புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_m10கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jun 13, 2011 2:28 pm

பழநி அப்பன்: போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு "சித்தன்வாழ்வு' என்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் "பழநியாண்டி' என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாகவே தலவரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால் ராஜாங்க அலங்காரத்தில் பட்டுபீதாம்பரதாரியாக கிரீடத்துடன் ராஜாவாக வழிபாடு செய்வதையே விரும்புகின்றனர். பழநியப்பன் முருகபக்தர்களின் செல்லப்பிள்ளை ஆயிற்றே!மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரவுபகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆனால், மனம் ஒருபோதும் தடுமாறக்கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனாக முருகன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று தலபுராணம் கூறுகிறது. ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம் இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார். அதனால் தான் பழநி சென்று வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். வைகாசி விசாக நன்னாளில் ஞான பண்டிதனைச் சரணடைந்து இந்த பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.


விசாகத்திருவிழா நடத்துவது ஏன்?வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்' என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.


ஐந்து தொழில் புரியும் ஆறுமுகன்: காஷ்யபர், கபிலர், துர்வாசர் ஆகிய முனிவர்களிடையே பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களில் யார் சிறந்த கடவுள் என்று அறிவதென ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு வேண்டி முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தனர். தானே ஆதிபரம்பொருள் என்பதையும், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களையும் தானே முன்னின்று நடத்துவதையும் அவர்களுக்கு உணர்த்தினார். இப்பெருமானே இலஞ்சி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு வரதராஜகுமாரன் என்று பெயர். மூன்று முனிவர்களுக்கும் முருகன் அருளிய நிகழ்ச்சியின் அடிப்படையில் ஐப்பசி மாத சஷ்டி விழாவின் போது முதல்நாள் படைக்கும் தொழில் புரியும் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் காக்கும் தொழில் புரியும் விஷ்ணுவாகவும், மூன்றாம் நாள் அழித்தல் தொழில் புரியும் ருத்ரனாகவும், நான்காம் நாள் மறைத்தல் தொழில் புரியும் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் அருளல் தொழில்புரியும் சதாசிவமாகவும் வந்து தரிசனம் தருகிறார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே இலஞ்சி அமைந்துள்ளது. "இலஞ்சி' என்றால் நீர்நிலை, அருள், செல்வம் என்று பொருள்கள் உண்டு. நீரினைப் போல குளிர்ச்சியாக அடியவர் வேண்டிய வரங்களை அருள் வழங்கும் கலியுக வரதனாக முருகப்பெருமான் இலஞ்சியில் வீற்றிருக்கிறார்.


மலையாய் இருக்கும் மந்திரம்:முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து கடலிலே திருச்செந்தூரிலும், நிலத்திலே திருப்பரங்குன்றத்திலும், வானத்திலே திருப்போரூரிலும் போர் புரிந்தார். இதில், போரின் பெயரால் போரூர் என்ற பெயர் ஏற்பட்டது. பழங்காலத்தில் இத்தலம் சமராபுரி, யுத்தபுரி என்று அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் 42 கி.மீ., தொலைவில் உள்ளது இவ்வூர். சிவபெருமான் கைலாசநாதராகவும், அம்பாள் பாலாம்பிகை என்ற பெயரிலும் இங்கு வீற்றிருக்கின்றனர். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் அழிந்துவிட்டது. பதினேழாம் நூற்றாண்டில் பனங்காடாக இருந்த திருப்போரூர் பகுதிக்கு வந்த சிதம்பர சுவாமிகள், முருகப்பெருமான் ஒரு புற்றில் புதைந்திருப்பதைக் கண்டார். அவ்விடத்தில் இந்தக் கோயிலைக் கட்டினார். சிவபெருமான் மடியில் முருகப்பெருமான் அமர்ந்திருக்க, குழந்தை முருகனிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் கோலத்தில் உள்ள செப்புச்சிலை இக்கோயிலில் இருப்பது சிறப்பானது. இத்தகைய சிலையை பிறகோயில்களில் பார்க்க முடியாது. வலது காலை மயில் மீது ஊன்றி வில்லேந்திய நிலையில் காட்சி தரும் சம்ஹார மூர்த்தி என்னும் அபூர்வ சிற்பமும் இங்கு உள்ளது. இங்கு வள்ளையார் ஓடை என்னும் சரவணப் பொய்கையும், பிரணவாமிர்தம் என்னும் தீர்த்தமும் உள்ளன. முருகப்பெருமானை வழிபாடு செய்ய வந்த ஓம் என்னும் பிரணவ மந்திரமே இங்கு மலையாக இருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.


முருகனுக்கு வித்தியாசமான பெயர்:திருவண்ணாமலையில் பிறந்த அருளாளர் அருணகிரிநாதர். இவர் இளமையில் பெண் இன்பத்தில் நாட்டம் கொண்டு ஆரோக்கியம் இழந்து வருந்தினார். தற்கொலை செய்யும் நோக்கத்தில் திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறிக்குதித்தார். முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றி ஆட்கொண்டு அருள்செய்தார். அருணகிரி நாதருக்கு அருள்புரிந்த முருகன், "கம்பத்து இளையனார்' என்ற வித்தியாசமான பெயரில் திருவண்ணாமலையில் காட்சி தருகிறார். இவர் முருகன் மீது பாடிய பாடல்கள் "திருப்புகழ்' என்று போற்றப்படுகின்றன. இதில் 1307 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.


கருணைக்கு அருணகிரி:வில்லிபுத்தூரார் என்ற திறமை மிக்க புலவர் மற்ற புலவர்களிடம் வாதத்தில் ஈடுபடுவார். வாதத்தில் தோற்றவரின் காதைக் குறடால் அறுத்துவிடுவது இவரது வழக்கம். ஒருமுறை, இவர் அருணகிரிநாதருடன் வாதத்தில் ஈடுபட்டார். அருணகிரிநாதர் "கந்தரந்தாதி' என்ற பாடலைப் பாடினார். 54வது பாடலில், "திதத்த' என்று தொடங்கும் பாடலுக்கு உரை சொல்லுமாறு வில்லிபுத்தூராரிடம் கேட்டார். அவரோ, உரை சொல்லமுடியாமல் தடுமாறியதுடன் தோல்வியையும் ஒப்புக் கொண்டு காதை நீட்டினார். ஆனால், பெருந்தன்மையுள்ள அருணகிரிநாதர் அவரைத் தண்டிக்கவில்லை. அதனால் "கருணைக்கு அருணகிரி' என்ற பழமொழி வழக்கில் உண்டானது.


வைகாசி விசாக வழிபாடு:* மயில் மீது வலம் வருபவனே! வேதத்தின் உட்பொருளாய் திகழ்பவனே! கண்டவர் மனம் கவரும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே! முருகப்பெருமானே! உன்னைச் சரணம்அடைகிறோம்.
* "மலையேறி வந்து என்னைத் தரிசித்தால் வாழ்வின் உச்சியை அடைந்து மகிழ்வாய்' என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே! ஆறுமுகப்பெருமானே! எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தருள வேண்டும்.
* பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! ஒளிமயமான ஸ்வர்ண மஞ்சத்தில் அமர்ந்து, ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல் அழகுற காட்சி தருபவனே! தேவர்களுக்கு வாழ்வு அளித்த தெய்வமே! கார்த்திகேயனே! உன்னை எப்போதும் எங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்போம்.
* வேடராஜனின் குமரியான வள்ளிநாயகியை மணந்தவனே! இந்திரன் மகள் தெய்வானையின் துணைவனே! தாரகா
சுரனை வதம் செய்த வீரனே! தாமரை போன்ற உன் ஆறுமுகங்களும் புன்சிரிப்பால் மலர்ந்துள்ளன. கண்கள் கருணையைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. சிவகுமரனே! உன் திருவடியைச் சரணடைந்து விட்டோம்.
* இளங்குமரனே! சிவபெருமானுக்கு குருவாய் வந்த குகனே! கந்தப்பெருமானே! சேனாதிபதியே! வெற்றி வேலவனே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! எங்கள் தலைவனே! அசுரனை அழித்தவனே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும்.
* கந்தப்பெருமானே! எங்கள் கண்கள் உன் திருவடிகளை மட்டுமே காணட்டும். காதுகள் உன் திருப்புகழை மட்டும் விருப்பத்தோடு கேட்டு மகிழட்டும். நாக்கு உன் பெருமையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கட்டும். உனக்கு தொண்டு செய்து வாழ்வதே எங்கள் பணியாக அமையட்டும்.
* முருகா! தாயும் நீயே! தந்தையும் நீயே! உன் பிள்ளைகளான எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக. உன்னையன்றி வேறொருவரையும் நாங்கள் அறிந்ததில்லை. பாமரருக்கும் அருள்புரியும் பரம்பொருளே! நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் ஆகிய அனைத்து பேறுகளையும் தந்தருள்வாயாக.


வைகாசி விசாகத்திருநாளான இன்று குடும்பத்தினர் அனைவரும் கூட்டாக அமர்ந்து இந்த பிரார்த்தனையைச் செய்து, குமரன் அருள் பெறுங்கள்.

-- தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 13, 2011 2:49 pm

கந்தன் துணை இருக்க கவலை ஏன் - ஓம் முருகா, வெற்றி வேல் முருகா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் - வைகாசி விசாகம்  Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக