ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

4 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Empty மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:01 am

First topic message reminder :

ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை

ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.

இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.

“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”

“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.

“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”

சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.

“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.

சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 12:52 pm

பெர்க்காசா பேரணி ரத்து ஆனால் உறுப்பினர்கள் நகரை வலம் வருவார்கள்

நாளை பேரணி நடத்தும் திட்டத்தைப் பெர்க்காசா கைவிட்டது. ஆனால் அதன் 15 ஆயிரம் உறுப்பினரும் கோலாலம்பூரில் ”உலா வர வேண்டும்”, குறிப்பாக அது முதலில் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த தாமான் தித்திவங்சாவில் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று அதன் தலைவர் இப்ராகிம் அலி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அவர்களுக்கு விளக்கமளித்து சுற்றிவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன், ஆனால் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. தித்திவங்சா ஒரு பொழுதுபோக்கு பூங்கா. அங்கு அவர்கள் சுற்றிக்கொண்டிருக்கலாம்”, என்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

“அதிகாரப்பூர்வமாக நாங்கள் (பேரணி) நடத்த முடியாது. இருந்தும் ஓர் அரங்கைப் பெற கடுமையாக முயன்று வருகிறேன்.அது கிடைக்குமானால் போலீசிடம் (அனுமதிக்கு) விண்ணப்பிப்போம்.நாளைவரை அவகாசம் இருக்கிறது.

“அப்படியும் கிடைக்கவில்லை என்றால் அவர்களிடம் (பெர்க்காசா உறுப்பினர்களிடம்) தித்திவங்சா பூங்காவில் உல்லாசப் பயணம் போகுமாறு சொல்லியிருக்கிறேன்.”

அவரைப் பொறுத்தவரை, இப்ராகிம் நாளை வீட்டிலேயே இருப்பார். அவர் மாநகருக்குள் நுழைவதை நீதிமன்ற ஆணை ஒன்று தடை செய்கிறது.

“வெளியில் செல்ல முடியாது அதனால் வீட்டில் இருக்கப் போகிறேன். என் இல்ல அமைச்சரும்(மனைவி) என்னை வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்.கண்காணித்துக்கொண்டே இருப்பார்.அப்படியே போனாலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல மாட்டேன்”, என்றாரவர்.

மேலும் செய்திகளுக்கு: www.malaysiaindru.com


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 2:14 pm

உலகம் முழுவதும் 24 நகரங்களில் மலேசியர்கள் மஞ்சள் நிற டி சட்டைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்வர்.

நாளை மெர்தேகா அரங்கில் எதிர்பார்க்கப்படும் பெர்சே 2.0 பேரணி மீதான பிடியை அதிகாரிகள் இறுக்கி வரும் வேளையில் உலகம் முழுவதும் உள்ள மலேசியர்கள் அதே நேரத்தில் நியாயமான சுதந்திரமான தேர்தலுக்காக ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பெர்சே 2.0 உலகளாவிய ஒருமைப்பாட்டு கட்டமைப்பு இன்று விடுத்த அறிக்கையில் அவ்வாறு கேட்டுக் கொண்டது. ஐரோப்பா, கிழக்காசியா, ஆஸ்திரேலேசியா, அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள 15 நாடுகளின் 24 நகரங்களில் ஒரே நேரத்தில் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

“நாங்கள் எங்கு இருந்தாலும் மலேசியாவில் நியாயமான சுதந்திரமான தேர்தல்களுக்காக நாங்கள் மஞ்சள் டி சட்டைகளை அணிந்திருப்போம். மஞ்சள் நிற பதாதைகளையும் பலூன்களையும் அமைதியான சுலோகங்களைக் கொண்ட அட்டைகளையும் ஏந்தியிருப்போம்,” என அந்தக் கட்டமைப்பின் பேராளர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர்.

“பேச்சுச் சுதந்திரமும் அமைதியாக ஒன்று கூடுவதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ள திறந்த ஜனநாயகத்தில் நாங்கள் வாழ்வதால் இப்போது பேச முடிகிறது.”

“கோலாலம்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணியைப் போன்று நாங்களும் அமைதியாக கௌரவத்துடன் ஒன்று கூட எண்ணம் கொண்டுள்ளோம். நாங்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், போலீஸ் அச்சுறுத்தல், கொடுமை அல்லது மஞ்சள் நிற ஆடையை அணிந்திருந்ததற்காக தன்மூப்பாக கைது செய்ய்படுவது போன்ற அச்சம் ஏதுமில்லாமல் நாங்கள் அதனைs செய்ய முடியும்.”

“உலகம் முழுவதும் வாழும் சாதாரண மலேசியக் குடிமக்களாகிய நாங்கள் பெர்சே 2.0ஐ ஆதரிக்கிறோம். ஏனெனில் அது எங்களால் முடியும். நாங்கள் அதனைச் செய்ய வேண்டும்.”

பேரணி அமைதியாக நடைபெறுவதற்கு அனுமதிப்பதின் மூலமும் ‘மக்களுடைய விருப்பத்தை அங்கீகரிப்பதின் மூலமும் பிரதமர் நஜிப் அப்துல் அர்சாக “தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் இப்போது நிறைவேற்ற வேண்டும்,” எனவும் பெர்சே 2.0 உலகளாவிய ஒருமைப்பாட்டு கட்டமைப்பு வலியுறுத்தியது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 2:15 pm

மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் தடையைமீறிப் பேரணியில் கலந்துகொள்வர்

போலீசார் 91 பேருக்குக் கோலாலம்பூருக்குள் நுழையத் தடைவிதித்திருந்தாலும் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் பேரணியில் கலந்துகொள்வது உறுதி என்கிறார் அன்வார் இப்ராகிம்.

அவர்கள் நாளை தலைநகர் வருவார்களா என்று அவரது டிவீட்டர் பக்கத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளித்தட் மாற்றரசுக் கட்சித் தலைவர், “பக்காத்தான் தலைவர்கள் அதில் கலந்துகொள்வர்” என்றார்.

நேற்று போலீஸ் தலைநகருக்குள் நுழைய 91 பேர் தடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட், பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு டிஏபியின் லிம் கிட் சியாங் முதலானோரும் இடம்பெற்றுள்ளனர்.

இன்று நண்பகல், அன்வாரின் புதல்வியும் லெம்பா பந்தாய் எம்பியுமான நுருல் இஸ்ஸா, தமக்கு நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் உத்தரவு சார்வு செய்யப்பட்டதாகக் கூறினார்.

“அதைச் சார்வு செய்ய மூன்று போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு வந்தனர். கேஎல் இப்போது ‘Kuala Curfew, (ஊரடங்கு) ஆகிவிட்டது” என்றவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் (வலம்), போலீஸ் கொண்டுவந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவில் கையொப்பமிட மறுத்துவிட்டார்.

“அது அபத்தமானது என்பதால் நான் கையொப்பம் இடவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடமாட்டக் கட்டுப்பாட்டை நான் ஏற்க மறுக்கிறேன்”, என்று அவர் கூறியதாக ஹராகா டெய்லி செய்தி வெளியிட்டிருந்தது.

“மற்ற இடங்களுக்குப் போகக்கூடாது என்றால் சரி என்பேன். ஆனால், என் அலுவலகத்துக்குப் போகாதே என்றால் எப்படி?”, என்ற பொக்கோக் செனா எம்பியான அவர் குத்தலாகக் குறிப்பிட்டார்.

நாளைக் காலை மணி 8-இலிருந்து மாலைமணி 6வரை தலைநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டவர்களில் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினும் ஒருவர். அவர் இப்போதுதான், காசா முனையில் நுழைய இஸ்ரேல் விதித்துள்ள தடையுத்தரவை உடைத்தெறிய அமைதிப் பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியிருந்தார்.

“காசாவில் இஸ்ரேலிய தடையுத்தரவை உடைத்தெறியும் முயற்சில் ஈடுபட்டு இப்போதுதான் வந்திறங்கினேன். இறங்கியதுமே கோலாலம்பூருக்குள் நுழைய தடை”, என்று நேற்றுக் கூறினார் கைரி.

பேரணி நடத்துவது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெர்சேக்கு எதிரான அம்னோ பேரணி நாளை திட்டமிட்டபடி நடக்கும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி இன்று அறிவித்துள்ளார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Empty தடைகள் இருந்தாலும், பெர்சே தடுமாறவில்லை

Post by சிவா Sat Jul 09, 2011 12:04 am

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Bersih-8demands

அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவின போதிலும், பேரணி இன்று சனிக்கிழமை பிற்பகல் மணி 2.00 க்கு மெர்தேக்கா அரங்கத்தில் நடைபெறும் என்பதில் பெர்சே 2.0 உறுதியாக இருக்கிறது.

நேற்று பின்னேரத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அதிகாரிகள் “தடைக்குமேல் தடை” போட்டு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்று பெர்சே வழிக்காட்டி குழு கூறியது.

அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தங்களால் ஆன அனைத்தையும் பெர்சே செய்ததாகவும் ஆனால் எதிர்கொண்டதெல்லாம் முடிவுகளில் மாற்றங்களும் கல் சுவர்களும்தான் என்று அந்த அறிக்கை கூறிற்று.

பெர்சேயின் அறிக்கை உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் பெர்சே இயக்கம் அதன் பேரணியை கோலாலம்பூரை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் நடத்தலாம் என்று கூறிய பின்னர் வெளியிடப்பட்டது.

ஆனால், அமைச்சரின் அறிக்கை, சிலாங்கூர் சுல்தான் அவரது மாநிலத்தில் பேரணி எதுவும் நடத்தப்படக்கூடாது என்று ஆணைப் பிறப்பித்த பின்னர்தான் வெளியிடப்பட்டது. இப்போது பெர்சேயிக்கு வேறு எந்த வழியும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெர்தேக்க அரங்கம் அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 4 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum