ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 
ayyasamy ram
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 
mohamed nizamudeen
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 
VENKUSADAS
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 

Top posting users this month
heezulia
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 
ayyasamy ram
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 
mohamed nizamudeen
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 
VENKUSADAS
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:01 am

ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை

ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.

இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.

“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”

“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.

“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”

சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.

“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.

சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:03 am

உத்துசான் பெர்சே “கம்யூனிஸ்ட் சதியை” பெரிதாக்குகிறது

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Utusan2-300x175

எதிர்வரும் பெர்சே 2.0 பேரணிக்கு எதிரான இயக்கத்தில் உத்துசான் மலேசியா “கம்யூனிச மருட்டல்’ என்னும் பூச்சாண்டியை பெரிதுபடுத்துகிறது.

பெர்சே 2.0 ஏற்பாட்டாளர்களுக்கு பிலிப்பீன்ஸில் இயங்கும் ஆயுதமேந்தியக் கும்பல் ஒன்றுடனும் ஜனநாயக ஆதரவு அரசு சாரா அமைப்பு ஒன்றுடனும் தொடர்பு இருப்பதாக அது கூறிக் கொண்டுள்ளது.

அம்னோவுக்கு சொந்தமான அந்த நாளேடு, “பெர்சேக்குள் கம்யூனிஸ்ட்கள் ஊடுருவல்” என்னும் தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் முதல் பக்கம் முழுவதும் பெர்சே அமைப்பை இழிவுபடுத்தும் செய்திகளும் அதன் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை வீழ்த்தும் பொருட்டு கலகத்தைத் தூண்டுகின்றவர்கள் என்ற செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

அடையாளம் தெரியாத வட்டாரத்தை மேற்கோள் காட்டி அது “தேசியப் பாதுகாப்புக்கு மருட்டல்” ஏற்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ளது. அந்த மருட்டல் “கவலை அளிக்கும் நிலையை எட்டி விட்டதாகவும்” அது தெரிவித்தது.

அதற்கு சான்றாக கடந்த சனிக்கிழமை பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி உறுப்பினர்களுடன் இரண்டு அந்நியர்களும் கைது செய்யப்பட்டதை உத்துசான் சுட்டிக் காட்டியது.

பிஎஸ்எம் பெர்சேக்குத் தலைமை தாங்குவதாகவும் “அரசாங்கத்தை வீழ்த்தும் தங்களது தீய பிரச்சாரத்தை பரப்புவதற்கு” அந்தக் கட்சி “அந்நிய ஏஜண்டுகளுடன்” “சதி” செய்வதாகவும் உத்துசான் செய்தி கூறிக் கொண்டது.

“போதும், ஒய்வு பெறுங்கள்” என்னும் இயக்கத்தின் போது கைது செய்யப்பட்ட தனது உறுப்பினர்களில் பெரும்பாலோர் பெர்சே 2.0 பேரணியுடன் தொடர்பு இல்லாதவர்கள் என பிஎஸ்எம் கடந்த சனிக்கிழமை மலேசியாகினியிடம் கூறியது.

‘தேசியப் பாதுகாப்பு மருட்டலுக்கு இலக்காகியுள்ளது’ என்னும் தலைப்பில் அந்த ஏடு வெளியிட்டுள்ள செய்தியில் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 56 வயதான ரோமொயோ காஸ்டிலோவும் தென் கொரியரான 24 வயது மின் யங் சொங்கும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காஸ்டிலோ,தொழிற்சங்கவாதி ஆவார். சொங், சொன் நாம் தேசியப் பல்கலைக்கழக மாணவர் ஆவார். அவர் குவாங்ஜுவுல் உள்ள மே 18 நினைவு அற நிறுவன உறுப்பினரும் ஆவார்.

ஜோகூர் லேடாங்கில் உள்ள மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு முன்பு பிஎஸ்எம் ஆதரவாளர்களுடன் அந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Utusan12

வழக்கத்துக்கு மாறான கம்யூனிஸ்டுகள்

காஸ்டிலோ மின்னும் இந்த நாட்டில் “குழப்பத்தை ஏற்படுத்த” வந்திருப்பதாக உத்துசான் தனது வட்டாரங்களை மேற்கோள் காட்டி கூறியது.

“காஸ்டிலோ பிலிப்பீன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர் என்பதை நாங்கள் நிராகரிக்கவில்லை. அந்தக் கட்சி பல பிலிப்பினோ மக்களைக் கொலை செய்துள்ளது. அது ஆயுதமேந்திய பூசலில் சம்பந்தப்பட்டுள்ளதால் பயங்கரவாத அமைப்பாகவும் அது பட்டியலிடப்பட்டுள்ளது,” என உத்துசான் தனது வட்டாரம் கூறியதாகத் தெரிவித்துக் கொண்டது.

இதனிடையே மின், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தேசிய ஜனநாயகக் கழகம் என்று அழைக்கப்படும் தென் கொரிய ஜனநாயக ஆதரவு இயக்க உறுப்பினர் என்றும் உத்துசான் கூறிக் கொண்டது.

அந்த தேசிய ஜனநாயகக் கழகம் “அன்வார் இப்ராஹிமுக்கு தோழரான” முன்னாள் வெளியுறவு அமைச்சர் மடலின் அல்பிரைட் ஆலோசனை கூறும் தேசிய ஜனநாயக அற நிவனத்தின் கீழ் வருகிறது என்றும் அது குறிப்பிட்டது.

பெர்சே குழு உறுப்பினர்களைப் பற்றிய கட்டுரைகளையும் பெர்சே குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் உத்துசான் வெளியிட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பெர்சேக்கு எதிராக இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியதையும் அந்த ஏடு வெளியிட்டுள்ளது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:05 am

‘கிறிஸ்துவர்களைத் தாக்குவதை நிறுத்துங்கள்’ என்கிறார் பாதிரியார் ஒருவர்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Bishop-300x175

பெர்சே 2.0 ஊர்வலத்துக்கு அந்நிய கிறிஸ்துவ அமைப்புக்கள் நிதி உதவி செய்வதாக உத்துசான் மலேசியா செய்திகளை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து “கிறிஸ்துவர்களை தாக்குவதை” நிறுத்திக் கொள்ளுமாறு கத்தோலிக்க ஆயரான டாக்டர் பால் தான் சீ இங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் உத்துசான் செய்தியை கடுமையாகச் சாடிய அவர், “மலேசியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை விருப்பம் போல் வெளியிடுவதற்கு அந்த மலாய் மொழி நாளேட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது” என மலேசிய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவருமான மலாக்கா ஜோகூர் தேவாலயத் திருச்சபையின் ஆயர் சொன்னார்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக ஜுலை 9ம் தேதி நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே ஊர்வலத்துக்கு 11 அந்நிய கிறிஸ்துவ அமைப்புக்கள் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை அளித்திருப்பதாக நேற்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.

“அபத்தங்கள வெளியிடுவதிலிருந்து அந்த ஏட்டை தடுப்பதற்கு எதுவும் செய்யப்படாமல் இருப்பது கண்டு நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்,” என்றார் அவர்.

“இந்த நாட்டில் தனி நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் எதிராக எல்லா வகையான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தும் மக்களை தடுப்பதற்குப் பதில் சட்டப்பூர்வமாக தங்களது உரிமைகளை வெளிப்படுத்த விரும்பும் மக்களுடைய நடவடிக்கைகளை கண்காணிப்பதிலும் சோதனை செய்வதிலுமே அதிகாரிகள் அதிக அக்கறை காட்டுவதாகவும் தெரிகிறது,” என ஆயர் டாக்டர் பால் தான் மலேசியாகினியிடம் கூறினார்.

பல வாரங்களுக்கு முன்பு இந்த நாட்டில் இஸ்லாத்தை அதிகாரத்துவ சமயம் என்னும் நிலையிலிருந்து வீழ்த்துவதற்கு கிறிஸ்துவ அமைப்புக்கள் சதி செய்வதாக சில அம்னோ ஆதரவு வலைப்பதிவுகள் தகவல் வெளியிட்டன.

உத்துசான் அந்தத் தகவலுக்கும் முதலிடம் கொடுத்து கடந்த மே மாதம் பினாங்கில் கிறிஸ்துவப் பாதிரியார்கள் கூட்டம் ஒன்றில் அந்த சதி உருவாக்கப்பட்டதாகவும் கூறிக் கொண்டது.

அது குறித்து போலீஸ் விசாரணைகள் இன்னும் முடியவில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருக்கிறதா இல்லையா என இது வரை தெரியவில்லை.

கிறிஸ்துவ நிதிகளுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பெர்சே ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளது பற்றி ஆயர் பால் தான் ஆறுதல் அடைந்துள்ளார்.

உத்துசான் குற்றச்சாட்டுக்களை மறுத்த பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், உள்நாட்டு வட்டாரங்களிலிருந்து நிதி பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:06 am

பிகேஆர்: மருட்டல்கள், ஜுலை 9ம் தேதி என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறிகள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Nurul2

பிகேஆர் தலைமையகத்துக்கு வெளியில் நேற்றிரவு கூடிய அம்னோ இளைஞர்கள் காட்டிய ஆணவம் பற்றியும் ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணிக்கு எதிராக வன்முறை மருட்டலை விடுத்தது பற்றியும் பிகேஆர் உதவித் தலைவர்களான தியான் சுவாவும் நுருல் இஸ்ஸா அன்வாரும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கான ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் நடத்தப்படும் விதத்துடன் ஒப்பிடுகையில் அம்னோ இளைஞர்கள் தொடர்பில் போலீசார் இரட்டை வேடம் போடுவதாக அவர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினர்.

“எங்கள் தலைமையகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை நாங்கள் நிராகரிக்கவில்லை. எங்கள் கொள்கையுடன் உங்களுக்கு இணக்கம் இல்லை என்றால் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யலாம். மகஜர் கொடுக்கலாம். எதிர்ப்புக் காட்டலாம். எங்களுக்கு அதில் ஒன்றும் பிரச்னை இல்லை.”

“ஆனால் ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளையும் மருட்டல்களையும் அறிமுகம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை,” என பத்து எம்பியான சுவா சொன்னார்.

“நாங்கள் ஜுலை 9ம் தேதி ‘தேச விசுவாசியுடன்’ அமைதியாகப் பேரணி நடத்த நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால் அது நல்ல தொடக்கமாக இல்லை என்பதை நீங்கள் இப்போது பார்க்கின்றீர்கள்,” என அவர் மேலும் சொன்னார். பெர்சே 2.0 பேரணி திட்டமிடப்பட்டுள்ள அதே நாளன்று அம்னோ இளைஞர் பிரிவும் போட்டி பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதை சுவா அவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராக போலீசார் எடுக்கும் நடவடிக்கைக்கும் நேற்றிரவு பெர்சே பேரணி மீது வன்முறை மருட்டலை விடுத்த அம்னோ இளைஞர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கும் இடையில் “பெரிய இடைவெளி” இருப்பதாக நுருல் இஸ்ஸா சாடினார்.

“பிகேஆர் தலைமையகத்துக்கு எரியூட்டப் போவதாக” அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாகக் குழு உறுப்பினர் லோக்மான் அடம் கூறியதாக பல பிகேஆர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

“போலீசார் நியாயமாகவும் ஒரே மாதிரியாகவும் நடந்து கொள்ள வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

ஜுலை 9ம் தேதி பெர்சே ஆதரவாளர்களும் பிஎன் சார்புடைய அம்னோ இளைஞர்களும் பெர்க்காசாவும் ஆர்ப்பாட்டம் செய்ய சாலைகளில் ஒன்று கூடினால் என்ன நடக்கும் என நுருலிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், குழப்பத்தை ஏற்படுத்த சதிகாரர்கள் அனுப்பப்படுவர் எனத் தாம் கருதுவதாகச் சொன்னார்.

” அவர்கள் சதிகாரர்களை அனுப்புவர் என நான் அஞ்சுகிறேன். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி பெர்சே மீது பழி போடுவர் என நான் எண்ணுகிறேன். அதனைக் காரணமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை அவர்கள் கைது செய்ய முயலுவர்,” அந்த லெம்பா பந்தாய் எம்பி சொன்னார்.

நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்துக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கூடிய 300 பேர் பெர்சே 2.0க்கான ஆதரவை பிகேஆர் மீட்டுக் கொள்ள வேண்டும் என கோரியதாக பிகேஆர் வட்டாரங்கள் கூறின.

அந்த ஊர்வலத்தை ஆதரிப்பதற்காக அவர்கள் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் பெர்சே 2.0 ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ் அம்பிகாவுக்கும் அவர்கள் மருட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அந்த இடத்தில் ஆயுதமேந்திய 20 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர் என்றும் ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதும் உடனடியாக நேற்றிரவு போலீசில் புகார் செய்யப்பட்டது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:07 am

‘பெர்சே தலைவர்கள் முன்கூட்டியே கைது செய்யப்படுவதை எதிர்பார்க்கலாம்’

அடுத்த வார இறுதியில் பெர்சே 2.0 பேரணி தொடங்குவதற்கு முன்னரே அதன் தலைவர்கள் கைது செயப்படலாம் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் எதிர்பார்க்கிறார்.

அரசாங்கம் பெர்சே தலைவர்களைத் தடுத்து வைப்பதற்கு இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அல்லது மற்ற சட்டங்களைப் பயன்படுத்தும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என அவர் சொன்னார்.

“அந்த ஊழல் மலிந்த, கொடூரத் தலைவர்கள் அதிகாரத்தின் மீது தங்களுக்கு உள்ள பிடியை நிலை நிறுத்துவதற்கு என்ன காரணத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அன்வார், ஜுலை 9ம் தேதி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பேரணி தொடர்பில் தேசத் துரோகம், சட்டவிரோதக் கூட்டம் எனக் கூறப்படும் விஷயங்கள் மீது கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நேற்று தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு அந்தப் போலீஸ் நிலையத்தில் அன்வார் விசாரிக்கப்பட்டார்.

ஜுன் 12ம் தேதி பிரிக்பீல்ட்ஸில் பக்காத்தான் ராக்யாட் நிகழ்வு ஒன்றில் அவர் நிகழ்த்திய உரை மீது அதிகாரிகள் அவரைத் துருவித் துருவி விசாரித்ததாக தெரிகிறது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:09 am

பெர்சேக்கு எதிரான அடக்குமுறை-ஐந்தாம் நாள்: அன்வார் இன்று வாக்குமூலம் கொடுப்பார்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Bersih19

பெர்சே 2.0க்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.மேலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் உள்ளிட்டிருக்கின்றனர்.

மாற்றரசுக் கட்சித் தலைவரும் பிகேஆர் நடப்பில் தலைவருமான அன்வார் இப்ராகிமையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இன்று மாலை மணி ஐந்துக்கு அன்வார் டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார், வாக்குமூலம் அளிக்க.

அன்வாரின் வலக்கரம்போல் திகழ்பவரும் பிகேஆரின் துணைத்தலவருமான அஸ்மின் அலியிடம் வாக்குமூலம் பெற போலீசார் இன்று அவரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

இதனிடையே, மனித உரிமைக்காகப் போராடும் அரசுசாரா அமைப்பான சுவாராம், பந்திங்கில் ஒரு விருந்தில் பெர்சே 2.0-க்கு ஆதரவாக பேசியதற்காக செனட்டர் எஸ்.இராமகிருஷ்ணன் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது.

இராமகிருஷ்ணனை மலேசியாகினி தொடர்புகொண்டு பேசியபோது அவர், “அந்த விருந்தில் தேர்தலில் நடைபெறும் அநியாயங்கள் பற்றி விரிவாகவே பேசினேன். பின்னர் ஏதாவது ஒரு வகையில் பெர்சேக்கு ஆதரவு காட்ட வேண்டுமென்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டேன்”, என்றார்.

இரவு மணி 9.30 வாக்கில் காரில் ஏற முயன்றபோது சுமார் ஐந்து போலீஸ்காரர்கள் தம்மைச் சூழ்ந்துகொண்டதாகவும் “சட்டவிரோத பேரணியில் பங்குபெற மக்களைத் தூண்டிவிடுவதாகக் கூறி’”தம்மைக் கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

“நான் அவர்களுடன் ஒத்துழைத்ததால் எல்லாம் அமைதியாகவே நடந்து முடிந்தது”,என்றாரவர்.

பேரணி ஏற்பாட்டாளர்களைத் தெரியுமா என்றும் தூண்டிவிடுவதற்குப் பணம் எதுவும் கொடுக்கிறார்களா என்றும் வினவினர்.

“நீதிமன்றத்தில் பேசிக்கொள்வோம் என்று நான் என் உரிமையைப் பயன்படுத்தி மெளனம் சாதித்தேன்”, என்றவர் சொன்னார்.

அதே விருந்து நிகழ்வில் பெர்சே 2.0 டி-சட்டை அணிந்திருந்த தெலுக் டத்தோ சட்டமன்ற உறுப்பினர் டிஏபியின் பிலிப் டானும் கைது செய்யப்பட்டார்.

கோலா லங்காட் மாவட்டப் போலீஸ் தலைமையகம் கொண்டுசெல்லப்பட்டு அங்கு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவ்விருவரும் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை தொடங்கி 81 பேர் எவ்வித விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சுவாராம் வலைத்தளம் கூறுகிறது.

நன்றி: மலேசியாஇன்று


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Thu Jun 30, 2011 7:24 am

இசா பெர்சேயை தடுக்க முடியாது, சூளுரைக்கிறார் மரியா

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Bersih-isa-will-not-deter

ஜூலை 9 ஆம் தேதி நடைபெற விருக்கும் பெர்சே 2.0 பேரணியில் குடிமக்கள் பங்கொள்ளுவதற்கான அவர்களின் அரசமைப்பு உரிமையை கொடூரமான இசா சட்டம் மற்றும் பெருமளவிலான கைதுகள் மூலம் தடுப்பதை அனுமதிக்கக்கூடாது.

இன்று இதனைக் கூறிய பெர்சே 2.0 வழிகாட்டி குழுவின் உறுப்பினரான மரியா சின் அப்துல்லா பெர்சே விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தொடர்ந்து மருட்டி வருவது “பேரணி நடப்பதை நிறுத்தாது” என்றார்.

“அவர்கள் (அரசாங்கம்) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம், அதனைச் செய்யப்போவதாக அவர்கள் ஏற்கனவே மிரட்டியுள்ளனர், ஆனால் பெர்சே பேரணி தனிப்பட்டவர்களைப் பற்றியதாகும்”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“அவர்கள் அனைவரையும் (தலைவர்களை) பிடித்து விட்டாலும், இது (தேர்தல்) சீர்திருத்தற்கான குடிமக்களின் கோரிக்கை.”

அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள், குறிப்பாக மஞ்சள் பெர்சே டி-சட்டைகள் சட்ட விரோதமானவை என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் செய்த அறிவிப்பு, கவலைக்குரியாதாகும் என்று கருத்துரைத்த மரியா, எதிலும் எல்லாவற்றிலும் நாட்டின் பாதுக்காப்புக்கு மருட்டலைக் காணும் போக்கு அரசாங்கம் “சித்தப்பிரமை” பிடித்து அலைவதைக் காட்டுகிறது என்றார்.

“பெர்சே டி-சட்டைகள் சட்ட விரோதமானவை என்பதற்கு அவர்கள் பொருத்தமான ஒரு பதிலைக்கூட தரவில்லை. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான எதிர்வினையாகும்; எது பொருத்தமானது, எது பொருத்தமற்றது என்பதைப் பகுத்து அறியும் சக்தியை அரசாங்கம் இழந்து விட்டது என்பதைப் பிரதிபலிக்கிறது.”

“மிரட்டுதல் பேரணியை நிறுத்தாது. மக்கள் பொறுப்பாளர்களாக இருப்பதை அவர்கள் காட்டுவார்கள்…மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை இன்று நாம் நடைமுறையில் கண்டோம். மாற்றம் வரும், அது இப்போது ஆரம்பமாகிறது”, என்று மரியா கூறினார்.

இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட நால்வரில் மரியாவும் ஒருவர்.

தெனகானித்தா தலைவர் ஐரின் பெர்னாண்டிஸ், சமூக ஆர்வலர் ஹிசாமுடின் ராயிஸ் மற்றும் வழக்குரைஞர் லத்தீபா கோயா ஆகியோர் இதர மூவர் ஆவர்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Thu Jun 30, 2011 7:28 am

இரண்டு பேராக் சட்டமன்ற உறுப்பினர்களும் 12 பேரும் கைது

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Perak-300x175

பேரா சுங்கை சிப்புட்டில் சந்தைக் கூடம் ஒன்றில் தேசியக் கொடிகளை விநியோகம் செய்து கொண்டிருந்த 14 அரசியல் போராளிகள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் காலை மணி 9.00க்கு சந்தைக் கூடத்தை வலம் வரத் தொடங்கிய 15 நிமிடங்களில் போலீசார் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அந்த 14 போராளிகளையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அந்தப் போராளிகளில் எண்மர் பெர்சே டி சட்டைகளை அணிந்திருந்தனர். மற்றவர்கள் டிஎபியின் மாற்றம் எனக் கூறும் உபா டி சட்டைகளைப் போட்டிருந்தனர். அவர்களில் 12 பேர் டிஎபியைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் பிகேஆர் உறுப்பினர்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் டிஎபி ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லியோங் மெய் மிங், பிகேஆரின் தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லி காங், பிகேஆர் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ பூன் சாயின் அரசியல் செயலாளர் தான் கார் கிங்கும் அடங்குவர்.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Perak1
தொடர்பு கொள்ளப்பட்ட போது தாம் கைது செய்யப்பட்டதை லியோங் உறுதிப்படுத்தினார். ஆனால் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

“பெர்சே டி சட்டையை அணிந்திருக்கும் யாரையும் கைது செய்யுமாறு போலீசாருக்கு “மேலிடத்திலிருந்து” உத்தரவு வந்துள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது,” என அவர் சொன்னார்.

அந்த டி சட்டைகள் “பெர்சே பேரணியில் பங்கு கொள்ளுமாறு மக்களைத் தூண்டுகிறது” என போலீசார் கூறிக் கொண்டதாக சாங் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறினார்.

இன்னும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் கூறப்படவில்லை என்றும் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்குக் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Thu Jun 30, 2011 7:29 am

சீன அசெம்ப்ளி மண்டபம் பெர்சே-க்கு ஆதரவு

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Banner

போலீஸ் நடவடிக்கைக்கு அஞ்சாமல் கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபம் (கேஎல்எஸ்சிஏஎச்), பெர்சே 2.0-க்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகை ஒன்றை உயர்த்தி வைத்துள்ளது.

நேற்று உயர்த்தி வைக்கப்பட்ட அப்பதாகையில் பேரணி நடைபெறும் நாளும் இடமும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் ‘சுயேச்சையான, நியாயமான தேர்தலுக்காக ஒன்று சேர்வீர்’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்திலேயே தேசிய கொடியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேஎல்எஸ்சிஏஎச் தலைமைச் செயலாளர் ஸ்டேன்லி யோங், மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

“நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு”, என்றாரவர்.

கேஎல்எஸ்சிஏஎச் தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரானது என்று கூறிய அவர், தேர்தல் சீரமைப்புக்காக அதிகாரிகளைச் சந்திக்கும் முயற்சிகள் பலிக்காததால்தான் பெர்சே “கடைசிப் பட்சமாக” பேரணி நடத்த முடிவு செய்தது என்றாரவர்.

“அதற்காக பெர்சே-க்கு நாட்டுப்பற்றில்லை என்று ஆகிவிடாது. தேசியக் கொடி மக்களுக்கு நாட்டின்பால் உள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. அதன் அடிப்படையில் பெர்சே-யின் கொள்கைகளை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்”, என்று யோங் கூறினார்.

அரசாங்கம் குறைகூறல்களை ஏற்று அவற்றின் அடிப்படையில் சீரமைப்புகளைச் செய்ய முனைந்தால் நிர்வாகம் நிலையாக இருக்கும் என்றாரவர்.

“குறைகூறுவது மாற்றரசுக் கட்சி மட்டும்தான் என்று அரசாங்கம் கூறுமேயானால் அது சிறுபிள்ளைத்தனமானது, குறுகிய அரசியல் நோக்குடையது”.

பதாகையைத் தொங்க விட்டதற்காக போலீசிடமிருந்து தொல்லைகள் வரலாம். ஆனால்,அதைக் கண்டு கேஎல்எஸ்சிஏஎச் அஞ்சாது என்றாரவர்.

“எங்களுக்குப் பிரச்னை கொடுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நாங்கள் தீவிரவாதிகள் அல்லர், சட்டத்தை மீறியவர்களும் அல்லர்”, என்று யோங் கூறினார்.

கேஎல்எஸ்சிஏஎச், பெர்சே 2.0 மீதான அதன் அதிகாரப்பூர்வ நிலைபாட்டைத் தெரிவித்து அறிக்கை வெளியிடும், ஆனால் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தாது.

ஜூலை 9-இல் பெர்சே 2.0 பேரணி நடத்தும் வேளையில் வேறு இரண்டு அமைப்புகளும்-பெர்க்காசாவும், அம்னோ இளைஞர்களும்-தெரு ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டுள்ளன.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Thu Jun 30, 2011 7:31 am

பெர்சே பேரணி கலவரமாக மாறக் கூடும் என கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Bersih14

ஜுலை 9ம் தேதிக்குத் திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோதக் கூட்டம், மூன்றாம் தரப்புக்களின் தில்லுமுல்லு நடவடிக்கைகளினால் குழப்பமான சூழ்நிலைக்கு வழி வகுத்து விடும் என சமூக ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

“அந்தக் கூட்டம் அமைதியாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் கூறலாம். ஆனால் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒருவருடைய நடவடிக்கை போதும்,” என மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக ஆய்வாளர் அகமட் அத்தோரி ஹுசேன் கூறினார்.

“அந்தக் கூட்டம் நடைபெறுமானால் கலவரங்கள் மூளக் கூடும். சமூகங்களுக்கு இடையில் அல்லது மலாய்க்காரர்களுக்கு இடையில் அரசியல் வேறுபாடுகள் காரணமாக மோதல்கள் நிகழக் கூடும்,” என அவர் சொன்னார்.

அந்தக் கூட்டம் பெரிதாக இருந்தால் கலவரங்கள் பெரிதாக வெடிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மூன்றாம் தரப்புக்கள் தில்லுமுல்லு செய்வதற்கான சாத்தியம் இருப்பதையும் அகமட் அத்தோரி நிராகரிக்கவில்லை.

ஜனநாயகத்தின் மீது உள்ள பாசம் காரணமாக ஏற்பாட்டாளர்கள் பேரணியை நடத்துகின்றனர் எனக் கூறப்படுவதை டுங்குனில் உள்ள மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக அரசியல்-அறிவியல் விரிவுரையாளர் சே ஹம்டான் முகமட் ரசாலி நம்பவில்லை.

“அந்தக் கூட்டத்தின் நோக்கம் தூண்டுவதே என நான் கருதுகிறேன். எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசாங்க எதிர்ப்பு உணர்வை வலுப்படுத்துவதும் அதன் இன்னொரு நோக்கமாகும்,” என்றார் அவர்.

அந்தக் கூட்டம் மக்களுக்குக் குறிப்பாக அங்காடிக் கடைக்காரர்களுக்கும் வணிகர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என சே ஹம்டான் கருதுகிறார்.

அந்தக் கூட்டத்தின் போது பேரழிவு ஏதும் ஏற்பட்டால் அதற்கு ஏற்பாட்டாளர்களை பொறுப்பேற்கும்படி செய்யப்பட வேண்டும் என மலேசிய தேசியப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அப்துல் காபா ஹருண் கூறினார்

நன்றி: பெர்னாமா, மலேசியாஇன்று


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum