புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_m10ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 5:26 am

First topic message reminder :

அப்பாவும் மகளும். (Father & Daughter) எட்டு நிமிசங்கள் ஒடக்கூடியதே. ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன்
படமிது. காட்சிபடுத்துதல் கவித்துவமாக உள்ளது. கதாபாத்திரத்தின் மனநிலை
காட்சியின் மீது எவ்வளவு இறுக்கமாக கவ்விக் கொள்ளும்என்பதற்கு இந்த படம்
ஒரு உதாரணம். அது போலவே எளிய சித்திரங்களின் வழியே ஆழமான மனவலியை இப்படம்
உருவாக்கிவிடுகிறது.

ஒரு ஏரியின் கரையில் அப்பாவும் மகளும் ஆளுக்கொரு சைக்கிளில் பயணம்
செய்கிறார்கள். அந்த பயணத்தில் சிறுமியாக உள்ள மகள் மீது அப்பாவின்
நெருக்கம் அழகாக காட்டப்படுகிறது. அப்பா ஒரு மரத்தடியில் சைக்கிளை
நிறுத்துகிறார். மகள் தானும் இறங்கி நிற்கிறாள். அப்பா மகளை கட்டிக் கொண்டு
தான் போய்வருவதாக கிளம்புகிறார்.

ஏரியில் ஒரு படகு காத்திருக்கிறது. அப்பா படகில் ஏறி போவதை மகள்
பார்த்தபடியே இருக்கிறாள். பிறகு தன் சைக்கிளில் ஏறி வீடு திரும்புகிறாள்.
சில மாத காலமாகிறது. பருவநிலை மாறுகிறது. எதிர்காற்றில் அதே சிறுமி அப்பா
திரும்பி வரக்கூடுமோ என்று பார்ப்பதற்காக ஏரிக்கரைக்கு வருகிறாள். அப்பா
வரவில்லை. அவள் முகம் வாடிப்போய்விடுகிறது. சைக்கிளில் மெதுவாக வீடு
திரும்புகிறாள்.

நாட்கள் கடந்து போகின்றன. அப்பாவைத் தேடி அதே இடத்திற்கு மகள்
வருவதும் ஏமாந்து போவதுமாக இருக்கிறாள். மழை காற்று பனி என்று மாறிக்
கொண்டேயிருக்கிறது நிலக்காட்சி. அவள் ஆதங்கத்துடன் அப்பா
திரும்பிவந்துவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்புமிக்க கண்களுடன் அலைந்து
கொண்டேயிருக்கிறாள். பறவைகள் கடந்து போகின்றன. வானம் நிறம் மாறுகிறது.
காட்சிகள் உருமாறுகின்றன. ஏமாற்றத்தின் சாலையில் அவளது சைக்கிள்
உருண்டபடியே இருக்கிறது.

மகளுக்கு வயதாகிறது. அவள் பெரியவளாகிறாள். அப்போதும் அதே சைக்கிளில்
அப்பாவை தேடி வருகிறாள். அப்பா பிரிந்து போன அதே இடத்தில் நின்று ஏரியை
வெறித்து பார்க்கிறாள். அப்பா வரவில்லை. அவளது முகத்தில் துயரம்
கொப்பளிக்கிறது. ஏமாற்றத்துடன் திரும்பி போகிறாள்.

இன்னும் கொஞ்சம் வயதாகிறது. நடுத்தரவயது பெண்ணாகிறாள்.
எதிர்காற்றில் சைக்கிள் மிதித்து வர முடியவில்லை. ஆனாலும் அப்பாவை தேடி
போகிறாள். அவளை கடந்து சிறுமிகள் உற்சாகமாக ஏரி நோக்கி போகிறார்கள். அதே
மரம். அதே இடம். அப்பாவை காண காத்திருக்கிறாள்.அப்பா வரவில்லை. ஏரி தண்ணீர்
சலனமடைகிறது. பறவைகள் கடந்து போகின்றன. அவள் விவரிக்க முடியாத துயருடன்
மிக மெதுவாக வீடு திரும்புகிறாள்.

முடிவில் அவளுக்கும் வயதாகிறது. அவளால் சைக்கிளை மேட்டில் ஒட்ட
முடியவில்லை. உருட்டியபடியே வருகிறாள். சைக்கிளை நிறுத்த கூட முடியவில்லை.
அது அடிக்கடி கிழே விழுகிறது. அவள் அதே மரத்தடியில் நின்று பார்க்கிறாள்.
ஏரி முழுவதும் பனி உறைந்து போயிருக்கிறது.
ஆசையோடு பனிக்குள் இறங்கி
ஏரியை கடந்து மறுபக்கம் பார்க்க போகிறாள். பனியில் அவள் கால்கள் வேகமாக
அப்பாவை தேடி நடக்கின்றன. ஏரி முடிவற்று பனிபாளமாக உறைந்து கிடக்கிறது.

முடிவில் அவள் ஒரு இடத்தில் அப்பா பயணம் செய்த படகு உடைந்து
கிடப்பதை காண்கிறாள். அதுவும் பனியில் உறைந்து போயிருக்கிறது. படகினுள்
அவள் சுருண்டு படுத்து கொள்கிறாள். அப்பா இல்லாத வெறுமை அவள் முகத்தில்
தெளிவாக புலப்படுகிறது. அங்கிருந்து சோர்வுடன் நடக்க துவங்கும் போது
அப்பாவின் உருவம் தென்படுகிறது. அவள் சிறுமி போல ஆசையாக அவரை நோக்கி
ஒடுகிறாள். அப்பா சலனமில்லாமல் அவளை கட்டிக் கொள்வதோடு படம் நிறைவு
பெறுகிறது

ஒரு மிகப்பெரிய நாவல் அளவு எழுதப்படவேண்டிய ஒரு பிரிவின் கதை எட்டு
நிமிச குறும்படத்தில் செறிவோடும், நிறைவோடும் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பா
படகில் போகிறார் என்பது சாவின் குறியீடே. அப்பா இறந்து போய்விடுகிறார்.
அதை அறியாத மகள் அப்பா திரும்பி வரக்கூடும் என்று வாழ்நாள் முழுவதும்
காத்திருக்கிறாள். முடிவில் ஏரி உறைந்து போயிருப்பதும் அதை அவள் கடப்பதும்
உருவகமான காட்சிகளே. அவளும் இறந்து போய்விடுகிறாள். சாவின் முடிவற்ற
பனிவெளியில் அவள் தன் அப்பாவை மறுபடி சந்திக்கிறாள். சாவு தான் அவளை
அப்பாவோடு ஒன்று சேர்ந்து வைக்கிறது.

அப்பாவிற்கும் மகளுக்குமான அன்பையும், அப்பா என்ற படிமம் உருவாக்கும் மனஎழுச்சியும் உயர்கவித்துவமாக படமாக்கபட்டிருக்கிறது.
இந்த
படத்தில் பின்புல இசையும் மகள் அப்பாவை தேடி செல்லும் போது உருமாறும்
பருவநிலை மாற்றங்களும் மகளின் சொல்லற்ற உணர்ச்சிவெளிப்பாடும் உலகின் சிறந்த
குறும்படம் இது என்பதற்கான சான்றுகள்.

மைக்கேல் டுடாக் ஐம்பது வயதை கடந்த அனிமேஷன் இயக்குனர்.
ஒவியக்கல்லூரியில் பயின்ற இவர் குறும்பட தயாரிப்பில் முன்னோடி கலைஞர்,
தற்போது லண்டனில் வசிக்கிறார். உரையாடல்கள் இல்லாமல் இசையும் காட்சிகளும்
ஒன்று கலந்த இந்த வகை அனிமேஷன் படங்கள் நவீன சினிமாவின் உயர்சாத்தியங்களை
வெளிப்படுத்துகின்றன.

நன்றி: எஸ் .ராமகிருஷ்ணன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 7:43 am

Manik wrote:படம் பார்த்தேன் ரொம்ப உருக்கமான காட்சிகள் ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 67637 ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் படம் -காணொளி  - Page 2 67637
ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Jun 14, 2011 9:55 am

நான் மிகவும் ரசித்து பார்த்தேன் நண்பா! நன்றிகள்..

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 10:59 am

murugesan wrote:நான் மிகவும் ரசித்து பார்த்தேன் நண்பா! நன்றிகள்..
நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக