""அடடா! விடுவார்களா மக்கள்! ஐந்து மணிக்கே எழுந்து வந்து வரிசையில் நின்று விட்டார்கள் பெரும்பாலானவர்கள். அவர்களில் முதல் பத்து பேருக்கு இலவசத்தை வழங்கினான். அவர்களை அங்கேயே அணிந்து கொள்ளச் செய்தான். அவர்கள் அதை அணிந்து நடந்ததைக் கண்ட மற்றவர்கள், அதன் கவர்ச்சியில் மயங்கி காசுக்கே வாங்க ஆரம்பித்தார்கள். இலவசமாக எவ்வளவு தொகைக்கு கொடுத்தானோ, அதை இந்த ஷுவில் ஏற்றி விட்டான். விற்பனை சூடு பிடித்தது.
கம்பெனிகளுக்கு அதிக அளவில் ஆர்டர் கொடுத்து நிறைய சம்பாதித்து பெரிய ÷ஷாரூம் துவங்கி விட்டான்.
பார்த்தீர்களா! ஆரம்பத்தில் சில வேலைகள் சிரமமாகத்தான் இருக்கும். அதற்காக அவற்றில் இருந்து பின் வாங்கி விடக்கூடாது. "கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள்' என்று திருக்குறளின் பெருமை பற்றி புலவர்கள் சொல்கிறார்கள். கடுகுக்குள்ளேயே கடலைப் புகுத்தலாம் என்றால், எதையும் சாதிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தால்,எந்தச் செயலிலும் வெற்றி காண்பது உறுதி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:48 am

ஆள் பார்த்து உதவுங்க

ஒரு சொறிநாயை ஓநாய் கொல்ல வந்தது. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக தியானத்தில் இருந்த முனிவரைச் சரணடைந்து தன் நிலையைச் சொன்னது. முனிவர் அதன் மேல் கமண்டல தீர்த்தத்தைத் தெளித்து ஓநாயாக்கி விட்டார். பலசாலியான அது, தன்னைக் கொல்ல வந்த ஓநாயை விரட்டி விட்டது. ஓநாயைக் கொல்ல ஒரு சிறுத்தை வந்தது. உடனே, ஓநாய் முனிவரைச் சரணடைய அவர் தீர்த்தம் தெளித்து சிறுத்தையாக மாற்றி விட்டார்.
சிறுத்தையை பார்த்த சிறுத்தை "இது நமது இனமாயிற்றே' என விட்டுச் சென்றுவிட்டது. சிறுத்தையைக் கொல்ல ஒரு யானை வந்தது.
சிறுத்தை வழக்கம் போல் முனிவரைச் சரணடைய அவர் அதை யானையாக்கி விட்டார். யானையைக் கொல்ல புலி வந்தது. யானை முனிவரிடம் ஓட அதை புலியாக்கி விட்டார்.
புலியைக் கொல்ல சிங்கம் வந்தது. புலியை சிங்கமாக்கி விட்டார் முனிவர். சிங்கநிலைக்கு உயர்ந்த சொறிநாய்க்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
""இனி நாம் சிங்கமாகவே இருக்க வேண்டும். ஒருவேளை, இந்த முனிவர் நம்மை மீண்டும் நாயாக்கி விட்டால், நாம் படாதபாடு படவேண்டியிருக்கும். எனவே, இவரைக் கொன்று விட வேண்டியது தான்,'' என்றெண்ணி பின்னால் நின்று பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட முனிவர் தண்ணீரைத் தெளித்து ""போ நாயே!'' என விரட்ட, அது மீண்டும் சொறிநாயாகி அழுதுகொண்டே சென்றது.
உதவி செய்வது முக்கியம். ஆனால், அதையும் தகுதியானவர்களுக்கு தான் செய்ய வேண்டும்... புரிகிறதா!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:49 am

ஆசை வைக்காதே அவதிப்படாதே

ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர்.
அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான்.
சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டியில் இருப்பது நாரதர் என்பதை அவன் அறியமாட்டான்.
""ஐயா! வெயில் கடுமையாக இருக்கிறது. நீர் வண்டியில் தானே போகிறீர்! உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காதே!'' என்றான்.
நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
அதோடு விட்டானா! ""பெரியவரே! நீர் மகா தர்மவான். கேட்டதும் இந்தக் காலத்தில் யார் கொடுக்கிறார்கள்? சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா! தலை காய்கிறது. தந்தால் சவுகரியமாக இருக்கும்,'' என்றான்.
"அதுவும் நியாயம் தான்' என்றெண்ணிய நாரதர், குடை ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். ""ஆஹா! இவன் என்ன கேட்டாலும் கொடுத்துவிடும் ஏமாளி போல் தெரிகிறது. இவனிடம் இந்த வண்டியையே கேட்டால் என்ன!'' என்று யோசித்து, ""பெரியவரே! உம் வீட்டில் ஆயிரம் வண்டிகள் இருக்கும். இந்த ஒன்றைக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்!'' என்றான்.
நாரதருக்கு கோபம் வந்து விட்டது.
""அடேய்! ஆசைக்கு அளவு வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க தேவையான இரண்டு பொருட்களைக் கேட்டாய். கொடுத்தேன். இப்போது, தேவையே இல்லாமல் வண்டியைக் கேட்கிறாயே! ஆசைக்கு அளவு வேண்டாமா! எனவே, நான் கொடுத்த பொருட்கள் மறைந்து போகட்டும்,'' என்றார். பொருட்கள் மறைந்தன. நாரதரும் மறைந்து விட்டார். அளவுக்கதிமாக ஆசைப்பட்ட ஏழை, தன் விதியையும் வாயையும் நொந்தவனாய் வெயிலில் நடக்க ஆரம்பித்தான்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:50 am

உன்னை அறிந்தால்

மாதவபுரியைஆண்ட மாதவ மன்னன், படைவீரர்களுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் தன் படையைப் பிரிந்து திசைமாறி சென்றுவிட்டான்.
பசி அதிகமாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது, ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்றான். ஒரு முனிவர் இருந்தார். மன்னனிடம், "" யார் நீ!'' என்றார்.
""பெயர் மாதவன், இந்நாட்டின் மன்னன்'' என்று பதிலளித்தான்.
""மகனே! நீ யார் என்று தான் கேட்டேனே தவிர, உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு மன்னன் உன்னைச் சிறை பிடித்தால் உன் பதவி காணாமல் போய்விடும். உண்மையில் நீ யார் என்று தான் கேட்டேன்'' என்று குழப்பினார் அவர்.
"" சுவாமி! நான் பசியோடு இருக்கிறேன். ஆனால், நீங்கள் ஏதோ விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்றான்.
இருந்தாலும், மாதவனின் மனதிற்குள், முனிவரின் உண்மையில் யார் நீ என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.
இந்த வேளையில் சத்தியகாமன் என்பவன், அந்த முனிவருக்கு வேண்டிய உணவுவகைளை கொண்டு வந்தான். அவன் முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். மாதவனை, அவன் கண்டுகொள்ளவே இல்லை.
நாட்டுக்கே மன்னனாக இருந்தும், தன்னை வணங்காமல் சென்றதை எண்ணி மாதவனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அவனிடம் நீட்டவில்லை. தனக்கு கொடுக்க முனிவருக்கு மனமில்லை போலும் என்றெண்ணி அங்கிருந்து கிளம்பினான்.
முனிவர் அவனை நிறுத்தி, ""மாதவா! சத்யகாமனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால், வணங்காமல் சென்று விட்டான். மன்னர் பதவி நிலையில்லாதது. வேறொருவன் இந்நாட்டு மன்னனாகி விட்டால், இந்த மதிப்பை நீ எதிர்பார்க்க முடியாது. உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது,'' என்று சொல்லி விட்டு, பழங்களை சாப்பிடக் கொடுத்தார்.
அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான்.
மாதவனிடம், ""அரசே! நம் கோட்டையை பகைமன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள்'' என்று பதைபதைப்புடன்.
மாதவனுக்குப் பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். ""சுவாமி! நான் அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்'' என்று மறுத்தான்.
""முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு,'' என்று முனிவர் அறிவுரை சொன்னார்.
மாதவனும் பழம் சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண்விழித்ததும், வேகமாக எழுந்து நின்றான்.
""சுவாமி! எப்படியோ நான்என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன்'' என்றான்.
""நான் இந்நாட்டின் மன்னன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்படி எத்தனையோ விதத்தில் பதில் தந்து
விட்டாய். உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா?'' என்று முனிவர் கேட்டார்.
அமைதியாக நின்ற மாதவனிடம், ""உடலோ, உள்ளமோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான நாடு, போர், வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். ஆன்மிக வாழ்வில் வெற்றியடை வதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள், '' என்று அறிவுரை சொன்னார்.
வாழ்வில் வந்து போகும் பொருட்கள் நிரந்தரமல்ல என்ற இந்த அறிவுரை உண்மையானதே என்று சிந்தித்தபடியே, தெளிந்த உள்ளத்துடன் மன்னன் கிளம்பினான்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:51 am

இதயம் தேடும் இறைவன்

அழகாக இல்லையே என வருத்தப்படுபவர்கள் இந்த உலகில் ஏராளமாக இருக்கிறார்கள். கருப்பாக இருப்பவர்களை "ஈஸ்வரன் கோயில் எண்ணெய் சட்டி, விளக்கெண்ணெய், கருப்பன்'' என்றெல்லாம் பட்டப்பெயரிட்டு கேலி செய்பவர்களைக் காண்கிறோம். அவலட்சணமானவர்களை இன்னும் மோசமாக சித்தரித்து வார்த்தைகளைக் கொட்டுவார்கள்.
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனைத் தெரியாதவர்கள் இல்லை. இவருக்கு அழகு என்பது எள்ளளவும் இல்லை. இதை லிங்கனே ஒப்புக்கொண்டிருக்கிறார். தன் முகத்தைப் பார்த்து, ""இப்படியும் ஒரு முகமா?'' என்று தானே சிரித்துக் கொள்வாராம். டக்ளஸ் என்ற செனட்டர் அவரிடம், ""உங்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன,'' என கேலி செய்வாõரம்.
அதற்கு லிங்கன்,""இல்லையே! இந்த ஒன்றைத்தானே நீண்டகாலமாக வைத்துக் கொண்டுள்ளேன்.நீங்கள் சொல்வது போல், எனக்கு இரண்டு முகம் இருக்கிறதென்றால், இன்னொன்றை எங்கே?'' என்று பதிலளித்தாராம் லிங்கன். இப்படி, அவரது முகம் பலவிதங்களில் கேலிக்குள்ளானது.
ஒருமுறை, லிங்கன் காட்டுவழியே நடந்து சென்றார். அப்போது, ஒரு பெண் குதிரையில் ஒய்யாரமாக வந்தாள்.
""யார் நீ? ''
""நான் தான் ஆபிரகாம் லிங்கன்''
""உன்னை எதற்கு அழைத்தேன் தெரியுமா?''
""தெரியாதே!''
""இனி நீ வெளியே வரக்கூடாது.''
""ஏன்?''
""நீ அவலட்சணமாக இருக்கிறாய்.
உன்னைப் பார்க்க சகிக்கவில்லை. எல்லாரும் <உன் முகத்தைப் பார்த்து முகம் சுளிப்பார்கள். மற்றவர்களை முகம் சுளிக்க வைப்பதற்காகத்தான் நீ வெளியே நடமாடுகிறாயா?'' என சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள்.
ஆனால், உண்மையில் ஆபிரகாம் லிங்கன் உலகமக்களால் இன்றும் மதிக்கப்படுகிறார். அவரது புறத்தோற்றத்தை விட அகத்தோற்றமே பெருமைக்குரியதாக உள்ளது. அவர் ஏழைகள் மீது இரக்கம் செலுத்தினார். அடிமை விலங்கை உடைக்க பாடுபட்டார். அவரது மன<உறுதியும், தியாகமும் இன்றும் மதிக்கப்படுகிறது.
இன்று உலகம் வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து ஏமாந்து போகிறது. முக அழகுள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருப்பதில்லை. அழகற்றவர்களில் பலர் அன்பானவர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் கணவனாகவோ, மனைவியாகவோ பெற்றவர்கள் நிம்மதியாக காலம் தள்ளுகிறார்கள். மனிதன் தான் முகத்தைப் பார்க்கிறான். இறைவன் இதயங்களை அல்லவா தேடுகிறான்!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:52 am

செய்யும் தொழிலே தெய்வம்

ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும் ஓடிச் சென்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு நிற்பான். அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆபரணத்தைப் புகழ்ந்து பேசி நடிப்பான்.
இன்னொரு வேலையாளோ "தானுண்டு தன் வேலையுண்டு' என்றிருப்பான். அவன் எண்ணம் எல்லாம் தோட்டத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். பூச்செடிக்கு தண்ணீர்விடுவது, பாத்தி அமைப்பது என்று நாள் முழுவதும் கடுமையாகப் பாடுபடுவான். முதலாளியை புகழ்ச்சியாக பாராட்டியதில்லை. எதுவும் பேசாமல் அவர் முன் அடக்கத்துடன் நிற்பான். சோம்பேறியின் ஏமாற்றுவேலை எத்தனை நாள் பலித்துவிடும்? உண்மையை அறிந்த முதலாளி, ஒருநாள் சோம்பேறியை தோட்டவேலையில் இருந்து வெளியேற்றினார். நல்லவனை பாராட்டியதோடு, அவனுக்கு சன்மானமாகப் பெரும்பொருள் கொடுத்து மகிழ்ந்தார்.
பூந்தோட்டம் போன்றது தான் இந்த உலகம். இதற்கு கடவுள் தான் முதலாளி. இங்கே இருவிதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஏமாற்றும் குணம் படைத்து, கடவுளின் புகழ்பாடி பக்தி செய்கிறோம் என்று சொல்பவர்கள் ஒருபுறம். தன் கடமை அறிந்து உலகிற்குப் பயனுடையவர்களாக வாழவேண்டும் என்ற லட்சியம் கொண்ட உழைப்பாளிகள்
மறுபுறம். உண்மையில், உலகின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் உழைப்பாளிகளே கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர்கள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:53 am

ஜென்ம புத்தி மாறாது

திருடன் ஒருவன் ஊர் மக்களிடம் பிடிபட்டான். அவன் வெட்கப்படும்படி கடுமையான தண்டனையை கொடுக்க அவர்கள் முடிவெடுத்தனர். என்றும் மறையாத அடையாளத்தை உண்டுபண்ண எண்ணி, மூக்கை வாளால் வெட்டி சேதப்படுத்தினர். மனம் நொந்த திருடன்,யார் கண்ணிலும் படாமல் காட்டுக்குள் ஓடிவிட்டான். அங்கு கிடைக்கும் கனி வகைகளை உண்டு வாழ்ந்தான். வழிப்போக்கர்கள் யாராவது கண்ணில் பட்டால் அவர்களிடம் இருந்து தப்பிக்க, தியானம் செய்வது போல பாசாங்கு செய்வான். நடிப்பதே நாளடைவில் நிஜமானது. அவன் பார்வையில் கனிவு உண்டானது. ஞானியாக மாறிவிட்ட திருடனை மக்கள் "காட்டு பாபா' என்று அன்போடு அழைத்தனர்.
மக்கள் அவனிடம் நெருங்க அச்சப்படுவதற்கு பதிலாக, அவனை வந்து வணங்கத் தொடங்கினர். ஆண்டுகள் பல சென்றன. பாபாவின் புகழ் மக்கள் மத்தியில் பரவியது. அவரிடம் இளைஞன் ஒருவன் உபதேசம் பெற விரும்பினான். குறுவாள் ஒன்றைக் கொண்டு வந்தால் தீட்சை அளிப்பதாக காட்டுபாபா உறுதி அளித்தார். இளைஞனும் வாளோடு திரும்பினான்.
அவனை ஆளரவம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று,"தீட்சை பெற்றுக் கொள்' என்று சொல்லி வாளால் மூக்கைத் துண்டித்தார். வலி தாளமுடியாமல் இளைஞன் அலறினான். "தம்பி! இது தான் நான் பெற்ற தீட்சை! அதையே உனக்கும் அளித்துவிட்டேன். தகுந்தவர்களுக்கு நீயும் இதே தீட்சையைக் கொடு' என்று உபதேசம் அளித்ததோடு தன் கடந்த வாழ்க்கையில் திருடனாக வாழ்ந்ததையும், தண்டனையாக மூக்கு அறுபட்டதையும் இளைஞரிடம் எடுத்துச் சொன்னார்.
ஆனால், அதன் பின் தன் தீட்சாரகசியத்தை அந்த இளைஞர் யாரிடமும் தெரியப்படுத்தவே இல்லை. மனமும் குணமும் என்றுமே மாறுவதில்லை. ஜென்மபுத்தியை என்ன செய்தாலும் மாற்ற முடியாததாகவே உள்ளது. நாம் தான் அவரவர் குணத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:54 am

மடிந்து போன மனிதநேயம்

நண்பன் செய்த உதவியை மறந்து, நன்றி கெட்டு, அவனுக்கே துரோகம் செய்த ஒருவன் இறந்து போனான். அவனை எமதூதர்கள் தர்மராஜா முன் நிறுத்தினர்.
எமதர்மன் அவனிடம், ""அடேய்! நீ நரகத்துக்குப் போ, அங்கே உன்னை எண்ணெய் சட்டிக்குள் போட்டு வறுக்கப் போகிறார்கள்,'' என்றான்.
""ஐயோ! என்னை விட்டுடுங்க சாமி! நான் அப்படி என்ன பாவம் செய்தேன்?'' என்றான்.
""அடேய்! உன் நண்பன், தனது தங்கையின் திருமணத்திற்காக வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாயை உன்னை நம்பி தந்தானே! நீயோ, அவனிடம் பணமே வாங்கவில்லை என சாதித்து, உன் தேவைக்கு பயன்படுத்தினாயே! அதனால், அந்தப் பெண்ணின் திருமணமே நின்று போனதே! உன் நண்பன் மனம் உடைந்து தற்கொலை முடிவுக்கு கூட போய் தப்பித்தானே! நினைவிருக்கிறதா! ஒரு கதை சொல்கிறேன். கேட்டு விட்டு கிளம்பு,'' என்றான்.
அந்த மனிதன் பயத்துடன் கதையைக் கேட்டான்.
வேட்டைக்கு சென்ற ஒரு வேடன் புலி ஒன்றுக்கு குறி வைத்தான். புலியோ அவன் மீது வேகமாகப் பாய்ந்து வில்லையும், அம்பையும் தட்டிவிட்டது. ஆயுதமிழந்த அவன், வேகமாக ஓடினான். புலி விரட்டியது. அவன் ஒரு மரத்தின் மேல் ஏறிக்கொண்டான்.
அங்கே ஒரு கரடி அமர்ந்திருந்தது. ""புலிக்குத் தப்பி கரடியிடம் சிக்கிக் கொண்டோமே, என்ன செய்வது? குதித்து மீண்டும் ஓடலாமா?'' என எண்ணிய போது, கரடி அவனிடம், ""நண்பனே! பயப்படாதே! உன்னை நான் கொல்ல மாட்டேன். ஒருவரிடம் அடைக்கலம் புகுந்தவர் எதிரியே ஆயினும், அவரைக் காப்பாற்றுவதே தர்மம்.
இங்கேயே இரு. புலி சென்றதும், போகலாம்,'' என்றது.
வேடனும் மரத்தில் இருந்தான். "எப்படியும் அவன் இறங்கி வந்தாக வேண்டுமே!' என புலியும் கீழேயே படுத்திருந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு தூக்கம் வர, ""வேடனே! தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து விடாதே! என் மடியில் படுத்துக் கொள், உன்னை நான் பிடித்துக் கொள்கிறேன்,'' என்றது கரடி. வேடனும் அவ்வாறே படுத்து தூங்கினான்.
சற்று நேரத்தில் கரடிக்கு தூக்கம் வரவே, வேடனை எழுப்பி,""நண்பா! இப்போது உன் மடியில் நான் படுத்துக் கொள்கிறேன். நீ விழித்திரு,'' என்றது. சற்றுநேரத்தில் அயர்ந்து உறங்கி விட்டது.
சலித்துப் போன புலி வேடனிடம்,""ஏ வேடனே! காலையில் எழுந்ததும் அந்த கரடிக்கு பசிக்கும். உன்னை எப்படியும் தின்றுவிடும். இதனால், உனக்கும் எனக்கும் லாபமில்லை.
அந்தக் கரடியை கீழே தள்ளு! நான் அதைக் கொன்று சாப்பிட்டு விட்டு போகிறேன்,'' என்றது.
நன்றி கெட்ட வேடன், கரடியை கீழே தள்ளினான். கரடியோ சுதாரித்து ஒரு கிளையைப் பிடித்து தொங்கியபடியே வேடன் அருகே வந்தது. தன் உயிர் போச்சு என்றே வேடன் நினைத்தான்.
ஆனால், கரடி அவனிடம்,""நண்பா! நீ செய்தது நன்றிகெட்ட செயல் தான். இருப்பினும், என் குணத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். துரோகம் செய்தாலும், என்னை அண்டி வந்த உன்னை புலி செல்லும்வரை இங்கேயே வைத்து பாதுகாப்பேன். நானும் உன்னைக் கொல்லமாட்டேன்,'' என்றது.
வேடன் வெட்கத்தில் தலைகுனிந்தான்,'' என்று கதையை முடித்தான் எமதர்மன்.
""ஏ மானிடனே! இப்போது சொல், ஒரு கரடிக்கு இருந்த நேயம் கூட உன்னிடம் இல்லாமல் மடிந்து போனதே! உன்னை எண்ணெய் சட்டிக்குள் போட்டால் என்ன தவறு?'' என்ற எமதர்மனுக்கு, மனிதனால் பதில் சொல்ல முடியவில்லை.
அவனை எமதூதர்கள் நரகத்துக்குள் இழுத்துச்சென்றனர்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:56 am

பேரனுக்கு கிடைத்த சொத்து

ஆழ்வார்கள் பாடிய நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் பேரன் யமுனைத்துறைவன். 12வயது சிறுவனாக இருந்தபோது, மகாபாஷ்ய பட்டரிடம் வேதம் கற்று வந்தார். அவர் படித்த ஊரில் வசித்த கோலாகலர் என்ற புலவர் புலமைச் செருக்காலும், மன்னரிடம் இருந்த செல்வாக்காலும் மற்ற பண்டிதர்களை தனக்கு அடிமையாக எண்ணி கப்பம் வசூலித்தார்.
ஒருநாள் மகாபாஷ்யபட்டர் அவசர வேலையாக வெளியூர் சென்றுவிட்டார். யமுனைத்துறைவன் மட்டும் வீட்டில் இருந்தான். அங்கு வந்த கோலாகலரின் வேலையாட்கள் கப்பம் கேட்டனர். வந்தவர்களை யமுனைத்துறைவன் கோபத்துடன் விரட்டியடித்தான். இதை அறிந்த கோலாகலர், சிறுவனை அரண்மனைக்கு இழுத்து வரும்படி செய்தார்.
கப்பம் கட்ட மறுத்ததற்கு காரணம் கேட்டார்.
""புலவரே! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நீர் அறியவில்லை போலும்! வேண்டுமானால் என்னுடன் வாதிட்டு பாரும். நீர் ஜெயித்தால், என் குருநாதர் தொடர்ந்து கப்பம் கட்டுவார்,'' என சவால் விட்டான். விவாதத்திற்கு ஏற்பாடானது. சிறுவனுடன் பண்டிதர் வாதம் செய்யும் விஷயம் ஊரெங்கும் பரவியது.
யமுனைத்துறைவனின் தெய்வீகக் களையான முகத்தைக் கண்டதும், ராணி பரவசம் கொண்டாள். அரசனிடம், "யமுனைத்துறைவன் சிறுவனாக இருந்தாலும் வாதத்தில் நிச்சயம் ஜெயிப்பான்,'' என்று பந்தயம் கட்டினாள். மன்னனும் அதை ஆமோதிப்பது போல, ""வாதத்தில் வெற்றி பெற்றவர்க்கு எனது ஆட்சியையே பரிசாக அளிக்கிறேன்,'' என உறுதியளித்தான்.
வாதம் தொடங்கியது. கோலாகலர் கேட்ட கேள்விக்கெல்லாம், யமுனைத்துறைவன் சளைக்காமல் பதில் அளித்தான். கோலாகலர் தோல்வியை ஒப்புக் கொண்டார். ராணி யமுனைத்துறைவனை கட்டியணைத்து, "ஆளவந்தாரே! ஆளவந்தாரே!' என்று பாராட்டினாள். மன்னனும் அவனை ஆட்சியில் அமர்த்தினான்.
அன்றுமுதல் யமுனைத்துறைவன் ஆளவந்தார் ஆனார். அவரின் பொறுப்பில் நாடு இருந்தது. இதற்கிடையில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகள், தன் இறுதிக்காலத்தில் சீடரான மணக்கால் நம்பியை அழைத்து, "என் பேரன் யமுனைத்துறைவனுக்கு உரிய பக்குவம் வந்ததும், ஆன்மிகவழிக்கு திருப்பிவிடவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். ஒருநாள், மணக்கால் நம்பி அரண்மனைக்குப் புறப்பட்டார்.
ஆளவந்தாரிடம் ""அரசே! உங்கள் பாட்டனார் நாதமுனிகள் பெரிய மகான். அவர் உயிர் பிரியும் வேளையில் என்னிடம் என்றென்றும் அழியாத பொக்கிஷம் ஒன்றை உங்களுக்காகக் கொடுத்துச் சென்றார். தாத்தா சொத்து பேரனுக்குத் தானே! '' என்றார்.
ஆளவந்தாரும், ""ஆகா! அந்த பொக்கிஷத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள். சீக்கிரம் கொடுங்கள்,'' என்று ஆர்வத்துடன் கேட்டார்.
"" பொக்கிஷத்தை என்னால் எடுத்து வரமுடியாது. நீங்கள் தான் நேரடியாக வந்து எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்று அழைத்தார் நம்பி.
அவரது பேச்சு ஆளவந்தாருக்கு புதிராக இருந்தது. இருந்தாலும், தாத்தா கொடுத்த பொக்கிஷம் என்பதால், அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பினார். இருவரும் பல்லக்கில் புறப்பட்டனர். ரங்கநாதர் கோயிலுக்கு வந்ததும், ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல், கோயிலுக்குள் நுழைந்தார் மணக்கால்நம்பி. ஆளவந்தாரும் பின் தொடர்ந்தார்.
மணக்கால்நம்பி ரங்கநாதரின் முன் நின்று, இருகைகளையும் நீட்டியபடி "இதோ! உங்கள் பாட்டனார் தந்த பொக்கிஷம் இதுதான்! என்றென்றும் நிலையான பொக்கிஷம்!' என்றார்.
அள்ள அள்ளக் குறையாத பெருஞ்செல்வமாய் அரிதுயிலில் கிடந்த ரங்கநாதனிடம் மனதைப் பறி கொடுத்தார் ஆளவந்தார். தாத்தா நாதமுனிகளின் அன்பில் கரைந்து, அரியணையையும், ஆட்சியையும் மறந்தார். ரங்கநாதரை உயிர் மூச்சாகக் கொண்டார். கோயில் நிர்வாகத்தையும்,வைணவபீடத்தையும் ஆளவந்தார் வசம் ஒப்படைத்தார் நம்பி. இவருக்கு 16 சீடர்கள் இருந்தனர். இவர்களில்"வைணவத்தை வளர்த்த தாய்' என்று போற்றப்படும் ராமானுஜரும் ஒருவர்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:57 am

அனுசரித்து வாழுங்க

சாம்பு! நம்ம வாசுதேவன் வீட்டிலே ஒரே ரகளை. புருஷன், பெண்டாட்டிக்குள் பெரிய போர்க்களம்,'' என்ற நண்பர் விஸ்வநாதனிடம், ""ஏன்! என்ன பிரச்னை அவர்களுக்குள்?'' என்றார் சாம்பு.
""பணப்பிரச்னை தான். இருவருமே சம்பாதிக்கிறார்கள், பணத்தை யார் செலவிடுவது? எப்படி செலவிடுவது என்பதில் தான் புகைச்சல். உன்னை அங்கே அழைத்து வரச்சொன்னான். நீ போய் அவர்களைச் சமாதானம் செய்து வை,'' என்றார் விஸ்வநாதன்.
வாசுதேவனுக்கும், அவர் மனைவி கலாவுக்கும் மிகவும் பரிச்சயமானவர் என்ற முறையில் சாம்புவும் அவர்கள் வீட்டுக்குச் சென்றார். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் இருவரும் இணைந்து அவரை வரவேற்றனர்.
""சாம்பண்ணா! ஏதாச்சும் சாப்பிடுங்களேன்,'' என்று வற்புறுத்தினாள் கலா.
""ஏம்மா தங்கச்சி! உன் வீட்டில் சாப்பிடுறது இருக்கட்டும், இரண்டு பேரும் ஏதோ பண விஷயமா சண்டை போட்டீங் களாமே! விச்சு வந்து சொன்னான். உங்களுக்குள் என்ன பிரச்னை?'' என்று கேட்டாரோ இல்லையோ, இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் புகார் சொன்னார்கள். அவர்களை அமைதிப்படுத்திய சாம்பு, ""கொஞ்சம் உட்காருங்க. ஒரு கதை சொல்றேன். அதைக் கேட்டுட்டு முடிவுக்கு வாங்க,'' என்றார் சாம்பு. இருவரும் பொறுமையாக அமர்ந்தனர்.
""ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். கொஞ்சம் அறிவு போதாது. சம்பாதித்ததை கோட்டை விடுவதில் அவனுக்கு நிகர் அவன் தான். ஒருநாள் அவன் ஒரு காளையுடன் சந்தைக்கு போனான். அதை ஒருவரிடம் விலை பேசிக்கொண்டிருந்த போது, ஒரு ஆடு வியாபாரி வந்தான்.
""அடேய்! மாட்டை என்னிடம் கொடுத்து விடு. பதிலாக, இந்த ஆட்டை வைத்துக்கொள். வளர்ப்பது ரொம்ப சுலபம், வருஷத்துக்கு இரண்டு குட்டி போடும். போதாக்குறைக்கு பால் வேறு தரும். இதை வைத்து நிறைய சம்பாதிக்கலாம்,'' என்றான். அவன் ஆட்டைவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கோழி வியாபாரியை பார்த்தான்.
அவன் சில கோழிகளை அவனிடம் கொடுத்து, ""கோழி வளர்ப்பது ஆடு வளர்ப்பை விட சுலபம், தினமும் முட்டை, கடைசியில் இறைச்சிக்கும் விற்று விடலாம். வருஷத்துக்கு இருபது, இருபத்தைந்து குஞ்சு பொரிக்கும். அதை வளர்த்தால் முட்டையும் கூடும், குஞ்சும் கூடும்,'' என்று ஆசை காட்ட, அவனிடம் ஆட்டைக் கொடுத்து விட்டு கோழியுடன் சென்றான்.
ஓரிடத்தில் ஒருவன் அவனை மடக்கி, பத்து முட்டையைக் கொடுத்து, ""கோழியை வளர்ப்பது பெரிய தொந்தரவு. அங்கங்கே பறக்கும். யார் வீட்டு வைக்கோல் போரிலாவது முட்டை போடும். திருடர்கள் பிடித்துச் சென்று சமைத்து விடுவார்கள். இந்த முட்டை அப்படியல்ல, அப்படியே சமைத்து சாப்பிடலாம்,'' என்றான். அந்த முட்டாளும் வாங்கிக் கொண்டான். வீடு வந்து சேர்ந்தான். அவனை அவனது மனைவி பாராட்டினாள்,'' என்றவரை இடைமறித்தான் வாசுதேவன்.
""அவன் கொடுத்து வைத்தவன். தப்பே செஞ்சாலும் பெண்டாட்டி பாராட்டுறாளே,'' என்று குத்தலாகப் பேசியவன் லேசாக கலா பக்கம் திரும்ப அவள் முறைத்தாள். இதைக் கவனித்த சாம்பு கண்டுகொள்ளாமல் கதையைத் தொடர்ந்தார். அவனை பார்க்க வந்து காத்திருந்த ஒரு நண்பன், ""மாட்டோடு போனவன் முட்டையோடு வந்தும் உன் மனைவி பாராட்டினாளே! ஆச்சரியமா இருக்கே,'' என்றான்.
அதற்கு அவன்,""என் மனைவி மற்றவர்கள் முன்னால் என்னைத் திட்டமாட்டாள். தனித்தே அறிவுரை சொல்வாள். இதனால் எங்களுக்குள் பிரச்னையே வந்ததில்லை,'' என்று முடித்த மாமா, ""கலா! நீயும், வாசுவும் விஸ்வநாதன் முன்னால் சண்டை போட்டதால் தான் உன் குடும்ப விஷயம் அவனுக்குத் தெரிந்தது. நானும் கதை சொல்ல வேண்டி வந்துவிட்டது,'' என்றார்.
கலாவும், வாசுவும் தலை குனிந்தனர்.
""அண்ணா! வேடிக்கையான கதையாக இருந்தாலும் இரண்டு பேருக்கும் நல்லபுத்தி வர்ற மாதிரி சொன்னீங்க! இனி நாங்க அனுசரித்து செல்வோம்,'' என்ற கலாவுக்கு வாழ்த்துச் சொன்னார் சாம்பு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் ஆன்மீக கதைகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் ஆன்மீக கதைகள் Empty Re: தினமலர் ஆன்மீக கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum