ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

5 posters

Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by pgasok Mon Jun 06, 2011 4:52 pm

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Img1110606014_1_1



ஊழலை
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், அயல் நாட்டு வங்கிகளில் போட்டு
வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர
வேண்டும் என்று கோரி யோகா குரு பாபா ராம்தேவ் மேற்கொண்ட உண்ணாவிரத்தை காவல்
துறையினரைக் கொண்டு மத்திய அரசு சீர்குலைத்த நடவடிக்கை ஊழலைக்
காப்பாற்றும் அதன் உண்மையை முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.


டெல்லி
ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த டெல்லி காவல்
துறையினரிடம் அனுமதி பெற்றே பாபா ராம்தேவ் இந்தப் போராட்டத்தை
முன்னெடுத்துள்ளார். போராட்டத்திற்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு, பிறகு
அதனை இரத்து செய்துவிட்டு, நள்ளிரவில் காவல் படையினரை அனுப்பி,
தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை
வீசிக் கலைத்திருப்பது ஜனநாயக உரிமைகள் மீது காங்கிரஸ் கட்சியும், மன்மோகன்
சிங் ஆட்சியும் கொண்டிருக்கும் மரியாதைக்கு அத்தாட்சியாகும்.


நாடு
வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் அரசு
தனது ஊடக பலத்தைக் கொண்டு பலமாக பரப்புரை செய்துக்கொண்டிருந்தாலும்,
ஒவ்வொரு ஆண்டும் அத்யாவசியப் பொருட்களின் விலையேற்றம் 10 விழுக்காடு
அளவிற்கு தொடர்வதும், அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி குறைவதும், மக்களின்
வாழ்வை சமநிலை இழக்கச் செய்துக்கொண்டிருக்கும் வேளையில், தன்னை தூயவர்
என்று நிலைநிறுத்துக்கொள்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் பிரதமர்
மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந்தியா வரலாறு காணாத ஊழலை
சந்தித்துக்கொண்டிருக்கிறது.


நாட்டை
உலுக்கிய காமல்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு
ஊழல், எல்.ஐ.சி. பங்குச் சந்தை முதலீட்டு ஊழல், வீட்டுக் கடனிற்கு இலஞ்சம்
பெற்ற ஊழல் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் ஊழல் நாற்றம்
வீசிகிறது. ஆனால் நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்
சிங் அரசும், காங்கிரஸ் கட்சியும் கூசாமல் பரப்புரை செய்கின்றனர். ஒரு வேளை
இலஞ்சம், ஊழல் ஆகியவற்றில் நாடு வளர்கிறது என்று கூறுகிறார்களோ?


காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Img1110606014_1_2



இப்படிப்பட்ட
ஒரு சூழலில்தான் அயல் நாட்டு வங்கிகளின் கருப்புப் பணத்தின் அளவு நமது
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது என்ற அதிர்ச்சி
செய்தி வெளியானது. ஆனால், கருப்புப் பணத்தை வெறும் வரி ஏய்ப்பாக மட்டுமே
காங்கிரஸ் அரசு பார்க்கிறதே தவிர, அது ஊழலில் சம்பாதிக்கப்பட்டு பணமாற்றம்
செய்யப்பட்ட இந்த நாட்டின் சொத்து என்று கருதவில்லை. கருப்புப் பண வழக்கை
விசாரித்த இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இது வெறும் வரி ஏய்ப்பு அல்ல, இந்த
நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டு அயல் நாட்டில் குவித்து
வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. அவ்வாறு கூறுவதை இன்று வரை மன்மோகன் அரசு
ஏற்கவில்லை. கருப்புப் பணத்தை அயல் நாட்டு வங்கிகளில் போட்டு
வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட இன்று வரை மறுத்து வருகிறது மத்திய
காங்கிரஸ் அரசு.


ஒரு
பக்கம் விலைவாசியேற்றத்தால் நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே
திணறிக்கொண்டிருக்கும் நிலையில், வரலாறு காணா ஊழல் இந்த நாட்டை
தின்றுக்கொண்டிருக்கும் செய்தி, மக்கள் உள்ளத்தில் கோவக் கனலை
உண்டாக்கியுள்ளது. இதனை உணர்ந்த - உண்மையான நாட்டுப் பற்றாளர்கள்,
மக்களுக்கு அறிமுகமான முகங்களை முன்னிறுத்தி ஊழலுக்கும், கருப்புப்
பணத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதுதான் இந்த ஆண்டின்
தொடக்கத்தில் காந்திய சேவா சத்தியாகிரகப் படை எனும் அமைப்பின் சார்பில்
தொடங்கப்பட்ட முதல் ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஆகும். 94 வயதான காந்தியவாதி
ஷாம்பு தத் தலைமையில் ஜனவரி 30ஆம் தேதி தொடங்கிய சாகும்வரை போராட்டம்
மக்களை சென்றடையா வண்ணம் ஊடங்களை மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்தி அந்தப்
போராட்டத்தை சாகடித்தது மத்திய அரசு.
அதன் பிறகுதான்
அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலிற்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டது. அது
லோக்பால் சட்ட வரைவு தொடர்பான உத்தரவாதத்தை பெற்று முடிந்தது. இப்போது
கடந்த சனிக்கிழமை யோகா குரு பாபா ராம்தேவ தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம்
தொடங்க, தனது ஊழல் முகம் நாட்டு மக்களிடம் பெரிதாக வெளிப்படுவதைத் தடுக்க,
ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, இரவோடு இரவாக அந்தப்
போராட்டத்தை ஒடுக்க அராஜக வழியை கையாண்டுள்ளது. சட்டம் ஒழுங்கை(?)
நள்ளிரவில் நடைமுறைப்படுத்த காவல் படைகளை ராம்லீலா மைதானத்தில் கொண்டு
வந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை
குண்டுகளை வீசி ஒடுக்குமுறையை கட்டவிழ்ந்துவிட்டுள்ளது.


காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Img1110606014_2_1



ஜனநாயக
நெறிமுறைகளை மதிக்கும் கட்சியாக தன்னை காட்டிக்கொண்ட காங்கிரஸ் கட்சியின்
உண்மையாக முகம் இதன் மூலம் வெளிப்பட்டது மட்டுமின்றி, அது மறைத்துவரும்
மற்றொரு முகமும் நேற்று வெளிப்பட்டது. அதுவே, பாபா ராம்தேவுக்கு எதிராக
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக் விஜய் சிங் உதிர்த்த
வார்த்தைகளாகும்.


பாபா ராம்தேவை ஒரு ‘முரடன்’ என்று திக்
விஜய் சிங் வர்ணித்துள்ளார். சோனியாவின் முழு நேர ஊழியனாய், காங்கிரஸ்
கட்சியின் அந்த முதல் குடும்பத்தின் விசுவாசமிக்க தொண்டனாய் திகழும் திக்
விஜய் சிங், பாபா ராம்தேவ் யோகசனத்தை மற்றும் கற்றுக்கொடுக்க வேண்டும்,
அரசியலில் ஈடுபடக்கூடாது என்று உபதேசமும் செய்துள்ளார். அரசியல்
அநாகரீகத்தின் உச்சகட்டம் அவருடைய பேச்சுகள்.

பாபா
ராம்தேவ் ஒரு முரட்டுப் பேர்வழி என்றால் அவரிடம் மத்திய அரசு இத்தனை நாள்
பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? யார் அரசியல் ஈடுபடவேண்டும் என்ற சொல்ல
காங்கிரஸ்காரன் யார்? அதுமட்டமல்ல, தனது நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டு
மக்களை தவறாக வழி நடத்துகிறார் ராம்தேவ் என்று வேறு பேசியுள்ளார்.


ஊழலுக்கும்,
கருப்புப் பணத்திற்கும் உறுதுணையாக நிற்கும் கட்சிக்கு, அவைகளை ஒழிக்க
முற்படும் நடவடிக்கைகள் தவறான வழிகாட்டுதல் என்றுதான் தெரியும். போபர்ஸ்
பீரங்கி பேரத்தில் தரகு பரிமாற்றம் நடந்தது உறுதியான பிறகும் கூட, ஊழல்
நடக்கவில்லை என்று சாதித்த கட்சியல்லவா காங்கிரஸ். எனவே அதற்கு ஊழல்,
கருப்புப் பணக் குவிப்பு ஆகிய அனைத்தும் தேச வளர்ச்சிக்கு உகந்த
நடவடிக்கையாகத்தான் தெரியும்.


இன்னமும்
இந்தக் கட்சியை இந்திய நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான்
வேதனையானது. இந்த நாட்டை, நாட்டின் வளத்தை பெரு நிறுவனங்களும், அயல் நாட்டு
நிறுவனங்களும் முழுமையாக சுரண்டிக் கொண்டு செல்ல உறுதுணையாக இருந்து,
அவைகள் கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் கொழுத்துக்கொண்டிருக்கும் ஒரு கட்சியை
மீ்ண்டும் மீண்டும் தேர்வு செய்து ஆளவிட்டதன் பலன் இன்று உச்ச கட்ட
ஊழலையும், கருப்புப் பண வளர்ச்சியையும் இந்த நாடு கண்டுக்கொண்டிருக்கிறது.


காங்கிரஸை
ஒழிக்காமல் ஊழல் ஒழியாது என்பதையும், காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்த
அகற்றாமல் கொண்டுவரப்படும் எந்த லோக்பாலும் இந்த நாட்டை ஊழலில் இருந்து
காப்பாற்றாது என்பதையும் இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty Re: காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by pgasok Mon Jun 06, 2011 4:54 pm

நன்றி : தமிழ் வெப்துனியா
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty Re: காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by கண்ணன்3536 Mon Jun 06, 2011 5:15 pm

காங்கிரஸை
ஒழிக்காமல் ஊழல் ஒழியாது என்பதையும், காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்த
அகற்றாமல் கொண்டுவரப்படும் எந்த லோக்பாலும் இந்த நாட்டை ஊழலில் இருந்து
காப்பாற்றாது என்பதையும் இந்த நாட்டு மக்கள் புரிந்துக
ொள்ள வேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty Re: காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by ரபீக் Mon Jun 06, 2011 5:24 pm

ஊழல் பற்றி பேச இந்த ரம்தெவுக்கு எந்த அருகதையும் கிடையாது ,,,இவரே ஒரு மிகப் பெரிய கருப்பு முதலை என்பதை மறுக்க முடியுமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty Re: காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by jeylakesengg Mon Jun 06, 2011 5:39 pm

உண்மையான தலைமை ,
உண்மையான அரசு ,

வாழ்க இந்திய அரசின் நேர்மை

வாழ்க ஜனநாயகம் !!!!!!!!!!!

வாழ்க மக்கள் !!!!!!!!!!!!

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 56667 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 56667 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 56667 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 56667 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 56667 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 56667 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 56667

( மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் பிரதமர்
மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந்தியா வரலாறு காணாத ஊழலை
சந்தித்துக்கொண்டிருக்கிறது.)



காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 102564 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 102564 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 102564 காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 102564
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty Re: காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by pgasok Mon Jun 06, 2011 7:40 pm

ரபீக் அவர்களே

நிரூபிக்க படாதவரை எல்லோரும் உத்தமரே, ராம்தெஉவுக்கு எதிராக மத்திய அரசு ஏவி உள்ள வருமான வரிதுறையும் அமுலாக்க துறையும் என்ன செய்கிறதென்று
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty Re: காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 7:42 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு Empty Re: காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum