புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
65 Posts - 64%
heezulia
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
1 Post - 1%
viyasan
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
257 Posts - 44%
heezulia
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
16 Posts - 3%
prajai
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_m10இப்படி எத்தனை காதல் கதைகளோ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி எத்தனை காதல் கதைகளோ!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 12:27 am

இப்படி எத்தனை காதல் கதைகளோ! 186clmvpf

பயந்து பயந்து
பத்துவார்த்தை பேசியிருப்போமா?

காற்றின் இடுக்கில் அது
கசிந்தது எப்படியோ?

அரிவாள்மணையில் அரிந்தார் உன்
தந்தை
காதல் தேசத்தின்
கொடிபோன்ற நின்கூந்தலை

ஒருநாள்
என்மேல் நீர்தெளித்து
வாசலில் கோலமிட்டாய்

அன்றே
சூட்டுக்கோலிட்டாள் உன் அன்னை
நான்
தொடமுயன்று தோற்றுப்போன உன்
தாமரைத் தொடையில்

ராஜேந்திரன் வீட்டுச் சந்துவழி
ஐந்தாறு செங்கல் அடுக்கி
உன்வீட்டு ஜன்னல் தொட்டுக்
கைத்தலம் பற்றிக் கனாக்கண்டோம்

மறுநாள்
ஜன்னல் இருந்தவிடத்தில்
சுவர்

தூதுபறந்த காகிதப்புறாக்கள்
கொலையுண்டு புதையுண்டன
குப்பைச் சமாதியில்

எந்தச் சிலுவையில் அறையப்பட்டதோ
என் சூரியன்

சிலகாலம் என் வாழ்வில்
ஒருமாத இரவு

சிதைந்தது மனது
கருவேல மரத்தில் சிக்கிய பட்டமாய்

விண்மீன் வழியே ரத்தம்
நிலாவில் ஒட்டடை
மழையெல்லாம் அமிலம்
இயற்கையின் சுற்றில் கதிமாற்றம்

எனக்காக அனுப்பப்பட்ட உறக்கம்
உன் வாசலில் தற்கொலை
செய்து கொண்டதா?

உன்நினைவுகள் தின்றது போக
மூளையில் பாதிதான்
வேலை செய்கிறதா?

உன்னைக் காட்டச் சொல்லிஎன்
கண்மனி அரித்தது
வெயிலுக்கு மோர் கேட்கும் சாக்கில்
உன் வீடு புகுந்தேன்

அன்னம் பரிமாறிய உன்அம்மா
கரன்டி கொண்ட காளியாக

சோற்றில் கைவைத்த உன் தந்தை
எச்சிற்கையோடு என்னைப் பிசைய

உட்வெல்ல முடியாமலும்
வெளித்தாவ முடியாமலும்
பாவம் நீ
ஒருபாதி புழுவாய்
ஒருபாதி வண்ணத்துப்பூச்சியாய்

ரத்தம் உப்புக்கரிக்குமென்றால்
உண்மை அறிந்தேன் உன்னால் அன்று

மறுநாள் உன் வாசலுக்கு
என்னையே கர்ப்பூரமாய் ஏற்றினேன்

நான் எரிகையில் ஓடிவந்து
அணைத்தாயே பெண்ணே
அதுதான் நம்
இரண்டாம் ஸ்பரிசம்

உன் நினைவென்னும் ஆணியில்
ஊசலாடியது என் உயிர்
வாழையிலையில் பரிமாறப்படும்
மரணம் என் தேசம் புசிக்கவில்லை

பூமியோடு
என் தொடர்பெல்லாம்
துண்டிக்கப்பட்ட வேளையிலும்
ஞாபகத்தின் கடைசிக்குமிழியில்
உன் முகம்

வாழந்தால்
உன் அங்கமெல்லாம் உயிராக
வியாபித்து வாழ்வது

இறந்தால்
நீ விட்ட மூச்சை
என் கடைசி மூச்சாய் உள்வாங்கி உயிர்துதுறப்பது

சபதம் சுமந்தபடி
தேநீர்க்கடை பெஞ்சுகளில்
தேய்ந்தது சில காலம்

பறவைகளோடு பேசுதல்
நட்சத்திரங்களை எண்ணுதல்
ஆளவரம் அடங்கியபின்
உனது தெருவழி உன்வீடு கடத்தல்
இப்படிக் கழிந்தது சிலகாலம்

காலத்திற்கு
உடம்பெல்லாம் சிறகா?
சிறகே உடம்பா?

என்ன
இப்படிப் பறக்கிறது?

கிராமத்து மழையில் ஓட்டிய
காகித ஓடங்களை
வங்காள விரிகுடாவில் தேடும்
அப்பாவிச் சிறுவன்போல்
உன் பிம்பங்களை இப்போது
காற்றில் தேடுகிறேன்

மேகத்தில் ஒன்றாயிருந்தவர்கள்
துளிகளில் சிதறிவிட்டோம்

காலம் ஏன்
இப்படிப் பறக்கிறது?

நினைவுகள் நரைப்பதற்குள்
ஆண்களை வெறித்துப் பார்க்கும் வயதில்
எனக்கொரு மகள்

பெண்களை வியந்துபார்க்கும் வயதில்
உனக்கொரு மகன்.

ஆதலால் மனிதா

பிறவியென்பது பெருங்கடலன்று
எண்ணிப்பார்த்தால் சின்ன வாய்க்கால்

அறுபதிலிருந்தும் நூறடி வரைதான்
அதனின் நீளம் ஆனால் ஆழம்

கரைதொடு முன்னே கரைந்தவர் பலவேர்
கரையைத் தொட்டுக் கடந்தவர் சிலபேர்

இருந்த கரையில் இருந்து கொண்டே
இதுவே மறுகரை என்றவர் பலபேர்.

மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது
காலக் கணக்கில் வாழ்நாள் சிறுது

திரும்பிப் பார்த்தால் மனிதர் வாழ்க்கை
எறும்பின் கால்Žனி அளவினும் சிறிது

அன்னை தந்தை உறவுகள் தம்மை
அனமானத்தால் அறிந்து கொள்வதில்

காலில் நடையைக் கட்டி வைப்பதில்
நாவிவ் மொழியை நட்டு வைப்பதில்

திசைகள் தெருக்கன் தெரிந்துகொள்வதில்
விலங்கு மனிதர் வேற்றுமை காண்பதில்

விண்மீன் நிலவை வியந்து நிற்பதில்
பேதைமை நிறைந்து பிள்ளைமை கழிந்து

முன்னோர் அடித்த முளையில் பிணித்து
இறுக்கிக் கட்டி எழுத்தறிவித்ததில்

முற்றாத பிஞ்சு மூளைக்குள்ளே
வந்தவன் போனவன் வைக்கோல் திணித்ததில்

போன் நூற்றாண்டுப் போர்க்களங்களில்
செத்த எலும்புகள் சேகரித்ததில்

அவசரமாக அறிவாளியாக
மனமில்லாமல் மனனம் செய்ததில்

பத்து மாதமாய்ப் புத்தகம் தின்று
சிலமணிப் பொழுதில் செரித்துக் காட்டலில்

கல்விக்கூடக் கட்டணச் சிறையில்
கால்நூற்றாண்டு கழித்து தொலைந்தது

காதல் என்பதா? காமம் என்பதா?
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா?

பயிலாத ஒன்று பயிலத் தவித்துத்
துயிலாத கண்கள் துடிக்கும் கிளர்ச்சியா?

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியர?

புதிய கேள்வியில் புத்தி வலித்ததில்
சின்னச் சின்னப் பைத்தியம் பிடிப்பதில்

வெண்ணிலா தோன்னி வெந்நீர் தெளிப்பதில்
கி.பி., கி.மு. மறந்து போனதில்

தீவிழந்தாலும் இமையா திருப்பத்தில்
பூவிழந்ததும் பூமி உடைந்ததில்

காதல் காதல் காதல் என்றே
கடலில் உப்பாய்க் கரைந்தது இளமை

பெற்ற இடத்தை விட முடியாமலும்
பிறிதோர் இடத்தை தொட முடியாமலும்

பதவி வேட்டையில் பண்பு தொலைந்து
காசு வேட்டையில் காதல் இழந்து
லட்சியத்திற்கு எதிராக திசையில்
Žரைக்க Žரைக்க நூறுமைல் ஓடி

ரத்த அழுத்தம் சர்க்கரையோடு
நரைத்து முடிந்தது நடுத்தர வயது

உப்பு சர்க்கரை கொழுப்பு பருப்பு
கிழங்கு பழங்கள் அரிசி இறைச்சி
இவைகள் தவிர்த்து எதையும் உண்கென
சுத்த மருத்துவர் சுதந்திரம் தந்ததில்

கைவிட்டோடும் சுற்றம் போலவே
கண்கள் செவிகள் புலன்கள் போனதில்

தனிமைச் சிறையின் வெறுமைக் காவலில்
தலையணை ஒன்றே தன்துணை ஆனதில்

வாழ்வு சாவு இரண்டின் மத்தியில்
மூச்சு வாங்கியே முடியும் முதுமை

மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது
காலக் கணக்கில் வாழ்நாள் சிறிது

ஆதலால் மனிதா!

இருக்கும் நாட்களை இரட்டிப்பாக்கு
சூரியன் நிலவு இரண்டிலும் விழித்திரு

படுக்கை போட்டுத் துயில் கொள்ளாதே
துயில்வரும் போது படுக்கை போடு

காலையில் பூமியில் உட்துளையிட்டு
மாலையில் பூமியின் மறுபுறம் வெளிப்பாடு

மனித உள்ளம் காலிக் கிண்ணம்
லட்சியங்கள் ஊற்றி நிரப்பு

விண்ணும் மண்ணும் வெற்றியின் இலக்கு
செவ்வாய் கிரகம் சீக்கிரம் உனக்கு

வங்காள விரிகுடா
அதிகமொன்றுமில்லை
கூப்பிடிதூரம்தான்
வங்காள விரிகுடா

நீலங்குழைத்த நீர்பார்த்து
அலையோடு விளையாடி
நானாயிற்று

சற்றொப்ப
நாற்பதாண்டிருக்குமோ?
நலம் விசாரித்து....?

இப்போது
நினைவுகள் விட்டிசைக்குமிந்தப்
பின்வாழ்வில்
அணைந்தணைந்து எரியும் ஞபாகங்கள்

நிலவில் ஊறிய அலைபார்த்தபோதும்
மழையில் நனைந்த கடல் பார்த்தபோதும்

சங்குகளின் கருச்சிதைவான
கிளிஞ்சல் பொறுக்கி ஆடியபோதும்

அம்மாவோடு கோபித்தோடி
இர்வில் படகில் பள்ளிகொண்டபோதும்

அவனுக்குப் பக்கத்தில் கடலிருந்து
கடலுக்குப் பக்கத்தில் அவனிருந்தான்

வாழ்வின் சுழற்சி
வங்காளவிரிகுடா தூரமாயிற்று

கல்லூரி கல்லூரியாய்
வண்ணப்பம் பதிந்ததில்...

கடைசியில்
விண்ணப்பிக்காத கல்லூலியில்
இடம் பிடித்ததில்...

காதல் போல் ஒன்று
எதிர் வீட்டு ஜன்னல் வழி
எட்டிப் பார்த்ததில்...

யாரோ ஒரு ஆசிரியர்
கண்ணாடி போடாமல் திருத்தியதில்
இரண்டுதாள்கள் இடறியதில்

சொந்ததில் பின்கோடு இல்லாத
ஊரொன்றில் உத்தியோகம் பார்த்ததில்...

ஜாத்கம் சபித்தபடி
ஏழு மாதமோ எட்டு மாதமோ
மூத்த ஒருத்திக்கு முடிச்சிட்டதில்...

முதலிரண்டு கர்ப்பம்
தரிக்காமல்போன தரித்திரத்தில்...-

அப்பாவின் ஒரு கிட்னி
முன்னறிவிப்பில்லாமல்
வேலைநிறுத்தம் செய்ததில்...

வீட்டின் சரிபாதியை
நிம்மதியின் முழுமையைப்
பறித்துக் கொண்ட
பங்காளி வழக்குகளில்...

ஒரு மழைக்காலத்து மாதக்கடைசியில்
மரித்துப்போன தாயின் மரணத்தில்...

பிள்ளைகளுக்கிடம் பிடிக்கும்
கல்விக்கூடங்களின்
வேரூன்றிய வரிசைகளில்...

லட்சியவாதியான மூன்றாம்மகன்
யாரோ ஒரு பெண்ணோடு
பெங்களூரில் பிடிபட்டதில்...
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நட்சத்திர நரைபூத்த நடுவயதில்
நோயுண்ட மனைவியின்
கர்ப்பப்பை களைந்ததில்...

கடைசிப் பெண்ணின்
கல்யாணத்தேதி நெருங்க
நிதி நிறுவனத்தின்
நெடுங்கதவாடிய பூட்டுகளில்...

சிகரத்தில் விழுந்த மழையாய்ச் சிதறிய உறவுகளின்
சேராத பாசத்தில்...

இப்போது-
துடைக்கத் தோன்றாமலும்
துடைக்க ஆளில்லாமலும்
உதட்டில் விழுந்து
கரிக்கும் கண்ணீரில்...

மூழ்கியே போனது
வங்காள விரிகுடா!

அந்நியமானது
கடலோடு வாழ்வா?
வாழ்வோடு கடலா?

கடைசி ஆசை...
மீண்டும்
கடல் பார்ப்பதுதான்
ஆசையை நிறைவேற்றியது-
எரித்தபிறகு வந்தமகன்
கரைத்து முடித்த அஸ்தி.

கவிப்பேரரசு வைரமுத்து



இப்படி எத்தனை காதல் கதைகளோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 12:32 am

இறந்தால்
நீ விட்ட மூச்சை
என் கடைசி மூச்சாய் உள்வாங்கி உயிர்துதுறப்பது

இப்படி எத்தனை காதல் கதைகளோ! 599303

ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 12:37 am

கத்தியின்றி ரத்தமின்றி
இதய மாற்று அறுவை சிகிச்சை
- காதல்.



“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 12:41 am

ksyed_86 wrote:கத்தியின்றி ரத்தமின்றி
இதய மாற்று அறுவை சிகிச்சை
- காதல்.

அதான் இப்ப இல்லாம போச்சே! இப்படி எத்தனை காதல் கதைகளோ! 599303



இப்படி எத்தனை காதல் கதைகளோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 12:47 am

தாவனி போனா சுடிதார் வரும் தலைவா



“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 12:49 am

ஆஹா, இந்தத் தன்னம்பிக்கை இருந்தால் போதும்! எத்தனை முறை வேண்டுமானாலும் காதலிக்கலாம்!

(கொஞ்சங்கூட கவலையே இல்லாம, என்னா தெனாவாட்டா பதில் வருது பாரு)



இப்படி எத்தனை காதல் கதைகளோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 12:50 am

இப்படி எத்தனை காதல் கதைகளோ! 705463 இப்படி எத்தனை காதல் கதைகளோ! 705463 இப்படி எத்தனை காதல் கதைகளோ! 705463

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 11, 2009 9:50 am

சிவா wrote:ஆஹா, இந்தத் தன்னம்பிக்கை இருந்தால் போதும்! எத்தனை முறை வேண்டுமானாலும் காதலிக்கலாம்!

(கொஞ்சங்கூட கவலையே இல்லாம, என்னா தெனாவாட்டா பதில் வருது பாரு)

எல்லாம் தாங்கள் ஊட்டிய அறிவு அமுதம் ராஜ குரு.....



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 10:01 am

வைரமுத்துவின் வரிகள் அழகானவை ..அதை இங்கே ஷிவா அண்ணா போட்டு இருப்பது அருமை..நன்றிகள்..



Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Fri Sep 11, 2009 11:57 am

இப்படி எத்தனை காதல் கதைகளோ! 677196
இப்படி எத்தனை காதல் கதைகளோ! 678642

வைர முத்துக்கு நிகர் உலகில் யாரும் இல்லை
இத அருமையான கவிதையை ஈகருகு தந்த சிவா அண்ணனுக்கு நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக