புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாகமாணிக்கம் - Page 2 Poll_c10நாகமாணிக்கம் - Page 2 Poll_m10நாகமாணிக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகமாணிக்கம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 12:34 pm

First topic message reminder :

அந்த விடிகாலை வேளையில் தலையில் குலைக்கட்டும் தூக்கிக் கொண்டு குளத்தங்கரை ஒத்தையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தான் செல்வராசு. ராத்திரி உள்ள போன சாராய கிறக்கத்துல எழுந்திரிக்க கொஞ்சம் பிந்திட்டுது. எப்பவும் இதைவிட அதிசீக்கிரமே அவன் சந்தைக்கிப் போய்விடுவான் கருக்கலுக்குள் போய்ச் சேர்ந்தால்தான் வெயிலுக்குமின்ன வீடு திரும்ப முடியும். அவன் வந்துதான் வெளையில நட்ட மலக்கறியளுக்கு வெள்ளம் கோரணும்.

தூரத்தில் பொழுது விடிவதற்கான அறிகுறி கிழக்கு வானத்தில் வெளிச்சப்பட்டது. அது கண்டதும் நடைவெளி கூட்டி விரைசலாக நடந்தான். ஓட்டநடையின் வேகத்தில் எதன்மீதோ தடுக்கிக் கொண்டு விழ இருந்தான். குலைக்கட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தடுமாறி பின் நிலைத்து நின்று தடுக்கியது எது என்று பார்த்தான்.

பார்த்ததும் தலையோடு குலையைப் பிடித்திருந்த கை நழுவியது. குலை வழுக்கி குளத்தில் விழுந்தது. அவன் தரையில் கிடந்த உருவத்தைக் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் பார்த்து நின்றான்.

சந்தைக்குப் போகும் இன்னும் சிலர் பேசிக்கொண்டே பின்னோடு வரும் சப்தம் கேட்டதும் தான் செல்வராசு நடுக்கத்தினின்று நழுவினான்.

“ஆருல அது செல்ராசா? இங்க என்ன செய்யே?” கீரைக்கட்டு தூக்கி வந்த இளையபெருமாள் கேட்டான். “பிரேதம்!…பிரேதம் கெடக்கு….” செல்வராசு குளறியது கேட்டதும் இளையபெருமாளோடு வந்த இன்னுமிருவர் தங்கள் சுமைகளை இறக்கி விட்டு முன்னே வந்து பார்த்தார்கள்.

குப்புறக் கிடந்த அந்தப் பிரேதம் இன்னும் நாற்றமடிக்க ஆரம்பித்திருக்க வில்லை. “ராத்திரி எவனும் குடிச்சிட்டு வந்து விழுந்திருப்பான். யாருன்னு பாருலே…உசிரு இருக்கான்னு பாரு” என்றான் இளைய பெருமாள்.

பார்த்தார்கள். அது ஒரு புதிய முகம். யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உள்ளூரென்றால் தெரியாமலிராது. இடுப்பில் அலங்கோலமாக ஒரு வேட்டி மட்டும். மற்றப்படி திறந்த மேனியாகக் கிடந்த அந்த மனிதன் யார்? எதற்காக இங்கு வந்தான்? அவர்களால் அனுமானிக்க முடியவில்லை.

அதற்கிடையில் பொழுது விடிந்துவிட கூட்டம் கூடியது. போலீசுக்குச் சொல்ல ஓடினார்கள் சிலர். மீதியைப் போலீஸ் கவனித்துக் கொள்ளும்.

இதற்கிடையே கூடியிருந்த கூட்டத்தில் ஆரம்பித்த உரையாடல்

“இந்த வளவுல இது மூணாவது சம்பவம்.” ஒருவன் ஆரம்பித்து வைக்க “ஆமால்லா! இது அந்த லெச்சிக்க வேலதான்” இன்னும் நடுக்கம் தீராத செல்வராசு பேசினான்..

(வளரும்)





திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 05, 2011 2:59 pm

பூவறத்து பூபாலன் ஆசானுக்க மகன்தான் எனக்க ஆசான் கோபாலன் ஆசான். தகப்பன்
கிட்டயே சிஷ்யனா இருந்து எல்லா அடிவேலயும் மந்திரவாதவும் படிச்சாரு.
பேருகேட்ட மந்திரவாதியா இருந்த தகப்பன் மகனுக்க தெறமைய பார்த்து
சந்தோசப்ப்டாரு. மகனுக்கு கேரளத்துல பெண்ணு பாத்து கெட்டி வச்சாரு.

அந்தப் பெண்ணு சுபத்திரயும் நல்லபடி குடும்பத்தை நடத்தி கணவனையும் மாமனாரையும் நல்லா பாத்துக்கிட்டா."

பனையேறி கதையைக் கொஞ்சம் நிறுத்தி ஒரு முறுக்கானை எடுத்து வாயில் இட்டுக்கொண்டார். அதன்பிறகு அவர் சொன்ன கதை இதுதான்.

அடிப்படையில
தகப்பனுக்கும் மகனுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. பூபாலன் ஆசான்
யாருக்கும் ஏவல் செய்வினை செய்யணும்னாலும் செய்து வைப்பார். ஆனா மகனோ
யாருக்கும் கெடுதியாக செய்வினை செய்ய மறுத்து விட்டார். அவர் செய்வினை
ஏவல் எடுப்பார். ஏற்கனவே பீடிக்கப் பட்டுள்ளவர்களை அதிலிருந்து
விடுவிப்பதுதான் அது.

இப்படியான வேளையில் ஒரு தடவை தகப்பன் வைத்த
ஏவலையே மகன் முறிக்க வேண்டி வந்தது. அன்றிலிருந்து தகப்பனும் மகனும்
பகையாளியானார்கள். கோபாலன் ஆசான் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு தூரதேசம்
போனார். காரணம் தகப்பனாரின் கோபம் அவருக்குத் தெரியும். அவர்
தனக்கெதிராகவும் மந்திரப்பிரயோகம் செய்து ஏவல் விடக்கூடுமென அவர்
எதிர்பார்த்தார். அதனால் தான் அவர் அங்கிருந்து போய்விட்டார்.

தகப்பனாரின்
சுபாவம் அவர் அறிந்திருந்தபடியால் எங்கேயும் நிரந்தரமாகத் தங்கி இருக்க
பயந்தார். ஒவ்வோரிடமாகக் கொஞ்சநாள் தங்கினார். இப்படி ஒரு தூரத்து
அக்கரைக் கிராமத்தில் அவர்கள் தங்கியிருந்த போது மனைவி கர்ப்பமாக இருப்பது
தெரிந்தது.

இனியும் அலைந்து திரிவது சரியல்ல என்று அங்கேயே ஓரிடத்தில் தங்கத் தீர்மானித்தார்.

ஆனாலும் அக்கம்பக்கத்தில் அதிகமாகப் பழக வேண்டாமென்று அவர் மனைவியை எச்சரித்திருந்தார்.

தான்
இருந்த கிராமம் தவிர்த்து சற்று தூரத்திலுள்ள கிராமங்களில் தன்
மந்திரவாதங்களைச் செய்து வந்தார். சில நம்பிக்கையான ஆட்களை அங்கே அவர்
வைத்திருந்தார். அவர்கள் மூலமாக வரும் அழைப்புகளுக்கு மந்திரவாதம், ஏவல்
செய்வினை எடுத்து (நீக்கி) விட்டு வருவார்.

அப்படி வர
பெரும்பாலும் நள்ளிரவு ஆகி விடும். நடுநிசிகளில் காட்டுவழி வரும்போது
மனைவி தனியாக இருப்பது நினைவுக்கு வரும். வேகமாக விரைவார்.

இம்மாதிரி ஒருநாள் ஒரு கிராமத்தில் ஏவல் எடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அது சரியாக நள்ளிரவு. அன்று அமாவாசை வேறு!

அவரது
கையில் வெளிச்சத்திற்காக ஒரு சிறிய சூட்டுப் பந்தம் கொளுத்தி
வைத்திருந்தார். நடந்து கொண்டிருந்தபோது பின்னால் கொலுசுச் சத்தம்.
திரும்பிப் பார்த்தார்.

வெள்ளுடை அணிந்த ஒரு பெண்ணுருவம். அவரது
அருகே நெருங்கி வந்தது. அது அவரிடம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டது.
அதுதான் லெச்சி என்னும் மோகினிப் பிசாசுகளின் லட்சணம்.

அவருக்கு
உடனே புரிந்து விட்டது. வேறு யாருமென்றால் அங்கேயே ரத்தம்
கக்கியிருப்பார்கள். ஆனால் அவரோ கைதேர்ந்த மந்திரவாதி. ஆனால் லெச்சி
சாதாரண பேய்பிசாசுகளைப் போன்றதல்ல. மிகவும் எச்சரிக்கை தேவை. அவர்
சூட்டுப் பந்தத்தை அணைத்துக் கீழே போட்டார்.

தன் பையிலிருந்து வசிய
மையை எடுத்து மந்திரப்பிரயோகம் செய்தார். லெச்சி நடுங்கிக் கொண்டு முட்டு
குத்தி அவர் முன் தலை குனிந்து நின்றாள். பையில் இருந்து ஒரு ஆணியை
எடுத்து தன் கையைக் கீறி அதில் ரத்தம் தெளித்து அவள் உச்சந்தலையில் செருகி
கல்லால் அடித்து இறக்கினார். லெச்சி அலறினாள். ஆனால் ஒரு சொட்டு ரத்தம்
சிந்தவில்லை.

கோபாலன் ஆசான் வீடு வந்து சேர்ந்தபோது அடங்கி
ஒடுங்கிய பெண்ணொருத்தி அவர் பின்னே வந்தாள். கர்ப்பவதியான மனைவிக்குப்
பணிவிடை செய்யும்படி அவளை அவர் அழைத்து வந்திருந்தார்

(கதை வளரும்)



நாகமாணிக்கம் - Page 2 Dove_branch
நாகமாணிக்கம் - Page 2 Dநாகமாணிக்கம் - Page 2 Iநாகமாணிக்கம் - Page 2 Vநாகமாணிக்கம் - Page 2 Yநாகமாணிக்கம் - Page 2 Aநாகமாணிக்கம் - Page 2 Empty
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 4:43 pm

எதிர் பார்க்கிறேன் தோழி



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 4:45 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 2:33 pm

தனக்கு ஒரு துணை கிடைத்ததில் சுபத்ராவுக்கு சந்தோஷம். வந்தவள் அழகாகக்
கூட்டி மெழுகினாள். சுவையாகச் சமைத்தாள். துணிமணிகளைத் துவைத்தாள்.
சுபத்ராவுக்கு நல்ல பேச்சுத் துணையாகவும், தோழியாகவும் இருந்தாள். ஆசான்
வீட்டில் இல்லாதபோது அவர்கள் சந்தோஷமாகப் பேசிக்களித்து பொழுதைப்
போக்கினர்.

அவள் வந்து மூன்று மாதங்கள் கடந்தன.

அன்று
அமாவாசை. பக்கத்து கிராமத்தில் ஒரு பூசைக்கு போக வேண்டியிருந்தது. பகல்
உணவு உண்டதும் ஆசான் சுபத்ராவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

அவர்
கிளம்பிப்போனதும் சுபத்ரா அந்தப் பெண்ணிடம் தனக்குப் பேன் பார்த்துத்
தரும்படி கேட்டாள். நிலைப்படியில் அமர்ந்தபடி அந்தப் பெண்ணும்
சுபத்ராவுக்கு பேன் பார்த்துக் கொடுத்தாள். கொஞ்ச நேரம் கழிந்ததும் அவள்
சுபத்ராவிடம் தனக்கும் தலையில் நிறைய பேன் என்று சொன்னாள். சுபத்ரா உடனே
அவளைக் கீழே இருத்தி, தான் மேல் படியில் இருந்து கொண்டு பேன் பார்க்கத்
தொடங்கினாள்.

சுபத்ரா அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நினைக்கவில்லை.
அக்கம் பக்கத்தவருடன் பழகமுடியாத தனிமையில் தனக்கொரு உற்ற துணையாக வந்த
அவளை அன்பிற்குரிய தோழியாகவே எண்ணினாள்.

சுபத்ராவின் கை அந்தப்பெண்ணின் தலைமுடியை அளைந்து பேன் தேடியபோது உச்சந்தலையில் ஏதோ அவள் விரல்களுக்குத் தட்டுப்பட்டது.

சுபத்ரா
அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். என்னவென்று உணர முடியவில்லை. அதனால்
அவளிடமே விசாரித்தாள். சமயம் பார்த்திருந்த லெச்சியும் அதை எடுத்து
விடும்படி கேட்டுக்கொண்டாள். சுபத்ரா என்னவென்று அறியாமல் தன் கணவன்
மந்திரக் கட்டிட்டு அறைந்து வைத்த ஆணியை லெச்சியின் தலையிலிருந்து
பிடுங்கி எடுத்தாள்.

(கதை வளரும்)



நாகமாணிக்கம் - Page 2 Dove_branch
நாகமாணிக்கம் - Page 2 Dநாகமாணிக்கம் - Page 2 Iநாகமாணிக்கம் - Page 2 Vநாகமாணிக்கம் - Page 2 Yநாகமாணிக்கம் - Page 2 Aநாகமாணிக்கம் - Page 2 Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 07, 2011 2:55 pm

பயம் பயம் பயம் பயமா இருக்கு திவ்யா தொடர்ச்சியை எப்ப போடுவா
அடுத்து என்ன நடக்கும்னு ஒரே பயமா இருக்கு பயம் பயம்



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:00 pm

ரேவதி wrote: பயம் பயம் பயம் பயமா இருக்கு திவ்யா தொடர்ச்சியை எப்ப போடுவா
அடுத்து என்ன நடக்கும்னு ஒரே பயமா இருக்கு பயம் பயம்
போடுறேன்...இன்னும் இரண்டு நாட்களில் .........



நாகமாணிக்கம் - Page 2 Dove_branch
நாகமாணிக்கம் - Page 2 Dநாகமாணிக்கம் - Page 2 Iநாகமாணிக்கம் - Page 2 Vநாகமாணிக்கம் - Page 2 Yநாகமாணிக்கம் - Page 2 Aநாகமாணிக்கம் - Page 2 Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 07, 2011 3:02 pm

திவ்யா wrote:
ரேவதி wrote: பயம் பயம் பயம் பயமா இருக்கு திவ்யா தொடர்ச்சியை எப்ப போடுவா
அடுத்து என்ன நடக்கும்னு ஒரே பயமா இருக்கு பயம் பயம்
போடுறேன்...இன்னும் இரண்டு நாட்களில் .........

இரண்டு நாட்களா சோகம் சோகம்
ஏன்



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:09 pm

ரேவதி wrote:
திவ்யா wrote:
ரேவதி wrote: பயம் பயம் பயம் பயமா இருக்கு திவ்யா தொடர்ச்சியை எப்ப போடுவா
அடுத்து என்ன நடக்கும்னு ஒரே பயமா இருக்கு பயம் பயம்
போடுறேன்...இன்னும் இரண்டு நாட்களில் .........

இரண்டு நாட்களா நாகமாணிக்கம் - Page 2 440806 நாகமாணிக்கம் - Page 2 440806
ஏன்
எதிர்பார்ப்புகள் அதிகமானால் தான்...கதை ஸ்வாரஸ்யமாக இருக்கும்....



நாகமாணிக்கம் - Page 2 Dove_branch
நாகமாணிக்கம் - Page 2 Dநாகமாணிக்கம் - Page 2 Iநாகமாணிக்கம் - Page 2 Vநாகமாணிக்கம் - Page 2 Yநாகமாணிக்கம் - Page 2 Aநாகமாணிக்கம் - Page 2 Empty
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Fri Jul 08, 2011 10:32 pm

அக்கா சீக்கிரம் ..பதியுங்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 20, 2011 4:58 pm

நடிநிசிப் பூசை முடிந்து திரும்பிய கோபாலன் ஆசானுக்கு வழியியிலேயே கெவுளி
கேட்டது. துர்ச்சகுனம் கண்டதும் அவருக்கு வியர்த்து விட்டது.

ஏதோ அனர்த்தம் என்று அவருக்கு புரிந்தது. விரைவாக நடந்து வீடுவந்து சேர்ந்தார்.

வீடு
திறந்து கிடந்தது. சுபத்ராவை அழைத்தார். பதில் வரவில்லை. எந்த அரவமும்
இல்லை. ஆசான் நடுக்கத்துடன் விளக்கை ஏற்றினார். வீட்டுச் சாமான்கள்
எல்லாம் தாறுமாறாக கலைந்து கிடந்தது. வீடு முழுவதும் தேடிக்கொண்டு
பின்வாசலுக்குப் போனவர் அங்கே பின் வாசல் நிலைப்படியில் சுபத்ரா தலைகீழாக
விழுந்து கிடப்பதைப் பார்த்தார். ஓடிச்சென்று தூக்கியெடுக்க முனைந்தவர்
தடுமாறி நெஞ்சு வெடிக்க நின்றார். அவ்வளவு கோரமாக இருந்தது அந்தக் காட்சி.
வயிறு கிழிக்கப்பட்டு உள்ளுறுப்புகள் வெளியே தொங்கும் நிலையில் சுபத்ரா
மரணித்திருந்தாள்.

இத்தனைக்கும் அங்கே ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை. என்ன நடந்திருக்கு மென்று ஆசானுக்கு தெளிவாகப் புரிந்தது.
***
கிழவர்
கதையை சற்று நிறுத்திய போது இளைஞர்களுக்கு ஆர்வம் கொப்பளித்துக்
கொண்டிருந்தது. "பிறகு என்னாச்சு அம்மாவா?" என்று கோரசாகக் கேட்டனர்.

கிழவர்
தொடர்ந்து சொன்னதாவது "சுபத்ர ஆணியப் பிடிங்கி எடுத்ததுமே லெச்சி மறுபடி
விடுதலையாயிட்டா. கோரப்பல்லும் நீட்ட நாக்குமா அவ எழுந்திரிச்சத பார்த்து
சுபத்ர பேடிச்சு கிடுங்கி போயிட்டா. லெச்சி அவளைப் பிடிச்சி வச்சு கழுத்தை
கடிச்சு ரெத்தத்தை உறிஞ்சி குடிச்சா. ரெத்தம் முழுதும் குடிச்சு
முடிஞ்சதும் தன் கையாலேயே சுபத்ரக்க வயத்தை கிழிச்சு குடலை எடுத்து மாலையா
போட்டுக்கிட்டா.

நெறமாச கர்ப்பிணியா இருந்த சுபத்ரக்க கர்ப்ப பாத்திரத்த பிச்சி கொழந்தய எடுத்துகிட்டு எழுந்திரிச்சு ஆவேசமா நடந்து போனா.

ஆசானுக்கு
இது மனசிலானவுடனே ஒரு காரியம் ஓர்மைக்கு வந்துது. கர்ப்பிணிக்க ரத்தம்
குடிச்சு லெச்சி இருமடங்கு பலசாலியாயிட்டா. இப்போ தலைப்பிள்ளை சிசுவை
கொண்டு போயிட்டா. சுடுகாட்டு சாம்பலோட தலைப்புள்ள மூளையை பிசைஞ்சு
சாப்பிட்டா அவ பத்து மடங்கு பலசாலியா மாறிடுவா. அதுக்கப்புறம் அவளை
யாராலயும் அழிக்க முடியாது. ஆசானுக்கு நடுக்கம் வந்தது.

உடனே சுபத்ரய மறந்துட்டு வசிய மைகளையும் தன்னோட மந்திர சாமக்கிரங்களையும் எடுத்துட்டு ஓட்டமாக சுடுகாட்ட நோக்கி நடந்தாரு.

அங்கே
லெச்சி அந்தப் பிள்ளைய தரையில் கெடத்தீட்டு தரையில ஒரு வட்டம் போட்டு
உக்காந்தா. அவ கை முழுக்க ரத்தம் உறைஞ்சு கிடந்தது. தல முடிய விரிச்சு
போட்டு ஒரு ஆட்டம் ஆடினா. அங்கேயிருந்த சுடுகாட்டு சாம்பல எடுத்து ஒரு
கரியிலை மேல போட்டுட்டு கீழே கிடந்த சிசுவை கையில எடுத்தா.

அதே
நேரம் ஆசானும் சுடுகாட்டு வாசலுக்குள்ள நுழைஞ்சிட்டார். லெச்சியும்
ஆசானைப் பாத்துட்டா...தலைப்பிள்ளை மூளையை தின்னுமின்னே அவரு கிட்ட சிக்கக்
கூடாதுன்னு லெச்சி எழுந்து ஓடினா. ஆசானும் விரட்டினார்.

ஒரு புளிய
மரத்தடி வந்ததும் லெச்சி நின்னு திரும்பினா. பயங்கர கோரப்பல்லும், விரிஞ்ச
தலைமுடியும், நீட்டின நாக்குமா அவ பார்த்த உக்கிரப் பார்வையில ஆசானும் ஒரு
நொடி ஆடித்தாம் போயிட்டாரு. ஆனாலும் சுதாரிச்சிகிட்டு வசிய மையை எடுத்து
வீசினார். அது அவளுக்கு தூசி விழுந்த பாவம்தான். லெச்சி உக்கிரமா மொறச்சு
கிட்டே ஆசானப் பார்த்து முன்னேறினா.

ஆசானுக்கு நெஞ்சு படபடத்தது.
விட்டா அவ தன்னையும் கொல்லாம விடமாட்டான்னு மனசிலாயிட்டது அவருக்கு. அற்ற
கைக்கு கடைசிப் பிரயோகமா தகப்பன் சொல்லிக் கொடுத்த வித்தை நினைவுக்கு
வந்தது.

மூணுவித வசிய மையை கையிலெடுத்து பிசைஞ்சு மந்திர
உச்சாடனம் செய்து அவ மேல எறிஞ்சாரு. அது சரியா லெச்சிக்க நெற்றிப்பொட்டுல
போய் தாக்கிச்சு. லெச்சி சரிஞ்சு விழுந்தா. ஆசான் சாக்கிரதையா கிட்ட போய்
அவள் தலைமுடியைப் பிடிச்சு கட்டுனாரு. மந்திர முடிச்சு போட்டு புளிய
மரத்தோட சேர்த்து அறைஞ்சார்.

அறைஞ்சு முடிந்ததும் லெச்சியின் உடம்பு மறைஞ்சுது. முடிஞ்சு வெச்ச தலைமுடி மட்டும் அவளை அறைந்த ஆணியில கட்டுப்பட்டு கிடந்தது.

ஆசானுக்கு
அப்பத்தான் நிம்மதி வந்தது. ஆனா அடுத்த நிமிசமே மனசில துக்கம் வந்து
சுமையா ஏறினது. கீழ கிடந்த தன் ரத்தமான சிசுவின் பிரேதத்த எடுத்திட்டு
வீட்டுக்குப் போனாரு. தாய்க்கும் பிள்ளைக்கும் கடசிச் சடங்கு செஞ்சாரு.

எல்லாம்
முடிஞ்சது... வாழ்க்கை வெறுத்துப் போச்சு. நேராத் தகப்பனாரத் தேடிப்
போனாரு. எல்லாம் சொல்லி அழுதார். பூபாலன் ஆசானும் மகனுக்கு கஷ்டங்கள
கேட்டதும் மனது எளகிட்டாரு. மகனை ஆறுதல் படுத்தி தேத்தினார். பெறகு
மகனுக்கு விட்டுக்கொடுத்து அவரு ஒதுங்கீட்டாரு. ஆசானும் சுபத்ரக்க
நெனப்பிலயே மறு கல்யாணம் கட்டாம தகப்பனாரோட இருந்திட்டாரு. மந்திரவாதமும்
கொஞ்சங் கொஞ்சமா நிறுத்தி களரி மட்டும் வெச்சு நடத்தி வந்தாரு.

இத்தறயுந்தான் ஆசானுக்க கதை" என்றார் கிழவர்.

செல்வராசும் இளையபெருமாளும் கூட்டரும் "கத கம்பீரம்" என்றவாறு கலைந்து போயினர்.

இதுலயிருந்து
பனையேறி செல்லப்பனும் இளவட்டக் கூட்டங்களும் சினேகிதராயினர். அந்தி
வேளையில் பனையேறியின் பழைய கதை கேட்க கலுங்குப்பக்கம் கூட ஆரம்பித்தனர்.

"எனக்கு நெதி* கிட்டின கதை தெரியுமா" என்றவாறு ஒரு புதிய கதையை பனையேறி ஒருநாள் எடுத்து விட்டார்.

(கதை வளரும்...)



நாகமாணிக்கம் - Page 2 Dove_branch
நாகமாணிக்கம் - Page 2 Dநாகமாணிக்கம் - Page 2 Iநாகமாணிக்கம் - Page 2 Vநாகமாணிக்கம் - Page 2 Yநாகமாணிக்கம் - Page 2 Aநாகமாணிக்கம் - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக