புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
79 Posts - 68%
heezulia
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
3 Posts - 3%
prajai
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
2 Posts - 2%
Barushree
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
133 Posts - 75%
heezulia
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
7 Posts - 4%
prajai
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_m10திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Poll_c10 
2 Posts - 1%
nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 2:47 pm

'வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதி பாடினான்" 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறள்" என்று ஓளவை மூதாட்டி புகழ்ந்தார். ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளைப் பாயிரத்தினோடு பகர்ந்த வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலையும் பொழிந்தார்.

உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவருக்குச் சிலை வைக்கிறார்கள் சித்திரம் தீட்டுவார். மண்டபம் கட்டுவார். கோயிலும் எழுப்புவார். கருத்துக் கோயிலைக் கட்டிய பெருமானுக்கு கவிதைக் கோயில் எழுப்புகிறேன். கவியுரை தருகிறேன்.

வள்ளுவன் வாக்கை எழுத்தில் வடிக்க
பேச்செனும் பெருக்கில் பிடித்துப் போட
தௌ;ளு தமிழில் தீஞ்சுவைச் சொற்கள்
தேடித் தேடித் திகைத்துப் போனேன்
ஏடுகள் அடங்கா எழுத்துச் சித்திரம்
வண்ணம் படைக்கும் எண்ணக் களஞ்சியம்
அகர முதலோன் ஆதி பகவனைக்
கூவி அழைத்தார், இனம்,மொழி, மதங்கள்
தாவிக் கடவுளின் தகைமையைச் சொன்னார்.
இல்லறம் துறவறம் இடண்டாய்ப் பிரித்து
ஊழின் வலிவையும் முடிவில் வைத்தார்.
அரசும் அமைச்சும் அழகு படுத்தினார்
கல்வி கேள்வி கட்டி எழுப்பினார்
வினைசெயல் வகையும் வினையின் தூய்மையும்
வினையின் திட்பமும் விளக்கிச் சொன்னார்
அன்பால் உலகை ஆண்டு சிறக்கவும்
இன்சொலே உலகில் எடுத்துச் செல்லவும்
சேர்ந்தாரைக் சொல்லும் சினம்முதல் அனைத்து
வேண்டாக் குணங்களைத் தொலைவில் வைத்து
நல்ல செயல்களின் நாயகனாக
மனிதன் வாழ வழிகள் வகுத்தார்
திருவினை யாக்கும் முயற்சியால் மனிதன்
அருஞ்செயல் ஆற்ற ஊக்கம் கொடுத்தார்!
ஊக்கம் உடையான் உழைப்பான் வெல்வான்
ஆக்கம் அவன்வழி தேடிச் செல்லும்
குடிபுரந் தோம்பாக் கொடுங்கோல் ஆட்சியும்
செங்கோல் மன்னனும் சித்திரம் தீட்டினார்
சிரிப்புக்குக் கூடப் பகை உதவாது
பகையும் நட்பாய்ப் பழகுவோன் அறிஞன்
உடையும் நழுவினால் உதவும் கரம்போல்
உள்ளதே நட்பென உரைத்த வள்ளுவர்
குடிமையின் உயர்வும் பண்பின் கொள்கையும்
மானம் காக்க வாழ்வை மறுக்கவும்
சாலச் சிறந்த சான்றாண்மை யாகும்
காலம் வெல்லும் கருத்தையும் கூறி
பழி,பகை நாணிப் பகுத்துண்ணப் போற்றி
உழவின் உன்னதம் உயரத்தில் வைத்தார்
நெருப்பெனும் வறுமையில் நின்ற போதிலும்
வறுமையில் செம்மை வழங்கினார் வள்ளுவர்
இரப்பதன் இழிவை எடுத்துப் பேசினார்
இரந்தே வாழ்தல் என்று விதித்தவன்
உலகைப் படைத்தவன் ஆயினும் கொடியன்
மனிதப் பிறப்பு மாட்சி மிகுந்தது
கயமைக்கும் சிறுமைக்கும் இடமே இல்லை
எற்றிற் குரியர் கயவர்? எதையும் எங்கும்
விற்றற் குரியர்! விளக்கினார் வள்ளுவர்!
பழந்தமிழ் இலக்கியம் பண்புக்கும் வந்தார்
ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்த
அகப்பொருள் சிறப்பை அள்ளித் தந்தார்
காதற் சிறப்பும் காவிய வாழ்க்கையும்
களவாய்க் கற்பாய்க் கனிச்சுவை ததும்ப
இன்பம் பழகினார் வள்ளுவப் பெருந்தகை
உலகம் யாவையும் தாமுள வாக்கி
மண்ணின் அழகையும் மனிதச் சிறப்பையும்
எழுத்தெழுத்தாக எண்ணிப் படைத்ததில்
எதனை எடுப்பது? எதனை விடுவது?
திருக்குறள் என்பது சிந்தனை ஓவியம்!
வள்ளுவம் என்பதே வாழ்க்கை விளக்கம்!
மனித வாழ்க்கை நொடியில் மறையும்
நிலையில் லாதது! நேற்று வாழ்ந்தவர்
இன்று இல்லை! இதுதான் உண்மை!
இருந்த போதிலும் பிறந்தோம் மண்ணில்!
இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்படும் வாழ்வில்
இருப்போம் சிலநாள்! இருப்பினும் வாழ்வோம்!
வாழ்ந்து சிறக்கவே வையம் வந்தோம்!
இருளும் ஒளியும் இணைந்த உலகம்!
இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை!
பசி, பிணி, தாகம், உடம்பை வதைக்கும்
பகை வந்த மோதும், பற்பல தடைகள்
வாழ்வின் பாதையில் வந்து குறுக்கிடும்
காடும் மேடும் கண்டு நடக்கிறோம்
கண்ட வாழ்வில் தெரிந்தவன் வாழ்வான்
சாகதம் நிறைந்தத உலகியல் வாழ்க்கை
கண்ணும் செவியும் மனமும் அறிவும்
விழிப்புடன் இருக்கும் உயி;ர்களே பிழைக்கும்
காலம் காலமாய் வாழ்ந்த உயிர்கள்
காலம் பெருகக் கழிந்து போயின!
மனிதன் ஒருவனே மண்ணில் நிற்கிறான்
மண்ணைப் புதுக்கி மண்ணை ஆள்கிறான்
வஞ்சம் சூது பகையும் கொடுமையும்
நெஞ்சில் நிறுத்திய அரக்க நிழல்கள்
புவிதனைச் சூழ்ந்து கவிந்த போதிலும்
கருணையும் அன்பும் ஈகையும் இரக்கமும்
பெருமையும் வலிமையும் அறிவால் மிகுந்த
உயர்ந்த மக்களே உலகமாய்க் காண்கிறோம்
உலகம் என்பதே உயர்ந்தோர் மாட்டு
அறிவெனும் ஆயுதம் எடுத்தவன் மனிதன்
கற்றுத் தெளிந்து கூர்மை யாகினான்
கேட்டுக் கேட்டுத் திறமையை வளர்த்தான்
பெரியோர் துணையால் எடுத்தடி வைத்தான்
இடம், பொருள்ஏவல் எண்ணிப் பார்த்தான்
அழகிய மயிலின் மெல்லிய தோகையும்
எல்லை இல்லாமல் இட்டு நிரப்பினால்
வண்டியின் அச்சு முறிந்து போகும்
இரக்கம் இல்லா இரவுப் பறவையை
பகலில் வெல்லக் காகம் காத்திடும்
போர்ப்படை அஞ்சா மதகரி தன்னை
சதுப்பு நிலத்தில் நரிகளும் வெல்லும்
காலமும் இடமும் கருதிய மனிதன்
ஞாலம் வெல்லும் ஞானம் ஆகுவான்
அரசனாய் இருந்தால் அறிவும் ஆற்றலும்
துணிவால் பணிவால் தொல்புவி ஆள்வான்
அமைச்சனாய் இருப்பின் சகலமும் அறிந்தவன்
தக்கது மொழிந்து தலைவனைக் காப்பான்
தானைத் தலைவனே முனைமுகம் நிற்பான்
தன்உயிர் வாழ்வை முன்னே வைப்பான்
இல்லறம் காக்கும் இனிய மனிதன்
சுற்றமும் நட்பும் சூழ்ந்து சிறப்பவன்
புவியின் சுகங்களைப் பொய்யெனத் துறக்கும்
துறவியோ ஞானம் துயிலும் தொட்டில்!

திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 2:47 pm

இழுக்குக் குணங்களை எடுத்து விட்டதால்
ஒழுக்கமும் வாய்மையும் உள்ளமாய்க் கொள்வார்
சிறியன சிந்தியான், செயற்கரும் செயல்களை
செய்தால் பெரியோன் சிறுமை அகற்றிய
குணத்தின் குன்று, அவனே அந்தணன்!
தனியொரு மனிதனின் இலக்கணம் என்ன?
நல்ல குடிமகன் நற்குடி காப்பவன்
கல்வி கேள்வி அறிவு மிகுந்தவன்
ஆள்வினை உடையான்! ஆற்றல் படைத்தவன்
எடுக்கும் பணியை எண்ணித் துணிவான்
துணிந்தபின் விலகான் தூய்மையே வடிவம்
பொருளைப் போற்றுவான்! போற்றிய பொருளை
பொருளிலார்க்கு ஈவான்! பொருள்மிகு வாழ்க்கை
பொருளே கொடுக்கும்! எனவே குவிப்பான்
குவித்த பொருளாம் குன்றில் ஏறி
புவியின் பகை,துயர், பிணியைப் போக்குவான்
குன்றில் ஏறியே யானைப்போர் காணலாம்!
செய்கிறான் பொருளை! பகைவர்தம் செருக்கை
அறுக்கும் ஆயுதம் பொருளெனத் தெரிந்தவன்
இந்தப் பொருளை எப்படித் தேடுவான்?
வஞ்சகம் கொடுக்கும் வரையிலாப் பொருளை
அஞ்சுவான் எடுக்க, அத்தகு செல்வம்
இச்சையால் சேர்த்தால் இருக்குமா? பச்சை
மண்ணாம் பாத்திரத் தண்ணீர் ஒக்கும்
பாத்திரம் கரையும், பருகுநீர் போகும்
தீயவர்பின் ஓடிப் பொருள் தேடலாமா?
ஒட்டான்பின் சென்று வாழ்தலின் வாழ்ந்து
கெட்டான் என்பதே சாலவும் நன்று
தலையில் இருக்கும்வரை அழகான முடி
தரையில் விழுந்தால் இழிந்த மயிர்
தன்நிலை இழந்தால் வரும்கதி இதுதான்
மயிர்நீப்பின் வாழாது கவரி மான்கள்
மானம் போயின் உயிர்நீப்பான் மாமனிதன்
நல்ல மனிதன் பண்பின் இலக்கியம்
நகைப்புக் காகவும் ஒருவரை இகழான்
பகையுள்ளம் மனிதப் பண்பைத் தேடுவான்
பாரும் சீரும் பண்புடையார் பக்கமே!
பண்பிலான் பெற்ற பழம்பெருஞ் செல்வம்
பாத்திர அழுக்கால் கெட்டிடும் பால்போல்.
தர்மம் நெறியாம் தவத்தில் நிற்போர்
சால்புடைச் சான்றோர்! மனிதச் செழுமை!
இன்னா செய்தாரை இரங்கி நோக்குவார்
இனியவே செய்வார், இதுவே சால்பு!
ஊழி பெயரும், ஊன்றிய காலைச்
சான்றோர் ஆனவர் தவிர்த்திட மாட்டார்
பெரும்பொருள் தேடும் பேதை மனிதன்
தானே வாழத் தன்னையே நினைக்கிறான்
ஆறிடும் மேடும் பள்ளமும் செல்வம்
செல்வோம் என்று செல்லவே துடிக்கும்
செல்வம் என்பதே செழுங்கிளை தாங்க!
செல்வத்துப் பயனும் ஈதலால் ஏற்படும்
யாம்பெற்ற இன்பம் இவ்வுலகம் பெறுக!
என்று நினைப்பேன் உத்தம மனிதன்
மதியால் உழைப்பால் நிதியைச் சேர்த்தது
புதையலைக் காக்கும் ப+தம் ஆகவா?
நடுஊரில் நச்சுமரம் பழுத்தால் என்பயன்?
கெடுவார் அழிவார் கிளைமொடு மக்கள்
ஊருணி நீர்நிறைந்தற்றே பேரறிவாம்
ஊருக்கே உயிர்கொடுக்கும் நந்நீர்க் கிணறு
பெருமையும் அறிவுமிக்க பெருமக்கள் ஆவர்
கற்பெனும் அணியைக் கட்டிக் காக்கும்
பெண்கள் அணியும் நாணமே அழகு!
ஆண்களும் நாணம் அணிந்திட வேண்டும்
சிறியன செய்ய, இழ்வினை சிந்திக்க
தர்மம் தவற, தன்னிலை தவற!
செல்வமும் சீரும் சேர்க்கிறான் ஒருவன்
தானே வாழ்ந்து தருக்குடன் நடக்கவா?
பிறந்த குடிதனைப் பேணிக் காக்க
'குடிசெயவல் என்னும் ஒருவற்;குத்
தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்"
ஊரும் உலகும் காக்கும் ஒருவனை
தோளோட தோள்நின்று தெய்வம் காக்கும்

இப்படி பொருட்பாலில் ஒழிபியல் என்று தொகுத்து 13 அதிகாரங்களில 130 குறட்பாக்களில் தனிமனித இலக்கணத்தைத் தமக்கே உரிய உலகம் அளாவிய சிந்தனையில் உரத்த குரல் கொடுக்கிறார் திருவள்ளுவர்.

மனித வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரே! செங்கழுநீரும் அல்லியும் ஆம்பலும் விரிந்து அழகு பரப்பும்.

தனி மனித வாழ்வென்பது உலகில் கிடையாது. தனித்துப் பிறந்து சேர்ந்து வாழ்கிறான். அவனே ஒரு சிறிய சமுதாயம் கொள்கிறான். கொடுக்கிறான். இன்னும் சொல்லப் போனால் தனக்காகவே வாழ்வதில்லை. செயல் சிந்தனை உழைப்பு யாவுமே பொதுவாகிறது.

இவ்வண்ணம் சமுதாயத்தின் அடையாளமாகவும் வடிவமாகவும் சரித்திரமாகவும் இலக்கியமாகவும் இருக்கும் மனிதன் எப்படி இருக்க வேண்டும்.

இவற்றைத்தான் வள்ளுவர் வாக்கு வலிவு கொடுக்கிறது. வள்ளுவம் மனிதக் குலத்தின் பொதுமையாகிறது. மறையென்று சொல்வது கூட சரியல்ல. மறைவாக எதுவுமே சொல்லப்படவில்லை. உலகின் எல்லாச் திசைகளிலும் போகிறது. வாழ்க்கையின் எல்லாக் கதவுகளையும் திறக்கிறது. எனவே வள்ளுவம் வாழ்க்கை விளக்கம்.

மனித வாழ்வைச் சித்திரமாய்த் தீட்டி, சிற்பமாகச் செதுக்கி மனித மாட்சியைத் தெளிவுபடுத்திய மனித குலத்தின் ஆயிரம் கோடி ஞாயிறாகத் திகழும் வள்ளுவப் பெருந்தகையை வாழ்த்தி வணங்குவோம்.

கவிஞர் கண. கபிலனார்

திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 3:14 pm

பயனுள்ள தகவல்கள் ஷிவா அண்ணா நன்றிகள்...வாழ்க்கையின் தத்துவத்தை மிக அழகாக ,தெளிவாக சொல்லி இருக்கின்றார் திரு வள்ளுவர்..

தனி மனித வாழ்வென்பது உலகில் கிடையாது. தனித்துப் பிறந்து சேர்ந்து வாழ்கிறான். அவனே ஒரு சிறிய சமுதாயம் கொள்கிறான். கொடுக்கிறான். இன்னும் சொல்லப் போனால் தனக்காகவே வாழ்வதில்லை. செயல் சிந்தனை உழைப்பு யாவுமே பொதுவாகிறது.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 4:29 pm

திருவள்ளுவரும் வாழ்க்கை விளக்கமும் 677196 மீனு அருமை

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக