ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்வாழ்வு + தாம்பத்தியம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 12:57 am

First topic message reminder :

1. கூச்சம் வேண்டாம்

மனித குலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு இல்லறம். குடும்பத்தின் கட்டுக்கோப்புக்கு காவல் அரணாக விளங்குவது தாம்பத்ய உறவு. தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூட தம்பதியருக்குள் தயக்கம். கேட்டால் அநாகரிகம் என்ற தவறான கருத்து. இதுவே நிலைத்த மகிழ்ச்சிக்கு உலை வைக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:05 am

26. உடல் உறவு - நல்ல உடற்பயிற்சி

உடல் உறவும் நல்ல உடற்பயிற்சிதான். ஆச்சரியமாக இருக்கிறதா? தம்பதியினர் அணைத்து, சேர்ந்து படுத்துத் தூங்கும்போது உடலின் அடிப்படை எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. தூக்கத்திலும்கூட உடல் உறுப்புகள் அதிக உணர்வுகளைப் பெறுவதோடு, ஊட்டச் சத்துக்களும் பிராண வாயுவும் அவற்றுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. மெய்மறந்த ஆனந்த பரவசம் மனதுக்குக் கிடைக்கிறது. இந்த ஆனந்த பரவசம் உடற்பயிற்சியில் கிடைப்பதில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:06 am

27. இல்வாழ்வு--"தூரம்' தேவையில்லை

முன்பெல்லாம் மாதவிலக்கு ஏற்பட்டவுடன், பெண்களுக்கு ஓய்வு கொடுத்து அவர்களது உடலையும் உள்ளத்தையும் நன்கு பாதுகாத்து வந்தனர். தற்போது நாகரிகம் வளர்ந்துவிட்டது; வாழ்வில் அமைதியின்மையும் அலைச்சலும் அதிகமாகிவிட்டது. தம்மைத் தனிமைப்படுத்தி வைப்பதை பெண்கள் இழிவாகக் கருதும் காலம் இது.

மேலும் மாதவிடாயின்போது பெண்கள் சுத்தத்தைப் பராமரிக்கத் தேவையான வசதிகள் இப்போது உள்ளன. எனவே பழைய பழக்கம் மாறி மாதவிடாய்க் காலத்திலும்கூட ஆணுடன் இணைந்து தூங்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தவறில்லை. ஆனால், உடல் உறவு கொள்வது நல்லது அல்ல.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:06 am

28. இல்வாழ்வு--மாதவிடாய்க் கோளாறுகள் மறைய...

"கல்யாணம் செஞ்சா அதெல்லாம் சரியாப் போயிடும்'-இக் குரலை பல குடும்பங்களில் கேட்டிருப்பீர்கள். மாதவிலக்குக் கோளாறுகள் பல. அடிக்கடி மாதவிலக்கு வருவது, நீண்ட காலம் கழித்து வருவது, மாதவிலக்கு வரும்போது வயிற்றில் அதிக வலி ஏற்படுவது, கோபம் வருவது, காய்ச்சல் வருவது, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைபடுவது போன்ற பல கஷ்டங்கள் பெண்களுக்கு உண்டு. திருமணத்துக்குப் பிறகு சீரான உடல் உறவு மூலம் மாயைபோல் மேலே சொன்ன அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி விடும். எனவே இல்வாழ்வில் உடல் உறவு, இன்பம் சார்ந்த மருந்து.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:06 am


29. இல்வாழ்வு--ஆஸ்துமா ஓரம்போ


கணவனோ அல்லது மனைவியோ ஆஸ்துமாவினால் பாதிக்கப்படுவது உண்டு. நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும்கூட, இல்வாழ்வின் உடல் உறவின் மூலம் இந் நோயைக் கட்டுப்படுத்த முடியும்; பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும். ஏனெனில் உடல் உறவின்போது ஏற்படும் உணர்ச்சிகளால் அட்ரினலின் (அக்ழ்ங்ய்ஹப்ண்ய்ங்), கார்டிசோன் (இர்ழ்ற்ண்ள்ர்ய்ங்) எனும் சுரப்புகள் மிகுந்து சுரக்கும்.

இவைதான் ஆஸ்துமாவினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருந்தாகத் தரப்படும் ஹார்மோன்கள். இயற்கையிலேயே உடலுக்கு உள்ளேயே கிடைக்கும் ஹார்மோன்களைப் பெறும் வகையில் உறவு கொண்டு நலம் பெறலாமே. மருந்துகளோடு உறவும் இருந்தால், நன்மை அதிகமாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:07 am

30. இல்வாழ்வு--ஐம்புலன்களுக்கு நிகரானது

பார்த்துப் பரவசப்படுதல், கேட்டு மகிழ்தல், அணைத்து ஆனந்தப்படுதல், அனுபவித்துச் சுவைத்தல், முகர்ந்து கிறங்குதல் போன்ற ஐம்புலன் இன்பமும் ஒருசேர அனுபவிக்க உகந்த முறையிலேயே மனித உடல் படைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ""கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'' என வள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, கண், காது, மெய், வாய், மூக்கு ஆகிய ஐம்புலன்களாலும் ஒட்டுமொத்தமாக அடையக்கூடிய பேரின்பம், "ஒண்டொடியாளிடம்' (மனைவியிடம்) உள்ளது என்று வள்ளுவர் அன்றே காதல் உணர்வை விவரித்துள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:07 am

31. கள்ளத்தனம் வேண்டாம்

சொந்தத் துணையிருக்க மற்றொரு பெண்ணோடு கள்ளத்தனமாக கொள்ளும் உடலுறவால், முதலில் உள்ளம் பாதிக்கப்படும். அத்தோடு அத்தகைய உறவு கொள்ளும் நேரத்தில் ஏற்படும் குற்ற உணர்வால் நன்மை ஏதும் கிடைக்காது. பாலுணர்வு வெறி தணியலாம். ஆனால் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

அரக்க குணம் படைத்த ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் தவறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வால் கலங்குவார்கள். அது மட்டுமல்ல. இந்தக் குற்ற உணர்வு என்றென்றும் அவர்கள் எண்ணத்தில் சுழன்று கொண்டேயிருக்கும். இதனால் அமைதி குலைந்த மனம், சஞ்சலம் நிறைந்த சிந்தனை, யாருக்காவது தெரிந்துவிடுமோ என்ற பயம்-தவிப்பு மனதில் அலைமோதி அவர்களை நிலைகுலையச் செய்யும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:08 am

32. கிளை தாவத் துடிப்பவர்களே...

அழகான பெண் அல்லது ஆணைக் கவரும் வகையில் பேசுவது, தன்னிடம் அன்பு காண்பிக்கும் மாற்றார் துணையை நாடுவது போன்ற நெறிகெட்டு நாடும் மனப் போக்கு கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள்.

இத்தகையோர், கிளைக்கு கிளை தாவும் குரங்கைப்போல ஒருவர் மாற்றி ஒருவராக உறவு கொள்ளும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பலரிடம் உறவு கொள்வதாலும் நோய் உள்ளவர்களோடு உறவு கொள்வதாலும் பால்வினை நோய்களுக்கு உள்ளாகிறார்கள். எனவே உடல் உறவுக்கு சொந்தத் துணையை மட்டுமே நாடுங்கள். மாற்றாரை அறவே வெறுத்துத் தள்ளி நில்லுங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:08 am

33. பால்வினை நோய்கள்-உஷார்

"கொனோரியா', "சிபிலிஸ்' என பால்வினை நோய்கள் பல உண்டு. சில பால்வினை நோய்கள் உடனே வெளிப்படும்; சில பல நாள்களுக்குப் பின் தெரியவரும்; சில பல மாதங்களுக்குப் பிறகு, வருஷங்களுக்குப் பிறகு தொல்லை கொடுக்கும். "கொனோரியா' எனும் நோய் சிறுநீர் வெளிவரும் துவாரத்தை குறுகலாக்கி சிறுநீர் வரும் வழியில் அடைப்பை ஏற்படுத்தும்.

"சிபிலிஸ்' எனும் நோய் ஆண்-பெண் குறியில் புண்ணை ஏற்படுத்தும் மிகக் கொடிய நோய். இவற்றையெல்லாம்விட ஆளையே உருக்குலைக்கும் எய்ட்ஸ் மிகவும் கொடியது. பலர் இந் நோய்களை மறைத்து தகாத உறவை மேற்கொள்வார்கள் என்பது உறுதி. எனவே திருமணம் ஆகாத இளம் பருவத்தினரே---திருமணம் வரை வாழ்க்கையில் முன்னேறும் வழியைப் பாருங்கள். சொந்தத் துணைக்காகப் பொறுத்திருங்கள். அது என்றும் சுகமே.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:08 am



34. திருமணம் ஒரு சிறையா?


திருமணம் ஒரு சிறை. அதைச் செய்துகொண்டு ஒருவனிடம் அல்லது ஒருத்தியிடம் வாழ்நாள் முழுவதும் அடிமையாவதா? சொந்த சுதந்திரத்தை ஏன் பலி கொடுக்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டும் என்றாலும் அடுத்தவரின் அனுமதிக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? ---இவை இன்றைய கல்வி அறிவு பெற்று சுயமாகச் சம்பாதிக்கும் பெரும்பாலான பெண்கள், சில இளைஞர்களின் கேள்விக் கணைகள். திருமணத்தை விரும்பாமல் முதிர் கன்னிகளாக வாழும் சில பெண்களும் உள்ளனர்.

கணவன்-மனைவி உறவு என்பதெல்லாம் அர்த்தமற்ற சமூகப் போர்வைகள். இந்தப் பந்தம் இன்றியே ஆணும் பெண்ணும் சேர்ந்து கலந்து வாழலாமே என்ற தவறான சிந்தனைகள் உருவாகியுள்ள காலம் இது. ஆனால், குடும்ப வாழ்க்கையெனும் இல்லறம்தான், இருப்பதிலேயே சிகரமான அறம் என்பது வள்ளுவரின் கூற்று. இல்லறத்தால் எள்ளளவும் தீமை இல்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Admin Wed Nov 19, 2008 1:09 am

35. வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டுமா?

இப் பிறப்பும் ஒருமுறைதான். இல் வாழ்க்கையும் ஒருமுறைதான். அறியா மழலைப் பருவம், அறியும் கல்வித் தகுதிகள் பெறும் காலம், உறங்கிக் கழிக்கும் காலம், பொருள்கள் தேடலுக்காக ஓடோடி உழைக்கும் காலம், நோய் நொடிகள் தாக்கும் காலம், ஒன்றும் செய்ய முடியாமல் முடங்கிப் போகும் முதுமைக் காலம் என்று நம் வாழ்நாளில் கழிந்துபோகும் காலத்தைக் கணக்கிட்டால், வாழ்க்கை இவ்வளவு குறுகியதா என்ற மலைப்பு ஏற்படும்.

அறம் என்பதே குடும்ப வாழ்க்கைதான் என்று வள்ளுவரே சிறப்பிக்கும் இல்லறத்தைப் புறக்கணிப்பது வாழ்க்கையையே புறக்கணிப்பதாகும். இல்லறம் என்ற குடும்ப அறம், திருமண அறம் வாழ்க்கையின் முழுமைக்கு வித்திடுகிறது. வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 3 Empty Re: இல்வாழ்வு + தாம்பத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum