புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_m10அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்


   
   
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jun 05, 2011 7:01 am

இந்தப் பதிவை இடுவதனால் நான் தி.மு.க. அனுதாபி அல்ல. அம்மா வந்தவுடன் ஏதோ தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நினைத்த மக்களுக்கு இன்றைய ஆளுநர் உரை வைத்தது பெரிய ஆப்பு. அம்மா போடும் திட்டங்கள் எதிர் பார்த்த ஒன்று தான். ஏன் என்றால் சில ஜென்மங்கள் என்றும் திருந்தாது. திரை உலகத்தினரின் விழாவை புறக்கணித்த முதலமைச்சர் மாறிவிட்டார் என்று நினைத்தேன் அதற்கும் இன்று விழுந்தது இடி. நவரச நாயகன், இளையதலைவலி, அவன் அப்பன் என்று போயஸ் தோட்டத்தில் கூஜா, சொம்புடன் அலைந்த செய்தியை ஜெயா டிவியில் காண்பித்தார்கள்.


போன ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு புதிய திட்டங்கள் ஆரம்பிப்பதின் ஒரே நோக்கம் எங்க கட்சி ஆளுங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டும் என்பதே. இதன் விளைவுகள் நாம் வாங்கும் அரிசி, உப்பு, பருப்பு, புளியில் எதிரொலிக்கும்.

பதினைந்தாயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டு, அம்மா தொடங்கும் முன்னூறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடப் போகும் மோனோ ரயில் திட்டமாம். இந்த மாதிரி மோனோ ரயில் திட்டங்கள் சிறுவர் பூங்காவில் செல்லுபடியாகும். ஒரு மாநகரத்தின் போக்கு வரத்து நெரிசலை போக்க போனியாகாது. ஏற்கனவே இதைப் போன்று ஜல்லியடித்த மலேசியா, சீனாவில் இந்த திட்டம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை. நம் தமிழ் மக்களுக்கு இதையெல்லாம் அறிந்து பார்க்கும் அனுபவம் இருந்ததாக சரித்திரம் இல்லை. பணப்புழக்கம் இல்லை என்று ஆட்சி மாற்றியவர்கள் தான் நாம் “முன் தோன்றி மூத்தகுடி”.

அம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை.

நான் மாலை வேலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள “தியசாபிகால் சொசைட்டி” சுவர்களில் தமிழை காத்த ராஜ ராஜ சோழன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அம்மா புகழ் பாடும் சுவரொட்டிகள் காண்பதை தவிர வேறு ஒரு மாற்றம் நிகழ தமிழகத்தில் வாய்ப்பில்லை.

வாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.



கும்மாச்சி
அன்பே சிவம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 10:09 am

மாற்றம் ஒன்றுதானே மாறாதது !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 10:28 am

ரபீக் wrote:மாற்றம் ஒன்றுதானே மாறாதது !!!
புன்னகை

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Jun 05, 2011 11:22 am

தமிழ் தேசத்தில் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரமில்லை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 11:26 am

murugesan wrote:தமிழ் தேசத்தில் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரமில்லை...

ஓ ! உங்களுக்கு புரட்சி என்றால் அவ்வளவு விருப்பமோ ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jun 05, 2011 7:33 pm

இந்த கால கட்டத்தில் புரட்சி என்பது மிக அவசியம், ஆனால் அது புரட்சி தலைவி மூலமாகவோ, அல்லது புரட்சி கலைஞர் மூலமாகவோ நமக்கு தேவையில்லை.



கும்மாச்சி
அன்பே சிவம்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 8:46 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்  47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 06, 2011 12:36 am

இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே
அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை.

மே
13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல்
நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன்,
கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல்
கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி
ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி
நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல்
நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு,
நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை
வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா
ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி
எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி
இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!
மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக்
கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி
தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக்
கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும்
வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல்
பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார
காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது
ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே
வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார்.
இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ,
அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின்
ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம்.
குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா
வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா
போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது
இல்லை.
’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள்
பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு
மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு
அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப்
போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன்
அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே
இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை
அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து
கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’
என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம்.
உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால்
அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?
ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும்,
தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை
கேட்டுக் கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக
ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன?
எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன்
ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை
ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே
தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு
எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு
உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது
பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு
ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!
இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை
நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள்
நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி,
கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ,
அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா
ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்.
காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற
பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின்
ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி
நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த
பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப்
பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும்
கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும்
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும்
பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?
தலித்களின் சம்பந்தியாக தன்னை
அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும்
செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள்
நம்புகிறீர்களா?
சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின்
வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த
தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி
ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது.
ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து
அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா…
போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி
எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக்
கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள்
பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால்
வரவேற்கவும் படுகிறது.
ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும்
யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும்
எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.
ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித்
தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர்
இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு
வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர்
‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு.
பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு
சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர்.
’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக்
கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?
’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை
ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து
நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும்
இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப்
பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு
வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று
நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர்
ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.
போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப்
புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’
என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த
ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள்
மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு
காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு
என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.
நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால
குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது.
இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில்
ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால்
இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும்
இல்லை.
நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும்
சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம்
வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால்
கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு
மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என
முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு
காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும்
அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா,
அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 06, 2011 12:47 am

தமிழகத்தின் சாபக்கேடுகளில் முதன்மையான ஒன்று இங்கு உருவாகிய கழகங்களின்
கலகங்கள். இதற்கு உரமிட்டு வளர்ப்பது நம் மக்களின் ஜடத்தனமும்,
எதிர்ப்புநிலை காட்டத்தெரியாத மடத்தனமும். அமைதியாகவே இருப்பது அகிம்சை
ஆகிவிடாது. அது அநியாயங்களுக்குத் துணை போனதற்கு சமம். அதைத்தான் நாம்
பலகாலமாக செய்துவருகிறோம்.

இரு பெருங்கழகங்களும் ஆட்சியில்
இருக்கும்போது கொள்ளையடிப்பதும், ஆட்சியில் இல்லாதபோது சட்டசபைக்குக்கூட
வராமல் அறிக்கைவிட்டே அரசியல் நடத்துவதுமே வழக்கமாகிவிட்டது. இவர்களது
கொள்கைகள் என்பதை இவர்கள் கைகள் கொள்ளும் அளவாகவேப் புரிந்து
கொள்ளவேண்டியதாயிருக்கிறது. தமக்கானதாய் தொலைகாட்சி சேனல்களும், சில பல
ஆதரவுப் பத்திரிக்கைகளையும் வைத்துக்கொண்டு பத்தினி வேசம் போட்டு
பொதுமக்களை பைத்தியக்காரர்களாகவே வைத்திருப்பது இவர்களின் பலம்.

திரைத்துறை
பின்னணியை வைத்துக்கொண்டு இவர்கள் அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ இவர்களால்
திரைமறைவு வேலைகளில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இந்த இரு கயவர்
கும்பலில் ஒருவரை தேந்தேடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் நாம். ஒருவர்
கதையெழுதி நாடகங்களில் நடித்த அனுபவத்தால் காட்சிக்கு காட்சி விறுவிறுவென
திருப்புமுனைகளை வைத்து, கொள்கைகளை அடகு வைத்து, மணிக்கொருமுறை நரம்பில்லா
நாக்கை சுனாமியிலும் வேகமாக இங்குமங்கும் பிரட்டி, பிதற்றி அரசியல்
வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு கருப்பு சட்டைபோட்ட காவல்காரர்களும்
உண்டு. பலவிதமான அறிக்கைகளை தயாராக எழுதி வைத்துவிட்டு பொருத்தமானதை
பொருந்தும் நேரத்தில் வெளியிடுவதற்காகவே பெரியாரல்லாத வேறு பாசறைகளிலும்
பயின்று வந்திருக்கிறார்கள் போலும்.

நடிகை ஜெயலலிதா, படப்பிடிப்பின்போது இடையிடையே கிடைக்கும் சிறு
ஒய்வுநேரத்தைப் போன்று தமிழக அரசியலையும் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
இடைவேளையில் ஜூஸ் குடிப்பதும், நிழலில் இளைப்பருவதும்
பழக்கதோஷமாகிவிட்டதால் கொடநாடு ஓய்வும் அவசியமாகிப்போனது. படப்பிடிப்பில்
உதவி இயக்குனர்களிடமும் மற்றவர்களிடமும் முரண்டு பிடிப்பதும், அவர்களை
ஏசுவதும், அவமரியாதையாக நடத்துவதும் சதை வியாபாரத்தில் சரிப்படலாம். அந்தக்
கதை இங்கு எடுபடுமா அரசியலில்? திமிர்பிடித்த நடிகையாகவே நடித்து
பழக்கப்பட்டதை அரசியலில் ஒதுக்க அம்மையாருக்கு மனமில்லை போல.

அம்மையாரும்,
அய்யாவும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள்
நல்லவர்கள் என்று நினைத்து, தேர்தலில் யாரும் வெற்றியடையச் செய்வதில்லை.
ஒருவர்மேல் உள்ள வெறுப்பை வேதிவினையால் மற்றொருவருக்கு சாதகமாகச் செய்து
மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் செய்வினை. அதுமட்டுமில்லாமல்
இருவரும் தேர்தலின் கடைசி நேரங்களில் நடத்தும் நாடகங்களுக்கான பாராட்டுதலாக
அந்தந்த நாடகக் கம்பெனிகளுக்குப் போய்ச்சேர்ந்துவிடுகிறது. இது
துரதிர்ஷ்டமே.

நடிகையின் நர்த்தனம் பார்க்க நன்றாகயிருக்கலாம்.
நடிகையின் பாதமும் புண்ணாகும் என்பது குறைந்தபட்சம் அந்த நடிகைக்காவது
தெரிந்திருக்க வேண்டும். பொது'மா'க்களில் பெரும்பாலோருக்கு மதம் போல கட்சி
இரத்தமும் ஊட்டியே வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் ஏற்கனவே இருக்கும்
கட்சிகள் என்ன அட்டூழியம் செய்தாலும் எதிர்த்து ஒரு கேள்விகூடக் கேட்பதற்கு
ரத்தத்தின் ரத்தங்களுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ மனம் வந்துவிடாது. புதிதாக
எவர் வந்தாலும் ஓராயிரம் கேள்விக் குடைச்சல்களைக் கொடுத்து
வாய்ப்பளித்துவிடப் போவதில்லை. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்ற
எங்கள் வார்த்தைகளில் மட்டும் என்றுமே மாற்றம் இருக்காது.

புதியவர்களுக்கு
வாய்ப்பளிக்காமல் இவர்கள் வந்தால் மட்டும் என்ன செய்து
கிழித்துவிடப்போகிறார்கள் என்ற கேள்வியை மட்டும் வாய்கிழிய அடுத்தவன் காது
கிழிய கேட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை நாம் வாக்களிக்கும் புதியவர்கள்
நாம் எதிர்பார்த்த மாதிரி செயல்படாமல் போகலாம். அதை அவர்களின் செயல்பாடை
வைத்துதான் முடிவு செய்யமுடியும். அவ்வாறே அவர்களின் செயல்பாடு
திருப்தியளிக்காவிட்டாலும், ஏற்கனவே இருக்கும் கழகங்களுக்கும், புதிதாய்
தோன்றும் கழகங்களுக்குமாவது ஒரு பாடமாயிருக்கட்டுமே.

பொதுமக்களே அவர்கள் நர்த்தனம் ஆடட்டும், நாடகம் இயற்றட்டும், நமக்கு எங்கேபோனது புத்தி?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 06, 2011 12:50 am

எங்கோ படித்தது..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக