புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
171 Posts - 80%
heezulia
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
3 Posts - 1%
prajai
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
1 Post - 0%
Pampu
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
336 Posts - 79%
heezulia
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_m10குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Page 1 of 2 1, 2  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jun 19, 2011 1:37 am

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.
"வணக்கம் எட்வின் சார்”

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் அவர்கள் அறைக்குள் நுழைய இருந்த என்னை இந்தக் குரல் கொஞ்சம் பின்னுக்கு இழுத்தது. திரும்பிப் பார்த்தால் பட்டத்திப் பாளையம் சிவமுத்து சார், வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தார்.

“ வந்த இடத்துல உங்கள சந்திப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல.ரொம்ப சந்தோசமா இருக்குங்க சார்”

பக்கத்தில் ஒரு பதினைந்து அல்லது பதினாறு மதிக்கத் தக்க குழந்தை நின்றிருந்தான்.யாரென்று புரியவே, அவனை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டேன்.

நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரத்திப் பதிமூன்று மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்று தெரியும்.

“என்ன சாமி ஆயிரத்திப் பதி மூன்றா?”

புன்னகையும் வெட்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு வெளிக் கசிய அப்படியே நெளிந்தான் பிள்ளை.

“ ரொம்ப நல்ல மார்க்குப்பா.மேல என்ன செய்யப் போற,?” என்று அவன் தலையைக் கோதிய வாறே கேட்டேன். அதற்குள் நண்பர் சிவா வந்து விடவே,

“சிவா, இவங்க சிவமுத்து சார். கார்மேகம் சாரோட ஊர். சாருக்கு தம்பி முறை வேண்டும்.சாரோட மனைவிதான் பட்டத்திப் பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை.”

அறிமுகம் செய்து வைத்தேன்.

பட்டத்திப் பாளையம் பள்ளியைப் பற்றி அவரிடம் நிறையவே பெசியிருக்கிறேன்.எனவே இதைக் கேட்ட மாத்திரத்தில் சிவாவின் கண்களில் ஒரு மின்னல் வெட்டிச் சென்றது.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

அந்தப் பள்ளிக் கூடத்தப் பார்ப்பதற்காகவே உங்க ஊருக்கு வரணும்னு ஆசை சார். ஒரு முறை அவசியம் வரணும். அந்தப் பள்ளிக்கூடத்தப் பத்தி எட்வின் நிறைய சொல்லியிருக்கிறார். உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் சார்,” என்றவர் , “ஆமாம் பையன் என்ன படிக்கிறான்?” என்றார்.

”இப்பதான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கான்”

” மேற்கொண்டு என்ன படிக்கிறதா உத்தேசம்?”

அங்க சுத்தி இங்க சுத்தி நான் கேட்டிருந்த கேள்விக்கு மிக அருகே எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர், ‘சார், W2 ரவிகிட்ட ஒரு சின்ன வேல இருக்கு. போனதும் வந்துடறேன். நீங்க கொஞ்சம் சாரோடப் பேசிட்டு இருங்க.வந்த உடனே சுப. வீ அய்யாவப் பார்க்கப் போயிடலாம்’

அவர் போனதும் சிவசாமி சாரைப் பார்த்தேன்.எனது பார்வை மீண்டும் அதே கேள்வியைக் கேட்கவே,

கோவை PSG யில் பிசிக்ஸ் கிடைச்சிருக்கு. லயோலா கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு. அதான் முயற்சி செய்து பார்க்கலாமேன்னு வந்திருக்கோம்”

“இந்த மார்க்குக்கு கண்டிப்பா கிடைக்கும். ஏன் சார், மெடிக்கல் முயற்சி செய்யலையா?”

“கட் ஆஃப் கொஞ்சம் குறையுதுங்க சார்”

“ நிர்வாகக் கோட்டாவில் முயற்சி செய்யலாமே?”

கோடிக் கணக்கில் சொத்து அவர்களிடம் உண்டு என்பதும், செலவு செய்து படிக்க வைப்பது அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை என்பதாலும் அப்படிக் கேட்டேன்.

“பதினஞ்சு நாளா நானும் அவங்க அம்மாவும் கிடந்து உழுந்து புரண்டு பார்த்துட்டோம். கொஞ்சம் கூட இறங்கி வரவோ, இரக்கப் படவோ மாட்டேங்கறான் சார்”

“கார்மேகம் சாரிடம் சொல்லிப் பேசச் சொல்லிப் பார்க்கலாமே?”

“ அவர் வீட்டில்தான் ரெண்டு நாளா தங்கியிருக்கிறோம். அவரும் ஆன மட்டும் தலையால தண்ணிக் குடிச்சுப் பார்த்துட்டாருங்க சார். அசைவனாங்குறான்.”

”என்ன செல்லம், மருத்துவம் எவ்வளவு ஒசத்தியான படிப்பு தெரியுமா?” என்று முடிப்பதற்குள் சிவமுத்து சார், “ நான் கொஞ்சம் ஒதுங்கிகிறேன். ஒங்ககிட்டயாவது கொஞ்சம் மசியறானான்னு பார்ப்போம்” என்றவாறே ஒதுங்கினார்.

அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கி அனைத்தவாறும்,தலையைக் கோதியபடியுமாய் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அவனை அமரச் செய்து இன்னொன்றில் நான் அமர்ந்து கொண்டேன்.

“ஏம்ப்பா, ஏன் மருத்துவம் வேண்டாங்குற?”

“வேண்டாங்க மாமா”

“மருத்துவம் பிடிக்கலையா?

“அது மேல வெறிகொண்ட ஆசையே உண்டுங்க மாமா”

அப்படியே ஆடிப் போனேன் ஆடி.

“ அப்புறம் என்னாப்பா, இவ்வளவு ஆச இருக்கே. பேசாம நல்ல காலேஜா பார்த்து சேர்ந்துட வேண்டியதுதானே?”

”வேண்டாங்க மாமா”

வேதாளம் இறங்குகிற மாதிரி தெரியவே இல்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காதவனாய்,

“கஷ்டமா இருக்கும்னு பயப்படறியா?”

”அய்யய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க மாமா. இன்னும் சொல்லப் போனா பிசிக்ஸவிட மெடிக்கல் கிடச்சா அத ரொம்ப நல்லாவே படிப்பேன்.”

சில நேரங்களில் மன்மோகன் சிங் பேசினாலே புரிகிறது. பிள்ளையோ ஆறேழு மன்மோகன் சிஙுகளாய் குழப்பினான்.

“அப்புறமென்ன?”

”கிடச்சாப் படிக்கலாம்.”

அப்பாடா ஒரு வழியாய் மசிஞ்சானே பிள்ளை என்று நினைத்தவனாய், “கிடைக்கும், நிச்சயம் கிடைக்கும்” என்றேன்.

“ நிச்சயமாய் கிடைக்காதுங்க மாமா”

“ அதுக்கு நாங்களாச்சு. அண்னாமலை போதுமா?, இல்லை வேறு ஏதாவது காலேஜ் வேணும்னாலும் சொல்லு. மத்தத நாங்க பார்த்துக்கறோம்”

“பேமெண்ட் சீட்லயா மாமா?”

“ஆமாம்”

“ அதுதான் வேண்டாங்குறேன்.”

காசு ரொம்ப செலவாயிடுமோன்னு பயப்படுகிறான் போல என்று எண்ணினேன்.

”சொத்து கறைந்துடுமோன்னு பயப்படுறியாப்பா.கவலையேப் படாத. சம்பாரிச்சுக்கலாம்.”

“அப்ப சம்பாரிக்கத்தான் எல்லோரும் என்னை மருத்துவம் படிக்கச் சொல்றீங்களா மாமா?”

என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான பதிலும், எதற்கான கேள்விகளும் அவனிடம் ஏராளம் இருக்கின்றன. ஏதாவது கேட்டால் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தன் கேள்விகளாலும் பதில்களாலும் வளைத்துக் கவ்விப் பிடித்து விடுகிறான் நம்மை.

“ ஆனாலும் மருத்துவம் என்பது சேவை இல்லையா?”

“பிசிக்ஸ்படிச்சுட்டுக் கூட சேவை செய்யலாம் மாமா”

பிடி கொடுக்கவே மறுக்கிறான்.

“ அப்ப மெடிசின் பிடிக்கல, அப்படித்தானே?”

முனை மழுங்கிய மொக்கை என்று தெரிந்தும் வேறு வழி இன்றி கேட்டேன்.

”இல்லீங்க மாமா, நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா. அம்மாவும் அப்பாவும் உங்களப் பத்தி பெருமையா நிறைய சொல்லியிருக்காங்க. நீங்களே படிப்ப விலைக்கு வாங்க சொல்றதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குங்க மாமா”

ஓங்கி அறைந்தது போல் இருந்தது. இழுத்து இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டேன். இன்னும் அதிகமான வாஞ்சையோடு அவன் தலையை வருடிக் கொடுத்தேன்.என் கண்கள் சன்னமாய் சுரப்பது மாதிரிப் பட்டது.

“ஏதும் தப்பா பேசிட்டேனா மாமா. அப்படின்னா மன்னிச்சுக்கங்க மாமா.”

“ இல்லப்பா. சத்தியமா இல்ல. நீ நல்லா வருவ”அவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வந்திருந்த சிவக் குமாரோடு புறப்பட்டேன்.

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்

“எடுத்துக் கொள்வதற்கு ஏராளமாய் மேன்மைகள் நம் குழந்தைகளிடம் இருக்கின்றன.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 19, 2011 10:16 am

உண்மைதான் எட்வின்.இன்னிக்கு இருக்கற குழந்தைகள் அதிகமா சிந்திக்கரங்க.படிப்பு ஒண்ணு மட்டும் போதும்ன்னு நினைக்கிறவங்க இல்லை,அதையும் தாண்டி பல விஷயமும் தெரிஞ்சுக்கரங்க,அதை பத்தி யோசிக்கிறாங்க.

சரி எட்வின் ,கிஷோரும் அவர் பிரண்டும் எப்படி இருக்காங்க?

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Uகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Dகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Aகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Yகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Aகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Sகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Uகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Dகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Hகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 3:11 pm

கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் எத்தனை தெளிவாக சிந்திக்கிறார்கள். பேமெண்ட்ல சீட் வேண்டாம், கட் ஆஃப் கம்மியா இருக்கு..... ஆனால் வெறி மெடிசின்ஸ் படிக்கனும்னு.

கண்டிப்பா பிள்ளை தான் கண்ட கனவை சாதித்தே தீருவான், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆசிகள் பிள்ளைக்கு.

எதிர்கால இந்தியா நல்முத்து வைரங்களை மட்டுமே உள்ளடக்க போகும் அற்புத பொக்கிஷமா மிளிர போகுது....

அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் எட்வின். உங்க தொலைபேசி எண் இருந்தால் கூப்பிட்டு வாழ்த்து சொல்லி இருப்பேன்பா..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 19, 2011 8:06 pm

""நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு
கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது
கிடைக்கும்னா வேண்டாங்க""

தீர்க்கமான சிந்தனை..

பதிவை படித்ததும் மனதில் நினைத்தது:

"இந்த மாணவன் பணம் செலவு செய்து மருத்துவம் படித்திருந்தால்..
பல ஏழ்மையில் உள்ள மக்கள் பணம் செலவு இல்லாமல் பயன் பெற்று இருப்பார்களே..."

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jun 19, 2011 10:58 pm

உதயசுதா wrote:உண்மைதான் எட்வின்.இன்னிக்கு இருக்கற குழந்தைகள் அதிகமா சிந்திக்கரங்க.படிப்பு ஒண்ணு மட்டும் போதும்ன்னு நினைக்கிறவங்க இல்லை,அதையும் தாண்டி பல விஷயமும் தெரிஞ்சுக்கரங்க,அதை பத்தி யோசிக்கிறாங்க.

சரி எட்வின் ,கிஷோரும் அவர் பிரண்டும் எப்படி இருக்காங்க?

மிக்க நன்றி சுதா. கிஷோர் சரியாகி விட்டான் . அவன் தேறி வருகிறான்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jun 19, 2011 10:59 pm

மஞ்சுபாஷிணி wrote:கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் எத்தனை தெளிவாக சிந்திக்கிறார்கள். பேமெண்ட்ல சீட் வேண்டாம், கட் ஆஃப் கம்மியா இருக்கு..... ஆனால் வெறி மெடிசின்ஸ் படிக்கனும்னு.

கண்டிப்பா பிள்ளை தான் கண்ட கனவை சாதித்தே தீருவான், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆசிகள் பிள்ளைக்கு.

எதிர்கால இந்தியா நல்முத்து வைரங்களை மட்டுமே உள்ளடக்க போகும் அற்புத பொக்கிஷமா மிளிர போகுது....

அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் எட்வின். உங்க தொலைபேசி எண் இருந்தால் கூப்பிட்டு வாழ்த்து சொல்லி இருப்பேன்பா..

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபா. எனது எண் தெரியாதா? 9842459759

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jun 19, 2011 11:01 pm

realvampire wrote:""நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு
கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது
கிடைக்கும்னா வேண்டாங்க""

தீர்க்கமான சிந்தனை..

பதிவை படித்ததும் மனதில் நினைத்தது:

"இந்த மாணவன் பணம் செலவு செய்து மருத்துவம் படித்திருந்தால்..
பல ஏழ்மையில் உள்ள மக்கள் பணம் செலவு இல்லாமல் பயன் பெற்று இருப்பார்களே..."

மிக்க நன்றி தோழா. நாத்திகரா? அப்ப நம்ம ஜாதி.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 1:01 am

இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் எத்தனை தெளிவாக சிந்திக்கிறார்கள். பேமெண்ட்ல சீட் வேண்டாம், கட் ஆஃப் கம்மியா இருக்கு..... ஆனால் வெறி மெடிசின்ஸ் படிக்கனும்னு.

கண்டிப்பா பிள்ளை தான் கண்ட கனவை சாதித்தே தீருவான், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆசிகள் பிள்ளைக்கு.

எதிர்கால இந்தியா நல்முத்து வைரங்களை மட்டுமே உள்ளடக்க போகும் அற்புத பொக்கிஷமா மிளிர போகுது....

அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் எட்வின். உங்க தொலைபேசி எண் இருந்தால் கூப்பிட்டு வாழ்த்து சொல்லி இருப்பேன்பா..

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபா. எனது எண் தெரியாதா? 9842459759

நாளை காலை உங்களை கால் செய்து விஷ் பண்றேன்பா.... திருமணம் நல்லபடி நடந்ததா? உங்க வலைதளம் வந்தேன் திருமண அழைப்பிதழ் பார்த்தேன். எல்லோரும் வீட்டில் சௌக்கியம் தானே எட்வின்?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 1:41 am

"மிக்க நன்றி தோழா. நாத்திகரா? அப்ப நம்ம ஜாதி."

என்ன சார்?
ஜாதி எல்லாம் இல்ல சார்..
6-அறிவு உயிரினம் அவ்வளவுதான்...

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 20, 2011 8:59 pm

realvampire wrote:"மிக்க நன்றி தோழா. நாத்திகரா? அப்ப நம்ம ஜாதி."

என்ன சார்?
ஜாதி எல்லாம் இல்ல சார்..
6-அறிவு உயிரினம் அவ்வளவுதான்...

ஜாதின்னா வர்க்கம் என்றும் பொருள் கொள்ள வேண்டும் தோழர்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக