Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலர் செய்திகள்...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தினமலர் செய்திகள்...
சோனியாவை சந்திக்கிறார் ரங்கசாமி
புதுச்சேரி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து என்.ஆர்., காங்கிரசிற்கு ஆதரவு கோருவதற்காக டில்லி சென்றுள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. 4 எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்பால் புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலிடம் கூறினால் ஆதரவு அளிப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்ததால் ஆதரவு கோருவதற்காக ரங்கசாமி டில்லி சென்றுள்ளார். புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த ரங்கசாமி, விமானம் மூலம் டில்லி சென்றார்.

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தினமலர் செய்திகள்...
டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
புதுடில்லி : லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பார்லிமெண்ட்டில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இத்தகவலை லோக்சபா சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

விபத்தில்லா மாவட்டமாக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற, உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, சாலைப்பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் குமரகுருபரன் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சாலை விபத்தை தடுக்கும் நடவடிக்கை, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பது குறித்து ஆராயப்பட்டது. மேலும், நாமக்கல் நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் சோலார் விளக்குகள் அமைப்பது. சாலை நடுவில் எச்சரிக்கை விளக்கு பொருத்துதல், விளம்பரபோர்டுகளால் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்தல், சாலைகளில் ஒளிரும் அறிவிப்பலகை பெரிதாக தெரியும் வகையில் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தவிர, சாலைப்பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து அலுவலர்களும் துறையின் மூலம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றி, நாமக்கல் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் குமரகுருபரன் உத்தரவிட்டார். மாவட்ட போலீஸ் எஸ்.பி., பிரவேஷ்குமார், கூடுதல் எஸ்.பி., சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சீத்தாலட்சுமி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் குழந்தைவேலு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கேம்பஸ் இன்டர்வியூ 18 பேர் பணிக்கு தேர்வு
நாமக்கல்: தோளூர்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில், 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சவுத் இந்தியா சர்ஜிக்கல் நிறுவனத்தினர் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில், மொத்தம் 80 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 18 மாணவர்கள் தேர்வு பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கொங்குநாடு கல்வி அறக்கட்டளைத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் தென்னரசு ஆகியோர் பணி நியமன உத்தரவை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் லூயிஸ் டிசோசா, ஒருங்கிணைப்பாளர் குமரவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி செல்வக்குமார் கேம்பஸ் இன்டர்வியூக்கான ஏற்பாடுகளை செய்தார்.

பார்லிமென்டின் மழைக்கால தொடர் ஆக., 1ல் ஆரம்பம் பெண்கள் மசோதா குறித்து இன்று ஆலோசனை
புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கி, செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கிறது. பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, மகளிர் மசோதா விவகாரத்தில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அதுகுறித்து விவாதிக்க, இன்று, அனைத்து கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூட்டியுள்ளார்.பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி கூட்டுவது என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடர், செப்டம்பர் 8ம் தேதி வரை நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பார்லிமென்ட் கூட்டத் தொடரை கூட்டும்படி, ஜனாதிபதி பிரதிபாவுக்கு, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யவுள்ளது.
மழைக்கால கூட்டத் தொடரை, தாமதமாக கூட்டுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கடந்த காலங்களில், ஆகஸ்ட்டில் மழைக்கால கூட்டத் தொடர், கூட்டப்பட்டுள்ளது. இதை முன் உதாரணமாக வைத்து தான், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில், மகளிர் மசோதா நிறைவேற்றப்படுமா என, கேட்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, இதற்கு அரசு தரப்பில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அதே அளவு முக்கியத்துவம் தற்போதும் அளிக்கப்படும். லோக்பால் மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, ஏற்கனவே உறுதி அளித்துள்ளோம்.இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.
அனைத்து கட்சி கூட்டம்: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, கடந்தாண்டு மார்ச்சில், ராஜ்யசபாவில், பெரும் அமளிக்கு பின் நிறைவேற்றப்பட்டது.ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு நாட்கள் நடந்த கடும் அமளிக்கு பின், ஒருவழியாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு, அந்த கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன."மகளிர் மசோதாவில், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு, உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையிலேயே, மசோதாவை நிறைவேற்றினால், அதை கடுமையாக எதிர்ப்போம்' என, அந்த கட்சிகள் கூறி வருகின்றன.இதனால், வரும் ஆகஸ்ட்டில் கூடவுள்ள, மழைக்கால கூட்டத் தொடரின் போது, இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகளிடையே, ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக, இன்று, அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அவர் கடிதம் எழுதியுள்ளார்.இக்கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், மகளிர் மசோதா எந்த வித சிரமும் இல்லாமல், லோக்சபாவில் நிறைவேற வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாமதம் ஏன்? பா.ஜ., கேள்வி""பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் தாமதமாக கூட்டப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, மத்திய அரசுக்கு பார்லிமென்டில் பெரும்பான்மை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது,'' என, பா.ஜ., கூறியுள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், ஜூலையில் கூட்டப்படுவது தான் வழக்கம். ஜூலை 18ம் தேதி நடத்துவதாக இருந்த கூட்டத்தொடர், இம்முறை, மிகவும் தாமதமாக கூட்டப்பட்டுள்ளது.இதைப் பார்க்கும்போது, மத்திய அரசுக்கு, பார்லிமென்டில் பெரும்பான்மை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்களே, தெலுங்கானா விவகாரத்தில், கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.அதேபோல், காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. இதன்காரணமாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரை எதிர்கொள்ள, அரசு பயப்படுகிறது. ஊழல் பிரச்னைகளாலும், மத்திய அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடர் கூட்டப்பட்டால், பிரச்னை ஏற்படுமோ என, மத்திய அரசு தயங்குகிறது.இவ்வாறு ஷாநவாஸ் உசேன் கூறினார்.

உண்மையின் உரைகல் !!!!
பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா !!
பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தினமலர் செய்திகள்...
உதயமாகிறது போட்டி பா.ம.க.,? போட்டி கூட்டத்தால் பரபரப்பு
சேலம்:""பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், வரும் 26ல், சேலம் மேச்சேரியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் பா.ம.க.,வில் அதிருப்தியில் உள்ள, முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். கூட்ட முடிவில், போட்டி பா.ம.க., குறித்தமுக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் தெரிவித்தார்.பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நான், 1986ம் ஆண்டு முதல் வன்னியர் சங்கத்திலும், 1989ல் பா.ம.க., துவக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை பா.ம.க.,வில் தான் இருக்கிறேன். பல்வேறு பொறுப்புகளை வகித்து, கட்சிக்கு உண்மையான விசுவாசியாக இருந்து கட்சியை வளர்த்தேன்.கடந்த லோக்சபா தேர்தலில் ஏழு தொகுதியில் தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மூன்று தொகுதியில் மட்டும் வெற்றி; பிற தொகுதிகள் அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.
இந்த அளவு தோல்விக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சரிசெய்யாமல், தலைமை, கட்சிக்காரர்களையும், முன்னோடிகளையும் மதிக்காமல், ஒதுக்குவது சரியான அணுகுமுறையில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறும் போது, "கருணாநிதி அருணாக்கயிற்றையும் கழற்றி விடுவார்' என்று தெரிவிப்பதும், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகும் போது, "ஜெயலலிதாவுடன் உறவு வைப்பது, தாயுடன் உடல் உறவு கொள்வதற்கு சமம்' என்று தெரிவிப்பதை, வன்னிய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்புமணியின் வருகைக்கு பின்னரே, பா.ம.க., தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. பாட்டாளி மக்களுக்காக துவக்கப்பட்ட கட்சி, தற்போது மிகப்பெரிய பணக்கார கட்சியாக மாறி, தற்போது கோடீஸ்வரர்கள் மட்டும் இருக்கும் இடமாக உள்ளது. பா.ம.க.,வுக்கு இனிமேல் வன்னியர்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பது தான் உண்மை.மேட்டூர், பென்னாகரம் தொகுதியில், 10 ஆண்டாக எம்.எல்.ஏ.,வாக இருந்த மணி, அதிக நாள் சென்னையிலேயே இருந்தார். தொகுதி பக்கம் வருவதும் இல்லை, குறை கேட்பது இல்லை. கட்சி உறுப்பினர்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து வந்துள்ளார்.
என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. நேரடி விசாரணையும் இல்லை. நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. ஜனநாயகமே இல்லாத கட்சியில் இருந்ததை எண்ணி வருந்துகிறேன்.மணி தோல்விக்கு நான் தான் காரணம் என, சொல்லி என்னை நீக்கியதை தொகுதியில் உள்ள பா.ம.க.,வினர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வளவு காலம் கட்சியில் இருந்து, வக்கீலாக பணியாற்றி ஆரம்ப காலகட்டத்தில் பல நாள் சிறைக்கு சென்று, பல வழக்குகளில் இலவசமாக பெயில் வாங்கித் தந்த எனக்கே இந்த நிலை என்றால், கடைக்கோடி தொண்டனுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை வன்னியர்கள், பா.ம.க., தொண்டர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து வன்னிய சமுதாய மக்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் என் பணி தொடரும். வரும் 26ல், மாவட்ட அளவிலும், தொகுதியில் உள்ள கட்சியினர், மாநில அதிருப்தியாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம், மேச்சேரியில் நடக்கிறது.இந்தக் கூட்டத்தில் பா.ம.க.,வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர். இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, போட்டி பா.ம.க., உருவாக்குவது குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளோம்.இவ்வாறு காமராஜ் கூறினார்.பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., காவேரி கூறியதாவது:பா.ம.க.,வில் இருந்து என்னையும், தாரமங்கலம் காமராஜையும் நீக்கியது குறித்து தொண்டர்களுடன், ஆலோசனை நடத்துவதற்காக மேச்சேரியில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து, தலைவர் மணியை நீக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.அந்த முடிவு, போட்டி பா.ம.க.,வாகவோ, வன்னியர் இயக்கமாகவோ இருக்கலாம்.
இவ்வாறு காவேரி கூறினார்.

திருச்சியில் இயங்கிய முதல்வரின் தனிப்பிரிவுஉடனடி நடவடிக்கையால் குவிந்த மனுக்கள்
திருச்சி:முதல்வர் ஜெயலலிதா, மூன்று நாட்களாக திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களும் திருச்சியில் குவிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு, உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 19ம் தேதி திருச்சிக்கு வந்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, தன் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கம் மேலசித்திரை வீதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.மொத்தம், 190 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 430 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 25 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அதைத் தொடர்ந்து மீதமிருந்த பயனாளிகளுக்கு, அதிகாரிகள் வழங்கினர்.
தொடர்ந்து, 20, 21 ஆகிய இரண்டு நாள் மாலை வேளையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
சங்கம் ஓட்டலில் மூன்று நாள் தங்கியிருந்த அவர், "முதல்வரின் தனிப்பிரிவு'க்கு வந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
"முதல்வரின் தனிப்பிரிவு' அலுவலகத்திலிருந்து எந்த மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டாலும் அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது விசாரித்து தனிப்பிரிவு அலுவலகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கடந்த ஆட்சியிலும் முதல்வரின் தனிப்பிரிவு இயங்கியது. பெரும்பாலும், மனுக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதோடு சரி; பெரிய அளவில், "ஆக்ஷன்' இருந்ததில்லை.ஜெயலலிதா முதல்வரான பின், "முதல்வரின் தனிப்பிரிவு' அதிகாரிகள் சுறுசுறுப்படைந்தனர். முதல்வர் ஜெயலலிதா, திருச்சியில் மூன்று நாள் முகாமிட்டதால், "முதல்வர் தனிப்பிரிவு' அதிகாரிகள் குழுவினரும் இங்கு வந்தனர். அவர் செல்லும் இடங்கள் மற்றும் தங்கியிருந்த சங்கம் ஓட்டல் வாசலில் முகாமிட்டனர்.மனுக்கள் கொடுக்க வரும் மக்கள் பற்றிய முழு விவரங்களை கேட்டறிந்து, விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உரிய துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அதேபோல், மனுக்கள் மீது அதிகாரிகளும் துரிதமாக நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினர்.முதல்வரின் உடனடி நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருச்சி மாவட்ட மக்கள், சங்கம் ஓட்டல் முன், அதிகளவில் குவிந்தனர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, சுற்றுப்புற மாவட்ட மக்களும், திருச்சியில் குவிந்தனர்.பல்வேறு மனுக்கள் குவிந்தாலும், சளைக்காமல் அதைப் பெற்ற, "முதல்வரின் தனிப்பிரிவு' அதிகாரிகள், உரிய முறையில் விசாரித்து நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர். முதல்வர் வருகையால், கடந்த 20ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் கூட, மனுக்கள் வழங்குபவர் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

நான் இன்னைக்கு பேப்பர் வாங்கலீங்கோ....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தினமலர் செய்திகள்...
» தினமலர் செய்திகள் 01.07.11
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» இது தினமலர் - கார்ட்டூன்
» தினமலர் 03-08-2011

Permissions in this forum:
You cannot reply to topics in this forum