புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_c10அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_m10அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_c10அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_m10அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_c10அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_m10அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 4:36 pm

அல்லாஹ் உங்கள் மீது புரிந்த அருளை நினைத்துப் பாருங்கள்.நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப்பிணைப்பை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.(அதற்கு முன்பு) நீங்கள் நரக நெருப்பு குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள். அதிலிருந்தும அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.(3:102)

மனித சமூகத்தில் மிக மோசமானவர்களாக நடமாடிய ஒரு சமூகத்தை நேர்வழியின் கொண்டு வந்தது பற்றி அல்குர்ஆன் இங்கே பிரஸ்தாபிக்கிறது.

படுபாதகத்தில் வாழ்ந்த வாழ்விலிருந்து காப்பாற்றியதை நினைவூட்டி நேர்வழியில் தொடர்ந்திருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது அல்குர்ஆன்.

யார் அந்த சமூகம்?
நாளா பக்கங்களிலும் பாராங்கற்களினால் சூழப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தவர்கள்!
தோற்றத்தில் மனிதர்களாகவும் செயற்பாட்டில் அசிங்கமாகவும்; இயங்கியவர்கள்!
கற்பாரைகளைப் போன்றே உள்ளங்களும் கடுமையாகவே இருந்தன!
வரலாறு அவர்களை ஜாஹிலியா சமூகம் என்று அழைக்கிறது!
அந்த சமூகத்தினர் அல்குர்ஆன் மூலம் அடைந்த மாற்றங்கள் மற்றும் உயர்நிலைகள் வரலாற்றில் எந்த சமூகமும் பெற்றதில்லை.

அந்த சமூக மாற்றத்தில் அல்குர்ஆன் செய்த புரட்சி பசுமையானது. இனிமை சேர்க்கும் அந்த வரலாற்றின் ஒரு சில பக்கங்களை கொஞ்சம் கவனியுங்கள்.

கல்லையும் மண்ணையும் வணங்கி பூஜித்து அறியாமையில் மூழ்கிக் கிடந்து மூடர்களாகவும் முரடர்களாகவும் கல்நெஞ்சம் படைத்தவர்களாகவும் வாழ்ந்த அந்த மக்கள் அல்குர்ஆனை கேட்டு மனமுறுகினார்கள். கண்ணீர்வடித்தார்கள். ஒரே ஆண்டவனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முன் மன்டியிட்டார்கள். மனிதர்களாகவும் புனிதர்களாகவும் மாற்றியமைப்பதில் அல்குர்ஆன் தனியான பங்கை வகிக்கின்றது என்பதை உறுதியாக நம்பி செயற்பட்டார்கள்;. அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வீட்டையும் சூழலையும் குர்ஆனிய மத்ரஸாவாக மாற்றிக் கொண்டார்கள். இதென்ன சாதாரண மாற்றமா?

அகம்பாவம் ஆணவம் மற்றும் அரக்கத்தனத்துடன் ஆடித்திரிந்தவர்களை அன்பாளர்களாக பண்பாளர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

பலவீனர்களை அடக்கி ஆண்டு உரிமைகளை பறித்தெடுத்து அட்டகாசம் புரிந்த சண்டாளர்களை ஆண்டவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு முன் சரணடையச் செய்து உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் உத்தமர்களாக மாற்றியது அல்குர்ஆன்.

சுகபோக வாழ்க்கையில் சுழன்று உலக மோகத்தில் மூழ்கி குறிக்கோளின்றி சென்றவர்களை இப்பூமியில் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும் இலட்சிய புருஷர்களாக தியாக செம்மல்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

ஷைத்தானின் சுலோகங்களில் கட்டுண்டு காட்டுத் தர்பார் புரிந்தவர்களை காடேரிகளாக வாழ்ந்தவர்களை நாடாளும் மன்னர்களாக நம்பிக்கைவான்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

சடவாத சிந்தனைக்குள் சிக்குண்டு நாஸ்தீக பட்டறைக்குள் பதுங்கியிருந்தவர்களை ஒரே ஒரு கடவுளாகிய அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்தோதும் பகுத்தறிவாளர்களாக அழைப்பாளர்களாக நடமாடச் செய்தது அல்குர்ஆன்.

உயிர் உடலை விட்டு பிரிந்து மண்ணறைக்குள் மறைந்ததன் பின்னால் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மமதையில் ஓடித் திரிந்தவர்களை மறுமை நாளின் சிந்தனையுடையவர்களாக மனித விவகாரங்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக வாழச் செய்தது அல்குர்ஆன்.

குலபேதம், நிறபேதம், மொழிபேதம், பிரதேச வாதம், பேசி இனவெறிப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிந்து கிடந்தவர்களை சகோதர நேசர்களாக சமாதானத்தின் தூதுவர்களாக காட்சியளிக்கச் செய்தது அல்குர்ஆன்.

உயர்வு தாழ்வு பேசி உயிர்களை மாய்த்துக் கொண்டு பல காலம் பலி பீடத்தில் பயணித்தவர்களை ‘தக்வா எனும் இறையச்சமுடையவர்களே அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையில் உறுதியுள்ளவர்களாக பாசபிணைப்புள்ளவர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.

மதுவிலும் மங்கையர்களிலும் மயங்கி பாவங்களில் குதூகலித்து அநாகரீகமாக ஆடிக் கொண்டிருந்தவர்களை ஒழுக்கச் சீPலர்களாக நாகரீகத்தின் காவலர்களாக மாற்றியது அல்குர்ஆன்.

பொதுவுடமை பேசி பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடி நிலமானியம் பேசி நிலங்களை கொள்ளையடித்து அரசியல் பேசி அராஜகம் பண்ணி அரசாண்டவர்களை நீதியாளர்களாக உலகம் போற்றும் நீதிமான்களாக உயர்த்திக் காட்டியது அல்குர்ஆன்.

பெண் குழந்தைகளை இழிவாகக் கருதி உயிருடன் புதைத்து பெண்களின் உரிமைகளைஉரித்தெடுத்து உல்லாசபுரி வாழ்க்கையில் திளைத்திருந்தவர்களை நற்பண்புகளுக்கு நற்சய்தி சொல்லக் கூடியவர்களாக மாற்றியது அல் குர்ஆன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அர்த்தமுள்ள சம அந்தஸ்துகளை வழங்கி
உரிமைகளை, கடமைகளை பகிர்ந்து கொடுத்து
தனிமனித குடும்ப சமூக வாழ்க்கையை பண்படுத்தி ஒழுக்க விழுமியங்களுடன் வாழச் செய்தது அல் குர்ஆன்.

நரகத்தின் படுகுழியில் பக்கத்தில் இருந்தவர்களை சுவனத்துப் பூங்காவில் நிழல் பெறும் சமூகமாக மாற்றிக் காட்டியது அல் குர்ஆன்

இருண்ட உள்ளங்கள் அல்லாஹ்வின் ஒளி பொருந்திய வசனங்களை கேட்டு சிரம்பனியச்செய்தது அல் குர்ஆன்.

உலக மக்கள் தங்களுடைய விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் இவர்களை தேடி தூது அனுப்பக் கூடியதாக எடுத்துக் காட்டியது அல்குர்ஆன்.

ஒரு காலத்தில் உலக மக்கள் இவர்களை கண்டு அஞ்சினார்கள். ஒதுங்கி நின்றார்கள். குறுகிய காலத்தில் அவர்களை கண்டு அரவணைக்கவும் ஆதரவு தேடவும் புறப்பட்டார்கள்.

நாகரீகத்தையும் அறிவியலையும் ஒழுக்கவிழுமியங்களையும் இவர்களிடமிருந்தே உலகம் கற்றுக் கொண்டது. இந்த மாபெரும் அதிசயத்தை ஆற்றிய பெருமை மாமறை அல்குர்ஆனுக்கே உண்டு. மனித சமூகத்தில் தனிப் பெரும் செல்வாக்கை செலுத்தக் கூடியதாக முத்திரை பதித்து அல்குர்ஆன்.

நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்களில் குர்ஆனிய போதனைகளின் அடிப்படையில் தோற்றுவித்த சமுதாயம் இது. இவர்களை “சஹாபாக்கள்” என்று சரித்திரம் இன்று சான்று பகிர்கின்றது.

“அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்”.(அல்குர்ஆன் 98:8)

அதே அல்குர்ஆன் இன்றும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் எங்களுக்குள் உருவாக வில்லை என்றால் அது குர்ஆனின் கோளாறு அல்ல. எங்களது கோளாறு.

அல்குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?

நன்றி :- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 22, 2011 4:48 pm

அதே அல்குர்ஆன் இன்றும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் எங்களுக்குள் உருவாக வில்லை என்றால் அது குர்ஆனின் கோளாறு அல்ல. எங்களது கோளாறு.

அல்குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது


வேதத்தை விளங்கி வாழ்க்கையில் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானக...
பதிவிற்க்கு நன்றி. ரபீக்ஜி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Aஅல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Bஅல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Dஅல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Uஅல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Lஅல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Lஅல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Aஅல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 4:50 pm

எல்லோரும் படித்து பயன் பெறும் அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 4:53 pm

படித்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் அப்துல்லா ஜி ,மஞ்சு அக்கா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 5:54 pm

தற்காலத்திற்கேற்ற கட்டுரை
குர்ஆனின் வழி நடத்தல் ஓங்க வேண்டும் அதன் மூலம் ஈடேற்றம் ஈருலகிலும் இருக்கிறது நன்றி பகிர்வுக்கு



நேசமுடன் ஹாசிம்
அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக