புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
85 Posts - 79%
heezulia
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
250 Posts - 77%
heezulia
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருப்பூர் காதல்!  Poll_c10திருப்பூர் காதல்!  Poll_m10திருப்பூர் காதல்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் காதல்!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 8:10 pm

திருப்பூர் காதல்!  Nblkd93086802
ஏழு ஆண்டுகளாக திருப்பூரில் வசிப்பவன் காதலைப் பற்றி எழுதாமலிருப்பதுதான் என் பாவக்கணக்கில் பிரதானமாயிருக்குமென்று நினைக்கிறேன்.
வெளியூரில் காதலித்து விட்டு இங்கு ஓடிவரும் சிலராலும் இங்கு வந்த
பின்பு காதலிக்கும் பலராலும் நிறைந்திருக்கிறது எங்கள் நகரம். வேலை தேடி
வரும் பலரும் இளையோர்கள், பெரும்பாலான பணியிடங்கள் நெருக்கடியானவை, நீண்ட
பணி நேரங்கள் (குறைந்தபட்சம் 12 மணி நேரம் ), சினிமாவைத் தவிர வேறு பொழுது
போக்கு கிடையாது. இவையெல்லாம் இளையோர்கள் ஒரு துணையைத் தேடிக் கொள்வதற்கான
காரணத்தையும் வாய்ப்பையும் தருகின்றன.
நான் தஞ்சாவூரிலோ அல்லது
புதுக்கோட்டையிலோ மட்டும் இருந்திருந்தால் இந்த பதிவெழுதும் யோசனை கூட
வந்திருக்காது என்பதுதான் நிஜம்.

என் அண்ணன் கல்லூரியில் படித்த போது அவனுடன் படித்த மாணவனின் பதிவுத்
திருமணத்தை தஞ்சாவூரில் நடத்தி வைக்கும் வேலையை செய்தான் (ஒரு குழுவாக).
சுமாராக ஒரு வாரம் ஜோடியை தலைமறைவாக வைத்து, தேடி வந்த மணமகனின் தந்தையை
எதுவுமே தெரியாது என்று அப்பாவி போல சொல்லி நம்பவைத்து.., அவன் செய்த இந்த
ஒரு செயற்கரிய செயலைத் தவிர வேறு சொல்லிக் கொள்ளும்படியான சம்பவம் அங்கு
நடந்ததில்லை. அவனது அந்த காரியம் “எவ்வளவு பெரிய கிரிமினல் வேலை” என்று என்
அம்மாவால்
வருணிக்கப்பட்டது.
வேலை தேடி இங்கு வந்த போது நான் தங்கியது ஒரு அடித்தட்டு மக்கள்
வசிக்கும் காலனி வீட்டில் (அது என் அப்பாவின் நண்பரின் அலுவலகம் அல்லது அது
போன்றதொரு இடம், அவர் சாயத் தொழிலுக்கான வேதிப் பொருட்களை விற்பனை
செய்பவர்.. ஆகவே மற்ற வட்டார வீடுகளில் அவர் மூலப் பொருட்களை இருப்பு வைக்க
அனுமதிக்க மாட்டார்கள்). இதை நான் குறிப்பிடக் காரணம் எனது திருப்பூர்
நண்பர்கள் பலர் இது போன்ற வீடுகளை பார்த்தேயிராதவர்கள். அந்த தெருவில்
வசிக்கும் யாவரும் வாரக் கூலி வாங்குபவர்கள். சரிபாதி பேர்
பிரம்மச்சாரிகள். அங்குதான் காதல் திருமணங்கள் எத்தனை சுலபமானது என்பதை
தெரிந்து கொண்டேன்.
எங்கள் காலனியின் முதல் வரிசை வீட்டிலிருந்த ஒரு தமிழ் இளைஞனும்
இரண்டாம் வரிசை வீடு ஒன்றில் வசித்த கேரளப் பெண்ணும் காணாமல் போனார்கள்.
பதினைந்து நாட்கள் கழித்து அதே காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து
குடியேறினார்கள். கொடுமையிலும் கொடுமையாக அது குறித்து தெருவில் யாரும்
அலட்டிக் கொள்ளவில்லை. எனது குழப்பத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட காலனிவாசி
திருமணத்திற்கான எளிமையான வழியை சொன்னார்.
நண்பர்கள் சிலருடன் காதலர்கள் சிவன்மலைக்கு செல்வது, அங்கு திருமணம்
செய்து கொண்டு பிறகு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக் குடியேறுவது..
சுலபம். யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமா? ஏரியாவை மாற்றினால் போதும்.
நகரைச் சுற்றி புறாக் கூண்டு வீடுகள் சிதறிக் கிடக்கின்றன.
குடியிருப்புக்கு நேர் எதிரான நிலையில் இருந்தது அப்போது நான் வேலை
செய்த அலுவலகம். அங்கு பணியாற்றிய எல்லோரும் முப்பது வயதுக்குக் குறைவான
ஆண்கள் (ஓரிருவர் தவிர).
பிறகு அங்கு ஒரு பெண் வரவேற்பாளராக நியமிக்கப் பட்டார். அதுவரை தூங்கி
வழிந்த அந்த அலுவலகம் அதன் பிறகு வழிந்த படியேதான் விழித்தது. ஓயாது ஒலித்த
தொலைபேசிகள், நிற்க இடமில்லாமல் நிறைந்திருந்த வரவேற்பறை, என எங்கள்
தகுதிக்கு மீறிய கூட்டத்துடன் காணப்பட்டது அலுவலகம். ஸ்ரீராமனின் தோளை
பார்த்தவர்கள் தோளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கம்பர் சொன்னதைப்
போல இங்கு அலுவலகம் வந்தோர் “ரேஷ்மா கண்டார் ரேஷ்மாவே கண்டார்” என்று
சொல்லும் படியானது நிலைமை ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ).
தலைப்புக்கு அனாவசியமான சம்பவம் என்றாலும் இதில் ஒரு செய்தி இருக்கிறது,
அதாவது சைட் அடிக்கவும் நம் ஆட்கள் தகுதி பார்க்கிறோம் என்பதுதான் அது.
இதே தகுதி பார்க்கும் பழக்கம் காதலிலும் தொடர்கிறது. நான் பார்த்தவரை
அலுவலகப் பணியில் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு நிகரான பணியில் உள்ளவர்களையே
காதலியாகத் தெரிவு செய்கிறார்கள் (இதே தகவலை மூன்றாமாண்டு உளவியல் பாடமும்
உறுதி செய்கிறது).
நடுத்தர வர்க்கத்தவர்கள்தான் காதலிப்பதில் மிகவும்
திட்டமிடலோடு இருப்பதாக நான் கருதுகிறேன்.காதலிப்பவரின் பொருளாதார நிலை, அவரது சாதி ஆகியவை காதலை திருமணத்தை
நோக்கி நகர்த்துவதற்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. என் உடன் படித்த
மாணவி, அவளது காதலன் விரும்புவதாக தெரிவித்த போது அவனது சாதியை
உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே தான் சம்மதித்ததாக தெரிவித்தாள். அதாவது
துணைவர் தனது சாதிக்காரராக இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் தனக்கு நிகரான
சாதிக்காரராக இருக்கவேண்டும் என்பதுதான் (பிற்பட்டவர் =பிற்பட்டவர்).
மிடில் கிளாஸ் காதல் பெரும்பாலும் பெற்றோருக்கு பதிலாக மணமக்களே செய்து
கொள்ளும் திருமண ஏற்பாடு எனும் கருத்து ஓரளவு சரியாக இருக்கும் என்று
நினைக்கிறேன். (நான் பார்த்தவற்றை வைத்து சொல்கிறேன் உண்மை இதற்கு
மாறானதாவும் இருக்கக் கூடும்).
இதுவரை திருப்பூர் மேல்தட்டு வட்டாரங்களில் காதல் திருமணத்தை நான்
கண்டதில்லை. இங்கு அவர்களது திருமணமும் ஒரு வியாபார ஒப்பந்தத்தைப் போலவே
உள்ளது. ஆகவே நிதி மிகுந்தோரது காதல் பற்றிய தகவல் ஏதும் எழுதுவதற்கில்லை.
எல்லா இடங்களிலும் போலிகள் வந்த பிறகு காதலிலும் இல்லாதிருக்குமா என்ன?
அதற்கும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.
என் சென்னை நண்பன் ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ‘சின்சியராக’
காதலிப்பதாக சொல்லியிருக்கிறான். கொங்கு வட்டாரத்தில் உள்ள எனது கல்லூரி
கால நண்பன் ஒருவன் கடைசிகட்ட நிலவரப்படி ஏழு பெண்களுடன் நட்புக்கும்
காதலுக்கும் இடையேயான ஒரு விஷயத்தை தொடர்கிறான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு
தனி செல்போன் எண் வைத்துக் கொண்டு அவன் அதை கையாளும் லாவகம் நம்மால்
கற்பனைகூட செய்ய முடியாதது.
தொழில்முறை (ப்ரொபஷனல்) காதலனான அவனும் இதைப் படிக்கக் கூடுமென்பதால்
அவன் ஓய்வு நேரத்தில் ஒரு நூற்பாலையில் பணி செய்வதையும் நான் குறிப்பிட்டாக
வேண்டியிருக்கிறது ( நீங்க அவனை வெறுமனே காதல் மட்டும் செய்பவனாக
நினைக்கக் கூடாதில்லையா?? ). ஆயினும் ஆறுதலான செய்தி யாதெனில் திருமணத்தில்
முடியும் காதல்கள் திருப்பூரில் மிக அதிகம்.
காதல் என்பது காதலர்களுக்கு மட்டும் ஆச்சரியமளிப்பதல்ல,
பார்வையாளர்களுக்கும் அவ்வாறானதே. நான் கடைசியாக வேலை பார்த்த அலுவகம் உள்ள
அடுக்ககத்தில் ஒரு சேட்டு வீடு இருந்தது. அவரது வீட்டு பதினேழு வயது
வேலைக்கார (உ.பி மாநில) இளைஞன் ஒரு நாள் தனது முதலாளியம்மாவுடன் சண்டை
போட்டுவிட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய அன்றே அருகிலிருக்கும்
அங்காடியில் வேலை செய்த ஒரு இளம் பெண் அவனை தேடி எங்கள் வளாகத்துக்கு
வந்தாள்.
நடந்தது என்னவென்றால் இளைஞன் கடைக்கு சென்று வந்த வகையில் இருவருக்கும்
காதலாகியிருக்கிறது. கடையை மூடிவிட்ட கவலையில் இளைஞன் முதலாளியுடன்
சண்டையிட்டு வெளியேற காதலியோ கடையில்லாவிட்டாலும் காதல் இருக்கும்
நம்பிக்கையில் வந்துவிட்டாள். இதில் ஆச்சர்யப்படும் சங்கதி என்னவெனில்
இவர்கள் சந்தித்து மூன்று மாதங்களே ஆகியிருக்கிறது, பையனுக்கு தமிழ்
தெரியாது. பெண்ணுக்கு ஹிந்தி தெரியாது. இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது.
ஆண் பெண் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்கு சாதகமானதாக இல்லை
ஆயினும் காதல் வந்து விட்டது!!.

கிட்டத்தட்ட ஆயுளின் பாதியை தொட்டுவிட்ட என் முப்பது வருட வாழ்கையிலும் இதைவிட பேரதிசயம் ஒன்றை நான் கண்டதில்லை.


வலைபூவில் ரசித்தது..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 21, 2011 8:32 pm

திருப்பூரின் உண்மை நிலவரம் அருமை இதே நிலமை தான் பெருந்துறை பகுதியிலும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 8:38 pm

புன்னகை



ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue Jun 21, 2011 8:41 pm

திருப்பூர் காதல்!  677196



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 21, 2011 8:50 pm

இன்று திருப்பூர் மாவட்டகில் தான் எய்ட்ஸ் அதிகமா உள்ளது என ஆய்வு தெரிகிறது! பகிர்விற்கு நன்றி சக்தி!

avatar
gowrisankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Postgowrisankar Tue Jun 21, 2011 9:11 pm

திருப்பூர் காதல்!  224747944 தலைவா கலக்குங்க .......................



திருப்பூர் காதல்!  224747944 திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 9:42 pm

திருப்பூர்ல இப்படியா நடக்குது? அட ராமா ராமா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருப்பூர் காதல்!  47
avatar
gowrisankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Postgowrisankar Tue Jun 21, 2011 10:41 pm

மஞ்சுபாஷிணி wrote:திருப்பூர்ல இப்படியா நடக்குது? அட ராமா ராமா..

ஆமாம் அக்கா திருப்பூர் எப்பவும் இப்படிதான் இருக்கும் மக்கள் அதிகம் வேலை செய்யும் ஊரு மற்றும் திருப்பூர் அதிக வேலை வாய்ப்பு தரும் இடமாகவும் உள்ளது அதனால்தான் இங்கு இவளோ பிரச்சனை



திருப்பூர் காதல்!  224747944 திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550 திருப்பூர் காதல்!  154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக