புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_lcapமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_voting_barமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 3:16 pm

First topic message reminder :

குடவோலை முறை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சோழர் காலத்தில் கிராம நிர்வாகத்திற்கான நபர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

மக்களின் புகார்கள் மற்றும் வழக்குகளை நேர்மையாகவும் முறையாகவும், விசாரித்து தீர்ப்புகள் கூறுவதற்க்காக, இந்த அமைப்பை பயன்படுத்தினார்கள். இராஜராஜ சோழன் அறிமுகம் செய்த இந்த நீதி வழங்கும் முறைதான் உலகின் முதல் நீதித்துறை கட்டமைப்பு. இதுவே உலக நாடுகளின் நீதித்துறை
அமைப்புகளுக்கு முன்னோடி என்பதை மறுக்க முடியாது.


ஆனால் இன்று பிரிட்டீஷ்காரர்கள் எச்சமாய் விட்டுச்சென்ற சட்டங்களையும், நீதித்துறை கட்டமைப்புகளையும் பெருமையோடு கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கென, நம் நாட்டின் சூழலுக்கு தகுந்த சட்டங்களையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் நமக்குத் தகுந்த பாதுகாப்பு அமைப்புகளையும் மேம்படுத்தாமல் வெளிநாட்டவன் தயவில் காலம் தள்ளுவதால், இப்போது மிகப் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம்.


ஒரு நாட்டைப் பிடிக்க வேண்டுமென்றால், முதலில் அந்நாட்டை நோட்டமிட்டு, எங்கெல்லாம் பாதுகாப்பில் ஓட்டைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்து, மெதுவாக ஊடுறுவி பின் தாக்குதலில் இறங்குவார்கள். இதே முறையில்தான் நம் நாட்டை இப்போது அமெரிக்கா சுற்றி வளைத்துவிட்டது. இதற்காக அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இன்டர்நெட்.

ஏன் இன்டர்நெட்டை தேர்வு செய்ய வேண்டும்?


இன்றைய சூழலில் உலகை ஆளுவது இன்டர்நெட் தான் என்பது LKG குழந்தைக்கும் தெரியும். நம் நாட்டின் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் பணப்பரிவர்த்தனைகள், பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும், செலுத்தும் வசதி உட்பட அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும், வர்த்தகங்களும் இப்போது இன்டர்நெட்டில் தான். இவைதவிர, வாக்காளர் விபரத்திலிருந்து, நில சர்வே எண் வரை, அரசின் பல்வேறு துறைகளைப் பற்றிய முக்கிய தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கின்றன. இப்படி அரசின் செயல்பாடுகள் அனைத்தும், இன்டர்நெட் வடிவத்திற்கு மாறுவதற்குப் பெயர்தான் இ-கவர்னன்ஸ். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த தகவல்களைப் பார்க்க முடியும், சேவைகளைப் பயன்படுத்த முடியும். இதுபோதாதா? திருடனுக்கு வசதியாக ஜன்னல் ஓரம் பீரோவை பூட்டாமல் வைப்பதுபோல நாட்டை முடக்கி விடவேண்டும் என்று களத்தில் இறங்கியிருப்பவர்களுக்கு, ஆன்லைனில் நாம் கதவு திறந்து வைத்திருக்கிறோம்.


இதை யார் செய்கிறார்கள்?
அவர்களின் நோக்கம் என்ன?
நம் தகவல்களை வைத்துக் கொண்டு அவர்களால் என்ன செய்ய முடியும்?


நம்மிடம் கொட்டிக் கிடக்கும் வளங்களைப் பார்த்து, கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் நம் நாட்டுக்குள் நுழைந்து, நம்மிடம் உள்ள குறைகளை சாத்தியமாக்கி, மெல்ல மெல்ல அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இறுதியில் நம்மை அடிமைகளாக்கி ஆண்டனர். இந்த நிலை இப்போது திரும்புகிறது, ஹைடெக் வடிவில்.


நமக்கு கிடைத்த ஆதாரப் பூர்வ தகவலின் படி, நம் நாட்டின் மிக முக்கிய தகவல்கள் பங்குச்சந்தை பரிவர்த்தனை உட்பட அனைத்து ஆன்லைன் சேவை உட்பட உண்ணிப்பாக கண்காணித்து சேகரிப்பது, அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி..! நீண்ட காலமாகவே நமது ஆன்லைன் பேங்கிங், பங்குச்சந்தை பரிவர்த்தனைகளை நோட்டமிட்டுள்ளனர். நம்மிடம் சரியான சைபர் சட்டங்கள், பாதுகாப்பான கட்டுப்பாடுகள் இல்லாததை சாத்தியமாக்கிக் கொண்டு, என்.எஸ்.சி , பி.எஸ்.சி , நாட்டின் அனைத்து வங்கிகளின் ஆன்லைன் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் (பாஸ்வேர்ட் உட்பட) மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைத்து துறைகள் பற்றிய முக்கிய தகவல்கள், டிவிட்டர், பேஸ்புக், ஆர்குட் மற்றும் அனைத்து மின்னஞ்சல் வலைத்தளங்களிலும் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரது முக்கிய தகவல்கள் யாவும், இப்போது சி..ஏ வின் விரல் நுனியில்!


அவர்கள் நினைத்தால், நம் பங்குச்சந்தை பரிவர்த்தனைகளை ஆன்லைனில் அப்படியே நிறுத்த முடியும். இந்தியர்கள் அனைவரது வங்கிக் கணக்குகளை ஆன்லைன் மூலம் முடக்க முடியும். அரசின் ஆன்லைன் செயல்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்ய முடியும். சொல்லப்போனால், சில மணி நேரத்தில் இன்டர்நெட்டில் இந்தியாவின் அனைத்து தகவல்களையும் மொத்தமாக அழித்து விட முடியும். பங்குச்சந்தையில் தொடர்ந்து சில நாட்களுக்கு சிறிய சரிவு ஏற்பட்டாலே நம் பொருளாதாரம் ஆட்டம் காணும் சூழலில்........... மேலே குறிப்பிட்ட அனைத்தும் நடந்து விட்டால்? விபரீதத்தை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.


இன்டர்நெட் மூலமாகத்தானே ஊடுருவுகிறார்கள்? நிஜ வாழ்க்கையில் நம் பாக்கெட்டிலிருந்து யாரும் பணத்தை பிடுங்கப் போவதில்லையே என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு, பெட்ரோல் விலை உயர்ந்தால் காய்கறி, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்கிறதே, ஏன்….? இதற்கான பதில் உங்கள் அனைவருக்கும் தெரியும். இதே நிலைதான் இந்திய பொருளாதாரத்திற்கும். பங்குச்சந்தைகளை முடக்கினால்......... ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கையும் ஆன்லைன் மூலம் முடக்கினால்.......... இந்தியாவின் நிலைமை சீட்டுக் கட்டு போலச் சரியும். சரிந்தால் மீண்டும் எழவே முடியாது. ஆயுதங்களுடன் நாட்டுக்குள் புகுந்து நம்மை சுட்டுத் தள்ளினாலும், சில நிமிடங்களில் துடித்து அடங்கி மரணிப்போம். ஆனால் பொருளாதாரத்தை சீர்குலைத்து சோற்றுக்கே வழியில்லாமல் செய்து விட்டால்..... பசியால் கொஞ்சம் கொஞ்சமாக செத்து, அண்டை நாடுகளிடம் எதை வேண்டுமானாலும் தாரை வார்ப்போம். இது தான் அவர்களது டார்கெட்.


இது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். நாம் சுற்றிவளைக்கப்பட்டு விட்டோம். சைபர் போருக்கு அந்நியர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். இது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ அலைவரிசை கையாடல்கள், விளையாட்டுத் துறை ஊழல், என, ஆட்சியாளர்கள் படு பிசியாக இருப்பதால் விபரீதத்தை கண்டும் காணாமல் விட்டிருக்கலாம். அல்லது இந்த விபரீதத்தை கண்டும் காணாமல் விடுவதற்காக கவனிக்கப்பட்டு இருக்கலாம்.


வெளிநாட்டு பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இந்தியாதான் ஹாட் மார்க்கெட். குறிப்பாக அமெரிக்காவின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் அனைத்தும், அந்நாட்டை விட இரண்டு மடங்கு இந்தியாவில் விற்பனையாகின்றன. இதை சாதகமாக்கிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தை மேலும் விரிவடையச் செய்ய வேண்டுமென்றால், இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளை முடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கிழக்கிந்திய
கம்பெனியைப் போல நம்மிடமுள்ள குறைபாடுகளைச் சாதகமாக்கி உள்ளே புகுந்து
அடிமைப்படுத்த வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் திட்டம்
.


காவலாளி இல்லாத, ஒழுங்காக பராமரிக்காத வேலியைக் கொண்ட வளமான மாந்தோப்பைப் பார்க்கும் போது, பயந்தாங்கொள்ளிக்குக் கூட மாங்காய் பறிக்க ஆசைவரும். இது இயல்பு தானே! நம் நாட்டின் ஆன்லைன் பாதுகாப்பும் மேலே கூறிய மாந்தோப்பைப் போலத் தான். எலெக்ட்ரானிக் சட்டங்கள் இல்லாததால், நம்மை எளிதாக சுற்றி வளைத்து விட்டனர்.


இந்தியாவைப் போலவே, சீனாவும் பல்வேறு துறைகளில் அமெரிக்க மற்றும் பிரிட்டனை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. ஆனாலும் சீனப் பெருஞ்சுவரைப் போலவே, தங்கள் இ-கவர்னன்ஸ் செயல்பாடுகளுக்கும் கடுமையான சட்டங்களை விதித்து பாதுகாப்பு சுவரை பலப்படுத்தி விட்டது.


சீனா மட்டுமின்றி உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பல, 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி நடத்தப்பட்ட ஒரு சாம்பிள் தாக்குதலில் உஷாராகி, தங்கள் நாட்டின் ஆன்லைன் சட்டங்களை கடுமையாக்கி, பாதுகாப்பை அதிகரித்து விட்டன. குறிப்பிட்ட அந்த தேதியில் சரியாக நான்கு மணி நேரம் ட்விட்டர் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது. சைபர் இரானியன் ஆர்மி என்ற குழு, இந்த வேலையைச் செய்ததாக அறிவிக்கப்பட்டது. நான்கே மணி நேரம் தான். ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இழப்பு பல மில்லியன் டாலர்கள். தாக்குதலுக்குக் காரணம் அமெரிக்க உளவுப் பிரிவுதான் என்று ஆணித்தனமாகக் கூறப்படுகிறது. என்னமாதிரியான ரியாக்ஷன் கிளம்புகிறது என்பதை அறியவே இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உலகமே சுதாரித்துக்கொண்டபோதும், செவிடன் காதில் விழுந்த சங்கு போல தனது வழக்கமான கடமைகளை செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.


கூகுள், விக்கிப்பீடியா உடந்தை!


எப்போதும் ராணுவம் தடாலடியாக புகுந்து தாக்குதல் நடத்துவார்கள் என்று கூறிவிடமுடியாது. தனது சார்பில் சிலரை அனுப்பி நோட்டம் பார்ப்பார்கள், அவர்கள் மூலம் குழப்பத்தை விளைவிப்பார்கள், மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவார்கள், இது தான் நம் நாட்டில் இப்போது நடக்கிறது. நம்மை குழப்புவது, தவறான தகவல்களை அளித்து திசை மாற்றுவது ஆகிய பணிகளைச் செய்ய, இந்தியர்கள் அதிகம் நம்பும் கூகுள், விக்கிபீடியா ஆகிய சேவைகள் களமிறக்கப் பட்டிருப்பதாகவும் ஆதாரங்களுடன் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிறிய உதாரணம்: கூகுளின் இந்தியத் தளத்தில் (www. google.co.in) “How to” என்று கொடுத்துத் தேடிப்பார்க்கவும். “How to remove dress” “How to have sex” என்று படங்களுடன் வலைத்தளங்கள் தோன்றும். இதே சொல்லை பிரிட்டனுக்கான கூகுள் தளத்தில் (www. google.co.uk) தேடினால் “How to repair computer” உள்பட ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்யும் வலைத்தளங்களின் பட்டியல் தோன்றும். இது போல இந்திய வலைத்தளத்தில் எந்த வார்த்தையை பாதியாக கொடுத்தாலும், செக்ஸ் தொடர்பான விஷயங்கள் தான் நமக்கு முடிவுகளாகக் கிடைக்கும். அதிகமாகப் பார்க்கப்படும் வலைப்பக்கங்கள் தான் முன்னனியில் வரும் என்று கூறினாலும், நம் இளைஞர்களையும், மாணவர்களையும் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே இது போன்ற தேடல் முடிவுகள் திணிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுபோல விக்கிபீடியாவில் நம் நாட்டைப் பற்றிய முக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் கட்டுரைகளின் ஒவ்வொரு துணைத்தலைப்புகளுக்கும் அருகில் edit என்ற சொல் கொடுத்திருக்கிறார்கள். விக்கிபீடியாவில் இலவசமாக பதிவு செய்து கொண்ட யார் வேண்டுமானாலும் செய்யலாம், தகவல்களை மாற்றலாம், அது எந்த தகவலானாலும் சரி….!


இது போன்று மாற்றங்கள் செய்யப்பட்டாலோ, கட்டுரைகளில் உண்மை இல்லையென்றாலோ தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கைவிரிக்கிறது. விக்கிபீடியா கட்டுரைகளை இந்தியாவில் மாணவர்கள் தான் அதிக அளவில் படிக்கிறார்கள். அவர்களுக்கு தவறான தகவல்கள் சென்று சேரும் என்பது நன்றாகத் தெரிந்தும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விக்கிபீடியா கைவிரிப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இவை சிறிய உதாரணங்கள் தான். இதுபோல ஆன்லைனில் நம்மை மறைமுகமாக கேவலப்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் அரங்கேற்றி வருகின்றன. ஏன் தெரியுமா?
அடிமைப்படுத்துதலின் முதல் படி, மட்டம் தட்டி தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவது தான்.


தீர்வுகள் இல்லையா?


இந்தியாவில் 80% பேர் விண்டோஸ் பதிப்பைத் தான் பயன்படுத்துகின்றனர். திடீரென, இன்டர்நெட் இணைப்பு வழியாக ஆன்லைன் அப்டேட்கள் என்ற பெயரில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களும் முடக்கப்பட்டால்…..? உருவாக்கி வைத்திருக்கும் முக்கிய தகவல்களை எதில் திறந்து பார்ப்பது இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தாலே, அனைத்து பிரச்சனைகளுக்கும் விடை கண்டுபிடித்து விடலாம். விண்டோஸிற்கு மாற்று லினக்ஸ். பாதுகாப்பாக, உங்கள் வசதிப்படி லினக்ஸை பயன்படுத்தலாம். இதே போல ஆன்லைனில் ஒவ்வோரு செயல்பாட்டிற்கும் அமெரிக்க சேவைகளை நம்பி அவர்களிடம் நம் குடுமியைக் கொடுக்காமல், பாதுகாப்பான மாற்று தேட வேண்டும்.


பாதுகாப்பான மாற்று வேண்டுமென்றால், நிபுணத்துவம் பெற்றவர்கள் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், நம்மிடமிருக்க வேண்டிய தொழில்நுட்ப அறிவுஜீவிகள் அமெரிக்காவின் பாதங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி ஆங்கில அறிவிலும் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பது உலகறியும். எனவே தான் திறமையான, புத்திசாலியான இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கொத்திக் கொண்டு போகும் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள், எதிர்பார்க்கும் சம்பளத்தை விட பத்து மடங்கு கொடுத்து ஆடம்பர மாயைக்குள் சிக்க வைத்து அடிமையாக்கிக் கொள்கின்றன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்பட, மைக்ரோசாப்டின் தயாரிப்புகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் 40% இந்திய நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது. விண்டோஸ் மட்டுமின்றி, கூகுளின் அனைத்து ஆன்லைன் சேவைகளை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இவர்கள் தங்களை தாண்டி வேறு எங்கும் செல்லக் கூடாது, சுதந்திரமாக சிந்திக்கக் கூடாது என்பதில் அமெரிக்க நிறுவனங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன.


அப்படியானால் நாம் மீண்டுமொரு முறை நம்மை இழந்து அந்நியர்களிடம் அடிமைப்படுவதை தடுக்கவே முடியாது


இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறார் திரு. ராம்பிரகாஷ்.


வழக்கறிஞரான இவர், ஆன்லைன் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக பிரிட்டனில் ஆய்வுப் படிப்பை முடித்தவர். நம் நாட்டின் மீதான சைபர் தாக்குதல் குறித்து தனது ஆய்வின் போது ஆதாரங்களுடன் கண்டுபிடித்தவர். அமெரிக்க உளவுப் பிரிவின் இந்த செயல்பாட்டை சைபர் படையெடுப்பு என்றே கூறுவேன். மிகக் கச்சிதமாக நாம் அவர்களிடம் சிக்கியிருக்கிறோம். நம் வீட்டின் சாவி கிடைத்தும், அவர்கள் ஏன் இன்னும் உள்ளே வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ மிகப் பெரிய திட்டம் இருப்பதால் தான், நம் ஆன்லைன் செயல்பாடுகளை கைப்பற்றிய பின்னரும் அமைதியாக உள்ளனர். அனைத்தும் போன பின் குமுறுவதை விட, பாதுகாப்பு நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். அவர்களிடம் சிக்கிய ஆன்லைன் சொத்துக்களை மீட்க முடியாது. ஆனால் இப்போதே அனைத்து சேவைகளையும் பேக்-அப் எடுத்து, பாதுகாப்பான அரண்களோடு நமக்கான சேவைகளில் பதிவது நல்லது. இவை எல்லாவற்றையும் விட, சைபர் சட்டங்களை உருவாக்கி கடுமையாக்க வேண்டும். மொத்தத்தில் நமக்கான பாதுகாப்பான மின் அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிரி உளவு விமானங்கள் நம் எல்லைக்குள் வரும்போதே கண்டுபிடித்து அழிக்கும் நம் ராணுவத்தைப் போல, ஆன்லைனில் நம் மின் அரசாங்கத்தை அந்நியர்கள் நெருங்கும் போதே இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள் வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்ய, நீதித் துறையும், மின் அரசாங்கமும் கைகோர்க்க வேண்டும் என்றார்.


திரு. ராம்பிரசாத் சுட்டிக் காட்டிய விஷயம். அமெரிக்க சேவைகளுக்கு மாற்றாக, நாம் மிகப் பெரிய பாதுகாப்பு அரண்களை உருவாக்க வேண்டும். உருவாக்குவது மிகப் பெரிய வேலை இல்லை. விண்டோஸ், கூகுளை உருவாக்கிய இந்திய நிபுணர்களுக்கு, நம் நாட்டிற்காக பாதுகாப்பான ஆன்லைன்/ப்லைன் சேவைகளை உருவாக்குவது கடினமா என்ன....? அமெரிக்காவில் சுகவாழ்வு, டாலர்களில் சம்பளம், ஹைடெக் வாழ்க்கையைக் காட்டிலும் நம் நாடு மிக முக்கியம் என்பதை ஒவ்வொரு தொழில்நுட்ப நிபுணரும் உணர வேண்டும். போர்க்காலங்களில் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் சேர்வது போல, அமெரிக்க அடிமை வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நிபுணர்கள் அந்த மாய வலையிலிருந்து வெயியேறி, நம் நாட்டுக்காக, தொழில்நுட்பங்களை உருவாக்க முன்வரவேண்டும்.


படித்தவுடன் அமெரிக்க நிறுவனங்களில் உங்கள் புத்திசாலித்தனத்தை விற்கும் முட்டாள்தனத்தை இனியும் தொடராதீர்கள். நிபுணர்களே..... அந்நியர்கள் நுழையாதபடி, அவர்களுக்கு சவால் விடும் தொழில்நுட்ப சேவைகளை உருவாக்கி அதன் மூலம் நம் ஆன்லைன் உலகை பலப்படுத்துங்கள்! இல்லையேல், ஊசலாடும் தாயின் உயிரை காப்பாற்ற தண்ணீர் தராமல், காதலியின் பாதங்களைக் கழுவிய பாவத்துக்கு ஆளாவீர்கள்!



  • மார்ச் 2011 ல் கம்ப்யூட்டர் உலகம் என்ற புத்தகத்தில் வெளிவந்தது இந்த பதிவு



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 8:00 pm

ந.கார்த்தி wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 154550 மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 678642

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 26, 2011 8:04 pm

நினைச்சாலே கதி கலங்குது. அதிர்ச்சி



மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Pமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Oமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Sமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Iமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Tமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Iமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Vமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Eமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Emptyமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Kமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Aமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Rமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Tமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Hமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Iமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Cமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 K
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jun 26, 2011 9:50 pm

நம்மிடையே விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். அந்நிய நாடுகளின் கீழ் பணிபுரிய கூடாது. சரியான, பாதுகாப்பான மின் அரசாங்கத்தை நாம் நிறுவ வேண்டும். மிக அருமையான பதிவு தந்த பாலாவுக்கு நன்றி.



இனியொரு விதி செய்வோம்
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Sமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Emptyமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Pமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Emptyமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Sமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Eமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Lமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Vமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 Aமீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 M
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 27, 2011 11:24 am

spselvam wrote:நம்மிடையே விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். அந்நிய நாடுகளின் கீழ் பணிபுரிய கூடாது. சரியான, பாதுகாப்பான மின் அரசாங்கத்தை நாம் நிறுவ வேண்டும். மிக அருமையான பதிவு தந்த பாலாவுக்கு நன்றி.
மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 359383

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 11:27 am

நல்ல பதிவு மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்) - Page 2 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக