புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
15 Posts - 83%
Barushree
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
1 Post - 6%
kavithasankar
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
2 Posts - 2%
prajai
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
2 Posts - 2%
Shivanya
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
1 Post - 1%
Barushree
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_m10"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஈழக் கண்ணீரில் - பறவை கவிதைகள்"


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 10, 2009 9:55 pm

கொக்கு

ஒற்றை
கால்
தவம்;

தமிழீழ வரம்
கிடைக்கவேயில்லை
தமிழனுக்கு!

தவம்..
தவம்..
தவம் நிஜம்;

தமிழீழம்
கிடைக்குமென்பதும்
நிஜம்;

கொக்கு -
ஞானப் பறவை!!
---------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 10, 2009 9:56 pm

காகம்

ஒரு -
வயோதிக காகம்
இறந்து வீழ்கிறது
தரையில்;

அதைச்சுற்றி
கணக்கிலடங்கா காகங்கள்
வட்டமடித்து -
தன் சோகத்தையும் ஒற்றுமையையும்
பறைசாற்றிக் கொண்டிருக்க;

ஒரு -
மனிதன் கூட
உடனின்றி
வெறும் -
குப்பைகளாய்
அகற்றப் பட்டன
ஈழ தமிழர்களின்
உடல்கள்.

கேட்டால் -
பிணமாம்..

பலமுறை பிறக்க இறந்த
தமிழனின் -
ஒரு உடல் தான் மடிந்து போனதென
அறியமுடியா நரம்புள்ள
நாக்குகள் கூறிக் கொண்டன;

கூறட்டும் -
வெறும் உடல்கள் அழிந்து
என்ன ஆகும்???

அத்தனையும்
வடுக்கள் -
வடுக்கள் -
வடுக்கள் வலிப்பதில்லை தான்;

வலியை காலத்திற்கும்
நினைவு படுத்திக் கொண்டே
இருக்கும்; வடுக்கள்!

இப்படி -
காலத்தின் கைகளில்
மனிதனாய் பிறந்த
தமிழனென்ற -
ஒரே பிறப்பிற்கு
இங்கே ஆயரமாயிரம் காயங்கள்
வரலாறாகவும்
வடுக்கலாகவும்
நீண்டு கொண்டிருக்க..

வானத்தில் காகங்கள்
மீண்டும் -
வட்டமைடிககத் துவங்கின;

எட்டி பார்த்தேன்
கீழே - ஒரேயொரு
காகத்தின் குஞ்சு
சாகத் துடிக்கிறது;

காகம் -
மனிதருக்கும் மேல்!!
-----------------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 10, 2009 9:57 pm

புறா

யாரேனும் தூது
விட்டால்
பல்லாயிரக்
கணக்கான மைல்களை
பறந்து -
கடப்பாயாமே புறாவே;

நானொரு -
ஈழ மகள்,

என் மகன்
எங்கேனும்
தொலைந்தாவது;
இறந்தாவது;
கிடக்கிறானா பார்த்து
சொல்வாயா?

அவள் கதறிவிட்டு
மீண்டுமந்த
புறாவிடம் - சொன்னாள்

"இன்னொன்றையும் கேள்
புறாவே..
ஒருவேளை அவன்
சிங்களனுக்குப் பயந்து
எங்கேனும் ஒளிந்திருந்தாலோ;

சிங்களனின் குண்டு அவன்
மார்பை துளைக்கும் முன்
தன் துப்பாக்கி முனையில் -
பல நூறு எதிரிகளை - வீழ்த்தாது
இறந்திருந்தாலோ;

தயவுசெய்து அவனைப் பற்றி
என்னிடம் சொல்லிவிடாதே"

அவள் கர்ஜித்த கர்ஜனையில் -
புறாவின் மயிர்கால்கள்
குத்திட்டு நிற்க;

சிலிர்த்துக் கொண்டு வானில்
பறந்தது.

உண்மையை
புறாவே அறியும்!!
----------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 10, 2009 9:58 pm

கழுகு

கழுகாரே..
கழுகாரே..
முக்கால் மைல் தூரம்
மேலே பறந்தாலும்
கீழேயுள்ள
உயிர்கள் கூட
உனக்கு நன்றாகத் தெரியுமாமே;

நீ -
மகாவிஷ்னுவிற்கே
வாகனமாமே;

கொஞ்சம் மேலே பறந்து
வட்டமடித்து வா -

எங்கள் தமிழீழ மண்ணில்
புதைக்கக் கூட இல்லாமல்
காடுகளில் ஆங்காங்கே -
அழுகிக் கிடக்கும்
ஒவ்வொரு உடலுக்குள்ளும்
ஒவ்வொரு வரலாறிருக்கும்
சொல்வாயா (?)

ஏனப்படி பார்க்கிறாய்?

சரி விடு;
மண்ணினல் புதைந்து போன
வரலாறு நமக்கெதற்கு -
புதைந்துபோகட்டும்;

எஞ்சியுள்ள உயிர்களையாவது
முள் கம்பிகளுகுள்ளே இருந்து
மீட்டெடுக்க
கொஞ்சமுன் கடவுளை
கண்திறக்கச் சொல்ல்வாயா (?)

நீதான் -
மகாவிஷ்ணுவின் வாகனமாயிற்றே!!
-----------------------------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 10, 2009 10:04 pm

சிட்டுக் குருவி

சிட்டுக் குருவிக்கு
வணக்கம்;

வணக்கம் ஐயா;

எங்கிருந்து வருகிறாய் -
ஏனிப்படி சோகமாகத்
தெரிகிறது உன் முகம்?

உன் கிரீச் கிரீச்
சப்தமெங்கே காணோம்?

வேண்டாமைய்யா
என்னை ஏதும் கேட்காதீர்கள்;

நான் -
ஈழத்திலிருந்து
வருகிறேன்;

கை முடமும்..
கால் முடமும்..
தலை துண்டிக்கப் பட்டும்..

கண்டம் துண்டமாய் மனிதர்கள்
வெட்டப் பட்டும்..

உடம்பெல்லாம் குண்டுகளால் துளைக்கப்
பட்டும்..

சுக்குநூறாக பீரங்கியில் வெடித்த தசைகள்
இங்குமங்குமாய் சிதறப் பட்டும்..

பெண்களின் மரணித்த உடல்கள்
ஆங்காங்கே -
நிர்வாணப் படுத்தியும்;

அப்பாவை இழந்தும்
அம்மாவை இழந்தும்

ஈக்கள் மொய்க்கும்
புண்களை விரட்டி விரட்டியே
மிச்சமுள்ளவர்கள்
நோயினால் அவதிபட்டும்..பட்டும் பட்டும்;

அப்பப்பா.. கொடுமை

கொடுமையாக இருக்கிறது ஈழதேசம்;

எத்தனை குழந்தைகளுக்கு
தாய்பால் கொடுக்கக் கூட
அங்கே தாயில்லை
தெரியுமா???????????????

ரு பெண் ஓடுகிறாள், 'துப்பாக்கியோடு - வந்து
தன் குழந்தைக்கு
முத்தமிட்டு விட்டு'
நானவளை மறித்து

'இப்படி குழந்தையை விட்டுவிட்டு
போகிறாயே - நியாயமா' என்றேன்.

அதற்கந்த -
பெண் சொன்னாள்

'ஏய் சிட்டுகுருவி! என் குழந்தைக்கு பால்கொடுக்க
எவளாவது ஒரு -
தமிழச்சி வருவா;


என் நாட்டுக்காக ஓடி காப்பாத்த
நான் ஒரு -
முண்டச்சி தானே
இருக்கேன்;

கடவுள் -
குழந்தையை
காப்பாற்றிக் கொள்ளும்

எங்கள் ஈழத்தை
காப்பாற்றாது விடு என்னை"' என்றவள் ஓடிய கனம்

நான் பறந்திங்கே
வந்து விட்டேனென்று சொல்லி
அழுததந்த சிட்டுக்குருவி.

அழாதே..

அழாதேயென அதன்
கண்களை துடைக்கப் போனேன்;

வேண்டாமைய்யா..
வேண்டாம்,

என் கண்களை
துடைத்து விடாதீர்கள் -

என் கண்ணீர் வழியட்டும்;

வழியும் வரை
வழியட்டும் -

என் கண்ணீரில் இந்த -
பூமி முழுதாய் நனையட்டும்

பூமி நனையுமந்த
ஈரத்திலாவது
ஒரு ஈழம் பிறக்கட்டும்;

ஈழம் பிறக்கட்டுமென மேலே
பறந்து போனதந்த சிட்டுக்குருவி.

சிட்டுகுருவி -
பிடிக்க வேண்டாத ஒரு
நட்சத்திரம்!!
-------------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 10, 2009 10:42 pm

என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!

மதியம் வந்தேன்,மகன் முகிலின் விளையாட்டிற்கிடையே பறவை கவிதை பதிவு செய்ய இத்தனை நேரம் ஆகிவிட்டது.

எல்லோரும் நலம் தானே?

எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு. படித்து விட்டு பதில் விமர்சனத்தை கொடுத்து வையுங்கள் நாளை பார்த்துக் கொள்கிறேன்.

பிரிவுக்குப் பின் தயார் பண்ணனும், சற்று என் செல்லம்மாவிற்கு(அன்பு மனைவி) உடல்நல கேடு மருத்துவமனைக்கு போய் வருகிறோம். நாளை பிரிவுக்குப் பின்னோடு சந்திப்போம்.

மனதிற்குள் எழுதாமல் வைத்திருப்பதும், எழுதியதை பதிவு செய்ய வேண்டியதுமாக இன்னும் நிறைய இருக்கிறது..

உங்கள் அரட்டை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா, நலமா, மீணுவ எல்லோருமா அழவிடாதீங்க (தமாசுக்குத் தான்) னு நிறைய சொல்ல ஆசை இருக்கு. ஆனா எழுதுவதும் வேலைக்கு மத்தியிலும் குடும்பமும் ஈகரையுமென சரியாக இருக்கிறது,

இருப்பினும் என் மண ஆழம் உங்களுக்கெல்லாம் புரியும் தானே, இன்று கிருபை ராஜா, தமிழன், thesa, ரூபன்
ஷெரின், பிரகாஷ், சிவாCB, ஹரிணி, சகோதரி நந்திதா சகோதரர்கள் சிவா, கே ராஜா, ரமேஷ், ராஜேஷ், விஜய், நிலாசகி, கிருபையா ராஜான்னு எல்லோரையும் எல்லோரின் புதிய பழைய விமர்சனத்தையும் இன்னும் ஈகரையின் அன்பையும் பார்த்து பூரித்துக் கொண்டு தான் இருக்கிறேன், எல்லோருக்கும் என் அன்பான, அளவுகடந்த நன்றிகளும் பாசமும் உரித்தாகட்டும்.

சிவா தமிழன் மற்றும் பல ஈகரை சகோதரர்கள் ஈகரையை வழி நடத்தும் நல்ல தூண்கள் என்பது உண்மை. ஈகரை பெரிய அளவில் வரும், பரம்மாண்டமாகும்.


தவிர மேற்குறிய கவிதைக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம்.

நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும்,

நாளிதழ்களிலும், ஈ-மெயில்களிலும் செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட காட்சிகளும், கண்முன்னே என் இனம் ஒவ்வொரு
சிறகினையாக உதிர்ந்துக் கொண்டிருந்த கொடுமையும் உயிர் வரை பதிந்துள்ளது.

அந்த வலிகளை தான் நம் அன்பு சகோதரி மீனு பறவையை பற்றிக் கேட்க நந்திதா சகோதரி போன்றோரின் கண்ணீருக்குக் காணிக்கை இட இங்கு பதித்துள்ளேன்.

மீண்டும் நாளை சந்திப்போம் நேரமாகி விட்டது வலையை மூடப் போகிறேன், நன்றி, வணக்கமென-

உங்களின் அன்பு இதையங்களை சுமந்தவனாய் விடை பெறுகிறேன்.
_வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 10:59 pm

மதிப்பிட்ட்குரிய வித்யாசாகர் அவர்களுக்கு..முதலில் நன்றி கலந்த வணக்கத்தையும்.. வலியோடு கூடிய கைதட்டல்களுடன் பாராட்டையும் முதலில் தெரிவிக்கின்றேன்..
உங்கள் சிட்டு குருவி கவிதை..மீனு கேட்டாளே என்று இவலவி அழகாய் அதே நேரம் ஈழத்து மக்களின் அவலங்களோடு ..மிக மிக அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.. அதில் வரும் வரிகள்..எத்தனை குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க அங்கு தாய் இல்லை என்பது..படிக்கும் போதே வலிக்கின்றது ..கண்ணீர் நனையும் ஈரத்தில் ஆவது ஈழம் மலரட்டும்.. கண்டிப்பா மலருமென நம்புவோம்..
நான் உங்களிடம் ஒரு பறவை பற்றி ஒரு கவிதை கேட்டதுக்கு ..எவளவு அர்த்தங்களோடு இந்த சிட்டு குருவியை உர்வாக்கி அழகு தமிழில் தந்து இருக்கின்றீர்கள்.. மீண்டும் பாராட்டுக்களும்..நன்றிகளும்..


வித்யாசாகர்.. உங்கள மனைவி சீக்கிரம் குணம் அடைய ஈகரை சார்பாக பிரார்த்தனை செய்கின்றேன்.. சென்று வாருங்கள் ..உங்களுக்கு நேரங்கள் குறைவாக இருந்தும் நமக்காக தந்த இந்த கவிதை நமக்கு மிகுந்த மதிப்பை தருகின்றது உங்களிடம்...

உங்கள் கவிதை பிரியை..மீனு..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 10, 2009 11:46 pm

அன்புச் சகோதரன் வித்யாசாகர் உங்கள மனைவி சீக்கிரம் குணம் அடைய நானும் பிரார்த்தனை செய்கின்றேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 11, 2009 1:27 pm

எனக்காக எல்லோரும் பறவை கவிதையை படிங்களேன்..

அது உணர வேண்டிய வலி தோழர்களே!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 1:39 pm

ஈகரை கவிஜன் அவர்களுக்கு..முதலில் மன்னிக்கவும்..நேற்று நான் சிட்டுகுருவி கவிதை மட்டுமே படித்தேன்..அதுதான் படிக்க முடிந்தது.. ஆனா நீங்க கொக்கு..புறா கழுகு காகம் ..இப்படி பல பறவைகள் கவிதை கொடுத்து இருக்கின்றீகள்.. இப்போதான் படித்தேன் அவற்றை.இக் கவிதைகளை வலியோடு ரசித்தேன்.
இதில் கொக்கு கவிதை ..நம் தமிழ் ஈழம் கிடைக்க கொக்கு ஒற்றைக் கால் தவம் இருப்பதை சொல்லி இருப்பது அருமை..காகம்.. ஆயரமாயிரம் காயங்கள்
வரலாறாகவும் வடுக்கலாகவும்..மனிதரை
விட காகம் எவளவோ உயர்ந்தது என்பதை சுட்டி காட்டி இருப்பது நமக்கே உறுத்தலை ஏற்படுத்துகின்றது..அருமை...
தன மகனை தேடு புறாவை தூது விடும் அந்த தாயின் உணர்வை புறா கவிதையும்..
மகாவிஷ்ணுவின் வாகனமான கழுகை ..கடவுளிடம் கேட்க்க சொல்லி உள்ள கவிதயுயும் ..மிக மிக அருமை வித்யாசாகர் அவர்களே.. மீனுவின் பாராட்டை ..இங்கே வார்த்தையால் சொல்ல முடியவில்லை.. அவளவு அருமை... பாராட்டுக்கள்.. உங்கள் கவிதை இன்னும் இன்னும் நாம படிக்கணும் என்கின்ற ஆவலை நமக்கு உண்டாக்குகின்றதே...நன்றிகள்...



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக