ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.

+8
SK
பூஜிதா
ரபீக்
உதயசுதா
ரேவதி
realvampire
positivekarthick
NAKKEERAN
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Empty சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.

Post by NAKKEERAN Tue Jun 21, 2011 10:49 pm

First topic message reminder :

சும்மா ஒரு கதைமாரி ஒண்ணு சொல்றேன்.அதுல வர்ற நியாயத்த சொல்லுங்க.
அதாவது..
ஒருத்தர் இருந்தார்.நடிகராக ஆகவேண்டும் என்று ஆசை அவருக்கு.எங்கேயோ எல்லாம் வாய்ப்புக்கேட்டு அலைந்து,கடைசியில் வாய்ப்பும் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்தார்.வாய்ப்புகள் அதிகரித்தன.காலப்போக்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராகவே ஆகிவிட்டார்.
படங்களிலெல்லாம் பெண்களை சமமாக மதிக்கின்ற முன்னுதாரண புருஷனாக நடித்து,பெண்களிடமெல்லாம் நற்பெயர் எடுத்தார்.பெருந்தொகையான ரசிகர் ரசிகைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
சொந்த வாழ்க்கையிலும் திருமணம் முடித்து,அப்பாவாகவும் ஆகிவிட்டார்.குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,நடிப்பிலும் காலம் போகப் போக தனது வயது மாற்றத்திற்கேற்ப வேடங்களைப்புனைந்து சிறந்த நட்சத்திரமாக வலம்வந்துகொண்டே இருந்தார்.
அவரது மகனும் வளர்ந்து வாலிபனானதும்,மகனையும் ஹீரோ ஆக்கினார்.மகனும் தந்தையைப்போலவே மெல்ல மெல்ல கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி , முதல்வரிசையைத் தொடும் நேரம்... மிகத் திறமையான ஒரு ஹீரோயினுக்கும் அவனுக்கும் காதல் மலர்கிறது.காதல் பற்றிய தகவல்கள் உலகமெங்கும் பரவி விடுகிறது.
இந்தக்காதலில் தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தால் திருமணம் தள்ளித் தள்ளிப்போகிறது.பிறகு ஒரு கட்டத்தில் பலரும் எடுத்து சொல்லி,ஒருவாறு தந்தையை சம்மதிக்கவைத்து ,காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்.. அந்த மகன் நடிகர் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அந்த நடிகையும் அவருக்கு சளைத்தவரல்ல.மிக மிக திறமைசாலி.எந்தப் பாத்திரமாக இருந்தாலும் எவராலும் நடிக்கமுடியாத பாத்திரமாக இருந்தாலும் உலகமே வியக்குமளவுக்கு நடித்துக்காட்டுவார்.எத்தனையோ சிகரங்களின் உச்சிகள் அவரது கொடியை ஏற்றித் தாங்குவதற்காகவென்றே காவலிருந்துகொண்டிருந்தன.
அந்த நிலைமையில்தான் அந்த காதல்,கல்யாணம் எல்லாம் நடந்து முடிந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு "அவர் இனி நடிக்கமாட்டார்" என்று நடிகையைப்பற்றி செய்தி வருகிறது.என்னவென்று கேட்டால்...திருமணம் முடிந்துவிட்டதால் அதன் பிறகு நடிப்பதற்கு மாமனார் (தந்தை நடிகர்) சம்மதிக்கமாட்டாராம், அதனால் நடிகை இனி வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டியதுதானாம் என்று கூறினார்கள்.
எத்தனையோ சிகரங்களில் முத்திரைபதிக்கவேண்டியவரும் கொடி ஏற்றவேண்டியவருமான அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.அடுத்த நடிகையர் திலகம் என்று பெயர் எடுக்க வேண்டியவரின் தொழில் கல்யாணம் என்ற காரணத்தைக்காட்டி வீட்டுப்பணி ஆக்கப்படுகிறது.
இப்படியொரு அநியாயத்தை -தந்தைக்கு விருப்பமில்லை-என்று கூறி அந்தக் காதலரே செய்கிறார்.நடிகையாக இருக்கும்போது நம்பிக்கைக்குரியவராக பழகி,காதலை வளர்த்துவிட்டு,தாலி கட்டியதும் அந்த நடிகை என்ற அந்தஸ்த்தைப் பறித்து, வீட்டுக்குள் பூட்டுகிறார்.
படங்களில் எவருக்கும் அடங்காத பெரிய அறிவும்,மனசாட்சியும்,நேர்மையும்,தர்மமும், பொருந்திய உதாரண புருஷன் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் அவர் சொந்த வாழ்க்கையில் தந்தை என்ன சொன்னாலும் தலையாட்டுகின்ற தஞ்சாவூர்ப்பொம்மையாக ,பெட்டிப்பாம்பாக ஆகி.. சாதனை படைக்கவேண்டிய ஒரு திறமைசாலியின் முன்னேற்றத்துக்கு சவக்குழி தோண்டிவிட்டு, "நான் தடுக்கவில்லை,விரும்பினால் நடிக்கட்டும்" என்று நிஜ ஹீரோ போல உலகத்துக்கு தன்னைக் காட்ட முயல்கிறார்.
அப்படியாக, காதலையும் நம்பிக்கையையும் கல்யாணத்தையும் காரணம் காட்டி அந்த நடிகையை ஆணாதிக்க மனப்பான்மைக்கு பலியாக்கி, வீட்டுக்குள் பூட்டிவிட்டு,.. தகப்பனும் மகனும் என்ன செய்தார்கள்?
தங்கள் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மகன் நடிகருக்கு வாய்ப்புகள் தேடி, மகனை நாட்டிலேயே முதல் நிலை நட்சத்திரமாக்குவதற்கு பாடுபட ஆரம்பித்தார்கள்.ஓரளவு வெற்றிகளும் கிடைக்கத்தொடங்கின.
காலப்போக்கில் முதல் நிலை நடிகர் என்ற பட்டியலுக்குள் அவர் வந்தும் விட்டார். தகப்பனாரும் ஓடி ஓடி உழைக்கிறார் மகனை இன்னும் இன்னும் உலகமெங்கும் புகழ் பெறச் செய்வதற்கு.
ஆனால் அந்த மகனையும்விட புகழ்பெறக்கூடிய பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டுதான் இத்தனையையும் செய்கிறார்கள் அவர்கள்.
இது சரியான செயலா? பிழையான செயலா?
அவர்கள் அவ்வாறு செய்ததற்கு நான் காரணம் சொல்வேன்.
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.

திருமணமான பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட் பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண் நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)

இந்த இடத்தில் நீங்கள் ஊகித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்-யாரைப்பற்றி என்று.
இருந்தாலும் கூறுங்கள். இந்த விடயத்தில் அவர்கள் செய்தது சரியா ? தவறா?
தவறாக மனைவியை நடாத்தும் ஒருவர் படத்தில்மட்டும் உத்தமர்போல வந்தால் அதை வைத்து அவருக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டாடுவது அநியாயத்துக்கு மாலைபோடுவது போலாகாதா?
இதில் வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாதுங்க.அறிந்த நாள்முதலா அந்த நடிகையின் ரசிகன் நான்.அவர் எவ்வளவோ சாதிப்பார் என்று ஒரு ரசிகன் என்ற முறையில் நம்பியவன்.ஆனால் ஹீறோ வேசம்போட்டுக்கொண்டு வில்லத்தனம் செய்த தகப்பன் அண்ட் மகனால் அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்ட அதே நேரம் மகன் நடிகரின் பெயரை உயர்த்துவதற்குமட்டும் பாடாய்ப்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் எங்காவது உலகறிய பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ வேர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
அதான்.. கோவிச்சுக்காதீங்க. நியாயத்த சொல்லுங்க.ஒருவேளை அந்த வில்லன்களும் ஈகரையைப் படிப்பானுக்களோ என்னவோ..!படிச்சா இதையும் படிப்பானுகாதான.படிக்கட்டும்.
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

Back to top Go down


சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Empty Re: சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.

Post by கே. பாலா Thu Jun 23, 2011 6:43 pm

அன்புள்ள கேதாரன் ! நமக்கும் நாம் ஈகரை உறவுகளுக்கும் உள்ள இணைப்பு எப்படி வந்தது . வார்த்தைகள்
வார்த்தைகள் மட்டுமே நம்மை வெளிப்படுத்தும் . நம்மை பற்றி ஒரு பிம்பம் இங்கே வார்த்தைகளால் உருவாக்க படுகிறது,
நீங்கள் நினைத்ததை வெளிப்படுத்தும் வார்த்தையை தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் !குறிப்பிட்ட அந்த வார்த்தை கோபத்தோடுதான் எதிர்கொள்ள படும், நெருப்பு என்றால் சுடும் அதுதான் வார்த்தையின் வலிமை

ஈகரை எனக்கு தந்தது பாராட்டும் மனசு !முன்பு என்னிடம் அதிகம் இல்லை, சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி இவைகள் வெறும் உருவம் அல்ல . பதிவு இடுபவருக்கு எத்தனை சந்தோஷத்தை தரும் .தெரியுமா!

தொடர்ந்து பதிவிடுங்கள் , காத்திருக்கிறோம் !



நல்ல பதிவை தருவோம் ! நல்லவராக மற்றவர் மனதில் பதிவோம் ! பின்னூட்டங்கள் ஊக்கம் ஊட்டும். அதற்காக பின்னூட்டங்கள் பின்னால் அதை எதிர் பார்த்து போக வேண்டாமே! நண்பா !

அன்புடன்

பாலா
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Empty Re: சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.

Post by NAKKEERAN Thu Jun 23, 2011 7:46 pm

தவறான எண்ணத்துடன் பிரயோகிக்கப்படாத ஒன்று அடுத்தவர்களால் தவறான முறையில்(எல்லோருமல்ல,சிலரால்) சுட்டிக்காட்டப்பட்டது.அதற்கு அவர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தை பிரயோகங்களும் நாகரீகமாக இருந்தது.
போகட்டும்.
எனக்கு விதிமுறைகளை மேற்கோள் காட்டியவர்கள்
12. உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!
15.மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
என்ற வரிகளை படித்தார்களோ என்னவோ!
மஞ்சுபாஷிணி அக்காவுடன் சேர்த்து பாலா,ரபீக்,அப்துல்லா.. போன்றவர்களுடைய வழிநடத்தல்கள் சிறப்பு.
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

Back to top Go down

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. - Page 3 Empty Re: சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum