ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

+7
ராஜ்.ரமேஷ்
JUJU
பாலாஜி
முரளிராஜா
மகா பிரபு
உதயசுதா
சிவா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by சிவா Sat Jun 11, 2011 10:32 am

First topic message reminder :


1.தினப்பொருத்தம்


தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று. நட்சத்திரங்கள் 27 ஆகும்.

2.கணப்பொருத்தம்

கணம் என்றால் கூட்டம் என பொருள்படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவரின் இல்லற சுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப்படும். தேவ கணம் மனுஷ கணம் ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவம் அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி மனுஷம் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ராட்சஸம் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம் தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண் ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் ஆண் தேவகணம் பொருத்தமில்லை. பெண் ராட்ச கணம் ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.

3.மகேந்திர பொருத்தம்

புத்திம விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக் கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார்.

4.ஸ்திரி தீர்க்கம்

பெயரே சொல்கிறது. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லையெனிலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பணிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும்.

5.யோனிப் பொருத்தம்

இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண் பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.

6.ராசி பொருத்தம்

பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறது சாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் எண் ராசி தொட்டு ஆண் ராசி எட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை. எனவே பெண் ராசி முதல் ஆண் ராசி 1, 7, 9, 10, 11, 12 ஆகிய 6 ராசிகள் பொருந்தும் எனலாம். இதன் அட்டவணை.

7.ராசி அதிபதி பொருத்தம்

பனிரெண்டு ராசிகட்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபத, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

8.வசிய பொருத்தம்

இப்பொருத்தம் கணவன் மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னம் சிறப்பாகும். மற்றபடி இப்பொருத்தம் இல்லை .

9.ரச்சுப் பொருத்தம்

சரசோதிமலை எனும் தமிழ் ஜோதிட காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன் எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திம குறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டு புற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின் படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு அதன் ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனைய பொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண் பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.

10.வேதை பொருத்தம்

வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.

தினகரன்


10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 12:11 pm

கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by உதயசுதா Sat Jun 11, 2011 12:13 pm

முரளிராஜா wrote:திருமண பொருத்தத்தை பதிந்த நீங்கள் அப்படியே எனக்கு............................................... ? 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 755837
நீங்க இப்படி கேட்டது ஜெயாவுக்கு தெரியுமா?தெரிய வச்சுடவா முரளி?


10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 U10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 D10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 A10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Y10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 A10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 S10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 U10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 D10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 H10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 12:17 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:திருமண பொருத்தத்தை பதிந்த நீங்கள் அப்படியே எனக்கு............................................... ? 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 755837
நீங்க இப்படி கேட்டது ஜெயாவுக்கு தெரியுமா?தெரிய வச்சுடவா முரளி?
யார் அந்த ஜெயா?
ஓ என் முதல் மனைவியா..
எப்படியோ எனது அடுத்த திருமணத்துக்கு உங்களுடைய பங்கும் இருக்கவேண்டும் என நீங்க ஆசைபடும்பொழுது
நான் வேண்டாம்னா சொல்ல போறேன் சுதா சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by உதயசுதா Sat Jun 11, 2011 12:23 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:திருமண பொருத்தத்தை பதிந்த நீங்கள் அப்படியே எனக்கு............................................... ? 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 755837
நீங்க இப்படி கேட்டது ஜெயாவுக்கு தெரியுமா?தெரிய வச்சுடவா முரளி?
யார் அந்த ஜெயா?
ஓ என் முதல் மனைவியா..
எப்படியோ எனது அடுத்த திருமணத்துக்கு உங்களுடைய பங்கும் இருக்கவேண்டும் என நீங்க ஆசைபடும்பொழுது
நான் வேண்டாம்னா சொல்ல போறேன் சுதா சிரி
உங்க அடுத்த திருமணத்துக்கு என் பங்கு இல்லை முரளி,உங்க மண்டை வீங்குறதுக்கு என் பங்கு.அடிக்கடி கலைக்கு நான் ஒரு பழமொழி சொல்லுவேன்.அதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலயாம் இதுல ஒன்பது பொண்டாட்டி கேட்டானாம்.இருக்கற ஒரு பொண்டாட்டிய வச்சு முதல்ல குடும்பம் நடத்துங்க,அதுக்கப்புறம் இரண்டாம் கல்யாணத்த பத்தி பார்க்கலாம் 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 816814 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 816814 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 816814 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 816814 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 816814 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 816814


10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 U10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 D10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 A10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Y10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 A10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 S10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 U10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 D10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 H10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 12:25 pm

அழுகை அழுகை அழுகை சோகம் சோகம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by சிவா Fri Aug 23, 2013 10:12 am

சிவா wrote:
உதயசுதா wrote:எனக்கு ஒரு சந்தேகம் சிவா, ஒரு ஜோசியருக்கு 4 ஜோசியர்கிட்ட ஜாதகம் காமிச்சு 10க்கு 9 பொருத்தம் சரியா இருக்குன்னு பெரியவங்க பண்ணி வைக்கிற கல்யாணம் விவாகரத்துல முடியுதே ஏன்?
அப்ப இதெல்லாம் உண்மையா பொய்யா
இரு மனங்கள் ஒத்துப் போகும் திருமண வாழ்க்கையே மகிழ்ச்சியாக அமையும்! மனங்கள் இணையாமல், 10 பொருத்தங்களும் நன்றாக அமைந்தால் அதில் எந்தப் பலனும் இல்லை!

இவைகள் எல்லாம் ஒரு நம்பிக்கையே! வாழ்க்கை அல்ல!
இதற்கு தங்களின் பதில் என்ன திரு ராஜ்.ரமேஷ்!


10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by ராஜ்.ரமேஷ் Fri Aug 23, 2013 10:34 am

பத்துப் பொருத்தங்கள் எனப்படும் நட்சத்திரப் பொருத்தங்கள் மட்டும் போதுமானது இல்லை. ஜாதகப் பொருத்தம் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டும். மேலும் தம்பதியர் ஒருவருக்கு இரு(பல)தார யோகம் இருந்து திசாபுத்திகள் சரியில்லாத காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் விவாகரத்திற்கு வழிவகுக்கின்றன. அதே பிரச்சனை ஏகபத்தினி தம்பதியர்களுக்கு வந்தால் அந்த காலம் முடியும் வரை சண்டை சச்சரவுகளுடன் ஆனால் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by சிவா Fri Aug 23, 2013 10:37 am

ராஜ்.ரமேஷ் wrote:பத்துப் பொருத்தங்கள் எனப்படும் நட்சத்திரப் பொருத்தங்கள் மட்டும் போதுமானது இல்லை. ஜாதகப் பொருத்தம் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டும். மேலும் தம்பதியர் ஒருவருக்கு இரு(பல)தார யோகம் இருந்து திசாபுத்திகள் சரியில்லாத காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் விவாகரத்திற்கு வழிவகுக்கின்றன. அதே பிரச்சனை ஏகபத்தினி தம்பதியர்களுக்கு வந்தால் அந்த காலம் முடியும் வரை சண்டை சச்சரவுகளுடன் ஆனால் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

விளக்கத்திற்கு நன்றி!

சண்டை சச்சரவு இல்லாத தம்பதியினர் உலகில் எங்குதான் உள்ளார்கள்? சோகம் 


10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by SajeevJino Fri Aug 23, 2013 10:51 am

வெளி நாடுகளில் இந்த பொருத்தம் எல்லாம் பார்கிறார்களா என்ன ..?


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by சிவா Fri Aug 23, 2013 12:24 pm

SajeevJino wrote:வெளி நாடுகளில் இந்த பொருத்தம் எல்லாம் பார்கிறார்களா என்ன ..?
என் திருமணத்திற்கும் இந்தப் பிரச்சனை இருந்தது, நான் ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை, அதனால் பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்து கொள்வேன் என்று திருமணம் செய்தேன்! இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை!


10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் - Page 2 Empty Re: 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum