ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா

2 posters

Go down

ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Empty ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா

Post by சிவா Fri Jun 24, 2011 9:52 am

ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் விதமாக, மத்திய அரசு முன் வைத்துள்ள லோக்பால் சட்ட மசோதா இருப்பதாக காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு

ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வகை செய்யும் `மக்கள் கோர்ட்டு` உருவாக்க `லோக்பால் சட்டம்` கொண்டு வரப்படுகிறது. அந்த சட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளவர்களையும் சேர்க்குமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் குழு வலியுறுத்துகிறது.

ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இரு தரப்புக்கும் இடையே சுமார் 10 பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு உள்ளது. எனவே, மத்திய அரசு சார்பாக முன் வைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பாக முன் வைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதா ஆகியவை குறித்து கருத்து கேட்பதற்காக அடுத்த மாதம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள `லோக்பால்` சட்ட மசோதாவை கண்டித்து அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புகார் அளிப்பவருக்கு இலக்கு

மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் சட்டத்தின் கீழ், ஊழல் புகார் விசாரணையில் இருந்து ஏராளமான அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கிராம மட்டத்தில் செயல்படும் என்.ஜி.ஓ. அமைப்புகள் கூட, லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் போன்றவருக்காக பாடுபடும் ஏதாவது ஒரு அமைப்புகள் கூட லோக்பால் சட்டத்துக்குள் சிக்கக் கூடும்.

அது மட்டுமல்ல, ஊழலுக்கு எதிராகவும் நில சுரண்டலுக்கு எதிராக போராடும் அமைப்புகளும் லோக்பால் சட்ட வளையத்துக்குள் சிக்கலாம். அதாவது, ஊழலுக்கு எதிராக யார் புகார் அளிக்கிறாரோ, அவரையே லோக்பால் சட்டத்தின் மூலமாக குறி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உயர் அதிகாரிகளுக்கு விலக்கு


அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் சட்டத்துக்கு கொண்டு வந்தால் மக்கள் கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் சேர்ந்து விடும் என மத்திய அரசு கூறுகிறது. 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 80 லட்சம் மாநில அரசு ஊழியர்களில் இணை செயலாளர் பதவிக்கு மேல் உள்ள 65 ஆயிரம் உயர் அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சிறிய கிராமத்தில் அதிகாரிகள் ஊழல் செய்வதை இளைஞர்கள் குழு கண்டு பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். லோக்பால் அமைப்பிடம் அந்த இளைஞர்கள் புகார் அளிக்க முடியும். ஆனால், புகார் கூறப்படும் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோரை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு கிடையாது.

இதுபோல, டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகள் யாரையுமே லோக்பால் சட்டத்தின் மூலமாக விசாரிக்க முடியாது. ஆனால், ராமலீலா அல்லது துர்கா பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வசூலிக்கும் அனைத்து உள்ளூர் அமைப்புகளையும் லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.

இவ்வாறு அன்னா ஹசாரே குழு தெரிவித்துள்ளது.

ஹசாரே எச்சரிக்கை

இதற்கிடையே, கடுமையான விதிகளுடன் கூடிய லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே நேற்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் புனே நகரில் அவர் பேட்டியளித்தார்.

அப்போது, ஹசாரே கூறியதாவது:-

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

சாவைக் கண்டு அன்னா ஹசாரே பயப்படவில்லை. எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்காக தடியடி மட்டுமல்ல துப்பாக்கிக் குண்டுகளையும் பயன் படுத்தட்டும். அதை நாங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி தேவையா? சர்வாதிகார ஆட்சி தேவையா? என மக்கள் தீர்மானிப்பார்கள். மகாத்மா காந்தி, காமராஜர் போன்ற தலைவர்களோடு தொடர்புள்ள கட்சியாக தற்போதைய காங்கிரஸ் இருக்கிறதா?

போராடுவது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள ஜனநாயக உரிமை. ஆனால், எங்களுடைய போராட்டத்தை நசுக்க காங்கிரஸ் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், வெறுமனே அன்னா ஹசாரே என்ற தனி ஆள் மட்டும் இல்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த நாடே ஊழலுக்கு எதிராக திரண்டு நிற்கிறது. அவர்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

இவ்வாறு ஹசாரே தெரிவித்தார்.

தினதந்தி


ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Empty Re: ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா

Post by positivekarthick Fri Jun 24, 2011 12:25 pm

மக்கள் சக்தி மகத்தானது !!!!இதை மக்கள் உணரவில்லை !!!!!!!!!!!


ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Pஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Oஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Sஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Iஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Tஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Iஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Vஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Eஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Emptyஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Kஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Aஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Rஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Tஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Hஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Iஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா Cஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பால் மசோதா நிறைவேறியது
» ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான்
» லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
» ஊழல், குற்ற வழக்கில் சிக்கினால் எம்.பி பதவியை பறிக்கும் மசோதா
» லோக்பால் மசோதா தீர்மானம் பார்லி.,யில் தாக்கல் : பாதி வெற்றி என ஹசாரே அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum