புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
21 Posts - 3%
prajai
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_m10ஜுனியர் விகடன் செய்திகள்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜுனியர் விகடன் செய்திகள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:12 am

மூடப்பட்ட பள்ளி... நடுத்தெருவில் மாணவர்கள்!

சிக்கலில் சீர்காழி லயன்ஸ் கிளப்
சிறிய கீற்றுக் கொட்டகையில் பள்ளி ஆரம்பித்து, அதன் லாபத்தால் இன்று பல மாடி கட்டடங்களைக் கட்டி கல்வித் தந்தைகளாக பலர் உலா வரும் தமிழ்நாட்டில் தான், நடத்தி வந்த மெட்ரிக் பள்ளியை நடத்த முடியாமல் மூடிவிட்டது லயன்ஸ் கிளப்!
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma26a


நாகை மாவட்டம் சீர்காழியில் 1984-ம் ஆண்டு சர்வதேச சங்கத்தின் நிதியைப் பெற்று, 'ஏழை மாணவர்களும் மெட்ரிக் கல்வி பெற வேண்டும்’ என்ற உண்மையான அக்கறையில் ஆரம்பிக்கப்பட்டது லயன்ஸ் கிளப் மெட்ரிகுலேஷன் பள்ளி. மிகக் குறைந்த கட்டணம் என்பதால், 400-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அந்தப் பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்த கடைக்கண் விநாயகநல்லூர் எஸ்டேட் நிர்வாகத்தினர், பல லட்சம் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை வெறும் 3 லட்சத்துக்குக் கொடுத்தனர். அதில் கட்டடங்கள் கட்டி பல வருடங்களாக நல்ல முறையில் நடந்து வந்த பள்ளியை, தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மூடி, பெற்றோர்களைத் தவிக்கவைத்து உள்ளது பள்ளி நிர்வாகம்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma26

கடந்த 20-ம் தேதி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட செய்தி கேட்டு பள்ளிக்கு விரைந்தோம். ஸ்வேதா, கயல்விழி என்ற இரண்டு பெண் குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு பரிதாபமாக நின்ற கோவிந்தராஜன், ''என்ன அநியாயம் சார் இது? போன வருடம் தேர்வு முடிந்தவுடன் சொல்லி இருக்கலாம். இல்லை, எல்லோருக்கும் ரிசல்ட் அனுப்பும்போது சொல்லி இருக்கலாம். அதைவிட்டு, '15-ம் தேதி ஸ்கூல் திறக்கும்போது வேன் வரவில்லையே’ என்று நாங்கள் வந்து பள்ளியில் கேட்கும் போதுதான், 'பள்ளியை மூடப்போகிறோம்’ என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இப்படிப் பெற்றோர் ஒவ்வொருவராக வந்து கேட்டவுடன், பள்ளி நிர்வாகிகள் 17-ம் தேதி பெற்றோர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, 'பள்ளி நஷ்டத்தில் இயங்குகிறது, அதனால் மூடுகிறோம்’ என்று தன்னிலை விளக்கம் சொல்கிறார்கள். எல்லாப் பள்ளிகளிலும் அட்மிஷன் முடிந்துவிட்ட இந்த நேரத்தில், நாங்கள் எங்கேபோய் பிள்ளைகளைச் சேர்ப்பது?'' என்று கொந்தளித்தார் கோவிந்தராஜன்.

இங்கு வேலை பார்த்த பள்ளி முதல்வர், 15 ஆசிரியர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அத்தனை பேரின் எதிர்காலமும் கேள்விக்குறியே!

''அங்கே சொல்லி இருக்கோம்... இங்கே சொல்லி இருக்கோம்னு சொல்லி சமாளிக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளிக்கூடத்திலேயும் எங்க குழந்தைகளை சேர்த்துவிடறதைப் பத்தி இவங்க நடவடிக்கை எடுக்கவே இல்லை. இவங்க மூடினது நஷ்டத்தாலா... இல்லை, வேற ஏதாவது உள் காரணம் இருக்கான்னும் தெரியலை!'' என்றார் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஜா பீவியின் தந்தை புகாரி.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma27a
''அப்படி என்ன உள் காரணம் இருக்க முடியும்?'' என்று பள்ளி வட்டாரத்திலும், லயன்ஸ் கிளப் வட்டாரத்திலும் விசாரித்தோம். ''பள்ளிக்கூடத்தில் தற்போது 96 மாணவர்கள்தான் படிக்கிறார்கள். அதில் பாதி பேர் ஃபீஸ் கட்டாமல் இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடம் என்றால் அவர்களின் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து கட்டணம் கட்டும் பெற்றோர், இங்கு கொஞ்சம் அலட்சியமாகவே இருக்கிறார்கள். ஆனால், அது மட்டும் பள்ளியை மூடக் காரணம் இல்லை. இந்தப் பள்ளியை, இங்கு உள்ள அறக்கட்டளை பிரமுகர் ஒருவரிடம், தற்போது பள்ளி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் விலை பேசி இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன...'' என்கிறார்கள். விலை பேசி இருக்கும் அந்த நபர் கேட்டுக்கொண்டதன் பின்னணியில்தான் பள்ளி மூடப்படுகிறதாம்.

பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் சுரேஷ்சந்த் ஜெயினை சந்தித்து இது பற்றிக் கேட்டோம். ''பள்ளியை மூடுவதற்கு நஷ்டம் மட்டும்தான் காரணம். கடந்த நான்கு ஆண்டு களாகவே வருடத்துக்கு 2 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதையும் ஏற்றுக்கொண்டுதான் தொடர்ந்து நடத்தி னோம். 'இனியும் நடத்த முடியாது’ என்று பள்ளி நிர்வாகக் குழு கூடி முடிவு எடுத்த பின்னர்தான் மூடுகிறோம். அதனால், பள்ளியில் படித்த மாணவர்களை அப்படியே விட்டுவிட மாட்டோம். சீர்காழி நகரில் இருக்கும் நான்கு முக்கியப் பள்ளிகளில் பேசி இருக்கிறோம். நிச்சயமாக இந்த வாரக் கடைசிக்குள் அந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துவிடுவோம்!'' என்று உத்தரவாதம் கொடுத்தவரிடம், ''பள்ளியை விலை பேசிவிட்டீர் களாமே?'' என்று கேட்டோம். ''அப்படி எதுவும் இல்லை. இந்த இடம் தொடர்ந்து லயன்ஸ் கிளப் வசம்தான் இருக்கும். இதில் மருத்துவமனை போன்ற மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதையாவது கொண்டுவரத் திட்டம் இட்டு இருக்கிறோம். நிச்சயம் அடுத்தவரிடம் கொடுக்க மாட்டோம்!'' என்று இன்னொரு உத்தரவாதத்தையும் கொடுத்தார்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma27b
லயன்ஸ் கிளப் மேல் மக்கள் மிகுந்த நம்பிக்கைவைத்து இருக் கிறார்கள். ஆகவே, மீண்டும் பள்ளியைத் திறக்க ஆவன செய்ய வேண்டும்!

நன்றி ஜூவி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:14 am

பொறுப்பு' இல்லாத அமைச்சர்கள்!

தொடர்கிறது புதுச்சேரி கலாட்டா


'வேண்டா வெறுப்புக்குப் புள்ள பெத்து, காண்டா மிருகம் என்று பெயர் வைப்பது’ போல், அமைச்சர்களை அறிவித்துவிட்டு, இன்னும் துறைகளை ஒதுக்காமல் இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி! ''பொறுப்பு ஏற்று ஒரு மாதம் கழித்து, அதுவும் அரசியல் நெருக்கடியின் காரணமாக, கடந்த 8-ம் தேதி வேண்டாவெறுப்பாக அமைச்சர்கள் பட்டியலை அறிவித்தார், ரங்கசாமி. ஆனால், இந்நாள் வரை அவர்களுக்கான துறைகளை ஒதுக்காமல் இருப்பதால் அனைத்துப் பணி களும் பாதிக்கப்பட்டு உள்ளது...'' என்று புலம்புகிறார்கள், புதுச்சேரிவாசிகள்!

தேர்தல் முடிவு வெளிவந்து, வெற்றியைக் கொண்டாடும் முன்பே கூட்டணிக்குள் குழப்பம்! ஜெயலலிதாவின் கோபத்தை சம்பாதித்துக்கொண்ட ரங்கசாமி, அதில் இருந்து விடுபட்டு நாள், நட்சத்திரம் பார்த்து, வளர்பிறை தினத்தில்தான் அமைச்சரவை சகாக்களைத் தேர்வு செய்தார். ஐந்து பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார். ஆனால், இந்தப் பட்டியல் வெளியானதில் இருந்து ரங்கசாமிக்குப் போதாத நேரம் துவங்கியது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், அமைச்சர்கள் பட்டியல் டெல்லி உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறவேண்டும். அதற்காகச் சென்ற பட்டியலில் முதல்வர் ரங்கசாமி சிபாரிசு செய்த ஐந்து பேரில் சந்திரகாசு, ராஜவேலு, கல்யாணசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகிய நான்கு பேருக்கும் ஒப்புதல் அளித்த உள்துறை, ஐந்தாவது நபரான அசோக் ஆனந்த் பெயரில் சி.பி.ஐ. வழக்கு இருப்பதால் ஒப்புதல் அளிக்க மறுத்தது.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Po26
மேலும், ரங்கசாமியின் புதிய அமைச் சரவையில் கல்யாணசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் புதிய முகங்கள். இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் அதிருப்தி அடைந்தனர். அதோடு, ரங்கசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமார், தனக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று காத்திருந் தார். பட்டியலில் தன் பெயர் இல்லை என்றதும், கடும் அதிருப்தி அடைந்தார். 30 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட புதுச்சேரியில் சுயேச்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமாரின் ஆதரவு இருந்தால்தான் ரங்கசாமியால் மெஜா ரிட்டியை நிரூபிக்க முடியும்.

எஞ்சி இருக்கும் ஒரே ஒரு அமைச்சர் பதவிக்கு தன் சொந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையான போட்டி துவங்க... இதில் எந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் மீதம் இருப்பவர்கள் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்ற சூழல். இந்த இக்கட்டான நிலையில் சபாநாயகர் தேர்வு மற்றும் பட்ஜெட் தாக்கலில் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று நினைத்தார் ரங்கசாமி. அதனால் டெல்லிக்குச் சென்று சோனியாவை மரியாதை நிமித்தம் சந்திக்கச் சென்றார். 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்றாலும், தனது ஆட்சிக்கு காங்கிர ஸால் எவ்வித குடைச்சலும் வந்துவிடக் கூடாது என்பதுதான் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். தென் மாநிலங்களில் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் சரிவை சந்தித்து வரும் காங்கிரஸ், ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வாய்ப் புள்ளது என்றும் சொல்கிறார்கள்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... Po27

மீண்டும் ரங்கசாமியின் காங்கிரஸ் படை எடுப்பைக்கண்டு அதிர்ந்த புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர்கள், தேர்தலுக்குப் பின்பு முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ரங்கசாமி அரசின் செயல்பாடுகள் குறித்துக் கண்டித்தனர். ''என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், முதியோர் உதவித்தொகை 2,000 என்று உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்களித்த ரங்கசாமி, 750 என்று இருந்ததை இந்த மாதம் முதல் 1,000 என்று உயர்த்தி உள்ளார். அதேநேரம், முதியோர் உதவித்தொகை பெறத் தகுதி இல்லாதவர்கள் என்று 8,000 பேரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மேலும் தினக்கூலி மற்றும் பகுதிநேர ஊழியராகப் பல்வேறு அரசுத் துறைகளில் கடந்த ஆட்சியில் பணிக்கு அமர்த்தப்பட்ட 3,000 பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளார். முந்தைய ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டவர்களை புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் நீக்கும் வழக்கம் இதுவரை புதுவை அரசியலில் இல்லாத ஒன்று. இதனால் பாதிக்கப்படப்போவது பொது மக்கள்தான்!'' என்று சாடினார்கள்.

மேலும், அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்காதது பற்றி, ''அவர் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கலாம்; ஒதுக்காமல் இருக்கலாம். அது அவரது சொந்தக் கட்சிப் பிரச்னை. அவர் எளிய முதல்வர், நன்றாக அரசை நடத்துவார் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்து முழு மெஜாரிட்டி அளித்துத் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர் சிறப்பாக, திறமையாக ஆட்சி புரிவார் என்று நம்புகிறோம்!'' என்று கிண்டலாகக் கூறியவர்கள்,

''நாங்கள் கவலைப்படுவது எல்லாம் பொது மக்களைப் பற்றிதான். எங்களின் பார்வை சட்டமன் றத்தையோ, அதிகாரத்தையோ நோக்கி அல்ல. எங்களுக்கென்று ஒரு தலைமை உண்டு. அன்னை சோனியாவின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் தொடர்ந்து மக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படும்...'' என்று கூறினார்கள்.

தனித்தோ அல்லது காங்கிரஸுடன் இணைந்தோ, எப்படி இருந்தாலும் விரைவில் அமைச்சர் களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டு, மக்கள் பணி தொடங்கவேண்டும் என்பதே புதுச்சேரி மக்க ளின் ஏகோபித்த குரல். அசைந்துகொடுப்பாரா ரங்கசாமி?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:15 am

விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால், அதை சட்டபூர்வமாக ஆக்கிவிட வேண்டியதுதானே?’ - விதவிதமாக நடக்கும் விபசார யுக்திகளைப் பார்த்து வெறுப்பின் உச்சத்தில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் எழுப்பிய கேள்வி இது! காருக்குள் விபசாரம், பாருக்குள் விபசாரம், மசாஜ் சென்டரில் விபசாரம் என சிங்காரச் சென்னை, இப்போது 'சிங்காரி’ சென்னையாகவே மாறிவிட்டது.

இதில் மசாஜ் சென்டர்களில் நடக்கும் விபசாரம் எல்லை மீறிப் போவதாகக் கவலை கொள்கிறார்கள், உண்மையான மசாஜை எதிர்பார்த்துச் செல்லும் வாடிக்கையாளர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஒருவரின் கணவர் சென்னையில் நடத்திவந்த மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர்களுடன் விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்துவதாக தாய்லாந்தைச் சேர்ந்த 15 பெண்கள், போலீஸில் புகார் அளித்தார்கள். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, வளசரவாக்கத்தில் 'மசாஜ் சென்டரில் விபசாரம்’ என்று புகார் வந்ததை அடுத்து, அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி விபசாரத் தொழில் செய்த பெண் தாதா ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் கோடம்பாக்கத்தில் 'தீர்க்காயுசு ஆயுர்வேதா மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் கேரளப் பிரமுகர் ஒருவர் நடத்திய மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை போலீஸ் கைது செய்தது. இப்படி கைது செய்யப்பட்டவர்களில் கணிசமான பெண்கள் குடும்பப் பெண்கள் என்பதும், குடும்பத்துக்குத் தெரியாமல் ஈடுபட்டார்கள் என்பதும் அதிர்ச்சி தரும் தகவல்!

இந்த கும்பலிடம் குடும்பப் பெண்கள் எப்படிச் சிக்குகிறார்கள் என்று விபசாரத் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''சென்னையில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு பியூட்டி பார்லர் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. பழக்கம் இல்லாத பெண்களும், உடன்பழகுபவர்களின் சிகை மற்றும் மிகை அலங்காரங்களைக் கண்டு தங்களையும் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். முதலில் 'ஐ-ப்ரோ’ சீர் செய்துகொள்ள அங்கு செல்லத் துவங்கும் பெண்களை பியூட்டி பார்லர் நடத்தும் பெண்கள், பேசிப் பேசியே மசாஜ் செய்து கொள்வது வரைக்கும் இழுத்து வந்துவிடுவார்கள். அடுத்த கட்டமாக அக்கறையுடன் பேசுவது போல் அந்தப் பெண்களின் குடும்ப உள் விவகாரங்களைக் கறந்துவிடுகிறார்கள்.

தொடர்ந்து, 'மசாஜ் செய்ய கற்றுக் கொண்டால் கைத் தொழில் கற்றுக் கொண்டது போல இருக்கும்; தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என்று ஆசைகாட்டி 'பார்ட் டைம்’ தொழிலுக்கும் இழுத்து வந்துவிடுகிறார்கள். முதலில் சில ஆயிரங்களைக் கண்ணில் காட்டுபவர்கள், பின்பு குறிப்பிட்ட நபருக்கு 'ஸ்பெஷல்’ மசாஜ் செய்தால் கணிசமான தொகை கிடைக்கும் என்று மனதைக் கரைத்து ஒரு கட்டத்தில், 'இது எல்லாம் தப்பே இல்லை’ என்று விபசாரத்தில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். தினசரி கஸ்டமர் வரும் நேரத்துக்கு மட்டும் இரண்டொரு மணி நேரம் வந்து போனாலே 2,000 முதல் 5,000 வரை கிடைப்பதால் சபலப்படும் சில குடும்பப் பெண்களும் இதில் சகஜமாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் வடபழனியில் ஒரு மசாஜ் சென்டரில் ரெய்டு நடத்தியபோது சிக்கிய ஆறு பெண்களில் நான்கு பேர் குடும்ப பெண்களே. கையும் களவுமாகப் பிடித்த​போது அவர்கள், எங்கள் காலில் விழுந்து, 'வீட்டுக்கு இந்த விஷயம் தெரிந்தால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை...’ என்று சொல்லி கழுத்தில் இருந்த தாலிச் சங்கலி வரைக்கும் கழற்றிக் கொடுக்க முன்வந்தார்கள். குடும்பமே நாசமாகிவிடும் என்பதால், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தோம். இவ்வளவுக்கும் அவுங்க எல்லோருமே நன்றாக படித்த பெண்கள்!'' என்றார் அவர்.

''சென்னையில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழின் இணைப்பு இதழில் மட்டும் தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் விளம்பரங்கள் வெளி​யாகிறது. அவற்றில் பாதிக்குப் பாதி விபசாரத்தில் ஈடுபடுபவைதான்...'' என்கிறார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் உயர் அதிகாரி. வங்கியில் மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டி பார்லர் நடத்த கடன்வாங்கிய அந்த சென்டர்கள் மட்டும், மாதந்தோறும் மிகச்சரியாக கடன் தொகையை செலுத்தி விடுகின்றன. இன்னும் சிலரோ கடன் காலம் முடியும் முன்பே கடனை கச்சிதமாகக் செலுத்தி விட்டார்களாம். 'எப்படி இப்படி?’ என்று அந்த அதிகாரி விசாரித்தபோதுதான் 'செய்யும் தொழிலே வேறு’ என்ற விவகாரம் அந்த அதிகாரிக்குத் தெரியவந்து... 'இத்தனை நாளும் விபசாரத் தொழிலுக்கா கடன் கொடுத்தோம்?’ என்று நொந்து போனார் அவர்!

மசாஜ் செய்வதில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் என இரு வகை உண்டு. இதில் ஆயில் மசாஜுக்குதான் மவுசு அதிகம். அதிலேயே ஆயுர்வேதிக் ஆயிலில் ஆரம்பித்து வயாக்ரா ஆயில் வரை ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டாம். மசாஜ் செய்துகொள்ளும் முன்பு இரண்டு பெண்கள் வாடிக்கையாளரின் ஒட்டு மொத்தத் துணி​யையும் உருவி, 'பப்பி ஷேம்’ ஆக்கிவிடுவார்கள். இடுப்பில் கையளவு மட்டுமே ஒரு வெள்ளைத் துணியை கட்டி விடுகிறார்கள். அவர்கள் தேய்க்கும் தேய்ப்பில் அந்தத் துணியும் சிறிது நேரத்தில் காணாமல் போய் விடும். மசாஜின் முடிவில், 'வேறு எதுவும் வேண்டுமா?’ என்று கேட்கிறார்கள். அந்த சமயத்தில், 'சரி’ என்று சொல்வதைத் தவிர வாடிக்கையாளருக்கு வேறு வழி இருக்காது. மசாஜுக்கு சுமார் 1,500 தொடங்கி 5,000 வரையும் விபசாரத்துக்கு 5,000 முதல் 10,000 வரையும் சுமார் ஒரு மணி நேரத்தில் கறந்துவிடுகிறார்கள்!

சபலப்படும் ஆண்களைவிட, குடும்பப் பெண்களே இதில் அதிகம் இழப்பவர்களாக இருக்கிறார்கள், உஷார்!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:18 am

இப்படி எல்லாமா ஏமாத்துவாங்க?'' என்று மருத்துவ உலகத்தில் குற்றம் சாட்டுகிறார்கள் டி.டி.நாயுடுவை! டி.டி. மருத்துவக் கல்லூரியின் தலைவர் டி.தீனதயாள் நாயுடுதான் அவர். திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு அவரால் துவக்கப்பட்டது, டி.டி.மருத்துவக் கல்லூரி. கடந்த மார்ச் மாதம் இந்திய மருத்துவ கவுன்சில், கல்லூரியின் ஆவணங்களைப் பரிசீலனை செய்தபோது, இங்கு 32 டாக்டர்கள், பணியாற்றுவதாக போலியான போட்டோ மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு கையெழுத்துப் போடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போலிப் பட்டியலில் ஓய்வுபெற்ற துணை மருத்துவக் கல்வி இயக்குநர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் ஆகியோரும் அடக்கம் என்பதுதான் வேதனை!
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ch28
இது குறித்து சென்னை முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஜெயவேல், ''டி.டி. மருத்துவக் கல்லூரி துவக்கப்படும் முன்பு அவர்களின் மருத்துவமனையில் பணிபுரிந்தேன். சரியாக சம்பளம் தராததால், 2008-ம் ஆண்டே விலகிவிட்டேன். அப்போது நான் சமர்ப்பித்த ஆவணங்களைக் கொண்டு, இப்போதும் பணியில் இருப்பதாகக் காட்டி இருக்கிறார்கள். பல மருத்துவமனைகளின் வெப் சைட்டுக்குள் சென்று, டாக்டர்களின் போட்டோக்களையும் கையெழுத்தையும் காப்பி செய்து, அங்கே பணிபுரிவது போல போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளனர்!'' என்றார் ஆவேசமாக.

ஓய்வு பெற்ற துணை மருத்துவக் கல்வி இயக்குநர் ராமசந்திர ரெட்டி, ''இப்படி ஒரு மோசடியை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. குறிப்பிட்ட அளவு டாக்டர்கள், உள் கட்டமைப்பு வசதி இருந்தால்தான் மருத்துவக் கல்லூரிக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஸீட் அனுமதிக்கப்படும். அதற்காக, நூற்றுக் கணக்கான டாக்டர்கள் இருப்பதாகப் போலியாகக் கணக்கு காட்டி 150 மருத்துவ ஸீட்களை அந்தக் கல்லூரி பெற்று உள்ளது. வருடத்துக்கு 150 மாணவர்கள் என்றால், ஐந்து வருடங்களுக்கு 750 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் முன்பு அந்தக் கல்லூரியைத் தடை செய்ய வேண்டும்!'' என்றார் கோபமாக. இதே போன்று ஆவணத்தில் இடம்பெற்று உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் சரஸ்வதி, இந்த முறைகேட்டைக் கண்டித்து டி.டி. கல்லூரி மீது வழக்குத் தொடர இருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து தீனதயாள் கல்லூரித் தலைவர் தீனதயாளிடம் கேட்டோம். ''சிலர் மெடிக்கல் ஸீட் இலவசமா கேட்டாங்க. நான் மறுத்துட்டேன். அதனால இப்படிக் கிளப்பிட்டாங்க. அந்த டாக்டருங்க எல்லாம் என்கிட்ட வேலை பார்த்தது உண்மை. அவங்களோட டாக்குமென்ட்ஸும் உண்மை. சம்பள மும் வாங்கி இருக்காங்க...'' என்றவரிடம்,

''அவர்களுக்கு சம்பளம் கொடுத்ததற்கான ஆவணம் இருக்கிறதா?'' என்று கேட்டோம்.

''அவங்களுக்கு பேங்குல சம்பளம் போடலை. பணமாவே கையில வாங்கிட்டாங்க. இப்போ சிக்கல் வந்ததும் நாடகம் ஆடுறாங்க. எந்த டாக்டர் யோக்கியம்னு சொல்லுங்க? நான்

12,000 கோடி புராஜெக்ட்டுல தொழில் பண்றவன். நான் என்ன கொலை செய்றேனா? கொள்ளை அடிக்கிறேனா? இல்லை, பிராத்தல் பண்றேனா? செய்தி போட்டுக்குறதுன்னா தாராளமா போட்டுக்கங்க... அது என்னைப் பொறுத்த வரைக்கும் செலவு இல்லாத விளம்பரம்தான்!'' என்று போட்டுத் தாக்கினார்.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் பிரகாசம், ''இரண்டுகட்ட விசாரணை முடிந்து, டி.டி. கல்லூரியில் இருந்த ஆவணங்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளன. விசாரணை அறிக்கையை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்புவோம். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க முடியும்...'' என்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், ''டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திடம் அந்தக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யப் பரிந்துரைத்து உள்ளோம். இந்திய மருத்துவ கவுன்சிலிடமும் அங்கே மாணவர் சேர்க்கையைத் தடை செய்யக் கேட்டுள்ளோம்!'' என்றார்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ch29a
இதற்கிடையே, டி.தீனதயாளின் பழைய வரலாற்றை நம்மிடம் புட்டு வைத்தார்கள். அதைக் கேட்கும் போது மலைப்பாக இருந்தது. ''தீனதயாளனனின் சொந்த ஊர் திருத்தணி அருகே ஆந்திரா எல்லையில் இருக்கும் அத்திமாஞ்சேரிப்பேட்டை. அங்கே 1986-ல் எஸ்.பி.ஐ. வங்கியில் லாரி வாங்கக் கடன் வாங்கினார். அதையும் அடைக்கவில்லை. அடுத்து, 88-ல் ரயில்வே ஒப்பந்தப் பணிகளுக்காக புரசைவாக்கம் வங்கியில் வாங்கியதையும் செலுத்தவில்லை. மெடிக்கல் ஸீட் வாங்கித்தருவதாக ஒரு மோசடி புகாரும் இவர் மீது கிளம்பியது. கடந்த 2003-ம் ஆண்டு பொறியியல் கல்லூரி தொடங்குவதாக, கார்ப்பரேஷன் வங்கியில் வாங்கிய கடனும் அப்படியே உள்ளது. அந்தப் பொறியியல் கல்லூரியில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் ஏற்பட்டதால் மாணவர் கலவரம் ஏற்பட்டு, அதுவும் இழுத்து மூடப்பட்டது.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ch29
கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதி பெற்றவர், அதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பெரிய அளவிலான தொகையைக் கடனாகக் கேட்டார். சில வங்கி அதிகாரிகள் உதவியுடன் அனுமதி பெற்றார். ஆனால், இவரைப் பற்றிய உண்மைகள் வெளியானதால், உதவி செய்த வங்கி அதிகாரிகள் துறைரீதியான விசாரணையில் சிக்கி இருக்கிறார்கள்...'' என்று அடுக்குகிறார்கள். அடேங்கப்பா..!





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:19 am

கடத்தல் செய்தவருக்கு பதவியா?

நிர்வாகிகளைப் பந்தாடு​வதில், அ.தி.மு.க-வுக்கு நிகர் அ.தி.மு.க-தான்!

கடந்த நான்கு வருடங்​களாக வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகஇருந்த வாசு மீது, 'தி.மு.க. தலைமைக்கு நெருக்கமாகச் செயல்படுகிறார், வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதனிடம் நெருக்கம் காட்டுகிறார்...’ என சரமாரியாக புகார்கள் தலைமைக்குப் போகவே, அவரைத் தூக்கி எறிந்துவிட்டு, சிவசங்கரனை பதவியில் அமர்த்தியது கட்சித் தலைமை. இந்நிலையில் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, புகாரில் சிக்கிய சிவசங்கரன் திடீரென நீக்கப்பட்டு, முன்னாள் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் வில்வநாதன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சும்மா இருப்பார்களா முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுவின் ஆதரவாளர்கள்? வரிந்துகட்டிக்கொண்டு வில்வநாதன் மீது புதுப்புது புகார்களைத் தட்டிவிடுகின்​றனர்!

வாசுவின் ஆதரவாளர்​களிடம் பேசினோம். ''சிவசங்கரனை நியமிக்கும்​போதே, 'ஏற்கெனவே அவர் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டவர், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களிடம் நெருக்கமானவர், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை’ என்று கட்சித் தலைமையிடம் சொன்னோம். இப்போது அவரை நீக்கிவிட்டு, அதே போல் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட வில்வநாதனை எப்படி தலைமை அறிவித்தது என்று தெரியவில்லை. திருப்பத்தூர் நீதிமன்றத்தில் 2001 ஆண்டுக்கு முன்னரே, அவர் மீது சந்தன மரக் கடத்தல் வழக்கு இருந்தது. கடந்த தேர்தலில் சோளிங்கர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முனிரத்தினத்துக்கு ஆதரவாக வில்வநாதன் செயல்பட்டார். அதோடு, கட்சிக் கூட்டத்திலும் ஒழுங்​காகக் கலந்துகொள்வதில்லை. ஆனால், எங்க அண்ணன் வாசு, நான்கு ஆண்டுகளாக கட்சியை மாவட்டத்தில் வளர்த்தார். தொண்டர்​களை ஒருங்கிணைத்துச் செல்வதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை. ஆனால், அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி, நீக்கிவிட்டார்கள். வேலூர் அ.தி.மு.க-வில் உள்ள சில விஷக் கிருமிகள் அம்மாவுக்குத் தவறான தகவலைத் தருகிறார்கள். கடந்த தேர்தலில் வில்வநாதனுக்கும், சிவசங்​கரனுக்கும் ஸீட் கொடுக்காததற்குக் காரணம், அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அம்மாவுக்குத் தெரியும் என்பதுதான். இவர்களை கட்சியில் வைத்து இருந்தால் மாவட்டத்தில் கட்சி காணாமலே போய்விடும்!'' என உணர்ச்சி வசப்பட்​டார்கள்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுவிடம் கேட்டபோது, ''எனக்கு எல்லாமே அம்மாதாங்க. அவங்கதான் என்னை பதவியில் நியமிச்சாங்க; பிறகு நீக்கிட்டாங்க. எப்போதும் நான் அடிப்படைத் தொண்டன். வில்வநாதனைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது!'' என்று மட்டும் சொன்னார்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Po28
தற்போதைய கிழக்கு மாவட்டச் செயலாளர் வில்வநாதன் நம்மிடம், ''என் மேல் எந்த ஒரு வழக்கும் இல்லை. நான் போலீஸ் ஸ்டேஷன் படிகூட ஏறியது இல்லை. எனது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் இப்படிச் சொல்கிறார்கள். நல்ல முறையில் கட்சியை வளர்ப்பதே எங்களது நோக்கம். சோளிங்கர் வெற்றி வேட்பாளர் மனோகரிடமே கேளுங்​கள், என்னைப்பற்றிச் சொல்வார்!'' என்றார்.

புகார்களுக்கு என்ன மரியாதை என்பது விரைவில் தெரிந்துவிடும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:21 am

எகிறும் விபத்துகள் பறிபோகும் உயிர்கள்

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையின் தூரம் அதிகம் உள்ள மாவட்டம், வேலூர். அதே போல, சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டமும் இதுதான்.

இந்த குறைபாட்டை நீக்குவதற்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் அணைக்கட்டு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ-வான கலையரசுவிடம் பேசினோம். ''மத்திய சுகாதாரத் துறையும், தேசிய நெடுஞ்சாலை அமைச்சகமும் இணைந்து, அப்போதைய அமைச்சர் அன்புமணியின் அறிவுறுத்தலின் காரணமாக ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் ஒரு நடமாடும் மருத்துவமனையை அமைக்க உத்தரவு இட்டது. அதன்படி, இன்று இந்தியா முழுவதும் நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் அந்த மருத்துவக் குழு, இருக்கும் இடமே தெரியவில்லை. மாவட்டத்தின் தலைமை மருத்து​ வமனை அடுக்கம்பாறையில் உள்ளது. வேலூரைச் சுற்றி 50 கிலோ மீட்டரில் யாரேனும் விபத்தில் சிக்கினால், இங்குதான் வர வேண்டும். விபத்து நடந்தால் அங்கே உயிர்கள் போராடிக்கொண்டு இருக்கும். உயிர் காக்கும் நேரத்தை ஆங்கிலத்தில் 'கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்வார்கள். அதாவது, விபத்து நடந்த 30 நிமிடங்களில் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால், வேலூர் மாவட்டத்தில் அதுக்கு வாய்ப்பே இல்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே 40 உயிர்களுக்கு மேல் பலியாகி இருப்பதைப் பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா, பள்ளிகொண்டாவைத் தவிர வேறு எந்த மருத்துவம​னையும் அருகில் இல்லை. அப்புறம் எப்படி விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியும்? எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசு இதுவரை நல்ல விதமாகவும், ஏழைகளை மனதில் கொண்டும் திட்டங்கள் தீட்டுகிறது. இதைப் போலவே, நெடுஞ்சாலைகளில் மருத்துவமனைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் உயிர் இழப்புகளைத் தடுக்கமுடியும்'' என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... Po29a

சுகாதாரத் துறை அமைச்சரும், வேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான டாக்டர் விஜய் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுபோனோம்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Po29
''இப்போது இருக்கும் சூழ்நிலையில், விபத்துகளைத் தடுக்க டிரைவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதே நேரம், ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்​கையை அதிகப்படுத்த உள்ளோம். '50 கிலோ மீட்டருக்கு ஒரு மருத்து​வமனை என்பது இப்போது உள்ள சூழ்நிலையில் முடியுமா?’ என தெரியவில்லை. இருந்தாலும், இந்த விஷயத்தை முதல்வர் கவனத்​துக்குக் கொண்டுசெல்வேன். நடமாடும் மருத்துவ மருத்துவமனைகளை முழுமையாக செயல்படும்படி முடுக்கி விடுவோம். நானும் டாக்டர் என்பதால், கோல்டன் ஹவர்ஸ் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கும் தெரியும்!'' என்றார்.

விபத்து தற்செயலாக நடப்பதாக இருக்கலாம். அதனைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பதும், விபத்துகள் நேர்ந்தபின் தேவையான நடவடிக்கை எடுப்பதிலும் சுணக்கம் வேண்டாமே!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:25 am

கலர் டி.வி. கையாளும் கட்டணத்தில் மோசடியா?

புகார் கிளப்பும் தஞ்சை அலுவலர்கள்


'கடந்த தி.மு.க. ஆட்சியின் சாதனைத் திட்ட மாகச் சொல்லப்பட்ட இலவச கலர் டி.வி. கொடுக்கப்பட்டதில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது’ என்று ஒரு குபீர் புகார்!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினரை சந்தித்தோம்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma28
''தமிழகம் முழுவதும் 2006-ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரை இலவச கலர் டி.வி-க்கள் கொடுக்கப்பட்டன. இதில், தஞ்சாவூர் வட்டத்தில் கிராமப்புறங்களில் 70,000 டி.வி-க்களும், நகர்ப்புறங்களில் 75,000 டி.வி-க்களும் கொடுக்கப்பட்டன. அப்போதைய தமிழக அரசு டி.வி-க்களை ஏற்றுவதற்கும் இறக்கிவைப்பதற்கும், தனியாக நிதி ஒதுக்கீடு செய்தது. அந்தத் தொகையை கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றி திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு டி.வி-க்கு 10 வழங்கப்பட்டது. ஆனால், தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் அந்தத் தொகையில் முறைகேடுகள் நடந்து உள்ளன. ஏற்றி, இறக்குவதற்குக் கூலியாக 2010-11-ம் ஆண்டுக்கு அரசாங்கத்திடம் இருந்து 3.50 லட்சம் மட்டுமே வந்துள்ளது. தற்போது இதில் பாதியை, அதாவது ஒரு டி.வி-க்கு 5 மட்டும் கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஏற்றி இறக்குவதற்குத் தனியாக நிதி உண்டு என்கிற விஷயமே எங்களுக்கு ஆரம்பத்தில் சொல்லப்படவில்லை. ஒரு டி.வி-க்கு 25 என ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அரசு அறிக்கையில் உள்ளது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகத்தான் தெரிந்துகொண்டோம். இது டி.வி. அடுக்கிவைக்கப்படும் அறை பாதுகாப்பு, ஏற்றி இறக்குவதற்கு, டோக்கன் அச்சிடுவதற்கு, ரிஜிஸ்டர் மற்றும் விளம்பரங்களுக்கு... எனப் பலவற்றுக்குமாக ஒதுக்கப்பட்ட தொகை. இதில் எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை மட்டும் தரவில்லை. ஒரு டி.வி-க்கு என்று பார்க்கும்போது மிகச் சிறிய தொகைதான். ஆனால், தஞ்சாவூர் வட்டத்தில் மட்டும் 1,45,000 டி.வி-க்கள் என்றால், மாவட்டம் முழுவதும் எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதனால் உடனே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கொந்தளித்தனர்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma28a

இந்தக் குற்றச்சாட்டு குறித்து துணை ஆட்சியர் (வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி பிரிவு) பழனியம் மாளிடம் கேட்டபோது, ''அரசாங்கமே, தான் அறிவித் தபடி 25 கொடுக்காமல், 10 மட்டுமே கொடுத்தது. இதில் 5 பில் அச்சடிப்பது போன்ற கலெக்டர் அலுவலக வேலைகளுக்கும், மீதம் 5 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் கொடுக்கப்பட்டது!'' என்றார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனிடம் கேட்டபோது, ''புதிதாகப் பொறுப்பு ஏற்று இருப்பதால், அந்தப் புகார் கடிதம் என் கவனத்துக்கு வரவில்லை. உடனடியாக அதை விசாரணை செய்கிறேன். தவறு நடந்திருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்!'' என உறுதி அளித்தார்.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:25 am

குழந்தை வரம் தரும் இளநீர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகே உள்ளது ஆணைக்காடு என்ற குக்கிராமம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள், கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் இங்கு குவிந்தனர். காரணம்... குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து இளநீர் குடித்தால்... அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை!

அப்படி என்ன மகத்துவம் அந்த கிராமத்து இளநீருக்கு? ஆணைக்காடு கிராமத்துக்குச் சென் றோம். கிட்டத்தட்ட மூன்று கி.மீ. நீளத்துக்கு வரிசை நின்றது. மூன்று இடங்களில் கார் பார்க்கிங். வழி எங்கும் இளநீர்க் கடைகள். கூட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த குமார் மற்றும் ராஜாங்கத்திடம் விசாரித்தோம். 'சுந்தரராஜன் - வெள்ளையம்மாள் தம்பதிக்கு பல வருஷத்துக்கு முன்னாடி ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் பெண் குழந்தை லட்சுமி நாலு வயசு இருக்கும்போது, அம்மை நோய் வந்து இறந்துவிட்டது. அவங்க வயல்காட்டுலேயே லட்சுமியை அடக்கம் செஞ்சுட்டாங்க. ஒரு வருஷம் கழிச்சு வெள்ளையம்மாள் கனவுல லட்சுமி வந்து, 'என் நினைவு நாளில் என்னைக் கும்பிட்டு இளநீர் குடிச்சா... அவங்க வயித்துல நான் அவதரிப்பேன்’னு சொல்லி மறைஞ் சுருச்சு. அடுத்த நினைவு நாளில், நீண்ட நாளா குழந்தை இல்லாத உறவினர் ஒருவரை இளநீர் குடிக்கவைச்சாங்க. அடுத்த மாதமே அவங்க கர்ப்பமாகி, நல்ல முறையில் குழந்தையும் பெத்தெடுத்தாங்க. இது கொஞ்சம் கொஞ்சமாப் பரவிடுச்சு. சிங்கப்பூர், மலேசியாவில் இருந்தெல்லாம் இப்போ இங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. இந்த அளவுக்குக் கூட்டத்தை நாங்களே எதிர்பார்க்கலை...'' என்றனர்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma29

'லட்சுமி’ வீட்டுக்குள் சென்றோம். அந்த ஓட்டு வீட்டின் பின்புறம் இருக்கும் வேப்பமரத்தில் பலர் தொட்டில்கள் கட்டி இருந்த னர். தம்பதிகள் அதைச் சுற்றி வந்து சுந்தரராஜனிடம் விபூதி வாங்கிக் கொள்கின்றனர். பின்னர், தாங்கள் வாங்கி வந்திருக்கும் இளநீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, அதில் விபூதியையும் கலந்து குடித்தனர். லட்சுமி அடக்கமான இடத்தையும் சுற்றி வந்து வழிபடு கின்றனர். ஆரம்பத்தில் 20-க்கு விற்கப்பட்ட இளநீர், நேரம் செல்லச் செல்ல, 200 வரை விலை உயர்த்தப் பட்டது.

ஜுனியர் விகடன் செய்திகள்.... Ma29a

சிவகாசியில் இருந்து வந்திருந்த கிருஷ்ணகுமார் - நாகலெட்சுமி ஜோடியிடம் பேசினோம். 'எங்களுக்குக் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிடுச்சு. நாங்க பாக்காத வைத்தியம் இல்லை. எங்களுக்கு குழந்தை வரம் கிடைச்சா... வாழ்நாள் முழுக்க ஆணைக்காட்டுக்கு நன்றியோட இருப்போம்!'' என்று உணர்ச்சிவசப்பட்டனர்.

மகப்பேறு மருத்துவத்தில் 40 வருடங்கள் அனுபவம் கொண்ட திருத்துறைப்பூண்டி மருத்துவர் தமிழரசி, 'இளநீர், 100 சதவிகிதம் தூய்மையான இயற்கை பானம். உடலுக்குக் குளிர்ச்சியானது. ஆனால், இளநீர் குடித்தால் குழந்தை உண்டாகும் என்பது மருத்துவ ரீதியாக சாத்தியமே இல்லை!'' என்றார்.

ஆயிரம் பெரியார்கள் தோன்றினாலும், நம்மவர்கள் திருந்த மாட்டார்கள்!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:27 am

கண்ணீர் கடிதம் மரணம்

ஆசிரியர்களின் கோபம், கண்டிப்புகளைத் தாங்க முடியாமல் மனம் உடைந்து, மாண வர்கள் தற்கொலை செய்வது அதி கரித்து வருகிறது. சமீபத்திய அதிர்ச்சி சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் டூ படித்து வந்த மாணவன், சீனிவாசனின் மரணம்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ko26a
ஏழு பக்கத்துக்கு விலாவாரியாகக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கியிருக்கிறான் அந்த மாணவன். அந்தக் கடிதத்தில், ''என் மரணம் தானாக நடந்தது என்று கூற மாட்டேன். சிலரின் மிரட்டலால் நடந்தது. தமிழ் ஆசிரியர் இராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், கணித ஆசிரியர் செந்தில், வேதியியல் ஆசிரியர் ஆகியோர் எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள். கடந்த 16-ம் தேதி கணித ஆசிரியர் போர்டு முழுவதும் கணக்கை எழுதிப் போட்டு விட்டு, எழுதிக் கொள்ளுங்கள் என சொன் னார். நான் எழுந்து நின்று, 'சார் எனக்கு எதுவுமே புரியவில்லை. ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லிக் கொடுங்க’ன்னு கேட்டேன். ஆனா, அவர் கோபமா போயிட்டார். அதனால மாணவர்கள் எல்லோருமா சேர்ந்து தலைமை ஆசிரியர் கிட்ட விஷயத்தைச் சொன்னோம்.

மறுநாள் கெமிஸ்டரி ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு மிரட்டினார். 'கணக்கு வாத்தியார் மேல கம்ப்ளைன்ட் பண்றியா’ன்னு ஒவ்வொரு சாரும் என்னைக் கூப்பிட்டு மிரட்டினாங்க. தமிழ் ஐயா இராமலிங்கம், 'நீ என்ன பெரிய ரவுடியா? இது என்ன காலேஜ்னு நினைச்சியா? இது அரசுப் பள்ளி. உனக்கு புரியலன்னா வேற ஸ்கூலுக்குப் போயிடு’ என்றார். 'டி.சி-யில் 'பேட்’ என்று எழுதிக் கொடுத்திடுவோம். வேற எங்கேயும் சேர முடியாது. பிராக்டிகல் மார்க் எங்க கையிலதான் இருக்கு’ன்னு மிரட்டினார். அரசு பள்ளின்னா கேள்வி கேட்கக் கூடாதா?
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ko26
எப்படியாவது என் மரணத்தின் மூலம் அரசு பள்ளியில் ஒரு சிறு மாற்ற மாவது ஏற்படாதா? திறமையான ஆசிரியர்கள் நிறையப் பேர் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மேல் நிலைக் கல்விக்கு தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இறுதியாக என் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், என் பெற்றோர் எப்போதும் போல இருக்க வேண்டும்... அழக் கூடாது!’ என்று கண்ணீரில் நனைந்து முடிகிறது அந்தக் கடிதம்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... KO27

சீனிவாசனின் வீட்டுக்குப் போனோம். வீட்டு வாசலில் அமர்ந்திருந்த சீனிவாசனின் அப்பா சேகர், ''நான் கட்டட வேலை பார்த்துட்டு இருக்கேன். என் பொண்டாட்டி விமலா காய்கறி வியாபாரம் செய்றாங்க. எங்களுக்கு மூன்று குழந்தைகள். சீனிவாசன் கடைசிப் பையன். 10-ம் வகுப்பில் 409 மார்க் வாங்கினான். 17-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தேன். சீனி தூங்கிட்டு இருந்தான். எப்பவும் 10 மணிக்கு மேலதான் தூங்குவான். என்ன இப்பவே தூங்கிட்டான்னு கேட்டேன். ஸ்கூல்ல இருந்து சீக்கிரமே வந்துட்டான். சாப்பிடாமக்கூட அப்படியே படுத்துட்டான்னு அவுங்க அம்மா சொன்னா. அதுக்குப் பிறகு நான்தான் அவனை எழுப்பி சாப்பிட வைச்சேன். சாப்பிட்டு ரொம்ப நேரம் ஏதோ எழுதிட்டு இருந்தான். நாங்க தூங்கிட்டோம். மறுநாள் சனிக்கிழமை நாங்க வேலைக்குப் போயிட்டோம். திரும்பிவந்து பார்க்கும்போது தூக்குல தொங்கிட்டு இருந்தான்...'' என்று ஆற்றாமையுடன் சொன்னார்.

பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்குப் போனோம். தலைமை ஆசிரியர், ''இந்த விவகாரம் தொடர்பாக நான் எதுவும் பேசக் கூடாது. நீங்க எதுவாக இருந்தாலும் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் பேசிக்கோங்க..'' என்று சொல்லி அனுப்பினார்.
ஜுனியர் விகடன் செய்திகள்.... KO27A
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜ ராஜனை சந்தித்தோம். ''பனமரத்துப்பட்டியில் நடந்த சம்பவத்துக்காக கணக்கு ஆசிரியர் செந்திலை கைது செய்து இருக்கிறார்கள். மற்ற மூன்று ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது. மாணவன் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவெடுத்து விட்டார். மாணவர்களுக்கு இனி எந்த பிரச்னை இருந்தாலும் என்னிடம் நேரடியாகவே 9443333135 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்!'' என்று சொன்னார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர் களும் தற்கொலை செய்து இருக்கிறார்கள். அதிக மார்க் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி நிர்வாகம் கொடுத்த டார்ச்சரினால்தான் இந்த தற்கொலைகள் நடந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காட்டும் அலட்சித்துக்கும், தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக காட்டும் கெடுபிடிகளுக்கும் அரசு உடனடியாக கிடுக்கிப்பிடி போட வில்லை என்றால் மாணவர்களின் மரணம் தொடர்கதையாகி விடும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:30 am

மலை ரயிலுக்கு ஆபத்து....

சர்வதேச சுற்றுலாப் பயணிகளை தமிழகம் நோக்கிப் படையெடுக்க வைக்கும் பெருமை ஊட்டிக்கு உண்டு. அடர் வனத்தினுள் புகுந்து செல்லும் ஊட்டி மலை ரயிலுக்காகவே உலகின் சந்துபொந்துகளில் இருந்து எல்லாம் மக்கள் புறப்பட்டு வருகிறார்கள். யுனெஸ்கோ அமைப்பால், 'உலகப் பாரம்பரியச் சின்னம்’ என அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயிலைக் காக்கக் கோரி, கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள். சமீபத்தில் குன்னூர் ரயில் நிலையத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடந்தது.
ஜுனியர் விகடன் செய்திகள்.... Ko28
போராட்டத்தை முன்னின்று நடத்திய 'பாரம்பரிய நீராவி ரதம்’ அறக்கட்டளை நிறுவனரான நடராஜன்''உலக அதிசயத்தில் ஒன்றாக சேர்க்கப்படவேண்டிய பெருமை உடையது இந்த மலை ரயில். ஆனால், ரயில்வே நிர்வாக மும், அரசாங்கமும் இந்த ரயிலை சீர்கெடுத்து வருகிறார்கள். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மேட்டுப்பாளையம் - குன்னூர் மார்க்கத்தில் 45 நாட்கள் இந்த ரயில் கேன்சல் ஆகிவிட்டது. அப்படியே புறப்பட்டுப் போனாலும் நடுக்காட்டில் நின்றுவிடும். ரயிலின் மோசமான இன்ஜின்தான் இதுக்குக் காரணம். 1899-ம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது முதல், நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி நீராவி மூலமாக ஓடியது. அப்போது பிரச்னைகள் வரவில்லை. சமீபத்தில் பர்னஸ் ஆயிலுக்கு மாற்றிய தில் இருந்துதான் மலையேற முடியாமல் முடங்கி விடுகிறது ரயில்.

ஜுனியர் விகடன் செய்திகள்.... Ko28a

நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்தியதும், எதிர்ப்புக்குரல் எழுந்தது. ஆனால், அதை அலட்சியம் செய்தது ரயில்வே நிர்வாகம். 'நிலக்கரியைப் பயன்படுத்தினால் அதிகப் புகை வெளியேறி நீலகிரி வனம் மாசுபடுது’ன்னு காரணம் சொல் கிறார்கள். ஆனால், உண்மையில்... நிலக்கரி மூலமாக ஏற்படும் மாசை விட பர்னஸ் ஆயில் மூலமாகத்தான் அதிகக் கேடு உருவாகிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். இப்போதைக்கு அடிக்கடி ரயிலை ரத்து செய்பவர்கள், நிரந்தரமாக இதைத் தடை செய்து விடலாம் என்ற பயத்தில்தான் போராட் டங்கள் நடத்துகிறோம்...'' என்று பதறினார்.

நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளரான பத்ரி ''ரயில்வேயில் போதுமான பணியாளர்களே இல்லை. மத்திய அரசாங்கத்தோட கவனத்துக்கு இதைக் கொண்டு போயும் எந்த பலனுமில்லை. சுவிட்சர்லாந்து நாடு, பழைய நீராவி இன்ஜின்களுக்கு பதிலா புதிய நீராவி இன்ஜின்களைத் தர முன்வந்துச்சு. ஆனா மத்திய அரசு அதை கண்டுக்காம மறுத்துட்டாங்க...'' என்கிறார் வேதனையோடு.

ரயில்வே நிர்வாகத் தரப்பில் பேசியபோது, ''நிலக்கரியால் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை ரெண்டு மார்க்கத்துலேயும் ரயில் இயங்க ஒரு நாளைக்கு 4 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதை சேமிப்பது பெரிய சுமையாக இருக்கிறது. அதனால்தான் பர்னஸ் ஆயிலுக்கு மாறினோம். பெருமைமிக்க இந்த மலை ரயிலை நிறுத்தி வைப்பதில் எங்களுக்கும் சந்தோஷம் இல்லை. சுற்றுலா சந்தோஷத்துக்கு நிகராக, பயணிகள் பாதுகாப்பு முக்கியம் இல்லையா அதனால்தான் நிறுத்திவைக்கிறோம். மொத்தப் பிரச்னையும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும்...'' என்கிறார்கள்.

அடுத்த சீஸனுக்காவது சிக்கல் இல்லாத பயணம் கிடைக்கட்டும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜுனியர் விகடன் செய்திகள்.... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக