ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

+3
ஈழமகன்
சிவா
ரூபன்
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by ரூபன் Sat Sep 12, 2009 6:58 pm

First topic message reminder :

லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!

பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்!

காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!

காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.

உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!

சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.

காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு 7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!

அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!

எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!

காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!

உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!

காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள் பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!

காதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், கொஞ்சம் நெருக்கம் என்றால் உள்ளாடைகள், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.

காதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா, கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட், ஏற்கனவே சொன்னது போல நெருக்கமாக இருந்தால் உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!

“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.

காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by ரூபன் Sun Sep 13, 2009 2:02 am

மீனு சொன்னது உண்மைதான் வித்தியாசாகர் அக்கா பையன்கள் கேம் விளையாட கேட்டார்கள் அதுதான் சற்றுநேரம் சென்றுவிட்டேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by வித்யாசாகர் Sun Sep 13, 2009 2:13 am

நல்லது ரூபன்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by ரூபன் Sun Sep 13, 2009 2:13 am

"ஒரு வேண்டுகோல் திருமணம் செய்துக் கொண்ட பிறகு மனைவியை காதலிக்க
சொல்லவும்! அதுவரை காதல் கவிதையோடு மட்டுமிருக்கட்டுமென்பது என்
சகோதரதத்துவமான வேண்டுகோள்.."

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Icon_eek

எதுக்கு இந்த வேண்டுகோள் வித்தியாசாகர் காதலித்தால் என்ன பிரச்சனை என்று எனக்கு விளக்குங்கள் நண்பரே நண்பன் என்ற முறையில் இந்த வேண்டு கொலை வைக்கிறேன் என்னெனில் நான் இந்ததத் துறையை பற்றி அதிகம் அறியாதவன் அதுதான் நண்பரே கொஞ்சம் சொல்லுங்களேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by மீனு Sun Sep 13, 2009 2:15 am

என்ன ரூபன் வித்யாசாகர் சொன்ன அறிவுரை புரிந்து இருக்குமென நம்பறேன்..இது உங்களுக்கு மட்டுமல்ல ..இந்த அறிவுரை எனக்கும்..இன்னும் பலருக்குமே.. சோ நாம சமத்தா நடந்துக்கணும்..

Ruban..அட இதுதாங்க உலக மகா நடிப்புங்கிறது ..காதல் பற்றி காதல் மன்னனுக்கே ஒன்றும் தெரியாதாம்..அவரோட ஆக்கங்கள் அனைத்துமே காதலிப்பது எப்படி,காதலை சொல்லும் முறைகள்..இப்படி இருக்குதே.. அப்போ ..????


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by ரூபன் Sun Sep 13, 2009 2:19 am

காதல் மன்னன் என்று சொல்லிட்டு காதலிக்காதே என்றால் என்ன செய்ய காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 502589
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by மீனு Sun Sep 13, 2009 2:26 am

அட சரியான கேள்வியை தான் இருக்கே.. என்ன செய்யலாம் வித்யாசாகர்.. நீங்களே சொல்லுங்க..ரூபன் கேட்பதிலும் நியாயம் இருக்குதானே....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by ரூபன் Sun Sep 13, 2009 2:32 am

என்ன வித்தியா சாகர் இனி அடுத்த வாரமா வருவார் வேலை என்று குறிப்பிட்டிருந்தார்
அதுக்கும் பார்க்கத்தானே வேண்டும் நண்பரே என்ன அதுவரைக்கும் நாங்கள் நல்ல கவிதைக்கு காத்திருக்கணும் மினுவின் கவிதையை சகித்து கேட்க வேண்டியதுதான்
மீனு உங்க காட்டில் மலைதான் எதோ நடத்துங்க காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by மீனு Sun Sep 13, 2009 2:41 am

ரூபன் அவர்களே...நீங்க எதுக்கு என் கவிதை படிக்கிறீங்க.. எதுக்கு படிக்கணும்,,சகிச்சுக்கனும்.. எஸ் எஸ் மாங்கா வேணும்..பட் புளிக்காத மாங்கா வேணும்.. மீனு கொஞ்சம் அப்படி இப்படி தான் கவிதை தருவா..விரும்பினவங்க படிச்சுக்குங்க..ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிட்டேன் ரூபன் மட்டும் என் கவிதை படிக்க கூடாது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by ரூபன் Sun Sep 13, 2009 2:43 am

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 67637

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by வித்யாசாகர் Sun Sep 13, 2009 2:44 am

காதல் மன்னன் என்று சொல்லிவிட்ட துடிப்பில் காதலித்துவிட போகிறீர்களோ என்ற அச்சத்தில் அப்படி சொன்னேன் ரூபன். காதல் காதலிப்பதல்ல. காதலிக்கப் படுவது. காதலிக்கப் பட்டால் நானும் வாழ்த்துகிறேன். அதுவரை காதலிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

சமுதாயமும், சமுதாயமாகிய நாமும் காதலுக்கு பயப்படக் கூடிய அந்தஸ்த்தையே கொடுத்துள்ளோம் ரூபன். போற்றத்தக்க காதல், போற்றத் தக்கதே.

நம் இத்தனை தூர நாகரீக முன்னேற்றத்திற்கு காதலே மூலாதாரமென்று எழுதிவிட்டுப் எட்டிப் பார்க்கையில், படிக்கவேண்டிய மாணவர்களின் புத்தகப் பையிலும், சாதிக்கக் கூடிய லட்சிய இளைஞனின் இதைய துடிப்பிலும் காதல் புகுந்து, மரணம் மெல்கையில், காதலை பற்றி எழுதிய என் எழுதுகோல் முட்களை யாருக்கும் தெரியாமல் உடைத்துக் கொள்கிறேன்.

திரும்பிப் பார்க்கையில் காதல் இனிக்கனும் ரூபன், கசக்குமெனில், வாழ்க்கையாவது இனித்திருக்கணும், 'இடை இடையே காதலை நினைத்துக் கொள்ள'


Last edited by vidhyasagar on Sun Sep 13, 2009 3:02 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 3 Empty Re: காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum