புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
15 Posts - 68%
heezulia
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 5%
Barushree
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
69 Posts - 80%
heezulia
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 2%
prajai
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 2%
Shivanya
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 1%
Barushree
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயலாமை.


   
   
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Wed Jun 22, 2011 4:05 pm

மாடியின் முகட்டிலிருந்து வழிந்துகொண்டிருந்த மழை நீரையும், ஹோ,,,,,, வென விடாது பெய்யும் மழையையும் ரசித்து கொண்டிருந்தான் விதுனன், மழை ஒன்றும் அவனுக்கு புதியது அல்ல, காரணம் பத்து வருட தென் கொரிய வாழ்க்கை, அங்கு மழை தான் எல்லா நேரமும், வெயிலை காண்பது என்பது அரிது. மேலும் அவன் தன் படிப்பை முடித்து விட்டு சென்னை இறங்கியபொழுது அவனை முதன் முதலில் வரவேற்றதே மழை தான். இருந்தும் தன் வீட்டிலிருந்து மழையை ரசிப்பதென்பது அவனுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது . அவனுடைய ஐந்தாவது வயிதிலேயே, அவன் அம்மா டெங்கு காய்ச்சலால் இறந்ததும் தன் தாய் மாமாவோடு அவன் தென் கொரியா சென்று விட்டான், படித்தது , வளர்ந்தது எல்லாமே அங்கு தான். அவன் தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார், இருப்பினும் இவன் மீதும் அவருக்கு அளவற்ற பாசம் உண்டு, வருடம் இரு முறை தென் கொரியா சென்று தந்தை பாசத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த வருடம் அவன் தந்தைக்கு உடல் நிலை சரி இல்லாததால் அவரை பார்க்க வந்திருக்கிறான்.


மழையின் வேகம் சிறிது குறைந்திருந்தது, அதனால் கொஞ்சம் ஊரை சுற்றி பார்த்து வரலாம் என்று அவன் தந்தையின் புதிய டொயோடா இன்னோவா காரை கிளப்பினான். ஜப்பானிய தொழில் நுட்பம் அடாது பெய்த மழையிலும் சிறிதும் சிணுங்காமல் முதல் திருகிலேயே சத்தமின்றி தன் ஓட்டத்தை தொடங்கியது. மாட மாளிகைகள் தலை நிமிர்ந்து நின்றிருந்த பகுதிகளிலிருந்து வெளியே வந்தான். சற்றேறத்தாழ அரை மணிநேர பயணம், ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்கள் ஒளித்து கொண்டிருந்தது சி.டி. செட்டில், மெல்ல அதன் சத்தத்தை கூடியவாறே, காரின் வேகத்தையும் கூட்டினான். மீண்டும் மழை விண்ணை பிளந்துகொண்டு கொட்ட தொடங்கியது. முகப்பு விளக்கை ஒளிர விட்ட படியே வாகனங்கள அவனை முன்னும், பின்னும் தாண்டி சென்றன. ஆனால் அவனுக்கு ஏனோ மனம் ஒவ்வாததால் காரை கொஞ்சம் ஓரங்கட்டினான். ஏ.சியை மட்டும் ஓட விட்டு சற்று கண் அயர்ந்தான். வண்டி ஒட்டிய அசதியில் நன்றாகவே தூங்கிவிட்டான்.,,,,,,,,,, ஒரு மணி நேர தூக்கம், கன்னங்கள் உப்ப தூங்கி விட்டு எழுந்தான்,பசி வேறு அவனை ஒருவாராக எழுப்பிவிட்டது. மழை முற்றிலுமாக நின்றிருந்தது, அருகிலேதும் சாப்பிட கிடைக்குமா என எண்ணி காரை விட்டு இறங்கி அப்படியே காலாற சிறிது தூரம் செல்ல எண்ணினான் . மாலை நேரத்து மழை காற்று , அவன் மனதை லேசாய் வருடியது .....ஆனால் பசியோ, அதை எல்லாம் மறக்கடித்தது . .


மழை நீர் மேட்டிலிருந்து வழிந்து அவன் கார் நின்றிருந்த வழியே இறங்கி குறுகலான பாதை ஊடாக சென்றது, ஒற்றையடி பாதையில் சிறிது தூரம் சென்றதும் பத்து, பதினைந்து குடிசைகள் தென் பட்டன. அங்கு என்ன இருக்க போகின்றது இவனுக்கு சாப்பிட என எண்ணி அவன் திரும்பயிலே ஒரு பார்வை அவன் நெஞ்சை தாக்கியது. கோணி பையை இடுப்பில் கட்டி கொண்டு கதவின் இடுக்கே நின்று வெறித்து பார்த்த அந்த பார்வை அவனை ஒரு நொடி என்னென்னவோ செய்து விட்டது. முழங்காலுக்கும் மேல் உள்ள மழை நீர், இதை தாண்டி அங்கு செல்ல வேண்டுமா ?, அனால் அவன் மனம் ஏனோ செல்ல சொல்லி அவனை வற்ப்புறுத்த அருகில் சென்றான். ஆறு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு, கணவனை தூக்கிளிட்டதர்க்காய் வெகுண்டெழுந்த கண்ணகியின் பார்வையில் கூட இவ்வளவு ஆக்ரோஷம் இருந்திருக்குமோ என்று அவனுக்கு தோன்ற வில்லை. தன் பாதி கால், மழை நீரில் மூழ்கி இருக்க அந்த சிறுமியின் அருகில் சென்று சற்றே அவள் வீட்டின் உள்ளே தன் பார்வையில் செலுத்தினான். வீடு முழுதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஒடுங்கிய நிலையில் இருந்த ஒரு அலுமினிய குடத்தின் மீது ஏறி நின்றிருந்தால் அந்த சிறுமி. வீட்டில் யாரும் இருப்பதாக தெரியவில்லை அவனுக்கு. சுற்றும் பார்த்தான் எந்த குடிசைளும் ஆட்கள் இருப்பதாய் தோன்றவில்லை. அந்த சிறுமியிடம் விவரம் அறிய வினவினான். பதில் ஏதும் வரவில்லை.எங்கோ வெறித்து பார்த்த படியே நின்றிருந்தால் பலவிதமான தோரணைகளில் கேட்டும் எதற்கும் அந்த சிறுமி செவி சாய்க்க வில்லை. வெறுத்து போன அவன் சற்றே சத்தமாய் கேட்டன். பின்னாலிருந்து ஒரு சத்தம் "ஆரப்பா அது" என்று கேட்க திடுக்கிட்டு திரும்பினான், எழுபது வயதுடைய ஒரு கிழவியின் குரல், "இங்க யாரும் இல்லையா பாட்டி" என்றான், அந்த கிழவியின் குடிசையை நோக்கி நடந்த வாரே. "இங்கன ஆறு இருப்ப, மழைக்கு ஒதுங்க கூட வக்கிலாத சனமுள்ள நாங்க, ரெண்டு நா முந்தி பெஞ்ச மழைல மூணு பாம்பு வந்து எங்க குடிசைல எல்லாம் புகிதிடுச்சு நாலஞ்சு புள்ளைகள வேற கடிச்சு போட்டுச்சு, அதான் அல்லாரும் காலி செஞ்சுடு தெக்க இருக்கற மாதா கோயிலுக்கு போய்ட்டாங்க. எம்புள்ளைங்களும் வயசசுனால என தூக்கிட்டு போக முடியாதுன்னு உட்டுபோட்டு போயட்டணுக. பாவி புள்ளிக" என அங்கலாய்ப்பை தனது உரையை முடித்தால் அந்த கிழவி. அந்த சிறுமியை பற்றி கேட்க இவன் வாய் எடுக்க அந்த கிழவியே தொடர்ந்தாள், "இந்தா இவ அப்பன் குடிச்சு போட்டு எங்க உளுந்து கேடக்கானோ தெரில, இவ ஆத்தா நேத்து ரவைக்கு வேலைக்கு போனவ இன்னும் ஊடு திரும்புல, நான் பொறந்த நேரத்துலயே இவளும் பொறந்திருப்ப போலேருக்கு என்னமாரியா இங்ஙனவந்து கஷ்ட படுது". " மொதல்ல இடத்த காலி பண்ணுப்பா இன்னும் அந்த பாம்புக இந்த தண்ணிக்குள்ள தான் இருக்கு ஆறும் எடுத்து போடுல கெளம்பு கெளம்பு", என்ற வார்த்தை கேட்டது தான் தாமதம் அதுத்த நிமிடம் ஓட்டமும் நடையுமாக காரை அடைந்தான். பயத்தில் பசியும் மறந்து போனது அவனுக்கு. அடுத்த அரை மணியில் வீட்டை அடைந்தான், வீட்டின் முகப்பில் வண்டியை நிறுத்தி விட்டு, நேராக குளித்து விட்டு வந்தான். அப்போது தான் அவனுக்கு அந்த சிறுமியின் நியாபகம் வந்தது. மனதை போட்டு ஏதோ பிசைவது போன்றதொரு எண்ணம். ச்சை .....என்ன மனுஷண்டா நீ. பாம்பு என்றதும், உயிர் பயத்தில். உடனே பயந்து நீ ஓடி வந்தாயே அப்டியா அந்த சிறுமியையும், கூட்டிட்டு வந்திருக்கலாமுல , என தனக்குள் கேட்டுகொண்டான்.

ஏனோ அவனை அவனுக்கே ஒரு நொடி பிடிக்க வில்லை. இரவு முழுவதும் அந்த சிறுமியின் நினைவும் அந்த பார்வையுமே அவனை நெருடியது, அவனால் கண் மூடவும் முடியவில்லை.

கொலை குற்றவாளியை போல் மனம் வருந்தினான். ஒரு நொடி தன்னுடைய பணக்கார வாழ்கையையும் , அந்த சிறுமியின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தான், எதனால் இந்த வித்தியாசம் என்று அங்கலாய்த்தான்.இந்த ஏற்ற தாழ்வினை ஏற்படுத்தியது எது என்று பலவாறு கேள்விகளை எழுப்பினான். ஒன்றுக்கும் அவனிடம் பதில் இல்லை. எல்லோரும் மனிதர்கள் தான். பாசம் அனைவருக்கும் ஒன்று தான் . எல்லோருக்கும் உயிர் ஒன்று தான். ஆனால் ஏன் இந்த வித்யாசம். பணம் ஒரு மனிதனின் உயிரையும் அவன் வாழ்கையையும் நிர்மாணிக்கிறது என்றால், கருப்பையில் சிசுவிற்கு பதிலாய் பணத்தை பெற்றுக்கொள்ள வழி உள்ளதா என ஆராயலாமே. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. மனம் மட்டும் ஒரு வித பதட்டத்துடனே இருந்தது. சிறிது நேர சிந்தனைக்கு பின் அவனை அறியாமலே கண்கள் உறங்க தொடங்கின.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாய் அந்த சிறுமியை காண சென்றான், ஆனால் அங்கோ யாரும் இல்லை, நேற்று அவ்வளவாக பேசிய அந்த கிழவியும் இல்லை. மனம் வெதும்பி நின்றான். இன்று ஏனோ அவனுக்கு அந்த கிழவி ஏற்படுத்திய உயிர் பயம் கூட இல்லாமல், அந்த தண்ணீரின் உள்ளே நின்றிருந்தான், மாறாக கோபம் மட்டுமே அவன் கண்களில் தெரிந்தது. அந்த சிறுமியின் கண்களில் கண்ட அதே கோபம், இயலாமையின் கோபம்
ம்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jun 23, 2011 12:06 pm

நாம் ஒவ்வொருதரும் கூட ஏதோ ஒரு சமயத்திலும் இயலாமைஉடன் தான் வாழ்கிறோம் ......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 7:02 pm

muthu86 wrote:நாம் ஒவ்வொருதரும் கூட ஏதோ ஒரு சமயத்திலும் இயலாமைஉடன் தான் வாழ்கிறோம் ......

ரொம்ப சரி முத்து புன்னகை அந்த சமயத்தில் நம்க்கு நம்ம மேல தான் கோபம் வரும் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 7:04 pm

ரொம்ப நல்ல, இயல்பான கதை புன்னகை பகிர்ந்தமைக்கு நன்றி ராகவ் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Fri Jul 01, 2011 9:48 am

என் இயாலாத பொழுதுகளில் இயற்றப்பட்ட என் முதல் கதை. வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள் பல. தோழமயுடன் - - - karthik raghavendran

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக