புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
137 Posts - 79%
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
302 Posts - 78%
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_lcapகண்டதேவிப் புராணம் - Page 5 I_voting_barகண்டதேவிப் புராணம் - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:22 am

393 காழகிற்றுணியுஞ்சந்துங்கதிர்மணித்திரளுநால்வாய்
வேழமெண்மருப்பும்பொன்னுநித்திலக்குவையும்வீசி
யாழ்கடற்கிடங்குதூர்க்குமகன்புனற்பொருனைசூழ்ந்து
வாழியவளமிக்கோங்கும்வழுதிநன்னாடுபுக்கார். 31

394 சங்கினமுயிர்த்தமுத்தந்தலைத்தலைநிலவுவீசிக்
கங்குலும்பகலேயாகக்கண்டிடும்பாண்டிநாட்டி
லெங்குளதலமும்போற்றியெம்பிரானருளிச்செய்த
பொங்குமாதலமெங்குள்ளதென்றுளம்பொருந்தவாய்ந்தார். 32

395 வரைபெயர்த்தெறிந்துசெல்லுமதுநதிகண்டுகொண்டு
கரையகலந்நீருள்ளுங்களிப்பினுங்கலந்துமூழ்கி
விரைசெலற்பெருக்குவாய்ந்தவிரிசலாறதுவுங்கண்டக்
குரைபுனலகத்துமூழ்கிக்குலவுபேரின்பமுற்றார். 33

396 இருதிறநதியுங்கண்டோமிவைக்கிடையுள்ளதாய
மருமலர்வனமேயம்மான்வன்மீகத்தமராநிற்குந்
திருவமர்மருதமேவித்திகழ்வனமென்றுதேர்ந்து
பொருவிறம்முருவங்கொண்டார்பொய்யுருவகற்றிமாதோ. 34

397 தேவியைக்காண்பான்சிந்தைசெய்தினிதேகுவார்முன்
மேவியவளியலைப்பவிடபங்களசையுந்தோற்றங்
காவியங்கண்ணாளென்னுளிருக்கின்றாளென்றக்கானம்
பூவியல்கரங்கணீட்டிப்புலவரையழைத்தல்போலும். 35

398 மருதமர்கானமெங்குமாமலர்பொலியுந்தோற்றங்
கருதுநந்தமைநீங்காதகடவுளர்பலரும்வந்தா
ரொருதனிமுதல்விசெய்யுமோங்கருட்குரியராவார்
பொருதடுபகையுந்தீர்வாரெனப்பொலிதோற்றம்போலும். 36

399 நால்வகைநோயுமின்றிநண்ணியதருச்சால்கானம்
பால்வகைவளங்களெல்லாங்கண்குளிர்படைப்பப்பார்த்து
மால்வகைகழிந்ததூயமனத்தினராகிப்புக்குச்
சேல்வகையுகளுந்தெய்வச்சிவகங்கைத்தீர்த்தந்தோய்ந்தார். 37

400 வெள்ளியநீறுபூசிவிரும்புகண்மணியும்பூண்டு
வள்ளியவெழுத்தைந்தெண்ணிமருதமர்தானஞ்சார்த்து
தெள்ளியவன்மீகத்திற்செறிசிவக்கொழுந்தைக்கண்டு
துள்ளியவுவகையோராய்ச்சூழ்ந்துதாழ்ந்தெழுந்தார்வானோர். 38

401 தந்தையைக்கண்டுகொண்டோந்தாயினைக்காண்போமென்று
சிந்தையுட்களிப்புமேவவடகிழக்கெல்லைசேர்ந்து
நிந்தையில்பன்னசாலைநேருறப்புகந்தாராங்கு
முந்தைமாமறையுங்காணாமுதல்வியைக்கண்டாரன்றே. 39

402 காண்டலுமுவகைபொங்கக்கண்கணீரருவிபாய
நீண்டமெய்ப்புளகம்போர்ப்பநெஞ்சநெக்குருகாநிற்பத்
தாண்டவம்புரியாநிற்குந்தம்பிரானிடப்பான்மேய
மாண்டவொண்குணத்துத்தேவிமலரடிதொழுதுவீழ்ந்தார். 40



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:23 am

403 அடியரேமுய்ந்தேமுய்ந்தேமசுரரால்வருத்தப்பட்ட
மிடியரேமுய்ந்தேமுய்ந்தேம்வெவ்வினைத்தொடக்குண்டஞ்சுங்
கொடியரேமுய்ந்தேமுய்ந்தேங்கோலங்கண்டின்பமுற்ற
படியரேமுய்ந்தேமுய்ந்தேமெனப்பகர்ந்தாடினாரே. 41

404 அரியநாயகியைக்கண்டோமம்பலத்தாடியுள்ள
மரியநாயகியைக்கண்டோம்வண்மையினமையாட்கோடற்
குரியநாயகியைக்கண்டோமுலகெலாமொருங்குபெற்ற
பெரியநாயகியைக்கண்டோமெனப்பலபேசினாரே. 42

405 வழுத்துவார்பவநோய்தீர்க்கமலைவருமருந்தேவன்மை
கொழுத்தவாளவுணன்சாடக்குலைகுலைந்தடைந்தவேழைத்
தொழுத்தையேமுய்யுமாறுசுரந்தருள்செய்யிலென்று
முழத்தபேரறிவினூடுமுயக்கியதாகுமென்றார். 43

406 இவ்வண்ணமலறியோலமிடுமையவரைநோக்கி
யவ்வண்ணம்போலவெங்குமறிவுருவாகிநிற்குஞ்
செவ்வண்ணப்பெருமான்பாகந்தீர்தராச்செல்விநுங்கட்
கெவ்வண்ணமுற்றதிங்ஙனெய்தியதெற்றுக்கென்றாள். 44

407 என்றலும்பிரமனேர்சென்றிருகரங்கூப்பிச்சொல்வான்
மன்றலங்குழலாய்சண்டனென்பவன்றவத்தான்மாண்டு
மின்றயங்கிடைநல்லாரைப்பொருள்செயான்விண்ணோராதி
யொன்றமற்றியாவராலுமுடைதராவரம்பெற்றுள்ளான். 45

408 அன்னபாதகனானாடுமுதலியவனைத்துந்தோற்றுப்
பன்னகாபரணன்முன்போய்ப்பகர்ந்தனங்கயிலாயத்தின்
முன்னவனின்பான்மேவமுடுக்கினானிங்குமேவி
யுன்னதாள்போற்றப்பெற்றோமென்றுரையாடினானே. 46

409 வண்ணப்பொன்மலரின்மேலான்மலர்க்கரங்குவித்துச்செய்த
விண்ணப்பமுழுதுங்கேட்டுமிகுபெருங்கருணைகூர்ந்து
தண்ணப்பண்சடைப்பிரானார்தந்திருவருளோநீவிர்
கண்ணத்துன்பகற்றுமிங்குக்கலந்ததென்றுவகைபூத்தாள். 47

410 நிறைவலியவுணன்சாடநிலைகுலைந்திங்குமேய
கறையில்வானவர்காணெஞ்சங்கவன்றிடீரஞ்சல்வேண்டா
குறைபடவனையாற்கொன்றுகுலத்தொடுநம்மைக்காப்போ
மிறையிலென்றபயமீந்தாளேழுலகீன்றசெல்வி. 48

411 தேவியாதரவிற்கூறும்வார்த்தைதஞ்செவியிற்கேட்டுப்
பாவியேமுய்ந்தேம்யாதும்பயமிலையினிமேலென்று
மேவிமாமலரிற்சீர்த்தமென்பதம்பலகாற்போற்றி
வாவிசூழனையகானமருவிவீற்றிருந்தார்வானோர். 49

412 வண்மைசாறவத்துவாய்மைச்சவுநகமனிவர்வானோர்
திண்மைசாலங்குச்சென்றுதேவியைக்கண்டவாற்றா
லொண்மைசாலறிஞர்கண்டதேவியென்றுரைப்பரந்தத்
தண்மைசாலறத்தையென்றுசாற்றிமேற்சாற்றுஞ்சூதன். 50

தேவியைக்கண்ணுற்றபடலம் முற்றிற்று.
ஆக படலம் 7-க்கு, திருவிருத்தம்- 412.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:23 am

8. சண்டாசுரன்வதைப் படலம். (413- 544 )

413 கந்தமலரோன்முதல்வானோர்கண்டதேவியெனுந்தலத்து
நந்தமருதினடியமருநம்மானடித்தாமரைமலருஞ்
சந்தமுலைமென்கொடிமரங்குற்றலைவியடித்தாமரைமலர
முந்தவணங்கிப்பெருகன்பின்முதிர்ந்துபணிசெய்தொழுகுநாள். 1

414 மிறைசெயவுணன்கொடுங்கோன்மைவெள்ளிவரைநம்பெருமான்பால்
முறையினியம்பமருதவனமுற்றியிறைவியடிவணங்கி
யறைமினெனவுய்த்தனனிறைவியடிசார்ந்துரைப்பவஞ்சாமே
யுறைதீர்கவலையொழித்துமெனவுரைத்தாளுரைத்தமொழிப்படியே. 2

415 வல்லையியற்றும்படிதுதிப்போம்வம்மினெனவானவர்யாரு
மொல்லையெழுந்துசிவகங்கையுற்றுமூழ்கிநீறணிந்து
செல்லையலைக்குமருதவனத்தேவதேவனடிபணிந்து
முல்லைமுறுவற்பெருந்தேவிமுன்வந்திறைஞ்சித்துதிக்கின்றார். 3

416 எல்லாம்வல்லசிவபெருமானெழிலார்தருநின்னொடுகலந்தே
யெல்லாவுலகும்படைத்திடுவானெல்லாவுலகும்புரந்திடுவா
யெல்லாவுலகுந்துடைத்திடுவானெல்லாவுயிர்க்குமறைப்பருள்வா
னெல்லாவுயிர்க்கும்வீடருள்வானென்றாற்பெரியநாயகிநீ. 4

417 எல்லாமறையின்வடிவானாயெல்லாமறையும்வியாபித்தா
யெல்லாமறையுந்தொழப்படுவாயெல்லாமறையுமேகலையா
யெல்லாமறைக்குமுதலானாயெல்லாமறையின்முடியமர்வா
யெல்லாமறையின்முடிவுணராயென்றாற்பெரியநாயகிநீ. 5

418 என்றுதுதிக்கும்வானவருக்கிரங்கியருள்கூர்ந்தருட்செல்வி
நன்றுநுமதுதுதிமகிழ்ந்தோநயந்துபெரியநாயகியென்
றின்றுநமைநீர்சொற்றமையாலென்றுநமக்கிப்பெயராக
வொன்றுநுமதுகவலையுமின்றொழிப்போமுணர்மினென்றுரைத்து. 6

419 பொல்லாவவுணன்மடவாரைப்பொருளாமதித்திடாமையினா
லொல்லாவனையானவமதித்தார்தமைக்கொண்டவனையொறுத்தலே
நல்லாதரஞ்செய்திறனென்றுநன்றாராய்ந்துதன்கூற்றி
னெல்லாவுலகுநடுங்கவருவித்தாளொருபெண்ணிறைவியே. 7

420 கரியகடலொன்றிரண்டுபிறைகவ்வியெழுந்ததோற்றமெனத்
தெரியவுயர்ந்தபெருவடிவஞ்சிலைக்கும்வாயில்வளையெயிறும்
பெரியவடமேருவுஞ்சமழ்க்கப்பிறங்குமுலையுமிளங்காலைக்
குரியகதிராயிரம்வளைந்தாலொக்குமரையிற்செம்பட்டும். 8

421 வாளதாதிபொலிகரமும்வடவைகால்கண்களுமண்ட
கோளமேவுநெடுமுடியுங்குறிக்குந்திசைபேர்த்திடுபுயமு
மூளவெழுந்தசினக்கனலுமுழங்குமுருமிற்பொலிகுரலுங்
காளவுருவுங்கொடுதோன்றிக்காளியெனும்பேர்தழீஇநின்றாள். 9

422 நின்றகாளியிறைவியடிநேர்சென்றிரைஞ்சிப்போற்றியெழுந்
தொன்றவுலகம்வாய்மடுக்கோவுருட்டிவரைகள்பொடிபடுக்கோ
கன்றவயன்மாலாதியரைக்கையிற்பிசைந்துபொட்டிடுகோ
துன்றவமைந்தகடல்குடிக்கோசொற்றிபுரியும்பணியென்றாள். 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:24 am

423 என்றுகுமரிகூறுதலுமிமையோர்க்கிடுக்கணனிசெய்யுங்
குன்றுநிகர்தோட்சண்டனுயிர்குடித்திநினக்குப்பணிபுரிய
வொன்றுமகளிர்பற்பலருமுகைக்கும்விறல்சாலூர்தியுநா
மின்றுபடைத்தத்தருகின்றோமென்றாணினைந்தாளப்பொழுதே. 11

424 குன்றுபிளப்பவுலகநிலைகுலையமுழங்குங்குரல்யாளி
யொன்றுவெளிப்பட்டதுகடல்வந்தொருங்கசூழ்ந்தாலெனவதிர்த்துத்
துன்றவலிசாலிடகினிகள்சூழ்ந்தார்குமரியூர்தியா
யொன்றுபணிசெய்திடுவாராயுறுகமாவேமடவீரே. 12

425 என்றுகருணைநோக்கருளியிகல்சால்வீரியுருவஞ்சித்
துன்றுமனத்துட்குடையாராய்த்தூரத்தகலுமாலாதிக்
கன்றுமமரர்தமைநோக்கிக்கடவுளானீரெல்லீரு
மொன்றுமடவார்வடிவமெடுத்துறுவீர்குமரியுடனென்றாள். 13

426 என்றபொழுதேயிந்திரன்மற்றிந்திராணியுருக்கொண்டான்
மன்றல்கமழுமலர்மேலான்வயங்குபிராமியாயினான்
வென்றதிகிரிப்படைமாயோன்விறல்சாலொருவைணவியானா
னொன்றமற்றைவானவருமுற்றமடவாருக்கொண்டார். 14

427 கோடிகோடிவானவர்தங்கூறென்றுரைக்குமடவாருங்
கோடிகோடிவலவைகளுங்கூடிப்போற்றவெழுந்துலகங்
கோடிகோடிமுறையுயிர்த்தாள்குளிர்தாட்கமலமிசைநறும்பூ
கோடிகோடிதூய்ப்பணிந்துகொண்டாள்விடைவெங்குரற்காளி. 15

428 கண்ணார்மருதவனத்தளவுங்காலானடந்துகடந்தப்பா
னண்ணார்வெருவவருகாளிநாடுமுழுதுங்குடியேற
விண்ணார்நகரந்திருவேறவிழைபுண்ணியமுமீடேற
வெண்ணார்நிறங்கீண்டுதிரம்வாய்மடுக்கும்யாளியேறினாள். 16

429 கலிக்குந்தத்தமூர்திமிசையிவருமாறுகடைக்கணிப்ப
வொலிக்குமணிப்பூண்மடவார்கள்பலருமுள்ளமுவந்திவர்ந்தார்
சலிக்கும்புடவிவெரிநெளியத்தாங்கக்கடலுங்குமிழியெழ
வலிக்குமொருதென்றிசைநோக்கிவிடத்தாள்யாளிமாகாளி. 17

430 இருகுரோசத்தளவெய்தியாளியிழிந்தங்கினிதிருந்தா
ளருகுமாதரரசாதற்கபிடேகஞ்செய்தடிபணிந்து
பெருகுகாலமெனச்சூழ்ந்துபேணிக்காவல்புரிந்திருந்தார்*
கிருகுதீரவ்விடஞ்சிவணுந்தேலிசாலமெனுந்திருப்பேர். 18

431 அன்னதேவிசாலபுரமம்மைசெம்மையபிடேக
மென்னநவிலந்திருவடைந்தவிடமாதலினந்நகருள்ளார்
பன்னவரியபெருந்திருவம்பொருந்திப்பயில்வரடைந்தோருஞ்
சொன்னமுதலாம்பலவளனுந்துலங்கப்பெறுவரெஞ்ஞான்றும். 19

432 அந்தத்தலத்தினினிதமர்ந்தவலகைக்கொடியாள்வைணவிமற்
சந்தக்குவிமென்முலைமடவார்தம்மைநோக்கியொருதூது
முந்தப்பகைவனிடத்தனுப்பிமுன்னந்தெரிந்துமற்றவன்போர்
நந்தப்பொருதலறனென்றாணன்றென்றுரைத்தாரெல்லாரும். 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:24 am

433 ஆனாலங்குப்போய்மீளுமாற்றலுடையார்யாரென்ன
மானாவியன்றகருநெடுங்கண்மடந்தைபிராமியெனப்படுவாள்
போனானன்றுபுகன்றுவருமென்றுபுகன்றாள்வயிணவிமற்
றூனால்விளங்குஞ்சூலத்தாளுள்ளதுரைத்தாய்நீயென்றாள். 21

434 என்றலோடும்பிராமியெழுந்திறைஞ்சியானேபோய்வருவ
லொன்றவிடைதந்தருளென்றாளுவப்புற்றனையாண்முகநோக்கி
மன்றவிசையநகரடைந்துவல்லவவுணன்றனைக்கண்டு
கன்றவியற்றல்கடனன்றுகடவுளாரையெனப்புகறி. 22

435 ஈதுமொழியினவன்மறுப்பானென்னில்விரைந்துபடையோடு
மோதுசமருக்கெழுதியெனமொழிந்துவருதியென்றுரைத்தாள்
காதுகொடுஞ்சூற்கங்காளிகருதும்பிராமிநன்றென்று
போதுமலர்தூய்ப்பணிந்தெழுந்துபோந்தாள்விசையநகர்நோக்கி. 23

436 வெளியேவழியாவிரைந்தெழுந்துசென்றுவிசையநகர்புகுந்து
களியேயடைத்தமனத்தவுணர்கைகள்கூப்பித்தொழுதெத்த
வொளியேமண்மாமண்டபத்துளோங்குமடங்கலாதனமே
லளியேயாதகுணத்தினமர்சண்டாசுரன்முன்னடுத்தனளால். 24

437 அடுத்துநிற்குமடந்தைமுகமவுணர்கோமானெதிர்நோக்கிக்
கடுத்துநமக்குநேராகக்காமர்மங்கையிவளடைதற்
கெடுத்துநிறுவுகருமம்யாதிவள்யாரின்னேயறிதுமென
மடுத்துநீயார்நின்வரவென்மடந்தாயுரைத்தியாலென்றான். 25

438 உலகுபோற்றுமருதவனத்துறையாநின்றமாதேவி
யிலகுசரணமடுத்திறைஞ்சியேத்தியிமையாரெல்லாரு
மலகுதவிர்நின்பெருங்கொடுமையறைந்துகாத்தியென்றுரைப்ப
நலகுமானைமுன்னுயிர்த்தநங்கையொருமங்கையையுயிர்த்தாள். 26

439 மேருவிடிக்கவேண்டிடினும்வீரைகுடிக்கவேண்டிடினும்
பாரும்விசும்புமேல்கீழாப்படுத்துநிறுத்தவேண்டிடினு
மாரும்வியக்கவொருநொடியிலமைப்பாள்காளியெனும்பெயராள்
சோருமமரர்தமைப்புரந்துதுட்டர்தமைமாட்டிடுந்துணிபாள். 27

440 அனையள்விடுக்கவருந்தூதியான்பிராமியெனப்பெயரே
னினையவமரர்கொடுங்கோன்மையியற்றுகுணநீத்தெஞ்ஞான்றும்
புனையவமையுஞ்செங்கோன்மைபொருத்துகுணநீபொருந்திலுனை
முனையசூலப்பெருமாட்டிமுனியாதுவக்குமுயிர்வாழ்வாய். 28

441 அன்றேலவள்கைப்படைக்குவிருந்தாதல்சரதமிதுபுகல்வா
னின்றேயினளென்றனையுணர்தியிதுநீகருத்தினுறக்கொள்ளி
னன்றேபணியவுடன்போதியன்றேலமர்க்குநண்ணுதிவன்
குன்றேபுரையுந்தோளாயென்னுரைத்திகூறுகூறென்றான். 29

442 கேளாமாற்றங்கேட்டிடலுங்கிளர்வெங்கோபந்தலைக்கொண்டு
மூளாநிற்பவிழிசிவந்துமுகரோகங்கடுடிதுடிக்க
வாளாநகைத்துக்கையெறிந்துவானமுழுதுமடிப்படுத்த
தாளாண்மையினேற்கிம்மொழியுங்கேட்டறகுமென்றிஃதுரைப்பான். 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:24 am

443 நீயோர்பேதைநின்னைவிடுத்தவளுநினக்குமூத்தாளே
பாயோரரவாக்கொண்டான்முற்பலரும்போரிற்புறங்கண்டே
னாயோர்பகையுமில்லாதேற்கடுத்தபகையுமழகிற்றே
பேயோர்கொடியாடூதுவிடுபெற்றிநினைக்குந்தொறும்வியப்பே. 31

444 பேதாயிங்குநீமொழிந்தபேச்சுமுழுதும்பெரிதாய
தீதாய்முடிந்ததுனைத்தண்டஞ்செய்தல்புகழன்றிவணின்று
போதாய்விரைந்தென்றனன்கேட்டபொற்கொம்பனையாண்முறுவலித்துக்
கோதாய்விடுமேகுணமுமழிகாலங்குறுகினென்றிசைத்தாள். 32

445 என்றலோடுமோதிபிடித்திழுத்துவம்மினிவளையென
நின்றசிலரைப்பார்த்துரைக்கநெடியோனாதிவானவர்மே
லொன்றவேவாதுரைத்தமொழியுரைக்கவந்தவொருபெண்மே
லின்றவாவியேவியதென்னென்றுபிணங்கியவரகன்றார். 33

446 கண்டமாதுமுறுவலித்துக்கழியுங்காலங்குறுகிற்று
சண்டவிரைந்தாகவபூமிதன்னிலுனதுபெரம்படையோ
டண்டவடைந்திலாயெனினின்னாண்மையெவனாமென்றுரைத்துக்
கொண்டவிரைவினவணின்றுமெழுந்தாடேவிமுன்குதித்தாள். 34

447 கண்டதேவிவாழ்வானோகழிவானோசண்டாசுரனுட்
கொண்டதுணிபென்னுரையென்றாள்குணப்பிராமியடிவணங்கி
மண்டநெடும்போராற்றுதற்கேவருவான்வந்துமாய்வான்மற்
றண்டர்புரிமாதவம்பழுதாங்கொல்லோவன்னாயறியென்றாள். 35

448 சான்றதேவியொருதேவிசாலபுரத்திவ்வாறிருந்தா
ளான்றவிசையநகர்மேவுமவுணர்கோமானுளங்கறுத்துத்
தோன்றவமைச்சர்படைத்தலைவர்முதலோரிங்குத்துன்னகவென்
றேன்றதூதுவிடவவருமிறுத்தார்பணியென்னெனவினவி. 36

449 வந்தார்முகத்தைவாளவுணர்கோமானோக்கிமறமுடையீர்
சந்தார்முலையோர்மாகாளிசாற்றிவிடுத்ததுணர்ந்தீரே
முந்தாரவத்திற்படைகளொடுமுழங்கிஞாட்பிற்கெழுகவென
வந்தார்புனையுமவரிசைந்தாரமைச்சர்பல்லோருளுங்கனகன். 37

450 தொழுதுநவில்வான்பெருமான்பாற்றோலாவரநீகொண்டநாள்
பழுதுபடுமேந்திழையாரென்றெண்ணிப்பொருளாப்பற்றிலா
யெழுதுபுகழாயதனாலேயெண்ணிப்போருக்கெழுகென்றா
னுழுதுவரிவண்டுழக்குதாருரவோன்சினங்கொண்டீதுரைப்பான். 38

451 அந்தநாளிற்பொருளாகமதித்தேனல்லேனதுமறப்புற்
றிந்தநாளிற்பொருளாகமதித்துளேன்கொலென்னுரைத்தாய்
முந்தவமருக்கஞ்சினாயென்றுமொழிந்தவவன்கருத்தை
யுந்தவுணராதிகந்துரைத்தான்மூர்க்கர்க்குணர்த்துவாருளரோ. 39

452 அன்னபொழுதின்மகதியாழ்முனிவன்விரைவினாங்கடுத்து
மன்னநினக்கேயாக்கமுளவாகவென்றுவாய்மொழிந்து
பொன்னங்கடுக்கைமுடிக்கணிந்தபுத்தேணினக்குக்கொடுத்தவரந்
தன்னமுணராதொருமடந்தைசமருக்கெழுந்தாள்படையோடும். 40



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:25 am

453 படையுமிடையுஞ்சிறுமருங்குற்பாவைமாரையென்றக்கா
லடையும்விறன்மற்றவட்காமேயண்ணால்பெண்ணென்றிகழாமே
யுடையுங்கடனேர்படையினொடுமுருத்துச்சென்றுபோர்புரிதி
மிடையும்வாகைநின்னதேயென்றான்கேட்டவெங்கொடியோன். 41

454 குய்யம்வைத்துமுனியுரைத்தகூற்றைக்கூற்றென்றெண்ணானா
யையநன்குமதித்துரைத்தாயறிஞர்சூடாமணிநீயே
வெய்யபெரும்போராற்றிடினும்வெற்றிகொள்வேனொருகணத்தென்
செய்யவல்லாளொருபேதையென்றுநகைத்துச்செப்பினான். 42

455 வல்லையதுசெய்யென்றுமுனிவரனுண்மகிழ்ந்துவிடைகொண்டான்
மல்லைவிழைக்குந்திணிதோளான்வயவரானார்தமைநோக்கி
யொல்லைநமதுபெரும்படையோடொருங்குசென்றுகாளியம
ரைல்லையடைமின்யாமும்விரைந்தெய்துவாமென்றார்த்தெழுந்தான். 43

456 இறைவனுரைத்தமொழிப்படியேயெழுகபடையென்றுறவியவ
ரறையுமுரசமெருக்குதலுமாங்காங்குள்ளமதகளிறு
நிறையுங்கலினவாம்பரியுநெருங்குகொடிஞ்சிப்பொற்றேரும்
பிறையுஞ்சமழ்க்குமெயிற்றவுணர்குழுவுமெழுந்தபெருங்கடல்போல். 44

457 எட்டிமுகிலைத்துதிக்கைவளைத்திறுகப்பிழிந்துநீர்குடிப்ப
கிட்டிமருப்பாற்றிசையானைகீளப்பொதிர்ப்பமால்வரையை
முட்டியருகுசாய்த்திடுவமுருகுவிரிகற்பகக்குளகு
கட்டியெனக்கொள்வனவலகங்கலங்கவெழுந்தமால்யானை. 45

458 பற்றார்முடிமேற்குரமழுந்தப்பதிப்பவுததியோரேழும்
பொற்றார்புலம்பத்தாவுவபல்புவனமுழுதுமுழிதருவ
சுற்றார்தரவல்லிடிமாரிசொரியுமேனுந்துளக்கறுவ
கற்றாராலுமதித்துரையாக்கடுப்பிற்படர்வவாம்பரியே. 46

459 முடியால்விசும்பைப்பொதிர்த்திடுவமுழக்கான்முகிலையடக்கிடுவ
வடியானிலனைப்பிளந்திடுவவச்சால்வரையைப்பொடித்திடுவ
கடியாலினனைமழுக்கிடுவகடுப்பாற்காற்றைத்துடைத்திடுவ
கொடியால்வெளியைமறைத்திடுவகூடாரஞ்சுங்கூவிரமே. 47

460 இடியுங்கனலுங்கொடுவிடமுமேகவுருக்கொண்டனநீரார்
படியும்விசும்புநிலைகுலையப்பரவையேழுங்குடித்தெழுவார்
கடியுஞ்சினக்கூற்றெதிர்ந்தாலுங்கலங்காரருளற்றுழிதருவார்
மிடியுந்துயருமுலகுறுத்தும்வெய்யோர்வெய்யவாள்வீரர். 48

461 தானக்களிறுசுறவாகத்தாவும்புரவிதிரையாக
மானக்கொடிஞ்சிப்பொலந்திண்டேர்வயங்குஞ்சிதைப்பாரதியாக
வானத்தவர்தம்பகைவீரர்வருமீனெறியுமவராக
வீனக்கொடியோன்பெரும்படைதானெழுந்துகடலிற்படர்ந்ததே. 49

462 இன்னவாறுபடையேகவெழுந்தசண்டாசுரன்புனலுண்
முன்னமூழ்கியுண்டுடுத்துமுடிகுண்டலமாதிகளணிந்து
பன்னவரியபடைக்கலங்கள்பலவுமாராய்ந்தனனெடுத்தப்
பொன்னங்கொடிஞ்சிநெடுந்திண்டேரிவர்ந்தான்சங்கம்புயன்முழங்க. 50



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:26 am

463 ஆர்த்தமுரசுமுழவுபணையார்த்தபணிலம்வயிர்பீலி
யார்த்தவயவரணிந்தகழலார்த்தவிறற்றோள்புடைக்குமொலி
யார்த்தவளைந்தவெஞ்சிலைநாணார்த்தபுழைக்கைமால்யானை
யார்த்தகடுப்பின்வாம்புரவியார்த்தபலவுமடங்காதே. 51

464 கண்டான்வீணைத்திருமுனிவன்கடிதுபடர்ந்துகாளிமுனந்
தொண்டானிறைஞ்சியெழுந்துவலிதோலாத்திறல்சால்வீரரொடு
மண்டாகின்றபடைநெருங்கவந்தான்வானோர்புலஞ்சாய்த்த
சண்டாசரனீபோர்க்கெழுதிதாழாயெனக்கூறினன்போனான். 52

465 வேறு.
முனிவரனுரைத்தவார்த்தைகேட்டுவந்துமுகிழ்நகையரும்பினளிருந்தா
ணனிவளமடியார்பெறவருள்பெரியநாயகியுயிர்த்தமாகாளி
வனிதையர்பலருமொய்யெனவெழுந்துவட்டுடையரையுறப்புனைந்து
கனியிருட்கூந்தனாண்கொடுவரிந்துகச்சிறுக்கினர்முலைமறைய. 53

466 பரிசையும்வாளும்பற்றினர்சில்லோர்பகழிசால்கூடுவெந்நசைத்து
வரிசிலைகுழையவாங்கினர்சில்லோர்வடித்தவேலேந்தினர்சில்லோ
ரெரிகிளர்ந்தனையபரசுவெஞ்சூலமிருகையுந்தரித்தனர்சில்லோர்
விரிசுடர்க்குலிசமேந்தினர்சில்லோர்விறற்கதைசமந்தனர்சில்லோர். 54

467 இன்னராய்மகளிர்யாவருங்குழுமியெரிகிளர்ந்தெனச்சினமூண்டு
நன்னராதரத்தினிறைவிபொற்றிருத்தாணயந்தனர்தாழ்ந்துதாழ்ந்தெழுந்து
முன்னராடமர்க்குவிடைகொடுத்தருடிமுதல்வியென்றிரத்தலுமனையாள்
சொன்னவாறடைந்தாடுகசமர்யாமுந்தொடர்ந்தடைகுதுமெனவிடுத்தாள். 55

468 கரியிவர்ந்தாருமரியிவர்ந்தாருங்காய்கடுந்தழலுமிழ்செங்க
ணரியிவர்ந்தாருமறுகிவர்ந்தாருமலைதொழிற்பேயிவர்ந்தாரும்
விரிசிறைபறவைமிருகமற்றுள்ளவிழைந்திவர்ந்தாருமாயெவரும்
பரிகரியிரதந்துவன்றியவவுணர்படைக்கடல்கலந்தனரார்த்தே. 56

469 பரந்துவந்தடுத்தபாவையராயபகைப்பெருங்கடலினைக்குய்யஞ்
சுரந்துகொண்டிருக்குமன்னுடையவுணர்சுடர்விழிநெருப்பெழநோக்கி
நிரந்தரம்பந்துங்கழங்குமம்மனையுநிகழ்தரக்கோடலையொழித்தே
யரந்தடிபடைகளேந்திவந்தடுத்தீரரிவைமீரெனநகைத்தமர்த்தார். 57

470 ஒருகடலொடுமற்றொருகடல்கலந்தாலொப்பெனவிருதிறத்தாரும்
வெருவறக்கலந்தார்வெஞ்சிலைவளைப்பார்விறல்கெழுநாணொலியெறிவார்
பொருதிறற்பகழிபற்பலதொடுப்பார்போகயர்வரைபொடிபடக்கும்
பெருவிறற்றண்டஞ்சுழற்றினரடிப்பார்பிறங்குசக்கரந்திரித்தெறிவார். 58

471 மகபடாமிழந்துங்கிம்புரிவயங்குமுதுபெருங்கோடுகனிழந்து
மகனிலந்துழாவும்புழைக்கரமிழந்துமடர்நிரியாணமற்றிழந்தும்
புகர்முகமிழந்தும்போகுவாலிழந்தும்புகல்கறைக்காத்திரமிழந்தும்
தகவமருயிரேயிழந்துமிவ்வாறுசலித்தனகலித்தமாலியானை. 59

472 கடுநடையிழந்துங்கடுநடையொருநாற்கால்களுமிழந்துநாற்காலோ
டடுதிறல்படுபாய்த்திழந்துமப்பாய்த்தொடமைவலிமார்பகமிழந்து
மிடுகிலம்மார்போடெறுழ்வெரிநிழந்துமிசைத்தவவ்வெரிநொடுமணிகள்
படபெருங்கலனையிழந்துமிவ்வாறுபட்டனபட்டவாம்புரவி. 60



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:26 am

473 கொடிபலமுறிந்துங்கொடிஞ்சிகளழிந்துங்குடங்குடைமதலியவிழந்தும்
வடிமணிசிதர்ந்துங்கிடுகள்முறிந்தும்வயங்கியதட்டுகளுடைந்தும்
படிகிழித்தியங்குகால்பலகழன்றும்பரியநீளச்சுகடெறித்துங்
கடியவிர்செம்பொணாதனம்விரிந்துங்கழிந்தனகலந்ததேரெல்லாம். 61

474 தாளொடுகழலுந்தலையொடுமுடியுந்தயங்கியபூணொடுமார்பும்
வாளொடுகரமுமிறுகுறச்செறிந்தவட்டுடையொடுமிடையிடையுந்
தோளொடுதொடையும்விழியொடுகனலுந்தும்பைமாலிகையொடுபோருங்
கோளொடுகுரலுங்குலைந்தனர்வீழ்ந்தார்கொடியபோரேற்றவல்லவுணர். 62

475 வேறு.
புரந்துளைத்தனதுளைத்தனபொம்மல்வெம்முலையைக்
கரந்துளைத்தனதுளைத்தனவட்டுடைக்கலானை
யுரந்துளைத்தனதுளைத்தனவொண்டொடிப்புயத்தைச்
சிரந்துளைத்தனமகளிர்கட்டெவ்வர்வில்விடுகோல். 63

476 முறிந்தவாளிகள்முறிந்தனகேடகம்வடிவான்
முறிந்தவங்குசமுறிந்தனபிண்டிபாலங்கண்
முறிந்ததோமரமுறிந்தனமுழுக்கதைஞாங்கர்
முறிந்தவெஞ்சிலையிருதிறத்தவர்க்குமொய்போரில். 64

477 மலையுருண்டனவெனத்தலையுருண்டனவையக்
கலையுடைந்தனவெனக்கமழரக்குநீரெழுந்த
நிலைகுலைந்தனநிகழறக்கடையெலாமென்னத்
தலையவிந்தனசாடியவவுணர்தந்தானை. 65

478 எங்கணுங்குடரெங்கணுங்குருதியெங்கணுமென்
பெங்கணுங்கொழுவெங்கணுநாடியெங்கணுந்தோ
லெங்கணுந்தடியெங்கணுமிருளெங்கணுங்கை
யெங்கணுஞ்சிரமெங்கணுமழன்களாயிறைந்த. 66

479 ஆடுகின்றனகுறைத்தலைப்பிணங்களோடலகை
யோடுகின்றனவுற்றநெய்த்தோரொடுமுயிர்கண்
மூடுகின்றனதசைகுடர்வழும்பொடுமூளை
வீடுகின்றனகொண்டமானத்தொடுவீரம். 67

480 இன்னவாறிருபடையினும்பெருஞ்சிதைவெய்த
முன்னமேயமர்புரிந்திலமெனச்சினமூண்டு
சொன்னதானவர்தொழுமிறைமகன்றொகுவானோர்
வென்னவாவதிவீரனென்பவன்விரைந்தெழுந்தான். 68

481 வாங்கினான்கொடுமரத்தினைமால்வரைகுலையத்
தாங்கினானெறிந்தார்த்தனன்சரம்பலதொடுத்தா
னேங்கினாரரமாதர்கள்பலருமெய்த்திருதோள்
வீங்கிநேரெழுந்தார்தார்த்தனள்விறலயிராணி. 69

482 இருவர்வார்சிலையுமிழ்தருசிலீமுகமெழுந்து
மருவுவார்கடல்குடிப்பனவரைபொடிபடுப்ப
வொருவுறாதுவிண்பொதிர்ப்பனவுருவுவவையம்
வெருவினார்பலவுலகரும்விளைந்ததுபெரும்போர். 70



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:26 am

483 கொடியதானவனாயிரங்கொடுங்கணைகோத்து
நெடியசீரயிராணிமேல்விடுத்தனனிகழும்
படியபல்கணையவையெலாம்பாய்தலற்றொல்லை
யொடியவேவினளத்தொகைப்பகழிமற்றொருத்தி. 71

484 தருநறுந்தொடைமிலைச்சியதையலாயிரங்கோ
லொருவன்மேற்றொடுத்தேகினளவுணனுட்சினந்து
வெருவிலாயிரங்கோறொடுத்தவையெலாம்வீழ்த்தான்
பருவமங்கையேவினளொருபிறைமுகப்பகழி. 72

485 ஆலமேயெனவதுசினந்தடுத்தலுமடுதீக்
கோலமேயெனவவனொருபிறைமுகங்கொடுங்கோன்
ஞாலமேவிசும்பேயிவைநடுங்கிடவுய்த்தான்
சாலமேயெனக்கலாய்த்துமாய்ந்தனதளர்ந்திரண்டும். 73

486 தீயன்வச்சிரமெடுத்தயிராணிமேற்செலுத்தப்
பாயவச்சிரமேவினாளுடல்விழிப்பாவை
யாயமற்றிருபடைகளுநெடும்பொழுதமர்த்துச்
சாயவெய்த்தனவிட்டவர்கைத்தலஞ்சார்ந்த. 74

487 கடியவாயிரம்பகழியோராயிரங்கண்ணி
நெடியயானைமேற்செலுத்தினானெடியவாளவுண
னொடியமற்றவையாயிரங்கடுங்கணையுகைத்துக்
கொடியன்றேரினையாயிரஞ்சரங்களாற்குலைத்தாள். 75

488 வேறுதேரிவர்ந்தாயிரங்கடுங்கணைவிடுத்துத்
தாறுபாய்களிநான்மருப்பியானையைச்சாய்த்திட்
டூறுசோரிமிக்கொழுகிடவானநாடுடையா
ளேறுகோமலர்மேனியைத்துளைத்தனனிளைத்தாள். 76

489 இளைத்ததோர்ந்தனனகையெறிந்தார்த்தனனிருங்கை
வளைத்தவெஞ்சிலையொடுங்கணைமழையொடுமுழிதந்
துளைத்தவான்மடமாதர்களொருங்குவீழ்ந்தவிய
முளைத்ததீயனான்சிறிதுதன்மொய்ம்புகாட்டினனால். 77

490 ஈதுநோக்கியவயிணவிகலுழன்மேலிவர்ந்தாள்
சாதுநோக்கியமகளிரைத்தளரற்கவென்றாள்
போதுநோக்கியகைத்தலங்கார்முகம்பொறுத்துத்
தீதுநோக்கியசிலீமுகம்பற்பலசெறித்தாள். 78

491 தலையிழந்தனர்சிலர்நறுந்தாரணிதடந்தோண்
மலையிழந்தனர்சிலர்பெருவாரிநின்றன்ன
நிலையிழந்தனர்சிலர்நிலைகுலைதரநிகழ்த்துங்
கொலையிழந்தனர்சிலர்துழாய்வயிணவிகோலால். 79

492 ஓடினார்சிலரொளிந்துகொண்டுய்வதற்குறுதே
நாடினார்சிலரொளிந்துமென்னென்றுளநைந்து
வீடினார்சிலர்தலையறுபடவிசையொடுநின்
றாடினார்சிலரவுணருளவனதுகண்டான். 80



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக