ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by Guest Thu Jun 09, 2011 2:46 pm

ஹாலிவுட்டில் எடுத்த ஒரு ‘அனிமேஷன்’ படத்தில், அதுவும் விலங்குகளை நாயக
நாயகியராக சித்தரிக்கும் ஒரு படத்தில் மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களைச்
சொல்ல முடியும் என்பதை குங்க்ஃபூ பாண்டா (Kungfu Panda) திரைப்படம்
நிரூபித்திருக்கிறது. கதை ஒன்றும் பிரமாதமானதில்லை. சாதாரணமானது தான்.

பண்டைய
சீனத்தில் நடப்பதாகக் காட்டப்படும் இத்திரைப்படத்தில் போ (Po) என்ற கரடி
தான் கதாநாயகன். தந்தையின் நூடுல்ஸ் கடையில் சர்வராக வேலை பார்க்கிறது.
ஆனால் அதன் மனதில் ஒரு பெரிய குங்க்ஃபூ வீரனாக வர வேண்டும் என்ற ஆசை உண்டு.
ஆனால் குங்க்ஃபூ வீரனாகக் கூடிய உடலமைப்போ திறமையோ அதனிடம் இருக்கவில்லை.
எப்போதும் தின்பதிலேயே மிக ஆர்வமாக இருக்கும் போவுக்கு உடலும் பருமனாக
இருந்தது. அந்த ஊரில் அதன் தந்தையின் நூடுல்ஸ் சுவைக்குப் பெயர் பெற்றதாக
விளங்கியது. அதன் சுவைக்கு அவர் ரகசியமாக எதையோ சேர்க்கிறார் என்றும் ஊரில்
பேசிக்கொண்டார்கள். அவரோ போ உட்பட யாருக்கும் அந்த ரகசியச் சேர்க்கை
விவரத்தை சொல்லாமல் இருந்தார்.

ஊருக்கு அருகே உள்ள மலையில்
குங்க்ஃபூ கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் எல்லோருக்கும் குரு போன்ற
ஊக்வே (Oogway) என்ற வயதான ஆமை இருக்கிறது. ஊரையே அழிக்கக்கூடிய, தற்போது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாய் லூங் (Tai Lung) என்ற சிறுத்தைப் புலி
சிறையிலிருந்து தப்பித்து வரும் என்றும் அது ஊரை அழிக்காமல் காப்பாற்ற ஒரு
புதிய மாவீரனால் மட்டுமே முடியும் என்று ஊக்வே ஆருடம் சொல்கிறது.

அந்த
புதிய மாவீரன் யார் என்பதில் ஐந்து விலங்குகளுக்குள் போட்டி இருக்கிறது.
அவை பெண் புலி, நாரை, ஒரு வகை நீண்ட பூச்சி, பாம்பு மற்றும் குரங்கு. அந்த
ஐந்துமே ஒவ்வொரு விதத்தில் திறமையும் சக்தியும் வாய்ந்தவை. அந்த
ஐந்துக்குமே குரு ஷிபு என்ற சிறுத்த செங்கரடி. குங்க்ஃபூ கோயிலில் அந்த
ஐந்தில் யார் ஊரைக் காக்க வல்ல மாவீரன் என்று போட்டிச் சண்டை நடக்கிறது.
அதைக் காண ஊரே திரண்டு கோயிலுக்குபொ போகிறது. போவும் ஆர்வமாக மலையேறிச்
செல்கிறது. அது நடக்க முடியாமல் நடந்து போவதற்குள் போட்டி ஆரம்பிக்க கோயில்
கதவு சாத்தப்பட்டு விடுகிறது. எப்படியாவது அந்த போட்டியைப் பார்க்க
வேண்டும் ஆர்வத்தில் அருகில் இருந்த ஒரு மரமேறி கோயிலுக்குள் போ குதித்து
விட அது வந்த விதத்தில் அதுவே ஊரைக் காக்க வல்ல மாவீரன் என்று ஊக்வே
தீர்க்கதரிசனம் சொல்கிறது. இது ஷிபுவையும் அது பயிற்றுவித்த ஐந்து
விலங்குகளையும் ஆத்திரமூட்டுகிறது. போவும் தன்னை ஒரு மாவீரனாக ஒத்துக்
கொள்ள முடியாமல் இருக்கிறது. அந்த ஐந்து விலங்குகளும், ஷிபுவும் அந்த
போவைத் துரத்த முயற்சிக்கின்றன.

ஊக்வேயின் மரணக் கட்டத்தில் ஷிபு,
தனக்கும் குருவான ஊக்வேயின் தீர்க்கதரிசனத்தை ஏற்றுக் கொண்டு போவுக்கு
குங்க்ஃபூ பயிற்சியைச் சொல்லித் தருகிறது. எல்லா சக்திகளுக்கும் ரகசியத்தை
எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஓலையை தக்க சமயத்தில் போவுக்குத் தருமாறு
ஷிபுவை ஊக்வே பணித்து விட்டு இறந்து விடுகிறது. ஊக்வே
தீர்க்கதரிசனத்தின்படிகடும் எதிரியான டாய் லுங் சிறையில் இருந்து தப்பித்து
ஊருக்கு வருகிறது. அதை வர விடாமல் தடுக்க தங்களை மாவீரர்களாக நினைத்துக்
கொண்டிருந்த ஐந்து விலங்குகளும் முயற்சித்து தோற்றுப் போகின்றன.

டாய்
லுங் வரும் முன் ஷிபு போவிடம் அந்த ரகசிய ஓலையைத் தந்து பிரித்துப்
படிக்குமாறு சொல்கிறது. அதைப் போ பிரித்துப் பார்த்தால் அது வெறுமையாக
இருக்கிறது. அது கண்ணாடி போல் பார்ப்பவர் முகத்தைக் காட்டுகிறது. டாய்
லுங்கும் கோயிலுக்கு வந்து ரகசிய ஓலையை ஷிபுவிடம் கேட்க போ அதில்
ஒன்றுமில்லை என்று சொல்கிறது. ஆனாலும் நம்பாத டாய் லுங் அதைப் பிரித்துப்
பார்த்து கோபம் கொள்கிறது.

ஊக்வே சொன்ன மாவீரன் யார், அவனை இப்போதே
அழித்துக் காட்டுகிறேன் என்று டாய் லுங் சவால் விடுகிறது. பாண்டா நான் தான்
அந்த மாவீரன் என்று சொல்ல இந்த வலுவில்லாத குண்டுக்கரடியா மாவீரன் என்று
டாய் லூங் எள்ளி நகையாடுகிறது. ஆனால் நடக்கும் சண்டையில் போ டாய்லுங்கை
அழித்து வெற்றி கொண்டு ஊரைக் காப்பாற்றுகிறது. இது தான் கதை.

ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், அங்கங்கே பேசப்படும் வசனங்களில், வாழ்க்கையின் தத்துவங்கள் அழகாக சொல்லப்படுகின்றன.

போ
குங்க்ஃபூ கோயிலுக்குள் போட்டியின் போது வந்த விதத்தை வைத்து ஊக்வே அதை
மாவீரனாக ஆருடம் சொல்ல ஷிபு தனக்கும் குருவான ஊக்வேயிடம் போ வந்த விதம் ஒரு
தற்செயல் தான் என்று சொல்ல ஊக்வே அமைதியாகச் சொல்கிறது. ”உலகில் எதுவுமே
தற்செயல் இல்லை”. உலகத்தில் எல்லாமே ஒரு காரண காரியத்துடன் தான் நடக்கிறது
என்று உறுதியாக அது சொல்கிறது.

இன்னொரு இடத்தில் ஷிபுவிற்கும்,
ஊக்வேயிற்கும் ஒரு தெய்வீகக் கனிமரத்தின் முன் சர்ச்சை நடக்கிறது. ஊக்வே
ஷிபுவிடம் அந்த மரத்தைக் காட்டிச் சொல்கிறது. “பார் ஷிபு. இந்த மரத்தை நாம்
நினைக்கிற காலத்தில் பூப்பூக்க வைக்கவோ, கனிகளைத் தாங்க வைக்கவோ முடியாது”

ஷிபு:
ஆனால் குருவே சில விஷயங்களை நாம் நம் விருப்பப்படி செய்விக்க முடியும்.
இந்தக் கனிகளை எப்போது கீழே விழ வைப்பது, எங்கு இந்த மரத்தை நடுவது போன்ற
விஷயங்கள் நம் கையில் தானே இருக்கின்றன.

ஊக்வே: அது சரி தான்!
ஆனால் நீ என்ன தான் செய்தாலும் இந்த விதையிலிருந்து நீ இந்தக் கனியைத் தான்
பெற முடியும். வேறு கனியைப் பெற முடியாது.

இப்படி சரியே ஆன இருவேறு வகை விவாதங்களும் இதில் உண்டு.

தான்
தான் அந்த மாவீரன் என்று நம்பாமல் அங்கிருந்து ஒரு இரவு வேறு வழியாக
வெளியேறப் பார்க்கும் போவிடம் ஊக்வே சொல்கிறது. “எந்தப் பாதையை நாம்
தவிர்க்க நினைக்கிறோமோ, பெரும்பாலும் அந்தப் பாதையில் தான் நாம் நம் விதியை
சந்திக்கிறோம்”

நேற்று வரை எந்தப் பயிற்சியும், திறமையும் இல்லாத
தன்னால் எப்படி மாவீரன் ஆக முடியும் என்று சந்தேகப்படும் போவிடம் ஊக்வே
சொல்கிறது. “நேற்று என்பது வரலாறு. நாளை என்பது ஒரு புதிர். இன்று மட்டுமே
உனக்கு பரிசாக வழங்கப்படுகிறது. ஆகவே தான் ஆங்கிலத்தில் இன்று என்பதை
‘present’ என்று சொல்கிறார்கள்.”

எனவே நேற்றைப் பற்றி கவலைப்படாமல்,
நாளை பற்றி பயப்படாமல், பரிசாகக் கிடைத்திருக்கும் இன்றைய நாளை நல்ல
முறையில் பயன்படுத்தி சாதனை புரியச் சொல்கிறது ஊக்வே.

மற்ற
விலங்குகளைப் பயிற்றுவித்தது போல் போவையும் பயிற்றுவிக்க முயன்று முடியாமல்
போகவே ஷிபு ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறது. தின்பதில் மிக ஆர்வம் உள்ள
போவிடம் ஒரு தட்டு நிறைய தின்பண்டங்களை வைத்து அதனிடம் தருகிறது. அதைச்
சாப்பிட போ முயற்சிக்கும் போது அதைத் தட்டி விடுகிறது. ஒவ்வொரு முறையும் போ
முயற்சிக்க, ஷிபு விதவிதமாகத் தட்டி விட்டு அந்த அசைவுகள் மூலமாகவே
குங்க்ஃபூ பயிற்சியைச் சொல்லித் தருகிறது. கடைசியில் நிஜமாகவே அந்த
அசைவுகளில் போ தேர்ச்சி பெற்றவுடன் கடைசியில் தின்பண்டத்தை சாப்பிடத்
தருகிறது. ஆனால் தேர்ச்சி பெற்ற மனநிறைவில் போ அதைச் சாப்பிடாமல்
சொல்கிறது. “எனக்கு பசிக்கவில்லை”

வாழ்க்கையில் நாம் மிக முக்கியமாக
நினைக்கும் விஷயங்கள் எல்லாம், நாம் பெரும் சாதனை புரிந்து மனநிறைவில்
இருக்கும் கால கட்டங்களில் அவ்வளவாக முக்கியம் இல்லை என்பதை நாம்
உணர்கிறோம் என்பதை இந்த சிறிய காட்சி அழகாகச் சொல்கிறது.

சக்திகளுக்கு
மந்திரமாகக் கருதப்பட்ட அந்த ரகசிய ஓலை வெறுமையாக இருப்பது அழகான
வாழ்க்கைத் தத்துவம். அதில் பார்ப்பவர் முகம் தெரிகிறது. எல்லா
சக்திகளுக்கும் ரகசியச்சாவி நீ தான் என்பதை அழகாக அந்த காட்சி சொல்கிறது.
அதே போல் போ தன் தந்தையிடம் சென்று நூடுல்ஸின் ரகசிய சேர்க்கை பற்றி
கேட்கும் போது அந்த தந்தையும் ரகசியமாக போவிடம் ஒத்துக் கொள்கிறார்.
”அப்படி ஒரு ரகசியக் சேர்க்கையே இல்லை”

போ ஆச்சரியத்துடன் கேட்கிறது. “பின் எப்படி அது பிரத்தியேக ருசியுடன் இருக்கிறது”

தந்தை சொல்கிறார். ”எதற்கும் சிறப்பு கூடுவதே அதற்கு சிறப்பு இருப்பதாக எல்லோரும் நம்பும் போது தான்.”

எல்லாம்
நம் மனதில் தான் இருக்கிறது. எண்ணங்களே எதையும் எப்படியும்
உருவாக்குகின்றன என்பதை போ உணர்கிறது. பின் அந்த ரகசிய ஓலையின்
வெறுமையையும் பார்த்த பின்னர் போ ஞானம் பெறுகிறது. “எல்லாம் நீ தான்”. இந்த
உண்மையை வெறுமையான ரகசிய ஓலையைப் பார்த்துக் கோபம் அடைந்த டாய் லூங்கிடம்
கூட ஒரு கட்டத்தில் போ சொல்கிறது. ஆனால் அழியப் போகும் டாய் லூங் அதைக்
கேட்கும் மனநிலையில் இல்லை. அழியப் போகிறவர்கள் உண்மையை உணர மறுப்பார்கள்
என்பதற்கு இன்னொரு நல்ல உதாரணம்.

இப்படி குழந்தைகள் பார்க்கும் படம் போல் இருந்தாலும், மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களை ஆங்காங்கே உள்ளடக்கி இருக்கிற விதம் அருமை.

நன்றி : -என்.கணேசன்
avatar
Guest
Guest


Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by அன்பு தளபதி Thu Jun 09, 2011 2:58 pm

மாம்ஸ் இப்போ குங்க் பூ பாண்டா இரண்டாம் பாகம் வந்துவிட்டது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by Guest Thu Jun 09, 2011 3:08 pm

maniajith007 wrote:மாம்ஸ் இப்போ குங்க் பூ பாண்டா இரண்டாம் பாகம் வந்துவிட்டது
லிங்க் தங்க்கா மாம்ஸ் .,
avatar
Guest
Guest


Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by அன்பு தளபதி Thu Jun 09, 2011 3:13 pm

உதுமான் மைதீன். wrote:
maniajith007 wrote:மாம்ஸ் இப்போ குங்க் பூ பாண்டா இரண்டாம் பாகம் வந்துவிட்டது
லிங்க் தங்க்கா மாம்ஸ் .,

நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் மாம்ஸ் ஆனால் முதல் பாகத்தின் டீவி டீ இருக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by அப்துல்லாஹ் Thu Jun 09, 2011 3:26 pm

நன்றி உதுமான் அருமையிருக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Aகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Bகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Dகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Uகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Lகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Lகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Aகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by Guest Thu Jun 09, 2011 3:30 pm

[quote="அப்துல்லாஹ்"]நன்றி உதுமான் குஓட்டே
நன்றிக்கு நன்றி சார் . நலம் தானே சார்.
avatar
Guest
Guest


Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by அப்துல்லாஹ் Thu Jun 09, 2011 3:38 pm

[quote="உதுமான் மைதீன்."]
அப்துல்லாஹ் wrote:நன்றி உதுமான் குஓட்டே
நன்றிக்கு நன்றி சார் . நலம் தானே சார்.
நல்ல சுகம் குழந்தை யார் சொல்லுங்கள் தம்பி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Aகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Bகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Dகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Uகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Lகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Lகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Aகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by Guest Thu Jun 09, 2011 3:46 pm

என் மூன்றாவது குழந்தை தான் சார், வயசு 10 நாள் . பெயர் அப்துல் காதி .
avatar
Guest
Guest


Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by அப்துல்லாஹ் Thu Jun 09, 2011 3:48 pm

வாழ்த்துக்கள் அப்துல் ஹாதி எல்லா வளமும் பெற்று வளரட்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Aகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Bகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Dகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Uகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Lகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Lகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Aகுங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by Guest Thu Jun 09, 2011 4:27 pm

அப்துல்லாஹ் wrote:வாழ்த்துக்கள் அப்துல் ஹாதி எல்லா வளமும் பெற்று வளரட்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் 678642
avatar
Guest
Guest


Back to top Go down

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும் Empty Re: குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum