ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

J J உப்புமா

+13
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
கலைவேந்தன்
jbalasubramanian
சின்றெல்லா
பாலாஜி
ரேவதி
SK
தாமு
dsudhanandan
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

J J உப்புமா - Page 2 Empty J J உப்புமா

Post by dsudhanandan Thu Jun 30, 2011 9:07 am

First topic message reminder :

என்ன தம்பி ரொம்ப நாளா ஆளக் காணோம்.... ஆமா நீ ஏதோ கட்சியில சேர்ந்திட்டியாமே...

என்னது கட்சியிலா?... அப்படி ஒண்ணும் இல்லையே...

என்னோட வீட்டுக்காரர் சொன்னாரு... நீ ஏதோ செயலாளர் ஆயிட்டேன்னு...

ஆமாக்கா... அது ஈகரை இணையத்துல சதுர செயலாளர்...

என்னது சதுர செயலாளரா....? அப்படீன்னா...?

அது அந்த சிவ(ா)னுக்கே வெளிச்சம்....

சரி... கொஞ்சம் J J உப்புமா சாப்பிடரயா....

என்னது J J உப்புமாவா?... ஏங்க அவங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டாங்க அப்படிங்கறதுக்காக உப்புமாவுக்குகெல்லாம் அவங்க பெயரை வைக்கரது நல்லா இல்லை...

டேய்... இது ஜெய்ப்பூர் ஜவ்வரிசி உப்புமாடா...

"ம்... ம்..." டைனிங் ரூமிலிருந்து வெளியே வந்தார் என் நண்பர்

(சாதாரண ஜவ்வரிசி உப்புமா தானுங்க, அது பண்ணப் பண்ண உப்புமாவா, கூழா, களியான்னு புரியாம குழம்பிப்போயி கடைசியிலே பழியை ஒரு பாவமும் அறியாத ஜெய்ப்பூர் மேலே போட்டுட்டாங்க.)

உப்புமாவைச் சாப்பிட்டதுலேருந்து நண்பர் பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தாரு பாவம்...

டேய்... நீ கொஞ்சம் சாப்பிடுறயா...

(நண்பரின் முழி என்னை எச்சரித்ததால்)... இல்லக்கா நான் மெஸ்ஸிலேயே சாப்பிட்டாச்சு...

அப்பா தப்பிச்சாண்டா... நண்பர் (மனதுக்குள்)

அக்கா இந்த உப்புமா செய்யறதப் பத்தி சொன்னா அதையே இன்னைக்கு பதிவுல போட்டுடறேன்...

இதெல்லாம் பதிவுல போடலாமா?

எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....

அக்காவுக்கும் கணினிக்கும் ஏழாம் பொருத்தம்! அவங்க தினமும் மவுஸோட அல்லாடுறதைப் பார்த்தா அவங்க வேலை பார்க்கிறாங்களா?... இல்லே... தோசை வார்க்குறாங்களான்னு சந்தேகமாயிருக்கும். அதுனாலே அவங்க புருஷனோட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தித் தமிழிலே தட்டச்சு செய்ய முடிவு பண்ணினாங்க...

அவரு மனசுக்குள்ளே என்னைத் திட்டிக்கிட்டே கணிணி முன்னால வந்து உட்காந்தாரு...

இனி அந்தக் காட்சி அப்படியே!!! (நண்பரின் மனைவியும்.... நண்பரின் மனசாட்சியும்)

J J உப்புமா வேண்டாங்க... இன்னைக்கு "முதல்லே சிம்பிளா ரவா உப்புமா செய்வது எப்படீன்னு சொல்லறேங்க"

"ம்..." அதுக்கு மேலே நண்பராலே வாயைத் தொறக்க முடியலே..! எல்லாம் J J உப்புமாவோட ஜாலம்!

மனைவி சொல்லச் சொல்ல நண்பர் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சாரு!

"டைப் பண்ணுங்க! ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்...!"

"சாப்பிட ரெண்டு பேர்!" நண்பர் மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டாரு!

"ஏதாவது சொன்னீங்களா?" அக்கா கேட்குறாங்க... சொல்லுற நிலைமையிலா அவரு இருக்காரு? ஊஹூமுன்னு தலையை மட்டும் ஆட்டுறாரு!

"சரி, அடுத்ததா ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திர பண்டங்களைப் பற்றிப் பார்க்கலாமா?"

"ரொம்ப முக்கியம்..." இது நண்பரின் மனசாட்சி.

"வாணலி..."

"----------"

"ஐயோ, வானொலி இல்லீங்க... வாணலி..! இலுப்புச்சட்டி... உங்க தலை மாதிரி இருக்குமே...!"

இப்படியே கரண்டி, கத்தி, தட்டுன்னு எல்லாத் தட்டுமுட்டுச் சாமான் பெயரையும் அம்மணி சொல்லச் சொல்ல, இப்போ நண்பர் பில்கேட்ஸுக்கு சாபம் போட்டுக்கிட்டிருந்தாரு! இருடீ, அடுத்தவாட்டி இந்தியா வா, வச்சிருக்கேன் உனக்கு!

ஒரு வழியா தேவையான பொருட்களுக்கு வந்தாங்க அம்மணி!

"பாம்பே ரவை!"

"போச்சுடா, பட்ட காலிலே படும்கிறது சரியாத் தானிருக்கு. பாம்பேக்கு இப்போ நேரமே சரியில்லை..." இது நண்பரின் மனசாட்சி.

"வெங்காயம்..."

"நல்ல வேளை! இதை வெட்டுற ஆம்பிளைங்க எதுக்கு அழறாங்கன்னு யாருக்கும் தெரியாது."

"தக்காளி!"

"க்கும்... கொஞ்சம் விலை குறைஞ்சா போதுமே!"

"உருளைக்கிழங்கு..."

"இது எதுக்கு? விட்டா முட்டக்கோசையே முழுசாப் போட்டிருவா போலிருக்கே!"

"கேரட்!"

"அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?"

"பட்டாணி!"

"ஆமா, இப்படிப் பண்டங்களை வேஸ்ட் பண்ணினா பட்டாணிகிட்டே போய்த் தான் கடன் வாங்கணும்."


"பச்சை மிளகாய்... இஞ்சி... கருவேப்பிலை... கொத்தமல்லி..."

"அட, சுக்கு, மிளகு, திப்பிலியெல்லாத்தியும் விட்டுட்டாளே!"


"தாளிக்கத் தேவைப்படும் பொருட்கள்!"

"கல்யாணம் ஆனதுலேருந்து தினமும் எங்களைத் தாளிக்கறீங்களே, போதாதா?"

"கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்...."

"இப்போ ஜீரகம் வரும் பாருங்க..!"


"ஜீரகம்....!"

"அதானே பார்த்தேன்!"


"ரீஃபைண்டு ஆயில்..."

"என்ன வெலை விக்குது தெரியுமா?"

"தேவையான அளவு உப்பு!"

"சொரணையிருக்கிறவங்களுக்கு மட்டும்!"

"தண்ணீர்..."

"சாப்பிடறதுக்கு முன்னாலேயும், அப்புறமும் அவங்கவங்க தலையிலே தெளிச்சுக்கணும். கடவுளாப் பார்த்துக் காப்பாத்தினாத் தானுண்டு."

"உப்புமா செய்வது மிகவும் சுலபம்"

"ஆமாமா, சாப்பிடறதுதான் கஷ்டம்."


"முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் வாணலியை வைக்கவும்....."

"ஆமா, மத்தவங்களெல்லாம் அடுப்பிலே வைக்காம வாணலியை அடகுலே வைக்குறாங்களாக்கும்....."

"கொஞ்சமாக எண்ணையை விட்டு, ரவையைப் போட்டு வறுக்கவும்."

"புருசனை வறுக்கிறா மாதிரி இல்லாம இருந்தா சரி..."

"இளஞ்சிவப்பாக ரவை மாறியதும் அதை ஒரு அகலமான தட்டில் ஆற வைக்கவும்...."

"அடுப்பை உங்க சித்தப்பாவா வந்து அணைக்கப்போறாரு?"


"வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்."

"இந்த நேரத்துலே ஆம்பிளைங்கெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து ஓடிப்போயிருங்க.....!"

"தக்காளியைத் துண்டுதுண்டாக வெட்டவும்..."

"கையிலே கத்தியைக் கொடுத்தாலே இப்படித்தான்...."

"பட்டாணியின் தோலை உரிக்கவும்...."

"இவளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்...."

"பச்சை மிளகாயைக் கீறவும்..."

"இதைச் செய்ய இவளுக்குக் கத்தியே வேண்டாம்...."


"இஞ்சியைப் பொடிப்பொடியாக நறுக்கவும்..."

"இவ்வளவு வயலன்ஸ் தேவையா...?"

"கருவேப்பிலை, கொத்தமல்லியைக் கிள்ளி வைக்கவும்..."

"எதுக்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! உங்களைக் கிள்ளிறப் போறாங்க....!"

"வாணலியிலே எண்ணையை விட்டு....."

"திரும்பவும் முதல்லேயிருந்தா...? அவ்வ்வ்வ்வ்...!"

"எண்ணை சூடானதும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், ஜீரகம் உப்பு எல்லாத்தையும் போட்டு..."

"நல்லாக் கிண்டுங்க! அதுதான் கை வந்த கலையாச்சே....!"

"பொன்னிறமானதும்....."

"அதைக் கொண்டு போய் நகைக்கடையிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."

"உருளைக்கிழங்கையும், கேரட்டையும் போட்டு வதக்கவும்...."

"சும்மா சொல்லக்கூடாது. நல்ல மெமரி பவர்... ஆனா, அடிக்கடி வயசைத்தான் மறந்திடறா...."

"பட்டாணி, தக்காளியும் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பதம் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்..."

"ஆமா... அப்பத்தான் உப்புமா ரசம் மாதிரி தெளிவா இருக்கும்....."

"கருவேப்பிலையும் கொத்துமல்லியையும் சேர்த்து விடவும்...."

"இல்லியா பின்னே, அதுங்களை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்..?"


"ரவையை மெதுவாகக் கிளறிக்கிட்டே இருக்கணும்..."

"இந்த சமயத்துலே எதிர்வீட்டு சினேகிதிக்கு போன் பண்ணிப் பேசிக்கிட்டே கிளறினா இன்னும் நல்லாக் கிண்டலாம்...."

"அடுப்பைக் குறைத்து ஒரு தட்டைப் போட்டு மூடவும்...."

"அப்பாடா! இது ஒண்ணு தான் எனக்குப் பிடிச்சிருக்கு...."


"ஆவியிலே கொஞ்ச நேரம் வேகவைத்து விட்டுப் பிறகு இறக்கவும்..."

"எதை? ஆவியையா....?"


"சூடான சுவையான உப்புமா தயார்!"

"யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீக! சூடா இருக்குமுங்கிறத வேண்ணா ஒத்துக்கறேன். மத்ததைச் சாப்பிட்டுச் சொல்லுங்க!"

ஹலோ எங்க ஓடறீங்க.... இன்னும் இதுமாதிரி குறிப்பெல்லாம் சொல்லறேங்க... பிளீஸ்... ஓடாதீங்க... ஹலோ... ஹலோஓஓஓஓஓஓ...


Last edited by dsudhanandan on Fri Jul 01, 2011 4:28 pm; edited 5 times in total (Reason for editing : எழுத்துப் பிழைகளைச் சரி செய்ய)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by பாலாஜி Thu Jun 30, 2011 11:19 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by dsudhanandan Thu Jun 30, 2011 11:20 am

ரேவதி wrote:அந்த நண்பர் யாருனு சொல்லவே இல்லையே J J உப்புமா - Page 2 755837 J J உப்புமா - Page 2 755837

பாருங்கோ மேலே ஒருத்தர் உப்புமா சாப்டராறு........


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by தாமு Thu Jun 30, 2011 11:22 am

sk நல்லா இருக்கியா மேன் சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by dsudhanandan Thu Jun 30, 2011 11:22 am

தாமு wrote: dsudhanandan தலைப்பையும், பதிவையும் நகைச்சுவைக்கு மத்திட்டேன் தம்பி அன்பு மலர்


தாங்க்ஸ்ங்கண்ணா !!!


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by சின்றெல்லா Thu Jun 30, 2011 11:42 am

J J உப்புமா - Page 2 403484 J J உப்புமா - Page 2 403484 J J உப்புமா - Page 2 403484 J J உப்புமா - Page 2 168300 J J உப்புமா - Page 2 168300 J J உப்புமா - Page 2 168300


சதுர செயலாளர் திசுதானந்தன்... வாழ்க ..
சதுர செயலாளர் திசுதானந்தன்... வாழ்க ..
ச து ர செ ய லா ள ர் திசுதானந்தன்..

---- --- ----
J J உப்புமா - Page 2 740322 J J உப்புமா - Page 2 649524 J J உப்புமா - Page 2 211781 J J உப்புமா - Page 2 44296 J J உப்புமா - Page 2 812496 J J உப்புமா - Page 2 128872

(மனதுக்குள்) ஹய்யோ யாரது ஒரு கூட்டமா வராங்களே.. என்னது உப்புமா தயாரிப்போர் சாங்கமா...

எஸ்கேப் ..... J J உப்புமா - Page 2 230655 J J உப்புமா - Page 2 230655 J J உப்புமா - Page 2 230655
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by தாமு Thu Jun 30, 2011 11:46 am

சின்றெல்லா சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by jbalasubramanian Thu Jun 30, 2011 11:55 am

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by dsudhanandan Thu Jun 30, 2011 4:34 pm

நன்றிகள் பல நண்பர்களே !!!!


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by கலைவேந்தன் Thu Jun 30, 2011 6:14 pm

சுவையான உப்புமா கிண்டல் அருமை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by கே. பாலா Thu Jun 30, 2011 6:23 pm

J J உப்புமா - Page 2 168300 நல்ல நகைச்சுவை ! J J உப்புமா - Page 2 168300 J J உப்புமா - Page 2 678642


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

J J உப்புமா - Page 2 Empty Re: J J உப்புமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum