Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திவாகரன் மீது ஜெ. கோபம்? டெல்டா அ.தி.மு.க. அதிர்ச்சி
2 posters
Page 1 of 1
திவாகரன் மீது ஜெ. கோபம்? டெல்டா அ.தி.மு.க. அதிர்ச்சி
'குடும்ப உறுப்பினர்களின் ஆதிக் கத்தால்... தி.மு.க. ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, எதிர்க் கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இப்படி ஒரு சூழ்நிலை அ.தி.மு.க-வுக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதாலோ என்னவோ... ஜெயலலிதா இப்போது சசிகலா குடும்பத்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அதனால்தான் திவாகரனை தள்ளிவைத்து விட்டார்!’ என்கிறார்கள், விவரம் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
''இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு மன்னார்குடி குடும்ப அரசியல்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ... இந்தத் தேர்தலில் மன்னார்குடி குடும்பத் தாரின் ஆதிக்கத்தை ஜெயலலிதா பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தியே வைத்து இருந்தார்.
முன்பு, அ.தி.மு.க. வேட்பாளர்களை மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதால், அ.தி.மு.க-வினர் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே திரிந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன், அவர் சகோதரர் ராமச் சந்திரன், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன், அக்கா வனிதாவின் மூத்த மகன் தினகரன், தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ், கோவை ராவணன் என நீளும் உறவுப் பட்டியலில் யாரையாவது பிடித்து ஸீட் வாங்கிவிட வேண்டும் என தவம் கிடந்தனர். இந்தத் தேர்தலில்கூட, ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல் மன்னார்குடி குடும்பம் தயாரித்ததுதான். ஏகப்பட்ட குளறுபடிகளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இருந்ததால், அந்தப் பட்டியலில் இருந்து, மன்னார்குடி சிபாரிசு பெற்ற நபர்களை ஜெயலலிதா ஓரளவு குறைத்தார். சசிகலாவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக, திவாகரன் மற்றும் கோவை ராவணன் சிபாரிசுகளை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். திவாகரன் ஆதரவாளர்களுக்கு ஸீட் கொடுக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு வலுவாக இருந்த ஸ்ரீதர் வாண் டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து அ.தி.மு.க-வுக்கு சாதக மாக்கியவர், திவாகரன்.
அ.தி.மு.க-வின் அச்சாணியாக வர்ணிக்கப்படும் மன்னார்குடி தொகுதி யில் போட்டியிட விரும்பியவர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.காமராஜ். ஆனால், திவாகரனி டம் அவர் பணிவு காட்டவில்லை. அதனால், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து மன்னார்குடியில் போட்டியிடச் செய்தார் திவாகரன். மேலும், தன் ஆதரவாளர்களான ஆர்.காமராஜ் (நன்னிலம்), ராம. ராமநாதன் (கும்பகோணம்), வைரமுத்து (திருமயம்) விஜய பாஸ்கர் (விராலிமலை) ஆகியோருக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அறிவிக்கப்படாத அ.தி.மு.க. தலைவர் போலவே திவாகரன் வலம் வந்தார். ஜெயலலிதாவால் 'அண்ணா’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், அ.தி.மு.க. உடைந்த கால கட்டத்திலும் ஜெயலலிதாவுடன் உறுதியாக நின்ற பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர், மன்னார்குடி தலை மையை விரும்பாததால், அவர்களுக்கு ஸீட் கொடுக்கவில்லை. இதில் விதிவிலக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான வைத்தியலிங்கம். மன்னார்குடி குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். ஆனால், எதிர்ப்புகளை மீறி ஒரத்தநாடு தொகுதியில் ஸீட் வாங்கி விட்டார்.
தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் திவாகரன் சிபாரிசு செய்த ராம.ராம நாதனும், மன்னார்குடியில் போட்டி யிட்ட சிவ.ராஜமாணிக்கமும் தோல்வி அடைந்து இருப்பது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வி அடைந்து இருக்கின்றனர். அதுவும், தி.மு.க. அறிமுக வேட்பாளரிடம் தோற்று உள்ளனர்.
இதை பெரும் அவமானமாகக் கருதிய ஜெயலலிதா, திவாகரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா தவிர மற்ற உறவினர்கள் யாரும் வரக்கூடாது என உத்தரவு இட்டார். ஆரம்பத்தில் தயாரித்த அமைச்சர்கள் பட்டியலில், நன்னிலம் ஆர்.காமராஜ் , தஞ்சாவூரில் அமைச்சர் உபயதுல்லாவைத் தோற் கடித்த ரங்கசாமி ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் திவாகரனை சந்தித்தார் என்பதால், ரங்கசாமியும், திவாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஆர். காமராஜும் அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
திவாகரனின் செல்வாக்கு போயஸில் சரிந்துள்ள நிலையில், அந்த அதிகார இடத்தை இப்போது பிடித்து இருக்கிறார் கோவை ராவணன். ஆனால், யாரும் அதிகாரவர்க்கம் மற்றும் காவல் துறைகளில் தலையிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார். இது எல்லாமே கட்சித் தொண் டர்களுக்கு நல்ல அறிகுறி...'' என்கிறார்கள், அந்த நிர்வாகிகள்.
திவாகரன் ஆதரவாளர்களோ, ''அண்ணன் அமைதியாகச் செயல்படக் கூடியவர். தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார். அவருடைய செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது வதந்தி!'' என்கின்றனர்.
''சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனில் திடீரென மின்னுவதும் அதே வேகத்தில் புஸ்வாணம் ஆக்கப்படுவதும் வழக்கம். எந்தக் காரணம் கொண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து ஜெயலலிதா மீளவே முடியாது...'' என்றும் சில நிர்வாகிகள் உறுதிபடச் சொன்னாலும் ஏதோ புகைச்சல் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: திவாகரன் மீது ஜெ. கோபம்? டெல்டா அ.தி.மு.க. அதிர்ச்சி
ஜெ யின் வளர்ப்பு மகன் என்ன ஆனார்?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல்
» காற்றுக்கு என் மீது கோபம்...
» குடை மீது கோபம்
» டோனிபிளேர் மீது ராணிஎலிசபெத் கோபம்
» காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் கோபம்?
» காற்றுக்கு என் மீது கோபம்...
» குடை மீது கோபம்
» டோனிபிளேர் மீது ராணிஎலிசபெத் கோபம்
» காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் கோபம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|