புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐநா நிபுனர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை முழுதாக தமிழில்!
Page 1 of 1 •
ஐ நா வின் நிபுணர் குழு வெளியிட்ட இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் அடங்கிய ஆவணத்தின் தமிழாக்கம்
முழுதாக Pdf File ஆக தரவிறக்கிக்கொள்ளுங்க்ள்!
இங்கே!
http://www.mediafire.com/download.php?62sbqn14wc5m59d
இதன் Flip version மிக விரைவில்
அறிமுகம்
1. கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில்
இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய மோதல்
முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம் முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன
ஆறுதல் அடைந்தனர். ஆயினும், நாட்டின் ஆயுதப்படையினர் வெற்றியை அடைவதற்காகக் கையாண்ட
வழிமுறைகள் பற்றி இலங்கை மற்றும் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் அதிக மனத்தாக்கம்
அடைந்தனர். நாட்டின் வடகிழக்குக் கரையோரப்பகுதியான வன்னியின் ஒரு சிறிய இடத்தில்
தப்பியோட முடியாமல் மும்முரமாக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கிடையே பல
இலட்சக்கணக்கான தமிழ் பிரஜைகள் சிக்குண்டிருப்பதை அதிகரித்து வரும் அச்சத்துடன் பல
மாதங்களாக அவர்கள் நோக்கியவண்ணம் இருந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த
பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. அரசாங்க தரப்பிலிருந்து எறியப்பட்ட
எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கினர்“ அப்பகுதியில் இருந்து தப்பியோட
முயற்சித்த போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலரை எல்ரிரிஈ இனர் சுட்டனர்.
மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்த போதிலும், அரசாங்கத்தினால் அது தொடர்ந்தும்
கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அல்லது
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக யுத்தத்தைப் போதியளவு
தளர்த்துவதற்கான முயற்சிகள் தடுமாற்றமடைந்தன.
2. மோதல் வலயத்தில் இருந்து
பாரபட்சமற்ற அறிக்கை விடுத்தலுக்குத் தட்டுப்பாடு நிலவியதால், 2009 மே மாதம் 19ஆம்
திகதி இலங்கை ஜனாதிபதி வெற்றியைப் பிரகடனப்படுத்திய நாள் வரை இறுதி இராணுவத்
தாக்குதலின் போத என்ன நேர்ந்தது என்பதை சரியாக நிர்ணயிப்பது சிரமாக இருந்தது.
ஆயினும், அரசாங்கம் அப்பிரதேசத்தில் இருந்ததாக முன்னர் கூறிய மதிப்பீட்டை அதிக
எண்ணிக்கையால் விஞ்சுமளவிற்கு யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 290,000
மக்கள் மூடப்பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பாரிய காயங்களுக்கு
இலக்காகிய பலர் அடங்கிய சுமார் 14,00 மக்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினால் கடல்
மார்க்கமாக பாதுகாப்பான இடத்துக்கு அகற்றப்பட்டனர். எல்லா அறிகுறிகளின்படி,
மரணித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததோடு, இன்று கூட சரியான
கணிப்பொன்று நிர்ணியக்கப்படவில்லை. எனினும், “பூஜ்ய பொதுமக்கள் சேதத்துடன்’ தான்
“மனிதாபிமான மீட்டு நடவடிக்கையொன்றினை’ மேற்கொண்டதாக அரசாங்கம் உறுதியாக வாதிட்டு
வந்துள்ளது.
3. யுத்தம் முடிவுற்று மூன்று நாட்களுக்குப் பின்னரே செயலாளர்
நாயகம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதோடு மோதல் வலயத்தின் சில இடங்களையும் மோதல்
பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான ஒரு முகாமையும் அவர் நேரடியாகப்
பார்வையிட்டார். அவரின் விஜயத்தின் முடிவில், இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து
செயலாளர் நாயாகம் கூட்டு அறிக்கையொன்றை விடுத்தார். இராணுவ நடவடிக்கைகளின் போது
நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை
எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர்
நாயகம் அதில் வலியுறுத்தினார் என்பதோடு அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை
எடுப்பதற்கு ஜனதிபதி இணக்கம் தெரிவித்தார். நிபுணர்கள் குழுவின் நியமனம் அந்த
கூட்டு அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக செயலாளர் நாயகத்தினால்
மேற்கொள்ளப்பட்டதாகும்.
4. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான கூட்டு
இணக்கப்பாட்டை அமுல் செய்வது பற்றி செயலாளர் நாயகத்துக்கு அறிவுரை வழங்குவது
குழுவின் ஆணையாகும். இவ்வறிக்கையில் இக்குழு குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச
சட்டங்களின் மீறல்களின் சுபாவம் மற்றும் அவற்றின் நோக்கெல்லை அத்துடன் இலங்கை
அரசாங்கத்தின் பதில் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது. குறிப்பாக, கற்ற பாடங்கள்
மற்றும் மீளிணைக்கப்பாட்டு ஆணைக்குழு சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான
அனுபவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இலங்கையின் சட்ட
அமைப்பு மற்றும் பொறுப்பக் கூறல் தொடர்பான உள்நாட்டு நிறுவனங்களையும் குழு
மறுபரிசீலனை செய்கிறது. அதன் செயற்பாடு முழுவதிலும், இலங்கையின் வரலாற்று மற்றும்
அரசியல் சூழ்நிலைப் பொருத்தங்களையும் பொறுப்புக் கூறல் பற்றிய இலங்கையின் தற்கால
சூழலையும் குழு கவனத்துக்கு எடுத்துக் கொண்டது. இவ்வறிக்கை குழு மேற்கொண்ட
செயற்பாட்டின் பிரதிபலானாகவுள்ளதோடு சிபாரிசுகள் தொகுதிகளாக செயலாளர் நாயகத்துக்கான
அறிவறுத்தலையும் அது உள்ளடக்குகிறது.
1. ஆணை, தொகுப்பு மற்று வேலைத்
திட்டம்.
அ. குழுவினை அமைத்தல்.
5.இலங்கையின் ஆயுத மோதலின் இறுதிக்
கட்டங்களின்போது குற்றஞ் சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள்
சட்ட மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் பற்றித் தனக்கு அறிவுரை
வழங்குவதற்காக 2010 யூன் 22ஆம் திகதி இக்குழுவின் நியனமத்தை செயலாளர் நாயகம்
அறிவித்தார். குழுவின் நோக்கெல்லை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டது: செயலாளர்
நாயகமும் இலங்கை ஜனாதிபதியும், 2009 மே 23ஆம் திகதி நாட்டுக்கான செயலாளர்
நாயகத்தின் விஜயத்தின் முடிவில் விடுத்த கூட்டு அறிக்கையில், இலங்கை
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கைகளின்
போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி
நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை
செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார். அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை
எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். இத்தருணத்தில் மற்றும் இதன்
பின்னணியில்:
1. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக சொல்லப்பட்ட
உறுதிப்பாட்டினை அமுல் செய்வதற்காக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள்
குழுவொன்றை அமைப்பதற்கு செயலாளர் நாயகம்
தீர்மானித்தார்.
2.குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும்
நோக்கெல்லை பற்றியவற்றைக் கவனத்துக்கெடுத்து, கூட்டு அறிக்கையின் பொறுப்புக்
கூறுவதற்கான செயற்பாட்டு பற்றிய உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான தோதான முறைமைகள்,
ஏற்படைத்தான சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவம் பற்றிய செயலாளர்
நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் குறிக்கோளாகும்.
3.ஏற்ற மற்றும்
சம்பந்தப்பட்ட அனுபவத்தைக் கொண்ட மூன்று உறுப்பினர்களை அது கொண்டிருக்கும். குழு
அதற்கென்றே தனது செயற்பாட்டு முறைமைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு ஞஏஇஏத இன் துணையோடு
செயலயகமொன்று அதற்கு உதவி வழங்கும்.
4.அது செயற்பாட்டை ஆரம்பித்து நான்கு
மாதங்களுக்குள் குழு அதன் அறிக்கையை செயலாளர் நாயகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
5.குழுவுக்கான நிதியளிப்பு செயலாளர் நாயகத்தின் எதிர்பாரான நிகழ்வுகள் வரவு செலவுத்
திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
6.மர்சுக்கி தாருஸ்ஸமான் (இந்தோனேசியா),
தலைவர்; ஸ்ரீவன் ரத்னர் (ஐக்கிய அமெரிக்கக் குடியரசு“ மற்றும் யஸ்மின் சூக்கா (தென்
ஆபிரிக்கா) ஆகியவர்களை குழுவின் உறுப்பினர்களாக செயலாளர் நாயகம்
நியமித்தார்.
ஆ. குழுவின் ஆணை
1.குழுவின் சகலதையும் உள்ளிட்ட
பொறுப்பு
7.செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான 2009 மே
23ஆம் தேதிய கூட்டு அறிக்கையை சகல குற்றஞ்சாட்டல்கள் பற்றிய உண்மையான சுபாவம்
மற்றும் நோக்கெல்லை பற்றி அமுல் படுத்துவதற்காக இலங்கை இதுகாலவரை மேற்கொண்ட மற்றும்
எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது
குழுவின் பணியாகும். இவ்வாறாகக் குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்று
இலகுவாகத் தாக்கமுறக் கூடிய குழுக்களுக்கெதிரான தெளிவான மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச
மனிதாபினமா மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல்
பற்றிய முறைமைகள், தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் மீது குழு பரவலாகக்
கவனம் செலுத்தியது. இப்பிரச்சினை தொடர்பான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின்
தற்கால அணுகுமுறை பற்றி இயன்றவரை முழுமையானதொரு காட்சியைக் கண்டு பிடிக்க அது
முயற்சியெடுத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதெச கடப்பாடுகளை அவை
நிறைவு செய்கின்றனவா மற்றும் எவ்வளவு தூரம் அவை சிறந்த சர்வதேச நடைமுறைகளை
பிரதிபலிக்கிறது என்பதை நிர்ணயிப்பதற்காக பொறுப்புக் கூறல் தொடர்பாக தோதான அல்லது
தோதான நிலைச்சக்தியைக் கொண்ட இலங்கையின் உள்நாட்டுப் பொறித்தொகுதியையும் அது
ஆராய்ந்தது. இறுதியாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் பொறுப்புக் கூறல் தொடர்பான
அரசாங்கத்தின் தற்கால கொள்கைகளையும் குழு கவனத்துக்கெடுத்துக் கொண்டது. கற்ற
பாடங்கள் மற்றும் மீளணிக்கப்பாட்டு ஆணைக்குவினை அமைத்தலை இக்கொள்கைகள்
உள்ளிட்டது.
8.கடந்த கால மனித உரிமைகள் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் மீறல்கள்
தொடர்பாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அரசியல், சட்ட மற்றும் நல்லொழுக்கப்
பொறுப்புக்களை நிர்ணயிப்பதில் விரிவானதொரு செயற்பாடாக பொறுப்புக்கூறலை குழு
நோக்குறிது“ உண்மை, நீதி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நக்ஷ்ட ஈடு
ஆகியவற்றையும் பொறுப்புக்கூறல் உள்ளடக்குகிறதோடு, மோதலுக்குப் பின்னர் ஒரு நாட்டில்
நிலைத்தகவுள்ள சமாதானத்தை அடைவதற்காக பாரியதொரு செயற்பாட்டின் ஒன்றிணைந்த
அம்சமாகவுள்ளது.
பின்னர் இந்த அறிக்கையில் பொறுப்கூக்கூறலின் அம்சங்களையும்
பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களையும் இக்குழு
விளக்குகிறது.
9.சூன்யத்தில் பொறுப்புக்கூறலுக்கான தரங்கள் மற்றும்
பொறித்தொகுதிகளை ஆராய முடியாது என்பதோடு, “குற்றம்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம்
மற்றும் நோக்கெல்லை தொடர்பாக’ செயலாளர் நாயகத்துக்கு அதன் ஆலோசனையை வழங்க வேண்டும்
என்பதை குழுவின் வரையறை நோக்கெல்லை சுட்டிக் காட்டுகிறது. “சுபாவம் மற்றும்
நோக்கெல்லை’ என்பது குற்றச்சாட்டுக்களின் அளவு மற்றும் சட்ட தகைமைகள் என்பதைக்
குறிக்கிறது. குற்றச்சாட்டுக்களின் அளவினை வருணிப்பதற்காக, குழு பல்வேறு மூலங்களின்
இருந்து தகவலைப் பெற்று, சட்டத்தின் அடிப்படையில் அவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து,
பொறுப்புக்கூறல் பற்றிய கூட்டு அறிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் செயலாளர்
நாயகத்துக்கு சிறந்த ஆலோசனையை வழங்குவதை இவ்வேற்பாடு தேவைப்படுத்தியது. அது
சர்ச்சைக்குள்ளான உண்மைகள் பற்றி நிஜத் தீர்மானங்கைளை எடுக்கவில்லை என்பதால்
வழக்கமான ஐக்கிய நாடுகள் சொற்றொடர் குறிக்கும் உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையை
குழு மேற்கொள்ளவில்லை என்பதோடு நாடுகள், நாடற்ற அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின்
சட்டப்படியான பொறுப்பு அல்லது குறைகூறத்தக்க நிலை பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கான
முறைசாநர்ந்த புலனாய்வொன்றையும் மேற்கொள்ளவில்லை.
10. குற்றச்சாட்டுக்கள்
பற்றிய மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பல்வேறு முறைமைகள் பற்றிக் குழு மேற்கொண்ட
மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கையில் பொறுப்புக்கூறலை தொடர்வதற்கான சிபாரிசுகள்
தொகுதியொன்றை செயலாளர் நாயகத்தின் பாவனைக்காக குழு முன் வைத்துள்ளது. குழு அதன்
கடமையைச் செய்யும் கால வரையறையின் போது அதற்குக் கிடைத்த தகவல் மற்றும் கிடைத்த
இலக்கியங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
அதன்
நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. வின் சிரேக்ஷ்ட
அலுவலர்கள், அது செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை விடுத்து இறுதியில் ஆலோசனை வழங்கிய
போதிலும், அதன் ஆணையை நிறைவேற்றுவதில் சுயேச்சையாக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு
அதிகாரம் உண்டு என குழுவுக்குத் தெளிவாக விளக்கியுள்ளனர். மேலும், பின்வரும்
சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தை விட்டும் சுயேச்சையாக குழு இருக்கும் என்பதை
ஐ.நா. குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
2. குழுவின் காலம் சார்ந்த
வரையறைப் பொறுப்பு
12. “யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள்’ தொடர்பான கூட்டு
அறிக்கையினைச் செயற்படுத்துவது பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழகுவதை வரையறை
ஆணை தேவைப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச சட்டப் பாரிய மீறல்கள்
அநேகமானவை நேர்ந்த யுத்தத்தின் மிக உக்கிரமான கட்டத்தை உள்ளடக்கிய 2008 செப்டம்பர்
முதல் 2009 மே வரையிலான காலப்பகுதிக்கு குழு கவனம் செலுத்தியது. எல்.ரி.ரி.ஈ. இன்
நடப்பிலுள்ள தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கம் இறுதி இராணுவத் தாக்குதல்
மேற்கொண்டதற்கு 2008 செப்டெம்பர் ஒத்திருக்கிறது. வன்னியில் செயற்படும் சர்வதேச
அமைப்புக்களில் தொழில்புரியும் சர்வதேச பணியாட்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்தும்
உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து சர்வதேச
யுத்த அவதானிப்பு முடிவடைந்ததற்கும் அது ஒத்திருக்கிறது. 2009 மே மாதம் யுத்தத்தின்
முடிவையும் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் தோல்வியையும் குறிக்கிறது.
13.
சூழ்நிலைத் தொடர்பினை வழங்குவதற்காக, மேலே விவரிக்கப்பட்ட இறுதிக் கட்டங்களுக்கு
முந்திய விடயங்கள் பற்றி சில சமயங்களில் குழு கலந்துரையாடுகிறது. மேலும்,
யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் அல்லது அதனுடன் நெருக்கமாக தொடர்புபட்ட,
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும்
தொடர்ந்தவை சில சந்தர்ப்பங்களில் இன்றுவரை இடம்பெறுவது போன்ற மனிதாபிமான மற்றும்
மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் பற்றியும் குழு அறிந்துள்ளது. ஆயுதம் தாங்கிய
மோதலுடன் நெருக்கமற்ற, குறிப்பாக இலங்கையின் ஏனைய பாகங்களில் தற்போது நடைபெறுவதாகக்
குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் பற்றி குழு கவனம் செலுத்தவில்லை. (06) 3. குற்றம்
சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள்
14. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச
மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் தொடர்பாக வரையறை ஆணை உள்ளது. மனிதாபிமான
சட்டம் தொடர்பில், மோதல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் தொடர்ந்தும் ஈடுபடாதவர்கள்
அத்துடன் நலன்புரி வழிகள் மற்றும் முறைமைகள் தொடர்பான ஜெனீவா கோட்பாடுகளில்
வழங்கப்பட்டுள்ள தோதான வழக்கமான விதிமுறைகள் பற்றி குழு கவனம் செலுத்துகிறது. மனித
உரிமைகள் சட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒப்புதல் அளித்துள்ள சர்வதேச மனித உரிமைகள்
ஒப்பந்தங்கள் மீது கவனம் செலுத்தி அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அத்துடன்
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் ஆகியவை பற்றி குழு கவனம் செலுத்துகிறது.
இந்நடவடிக்கையின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆயுதந் தாங்கிய மோதல்
ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் பரஸ்பரம் ஒன்றை
ஒன்று உறுதிப்படுத்துவதை குழு நினைவூட்டுகிறதோடு, நிலையான சமாதானம் மற்றும்
மீளிணக்கப்பாடு ஆகியவை மீது அவற்றின் விளைவான தாக்கத்தையும் இனங்காண்கிறது.
இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம்
அத்துடன் பொறுப்புக் கூறல் பற்றிய ஏனைய சட்டங்கள் உள்ளடக்குகிறது என்ற
அளவில்,இலங்கையின் சட்டம் மற்றும் தோதான நிறுவனங்களும் ஆராயப்படுகின்றன. இறுதியாக,
யுத்தத்தின் முக்கிய பாத்திரங்களான அரசாங்கம் மற்றும் எல்.ரி.ரி.ஈ. ஆகியவற்றின்
மீறல்கள் பற்றிய குற்றச் சாட்டுக்களை குழு ஆராய்கிறது.
(07) (இ)
செயற்றிட்டம்
15. ஆய்வுரிமை வரம்பின் படி, குழு அதற்கே உரித்தான முறைமைகளை
அபிவிருத்தி செய்வதோடு, செயலகமொன்று அதற்கு உதவி வழங்கும். 2010 செப்டெம்பர்
நடுப்பகுதி அளவில் அதன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இரண்டு
மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் தொழில் புரியும் நெறிசார்ந்த
தொழில்புரிவோர்களிடையே இருந்து செயலகம் ஒன்று திரட்டப்பட்டது. மேலும், வேறு வகையாய்
கிடைக்காத ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக புற உசாத்துணையாளர்களின் சேவையை குழு
பெற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள் செயலகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு
திணைக்களங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மேற்கோள் குழுவொன்றும் குழுவுக்கு
உதவியளித்தது.
16. குழுவின் செயல் திட்டம் இரு கட்டங்களாக
நெறிப்படுத்தப்பட்டது. முதற் கட்டத்தில், அதன் ஆய்வுரிமை வரம்பு தொடர்பான
நிபுணத்துவம் அல்லது அனுபவம் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து
இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் பற்றிய பல்வேறு தகவல்களை குழு சேகரித்தது.
இவ்வாறான சில தகவல்கள் எழுத்து வடிவத்தல் உதா: அரசாங்க, ஐ.நா. அல்லது அரச சார்பற்ற
அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் குழுவுக்கு இரகசியமான முறையில் வழங்கப்பட்ட
தகவல்கள் மூலமாகக் கிடைத்தன. ஏனைய தகவல்கள் குழுவின் பல கூட்டங்கள் மற்றும் அதன்
செயலகத்தின் மூலமும் பெறப்பட்டன. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நடந்தேறிய
நிகழ்வுகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களின்
அலுவலர்கள் அத்துடன் அரசாங்கங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள்
மற்றும் தனிநபர்கள் ஆகியோருடன் குழு சந்திப்புக்களை நடத்தியது. அதன் நடவடிக்கையின்
இரண்டாம் கட்டத்தின் போது, குழு இவ்வறிக்கையின் நகலைத் தயாரித்தது. பிரசுரிப்பதற்கு
ஏதுவான வகையில் இவ்வறிக்கை வரையப்பட்டது.
17. பரவலாக பொதுமக்களின் தொடர்பு
கொள்வது தொடர்பில், அக்கறைகொண்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் எழுத்து மூலமாக
முறையீடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுவானதொரு அழைப்பு விடுக்கப்பட்டது. 2010
ஒக்டோபர் 21ஆம் திகதி, குழுவின் பணியாட்டொகுதித் தலைவர், அறிவித்தலின் பிரதியொன்றை
இணைத்து அது ஐ.நா. இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்து இத்தீர்மானம்
பற்றி இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில அறிவித்தல்
2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதோடு, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான
அறிவித்தல்கள் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கு
ஆரம்பத்தில் கடைசித் திகதியாகக் குறிப்பிடப்பட்ட 2010 டிசம்பர் 15ஆம் திகதி பின்னர்
2010 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 2010 டிசம்பர் 31ஆம் திகதி
இருந்தவாறாக, 2,300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 4,000 க்கும் அதிகமான
முறையீடுகள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன.
(08) 18. குறிப்பிட்டதொரு
வகைகளிலான மீறல்கள் அல்லது இறுதிக் கட்டங்களின் போதான குறிப்பிட்டதொரு
காலப்பகுதிகள் தொடர்பானதாக மற்றும் மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின்
குறித்துரைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறையீடுகளில் கணிசமானவை
இருந்தன. ஆவணப்படுத்தப்பட்ட தகவல், நிகழ்வுகளின் பட்டியல்கள் அல்லது
பாதிக்கப்பட்டோர், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கின.
பாரபட்சமற்றவையாக பகுப்பாய்வு ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட சில முறையீடுகள்
பொதுவான தகவல்கள், போக்குகள் அல்லது நிலைமை பற்றிய குறிப்பின் அம்சங்களின்
பகுப்பாய்வினை வழங்கின. பொதுவான தகவல்கள் ஊடக அறிக்கைகள், இணையத் தொடர்புகள்
பொதுவாகக் கிடைக்கக் கூடிய மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வரலாற்று
ரீதியிலான விளக்கங்கள் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகளில் அடங்கின.
இறுதியாக, உண்மையினை அடிப்படையாக அல்லது பகுப்பாய்வினைக் கொண்டிராத நடவடிக்கை
எடுக்குமாறும் குறிப்பான பரிந்துரைகளைச் செய்யுமாறும் குழுவினை வேண்டிக் கொண்டவை
பெறப்பட்ட கணிசமான முறையீடுகளில் அடங்கின.
19. முறையீடுகளை ஒவ்வொன்றாக
குழுவினால் சரி பிழை பார்க்க முடியவில்லை என்பதால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான
ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தன்மையினை நிறைவு செய்யவும் குழுவின் நியதிக்கேற்ப அவை
நேரடி மூலமாகப் பாவிக்கப்படவில்லை (அத்தியாயம் டிடி அ பார்க்கவும்). சில
விடயங்களில், முறையீடுகள் தகவலின் ஏனைய மூலங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவின.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக மாத்திரமன்றி மேலும் விரிவாக கடந்த காலம்
தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை குழுவின் காலம் சார்ந்த
ஆணைக்கு முன்பதான நிகழ்வுகளை உள்ளிட்டதாகக் கிடைக்கப்பெற்ற கணிசமான முறையீடுகள்
வலியுறுத்திக் காட்டுகின்றன.
ஈ. இலங்கை அரசாங்கத்துடனான இணைச் செயற்பாடு 20.
அதன் ஆரம்பந்தொட்டு, அதன் ஆணையை அமுல் செய்வது பற்றி இலங்கை அரசாங்கத்துடன்
கலந்துரையாடி பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்
அரசாங்கத்தின் நோக்கம் எவ்வாறாக உள்ளது என்பதை அறிவதற்காகக் குழு விருப்பம்
கொண்டிருந்தது. உண்மையிலேயே, குழு அரசாங்கத்துக்கானதொரு மூலவளமாகச் செயற்படலாம்
என்பதாக குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் செயலாளர் நாயகம் தன் நம்பிக்கையைத்
தெரிவித்திருந்தார். குறிப்பாக, உள்நாட்டிலேயே அபிவிருத்தி செய்யப்பட்ட
பொறுப்புக்கூறல் பற்றியதொரு பொறித்தொகுதி என பகிரங்கமாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ள
கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுவது
பெறுமதி மிக்கதாகும் என்ற நிலைப்பாட்டின தொடர்ச்சியுமாகக் குழு பேணி வந்துள்ளது.
அதேநேரத்தில், பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் ஏனைய உள்நாட்டு நிறுவனங்களுக்கும்
பாரியதொரு பங்களிப்பு உண்டு என குழு கருதியதோடு, அரசாங்கத்தினுடாக அவற்றுடனும்
தொடர்புகளைப் பேண குழு முயற்சிகளை மேற்கொண்டது.
(09) 21. இவ்விளக்கம்
எடுத்துக் காட்டுவது போன்று, 2010 செப்டெம்பர் ஆரம்பத்தில் இருந்து குழு அதன் ஆணையை
நிறைவு செய்யும் சந்தர்ப்பம் நெருங்கும் வரை, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட
சொல் மூலமும் எழுத்து மூலமும் பலதடகைள் குழு முயற்சியினை மேற்கொண்டது. குழுவின்
நோக்கெல்லை செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதாக உள்ளதாகவும் ஏதும் புலனாய்வினை
மேற்கொள்வதில் அது ஈடுபடவில்லை என்பதை உள்ளிட்டவாறு இலங்கை அரசாங்கத்துக்கு
குழுவும் ஐ.நா. அலுவலர்களும் பலதடவை தெளிவுபடுத்தியுள்ளனர். குழுவுடன் எதுவிதத்
தொடர்பாடலும் இன்றிப் பல மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வருமாறு அரசாங்கம்
குழுவுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அத்தகைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் பற்றிக்
கலந்துரையாடாமல் அதன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டது. குழு கற்ற பாடங்கள்
மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவுக்கு “பிரதிநிதித்துவங்களை’ மாத்திரம் செய்யலாம் என
2010 டிசம்பர் மாதம் கடித மூலம் அரசாங்கம் வற்புறுத்திய போதிலும் நாட்டுக்கான
விஜயத்தை மேற்கொள்வதற்கான அதன் விருப்பத்தைக் குழு வலியுறுத்தியது. இதனையும் 2011
ஜனவரி ஆரம்பத்தில் வழங்கிய குறிப்பொன்றின் மூலம் அரசாங்கம் நிராகரித்ததோடு அதன்
பின்னர் விஜயம் பற்றி மேற்கொண்டு எதுவித தொடர்பினையும் பேணவில்லை. மாறாக, கற்ற
பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழு மற்றும் ஏனைய உள்நாட்டுப்
பொறித்தொகுதிகள் பற்றிய குழுவின் கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதிலை ஜனவரி இறுதி
அளவில் அனுப்பி வைத்ததோடு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின்
எந்தவொரு உறுப்பினரையும் உள்ளடக்காத சிறியதொரு தூதுக்குழுவினை நியூயோர்க்குக்கு அது
அனுப்பி வைத்தது.
22. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கற்ற பாடங்கள்
மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில்
ஈடுபட்டுள்ள பலதரப்பட்டட அதிகாரிகளைக் குழு சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி
வழங்கவில்லை என்பதையிட்டு குழு கவலை தெரிவிக்கிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது அதன்
நடவடிக்கைகளுக்கு அவசியமானதல்ல என்றிருந்த போதிலும், கற்ற பாடங்கள் மற்றும்
மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு மற்றும் அரசாங்க அலுவலர்களைச் சந்தித்து, அவர்களின்
கருத்துக்களை மேலும் நேரடியாகக் கேட்டு அவர்களுடன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து
கொள்வதற்கு (வேறு வழிகளில் உத்தியோகபூர்வ கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு
குழு முடிந்த போதிலும்) குழுவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும். எழுத்து
மூலமான பதில்களையும் இலங்கை அதிகாரிகளுடனான நேருக்கு நேரான உரையாடலுக்கான
சந்தர்ப்பத்தை குழு வரவேற்ற போதிலும், அப்படியானதொரு ஈடுபாட்டிற்காக குழு முயற்சி
செய்யவில்லை.
உ. குழுவினது பதிவுகளின் இரகசியத் தன்மை
23. பின்னர்
தகவலைப் பிரயோகிப்பது பற்றிய முழுமையான இரகசியத்தன்மையின் உறுதிப்பாட்டின் பேரில்
சில சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான மற்றும் வாய் மூலமான சமர்ப்பணங்கள்
குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன. இது பற்றி அறிவுரை வழங்கிய சட்ட விவகாரங்கள்
அலுவலகம், செயலாளர் நாயகத்தின் “தகவலின் பதிவு நுட்பத்தன்மை, வகைப்படுத்தல் மற்றும்
கையாளுதல்’ தொடர்பான அறிக்கையின் (குகூ/குஎஆ/2007/6) ஏற்பாடுகளை அதன் பதிவுகளுக்கு
உரியதாய்க் கருதலாம் என உறுதிப்படுத்தியது. ஒரு (10) ஆவணத்தை “கண்டிப்பான
இரகசியத்தன்மை’ என வகைப்படுத்தி அதற்கான பிரவேசத்தை 20 வருட காலத்துக்கு
மட்டுப்படுத்துவதோடு அதனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்தல் அல்லது வெளியிடுதல்
தொடர்பான நியாயம் பற்றிய மீளாய்வொன்றை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாட்டினை
இவ்வறிக்கை விளக்குகிறது. மேலும், குழுவின் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் மற்றும்
தோதானவிடத்து, பின்னர் பிரயோகிப்பது தொடர்பான கண்டிப்பான இரகசியத்தன்மை பற்றிய
உறுதிப்பாட்டினை குழு வழங்கலாம் என்பதை சட்ட விவகாரங்கள் அலுவலகங்கள்
உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, குழுவின் பொருள் செறிந்த பதிவுகள் கிட்டத்தட்ட
முழுமையாக “கண்டிப்பான இரகசியத்தன்மை’ எனவும், சில விடயங்கள் தொடர்பாக எதிர்கால
பாவனை பற்றிய மேலதிகப் பாதுகாப்புடனும் வகைப்படுத்தப்படும்.
டிடி.
மோதலுக்கான வரலாற்று ரீதியிலான மற்றும் அரசியல் பின்னணி
24. கிட்டத்தட்ட
மூன்று தசாப்தங்கள் நடைபெற்று வந்த மூர்க்கத்தனமான மோதலின் பின்னர், 2009 மே 19ஆம்
திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) மீதான அதன் வெற்றியை இலங்கை
அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச
மனிதாபிமான மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய ஏராளமான
குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டதோடு, அவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை
வழங்குவது குழுவுக்குப் பொறுப்பு சாட்டப்பட்டது. இலங்கையின் சிக்கலான மற்றும்
எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் வரலாற்றினை கூறுபடுத்தி ஆராய்வது குழுவின்
பணியல்ல. இருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை தோதான அரசியல் மற்றும்
சமூகப் பின்னணியின் கண்ணோட்டத்தில் ஆராய்வதற்காக, மோதலின் வரலாற்றின் சில அம்சங்களை
கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என குழு கண்டது.
25. இலங்கை
ஜனநாயக சோஷலிசக் குடியரசு இந்தியாவின் தென் கிழக்குக் கரைக்கு 18 மைல்களுக்கு
அப்பால் இந்திய சமுத்திரத்தில் உள்ள தீவு தேசமாகும். இலங்கை 21 மில்லியன்
சனத்தொகையைக் கொண்ட இனத்துவ, மொழிவாரியான அத்துடன் சமயம் தொடர்பான பன்முகத்
தன்மையுடையதொரு நாடு என்பதோடு, அதில் 74 சதவீதத்தினர் அதிகமாக பௌத்தர்களை
உள்ளடக்கிய சிங்கள மொழி பேசும் சிங்களவர்களாகவும், 18 சதவீதத்தினர் அநேகமாக
இந்துக்களான தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களாகவும் (இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய
தமிழர்கள் என முறையே 13 சதவீதத்தையும் 5 சதவீதத்தையும் உள்ளடக்கியதாக), மற்றும் 7
சதவீதத்தினர் இஸ்லாம் மதத்தை அனுஷ்டிக்கும் பொதுவாகத் தமிழ் மொழியைப் பேசும்
சோனகர்கள் மற்றும் மலேயர்களைக் கொண்ட முஸ்லிம்களாகவும் மற்றும் 1 சதவீதத்தினர்
ஏனையவர்களுள் பறங்கியர் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட சிறிய இனத்துவச் சமூகங்களைச்
சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சில சமூகங்களில் சிறிய வீதத்தினராக கிறிஸ்தவர்கள்
உள்ளனர்.
26. முதலில் போர்த்துக்கேயர், அடுத்து ஒல்லாந்தர் மற்றும் இறுதியாக
பிரித்தானியர்களின் 4 நூற்றாண்டுகள் தொடர்ந்த காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர்.
பிரித்தானியாவிடம் இருந்து 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது.
சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு இனத்துவச் சமூகங்களை உள்ளடக்கியதாகச் சிங்களவர்
ஆதிக்கம் செலுத்தும் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இலங்கையை ஆட்சி
செய்து வந்தது. சகலருக்குமான வாக்குரிமை, பல்கட்சி அமைப்பு மற்றும் துடிப்பானதொரு
தேர்தல் செயற்பாடு, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு சாராருக்குமான உயர்
நிலையிலான எழுத்தறிவு, குறைந்த சிசு மரண வீதம் போன்ற முக்கியமான மனித அபிவிருத்திச்
சித்திகள் ஆகியவற்றை உள்ளிட்ட உறுதியான ஜனநாயகச் சுட்டிகளை இலங்கையின் நீண்ட கால
யுத்தம் பற்றிய வரலாற்றுடன் தெளிவாக ஒப்பிடக் கூடியதாகவுள்ளது

(11) அ.
இனத்துவமும் அரசியலும்
27. அரசியல் மற்றும் இனத்துவக் கோடுகளூடான ஆழமானதொரு விரிசலின் வன்முறைப்
பிரதிபலிப்பாக இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் இருந்துள்ளது.
1.
இனத்துவம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம் 28. சுதந்திரத்தின் பின்,
அரசியல் பிரமுகர்கள் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கி,
நீண்ட கால கொள்கைகளுக்கு மேலாக சமுதாயம் சார்ந்த அத்துடன் இனத்துவ வாத மன
உணர்ச்சிகளை கவர்வதற்கான ஒரு போக்கினைக் கொண்டிருந்தனர். நீண்ட கால
கொள்கைகள் பிரஜைகளின் பல்கலாசார இயல்பினைப் போதியளவு
பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகலரையும் உள்ளிட்டதொரு நாட்டைக்
கட்டியெழுப்பியிருக்கலாம். இத்தகைய செயற்பாடு மற்றும் பிரிவுகள் காரணமாக
ஒருமைப்படுத்தும் தேசிய தனித்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே
வேளையில், சிங்களபௌத்த தேசியவாதம் செயற்பட ஆரம்பித்தது, பௌத்த மதத்தின்
பரிசுத்த இல்லமாகிய இலங்கையின் பாதுகாப்பாளர்கள் என்பதாக சிங்களவர்களுக்கு
தனிச்சிறப்பினைக் கொண்டதொரு தன்மையை வலியுறுத்தியது. இக்காரணிகள்
இலங்கையில் நாடு, அரசாட்சி மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்புகளைப்
பாழாக்கி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியது.
29. 1970ஆம்
ஆண்டுகளில், ஒரு புறம் வகுப்பு அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த
தெற்கின் இளம் சிங்களவர்கள் மற்றும் இனத்துவ அடிப்படையிலான ஓரங்கட்டலால்
விரக்தியடைந்த வடக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் மறு பக்கம் உருவாகி வரும்
நாடு சம்பந்தப்பட்ட வகையில் வெவ்வேறு விதமான எதிர்ச்செயலில் ஈடுபட்டு,
தீவிரவாதத்தின் பக்கம் திரும்பி, அரசுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய
புரட்சிகளில் ஈடுபட்டனர். அரசாங்கம் இவ்வியக்கங்களை தேசிய பாதுகாப்புக்கான
அச்சுறுத்தலாகக் கணித்து, அடிப்படையான அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதை
விடுத்து, அரச அதிகாரத்துக்கு எதிரான சவால்களான காணாமல்போதல்கள்,
சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட
அடக்குமுறையினைக் கொண்டு எதிர்கொண்டது.
30. வேறுபாடு காட்டும்
அரசாங்கக் கொள்கைகள் மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான
கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, காந்தியின் அகிம்சா வழியைப் பின்பற்றி
ஆரம்பித்த உரிமைகளுக்கான தமிழ் போராட்டம், தனி நாடு என்ற கோரிக்கையை
மையமாகக் கொண்டு மேலும் மேலும் தமிழ் தீவிரவாதம் மற்றும் ஆயுதம் ஏந்திய
புரட்சியை தோற்றுவித்தது. ஒத்துப்போவதில் இருந்து பிரிவினை வாதத்துக்கு
கலந்துரையாடல் மாறியபோது, 1970ஆம் ஆண்டுகளில் எல்.ரி.ரி.ஈ. உள்ளிட்ட பல
தமிழ் அரசியல்தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. ஆயுதந்தாங்கிய தமிழ் குழுக்கள்
பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்குச்
சமாந்தரமாக சிங்கள தேசியவாதிகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான
அடக்கு முறை தீவிரமடைந்தது. 1977, 1979, 1981 மற்றும் 1983 இல்
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கத்தில் இருந்த சில சக்திகள்
உற்சாகப்படுத்தின அல்லது சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு அனுசரணை வழங்கின.
இந்த வன்முறை 1983இல் ஆகப் பரவலாக நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான
தாக்குதல்களின் உச்ச நிலையை அடைந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான
பேருந்துகளில் சிங்களக் கும்பல்கள் போக்குவரத்துச் செய்யப்பட்டதோடு
தமிழர்களை இனங்கண்டு அவர்களை இலக்குப் பார்ப்பதற்காக உத்தியோகபூர்வமான
வாக்காளர் பதிவேடுகள் பிரயோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு
பாரிய அளவில் இடம் பெயர்வு, தமிழர்களின் சொத்துக்களுக்கான சேதம் அத்துடன்
தமிழர்களின் புலம்பெயர்வு நேர்ந்தது. வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் 13
இலங்கை இராணுவ வீரர்களை எல்.ரி.ரி.ஈ. கொலை செய்ததற்குப் பதிலாக
இத்தாக்குதல்கள் நடைபெற்றதாக அரசாங்கம் உறுதியாகக் கூறியது. இவ்வாறாக,
1983ஆம் ஆண்டுக்கு முன்னர் இரு தரப்பினருக்கிடையிலான வன்செயல்கள் நேர்ந்த
போதிலும், அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. இனருக்கும் இடையிலான யுத்தத்தின்
ஆரம்பம் 1983 எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. 2. தமிழீழ விடுதலைப் புலிகள்
(எல்.ரி.ரி.ஈ) 31. 1983ஆம் ஆண்டின் இனக் கலவரங்களுக்குப் பின்னர்
தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை மும்முரமடைந்த போது, தமிழ் சமூகமும்
மேலும் தீவிரவாதத்தில் ஆழ்ந்து, தமிழ் நாட்டில் பயிற்சி மற்றும்
அமைப்புக்கு ஏதுவான சூழலைப் பிரயோசனப் படுத்தியதோடு, தீவிரவாதக்
குழுக்களின் அணிகளும் அதிகரித்தன. தமிழ் விடுதலை இயக்கமாக ஆரம்பித்த
எல்.ரி.ரி.ஈ, நாளடைவில் மிகவும் ஒழுங்கு சார்ந்த மற்றும் தமிழ் தீவிரவாதக்
குழுக்களிடையே மிகவும் தேசியவாதத்தைக் கொண்டதாகவும் மாறி 1980ஆம்
ஆண்டுகளின் நடுப்பகுதியில் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை அரவணைக்கும் தலையாய
சக்தியாக தலைதூக்கியது. இக்கால கட்டத்தின் போது, எல்.ரி.ரி.ஈ. ஏனைய தமிழ்
குழுக்களை பணிய வைப்பதற்காக கூடிய அளவிலான வன்முறைப் போக்கினைக்
கடைப்பிடித்ததோடு, தாமாகவே நியமிக்கப்பட்டட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்
தாம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். அதன் புதிரான தலைவர், வேலுப்பிள்ளை
பிரபாகரன், முழுமையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகாரத்துடன்
கோரியதோடு பக்தி சார்ந்ததொரு ஆதரவாளர்களை உருவாக்கினார். தமக்குள்ளே
எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் சகிக்காததோடு, அரசாங்கத்துடன்
செயற்படுவோர் அல்லது ஒத்துழைப்போர் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் துரோகிகள்
என்று முத்திரை குத்தப்பட்டு அநேகமாக எல்.ரி.ரி.ஈ. இனால் கொலை
செய்யப்பட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இன்
வன்முறை தமிழ் சமுதாயத்தினுள் ஆழ்ந்த பயத்தையும் சந்தேகத்தையும்
தோற்றுவித்தது.
(தொடரும்...)
நன்றி:www.vannionline.com

4000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குழுவுக்குக் கிடைத்தன ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் 02 |
(05) 11. அதன் நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. வின் சிரேக்ஷ்ட அலுவலர்கள், அது செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை விடுத்து இறுதியில் ஆலோசனை வழங்கிய போதிலும், அதன் ஆணையை நிறைவேற்றுவதில் சுயேச்சையாக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அதிகாரம் உண்டு என குழுவுக்குத் தெளிவாக விளக்கியுள்ளனர். மேலும், பின்வரும் சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தை விட்டும் சுயேச்சையாக குழு இருக்கும் என்பதை ஐ.நா. குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது. 2. குழுவின் காலம் சார்ந்த வரையறைப் பொறுப்பு 12. "யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள்' தொடர்பான கூட்டு அறிக்கையினைச் செயற்படுத்துவது பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழகுவதை வரையறை ஆணை தேவைப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச சட்டப் பாரிய மீறல்கள் அநேகமானவை நேர்ந்த யுத்தத்தின் மிக உக்கிரமான கட்டத்தை உள்ளடக்கிய 2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலப்பகுதிக்கு குழு கவனம் செலுத்தியது. எல்.ரி.ரி.ஈ. இன் நடப்பிலுள்ள தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கம் இறுதி இராணுவத் தாக்குதல் மேற்கொண்டதற்கு 2008 செப்டெம்பர் ஒத்திருக்கிறது. வன்னியில் செயற்படும் சர்வதேச அமைப்புக்களில் தொழில்புரியும் சர்வதேச பணியாட்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து சர்வதேச யுத்த அவதானிப்பு முடிவடைந்ததற்கும் அது ஒத்திருக்கிறது. 2009 மே மாதம் யுத்தத்தின் முடிவையும் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் தோல்வியையும் குறிக்கிறது. 13. சூழ்நிலைத் தொடர்பினை வழங்குவதற்காக, மேலே வரிக்கப்பட்ட இறுதிக் கட்டங்களுக்கு முந்திய விடயங்கள் பற்றி சில சமயங்களில் குழு கலந்துரையாடுகிறது. மேலும், யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் அல்லது அதனுடன் நெருக்கமாக தொடர்புபட்ட, யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்ந்தவை சில சந்தர்ப்பங்களில் இன்றுவரை இடம்பெறுவது போன்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் பற்றியும் குழு அறிந்துள்ளது. ஆயுதம் தாங்கிய மோதலுடன் நெருக்கமற்ற, குறிப்பாக இலங்கையின் ஏனைய பாகங்களில் தற்போது நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் பற்றி குழு கவனம் செலுத்தவில்லை. (06) 3. குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள் 14. குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் தொடர்பாக வரையறை ஆணை உள்ளது. மனிதாபிமான சட்டம் தொடர்பில், மோதல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் தொடர்ந்தும் ஈடுபடாதவர்கள் அத்துடன் நலன்புரி வழிகள் மற்றும் முறைமைகள் தொடர்பான ஜெனீவா கோட்பாடுகளில் வழங்கப்பட்டுள்ள தோதான வழக்கமான விதிமுறைகள் பற்றி குழு கவனம் செலுத்துகிறது. மனித உரிமைகள் சட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒப்புதல் அளித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள் மீது கவனம் செலுத்தி அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அத்துடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் ஆகியவை பற்றி குழு கவனம் செலுத்துகிறது. இந்நடவடிக்கையின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆயுதந் தாங்கிய மோதல் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் பரஸ்பரம் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துவதை குழு நினைவூட்டுகிறதோடு, நிலையான சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவை மீது அவற்றின் விளைவான தாக்கத்தையும் இனங்காண்கிறது. இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் அத்துடன் பொறுப்புக் கூறல் பற்றிய ஏனைய சட்டங்கள் உள்ளடக்குகிறது என்ற அளவில்,இலங்கையின் சட்டம் மற்றும் தோதான நிறுவனங்களும் ஆராயப்படுகின்றன. இறுதியாக, யுத்தத்தின் முக்கிய பாத்திரங்களான அரசாங்கம் மற்றும் எல்.ரி.ரி.ஈ. ஆகியவற்றின் மீறல்கள் பற்றிய குற்றச் சாட்டுக்களை குழு ஆராய்கிறது. (07) (இ) செயற்றிட்டம் 15. ஆய்வுரிமை வரம்பின் படி, குழு அதற்கே உரித்தான முறைமைகளை அபிவிருத்தி செய்வதோடு, செயலகமொன்று அதற்கு உதவி வழங்கும். 2010 செப்டெம்பர் நடுப்பகுதி அளவில் அதன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் தொழில் புரியும் நெறிசார்ந்த தொழில்புரிவோர்களிடையே இருந்து செயலகம் ஒன்று திரட்டப்பட்டது. மேலும், வேறு வகையாய் கிடைக்காத ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக புற உசாத்துணையாளர்களின் சேவையை குழு பெற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள் செயலகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மேற்கோள் குழுவொன்றும் குழுவுக்கு உதவியளித்தது. 16. குழுவின் செயல் திட்டம் இரு கட்டங்களாக நெறிப்படுத்தப்பட்டது. முதற் கட்டத்தில், அதன் ஆய்வுரிமை வரம்பு தொடர்பான நிபுணத்துவம் அல்லது அனுபவம் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் பற்றிய பல்வேறு தகவல்களை குழு சேகரித்தது. இவ்வாறான சில தகவல்கள் எழுத்து வடிவத்தல் உதா: அரசாங்க, ஐ.நா. அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் குழுவுக்கு இரகசியமான முறையில் வழங்கப்பட்ட தகவல்கள் மூலமாகக் கிடைத்தன. ஏனைய தகவல்கள் குழுவின் பல கூட்டங்கள் மற்றும் அதன் செயலகத்தின் மூலமும் பெறப்பட்டன. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நடந்தேறிய நிகழ்வுகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்கள் அத்துடன் அரசாங்கங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருடன் குழு சந்திப்புக்களை நடத்தியது. அதன் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் போது, குழு இவ்வறிக்கையின் நகலைத் தயாரித்தது. பிரசுரிப்பதற்கு ஏதுவான வகையில் இவ்வறிக்கை வரையப்பட்டது. 17. பரவலாக பொதுமக்களின் தொடர்பு கொள்வது தொடர்பில், அக்கறைகொண்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் எழுத்து மூலமாக முறையீடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுவானதொரு அழைப்பு விடுக்கப்பட்டது. 2010 ஒக்டோபர் 21ஆம் திகதி, குழுவின் பணியாட்டொகுதித் தலைவர், அறிவித்தலின் பிரதியொன்றை இணைத்து அது ஐ.நா. இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்து இத்தீர்மானம் பற்றி இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில அறிவித்தல் 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதோடு, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான அறிவித்தல்கள் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆரம்பத்தில் கடைசித் திகதியாகக் குறிப்பிடப்பட்ட 2010 டிசம்பர் 15ஆம் திகதி பின்னர் 2010 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 2010 டிசம்பர் 31ஆம் திகதி இருந்தவாறாக, 2,300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 4,000 க்கும் அதிகமான முறையீடுகள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன. (08) 18. குறிப்பிட்டதொரு வகைகளிலான மீறல்கள் அல்லது இறுதிக் கட்டங்களின் போதான குறிப்பிட்டதொரு காலப்பகுதிகள் தொடர்பானதாக மற்றும் மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் குறித்துரைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறையீடுகளில் கணிசமானவை இருந்தன. ஆவணப்படுத்தப்பட்ட தகவல், நிகழ்வுகளின் பட்டியல்கள் அல்லது பாதிக்கப்பட்டோர், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கின. பாரபட்சமற்றவையாக பகுப்பாய்வு ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட சில முறையீடுகள் பொதுவான தகவல்கள், போக்குகள் அல்லது நிலைமை பற்றிய குறிப்பின் அம்சங்களின் பகுப்பாய்வினை வழங்கின. பொதுவான தகவல்கள் ஊடக அறிக்கைகள், இணையத் தொடர்புகள் பொதுவாகக் கிடைக்கக் கூடிய மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான விளக்கங்கள் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகளில் அடங்கின. இறுதியாக, உண்மையினை அடிப்படையாக அல்லது பகுப்பாய்வினைக் கொண்டிராத நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பான பரிந்துரைகளைச் செய்யுமாறும் குழுவினை வேண்டிக் கொண்டவை பெறப்பட்ட கணிசமான முறையீடுகளில் அடங்கின. 19. முறையீடுகளை ஒவ்வொன்றாக குழுவினால் சரி பிழை பார்க்க முடியவில்லை என்பதால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தன்மையினை நிறைவு செய்யவும் குழுவின் நியதிக்கேற்ப அவை நேரடி மூலமாகப் பாவிக்கப்படவில்லை (அத்தியாயம் டிடி அ பார்க்கவும்). சில விடயங்களில், முறையீடுகள் தகவலின் ஏனைய மூலங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவின. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக மாத்திரமன்றி மேலும் விரிவாக கடந்த காலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை குழுவின் காலம் சார்ந்த ஆணைக்கு முன்பதான நிகழ்வுகளை உள்ளிட்டதாகக் கிடைக்கப்பெற்ற கணிசமான முறையீடுகள் வலியுறுத்திக் காட்டுகின்றன. ஈ. இலங்கை அரசாங்கத்துடனான இணைச் செயற்பாடு 20. அதன் ஆரம்பந்தொட்டு, அதன் ஆணையை அமுல் செய்வது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தின் நோக்கம் எவ்வாறாக உள்ளது என்பதை அறிவதற்காகக் குழு விருப்பம் கொண்டிருந்தது. உண்மையிலேயே, குழு அரசாங்கத்துக்கானதொரு மூலவளமாகச் செயற்படலாம் என்பதாக குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் செயலாளர் நாயகம் தன் நம்பிக்கையைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, உள்நாட்டிலேயே அபிவிருத்தி செய்யப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றியதொரு பொறித்தொகுதி என பகிரங்கமாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ள கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுவது பெறுமதி மிக்கதாகும் என்ற நிலைப்பாட்டின தொடர்ச்சியுமாகக் குழு பேணி வந்துள்ளது. அதேநேரத்தில், பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் ஏனைய உள்நாட்டு நிறுவனங்களுக்கும் பாரியதொரு பங்களிப்பு உண்டு என குழு கருதியதோடு, அரசாங்கத்தினுடாக அவற்றுடனும் தொடர்புகளைப் பேண குழு முயற்சிகளை மேற்கொண்டது. (09) 21. இவ்விளக்கம் எடுத்துக் காட்டுவது போன்று, 2010 செப்டெம்பர் ஆரம்பத்தில் இருந்து குழு அதன் ஆணையை நிறைவு செய்யும் சந்தர்ப்பம் நெருங்கும் வரை, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட சொல் மூலமும் எழுத்து மூலமும் பலதடகைள் குழு முயற்சியினை மேற்கொண்டது. குழுவின் நோக்கெல்லை செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதாக உள்ளதாகவும் ஏது புலனாய்வினை மேற்கொள்வதில் அது ஈடுபடவில்லை என்பதை உள்ளிட்டவாறு இலங்கை அரசாங்கத்துக்கு குழுவும் ஐ.நா. அலுவலர்களும் பலதடவை தெளிவுபடுத்தியுள்ளனர். குழுவுடன் எதுவிதத் தொடர்பாடலும் இன்றிப் பல மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் குழுவுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அத்தகைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடாமல் அதன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டது. குழு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவுக்கு "பிரதிநிதித்துவங்களை' மாத்திரம் செய்யலாம் என 2010 டிசம்பர் மாதம் கடித மூலம் அரசாங்கம் வற்புறுத்திய போதிலும் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கான அதன் விருப்பத்தைக் குழு வலியுறுத்தியது. இதனையும் 2011 ஜனவரி ஆரம்பத்தில் வழங்கிய குறிப்பொன்றின் மூலம் அரசாங்கம் நிராகரித்ததோடு அதன் பின்னர் விஜயம் பற்றி மேற்கொண்டு எதுவித தொடர்பினையும் பேணவில்லை. மாறாக, கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழு மற்றும் ஏனைய உள்நாட்டுப் பொறித்தொகுதிகள் பற்றிய குழுவின் கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதிலை ஜனவரி இறுதி அளவில் அனுப்பி வைத்ததோடு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் உள்ளடக்காத சிறியதொரு தூதுக்குழுவினை நியூயோர்க்குக்கு அது அனுப்பி வைத்தது. 22. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டுள்ள பலதரப்பட்டட அதிகாரிகளைக் குழு சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதையிட்டு குழு கவலை தெரிவிக்கிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது அதன் நடவடிக்கைகளுக்கு அவசியமானதல்ல என்றிருந்த போதிலும், கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு மற்றும் அரசாங்க அலுவலர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை மேலும் நேரடியாகக் கேட்டு அவர்களுடன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு (வேறு வழிகளில் உத்தியோகபூர்வ கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குழு முடிந்த போதிலும்) குழுவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும். எழுத்து மூலமான பதில்களையும் இலங்கை அதிகாரிகளுடனான நேருக்கு நேரான உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை குழு வரவேற்ற போதிலும், அப்படியானதொரு ஈடுபாட்டிற்காக குழு முயற்சி செய்யவில்லை. உ. குழுவினது பதிவுகளின் இரகசியத் தன்மை 23. பின்னர் தகவலைப் பிரயோகிப்பது பற்றிய முழுமையான இரகசியத்தன்மையின் உறுதிப்பாட்டின் பேரில் சில சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான மற்றும் வாய் மூலமான சமர்ப்பணங்கள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன. இது பற்றி அறிவுரை வழங்கிய சட்ட விவகாரங்கள் அலுவலகம், செயலாளர் நாயகத்தின் "தகவலின் பதிவு நுட்பத்தன்மை, வகைப்படுத்தல் மற்றும் கையாளுதல்' தொடர்பான அறிக்கையின் (குகூ/குஎஆ/2007/6) ஏற்பாடுகளை அதன் பதிவுகளுக்கு உரியதாய்க் கருதலாம் என உறுதிப்படுத்தியது. ஒரு (10) ஆவணத்தை "கண்டிப்பான இரகசியத்தன்மை' என வகைப்படுத்தி அதற்கான பிரவேசத்தை 20 வருட காலத்துக்கு மட்டுப்படுத்துவதோடு அதனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்தல் அல்லது வெளியிடுதல் தொடர்பான நியாயம் பற்றிய மீளாய்வொன்றை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாட்டினை இவ்வறிக்கை விளக்குகிறது. மேலும், குழுவின் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் மற்றும் தோதானவிடத்து, பின்னர் பிரயோகிப்பது தொடர்பான கண்டிப்பான இரகசியத்தன்மை பற்றிய உறுதிப்பாட்டினை குழு வழங்கலாம் என்பதை சட்ட விவகாரங்கள் அலுவலகங்கள் உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, குழுவின் பொருள் செறிந்த பதிவுகள் கிட்டத்தட்ட முழுமையாக "கண்டிப்பான இரகசியத்தன்மை' எனவும், சில விடயங்கள் தொடர்பாக எதிர்கால பாவனை பற்றிய மேலதிகப் பாதுகாப்புடனும் வகைப்படுத்தப்படும். டிடி. மோதலுக்கான வரலாற்று ரீதியிலான மற்றும் அரசியல் பின்னணி 24. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நடைபெற்று வந்த மூர்க்கத்தனமான மோதலின் பின்னர், 2009 மே 19ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) மீதான அதன் வெற்றியை இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டதோடு, அவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவுக்குப் பொறுப்பு சாட்டப்பட்டது. இலங்கையின் சிக்கலான மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் வரலாற்றினை கூறுபடுத்தி ஆராய்வது குழுவின் பணியல்ல. இருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை தோதான அரசியல் மற்றும் சமூகப் பின்னணியின் கண்ணோட்டத்தில் ஆராய்வதற்காக, மோதலின் வரலாற்றின் சில அம்சங்களை கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என குழு கண்டது. 25. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு இந்தியாவின் தென் கிழக்குக் கரைக்கு 18 மைல்களுக்கு அப்பால் இந்திய சமுத்திரத்தில் உள்ள தீவு தேசமாகும். இலங்கை 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இனத்துவ, மொழிவாரியான அத்துடன் சமயம் தொடர்பான பன்முகத் தன்மையுடையதொரு நாடு என்பதோடு, அதில் 74 சதவீதத்தினர் அதிகமாக பௌத்தர்களை உள்ளடக்கிய சிங்கள மொழி பேசும் சிங்களவர்களாகவும், 18 சதவீதத்தினர் அநேகமாக இந்துக்களான தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களாகவும் (இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய தமிழர்கள் என முறையே 13 சதவீதத்தையும் 5 சதவீதத்தையும் உள்ளடக்கியதாக), மற்றும் 7 சதவீதத்தினர் இஸ்லாம் மதத்தை அனுஷ்டிக்கும் பொதுவாகத் தமிழ் மொழியைப் பேசும் சோனகர்கள் மற்றும் மலேயர்களைக் கொண்ட முஸ்லிம்களாகவும் மற்றும் 1 சதவீதத்தினர் ஏனையவர்களுள் பறங்கியர் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட சிறிய இனத்துவச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சில சமூகங்களில் சிறிய வீதத்தினராக கிறிஸ்தவர்கள் உள்ளனர். 26. முதலில் போர்த்துக்கேயர், அடுத்து ஒல்லாந்தர் மற்றும் இறுதியாக பிரித்தானியர்களின் 4 நூற்றாண்டுகள் தொடர்ந்த காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர். பிரித்தானியாவிடம் இருந்து 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு இனத்துவச் சமூகங்களை உள்ளடக்கியதாகச் சிங்களவர் ஆதிக்கம் செலுத்தும் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இலங்கையை ஆட்சி செய்து வந்தது. சகலருக்குமான வாக்குரிமை, பல்கட்சி அமைப்பு மற்றும் துடிப்பானதொரு தேர்தல் செயற்பாடு, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு சாராருக்குமான உயர் நிலையிலான எழுத்தறிவு, குறைந்த சிசு மரண வீதம் போன்ற முக்கியமான மனித அபிவிருத்திச் சித்திகள் ஆகியவற்றை உள்ளிட்ட உறுதியான ஜனநாயகச் சுட்டிகளை இலங்கையின் நீண்ட கால யுத்தம் பற்றிய வரலாற்றுடன் தெளிவாக ஒப்பிடக் கூடியதாகவுள்ளது (11) அ. இனத்துவமும் அரசியலும் 27. அரசியல் மற்றும் இனத்துவக் கோடுகளூடான ஆழமானதொரு விரிசலின் வன்முறைப் பிரதிபலிப்பாக இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் இருந்துள்ளது. 1. இனத்துவம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம் 28. சுதந்திரத்தின் பின், அரசியல் பிரமுகர்கள் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கி, நீண்ட கால கொள்கைகளுக்கு மேலாக சமுதாயம் சார்ந்த அத்துடன் இனத்துவ வாத மன உணர்ச்சிகளை கவர்வதற்கான ஒரு போக்கினைக் கொண்டிருந்தனர். நீண்ட கால கொள்கைகள் பிரஜைகளின் பல்கலாசார இயல்பினைப் போதியளவு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகலரையும் உள்ளிட்டதொரு நாட்டைக் கட்டியெழுப்பியிருக்கலாம். இத்தகைய செயற்பாடு மற்றும் பிரிவுகள் காரணமாக ஒருமைப்படுத்தும் தேசிய தனித்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சிங்களபௌத்த தேசியவாதம் செயற்பட ஆரம்பித்தது, பௌத்த மதத்தின் பரிசுத்த இல்லமாகிய இலங்கையின் பாதுகாப்பாளர்கள் என்பதாக சிங்களவர்களுக்கு தனிச்சிறப்பினைக் கொண்டதொரு தன்மையை வலியுறுத்தியது. இக்காரணிகள் இலங்கையில் நாடு, அரசாட்சி மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்புகளைப் பாழாக்கி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியது. 29. 1970ஆம் ஆண்டுகளில், ஒரு புறம் வகுப்பு அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த தெற்கின் இளம் சிங்களவர்கள் மற்றும் இனத்துவ அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த வடக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் மறு பக்கம் உருவாகி வரும் நாடு சம்பந்தப்பட்ட வகையில் வெவ்வேறு விதமான எதிர்ச்செயலில் ஈடுபட்டு, தீவிரவாதத்தின் பக்கம் திரும்பி, அரசுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய புரட்சிகளில் ஈடுபட்டனர். அரசாங்கம் இவ்வியக்கங்களை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கணித்து, அடிப்படையான அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதை விடுத்து, அரச அதிகாரத்துக்கு எதிரான சவால்களான காணாமல்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட அடக்குமுறையினைக் கொண்டு எதிர்கொண்டது. 30. வேறுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, காந்தியின் அகிம்சா வழியைப் பின்பற்றி ஆரம்பித்த உரிமைகளுக்கான தமிழ் போராட்டம், தனி நாடு என்ற கோரிக்கையை மையமாகக் கொண்டு மேலும் மேலும் தமிழ் தீவிரவாதம் மற்றும் ஆயுதம் ஏந்திய புரட்சியை தோற்றுவித்தது. ஒத்துப்போவதில் இருந்து பிரிவினை வாதத்துக்கு கலந்துரையாடல் மாறியபோது, 1970ஆம் ஆண்டுகளில் எல்.ரி.ரி.ஈ. உள்ளிட்ட பல தமிழ் அரசியல்தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. ஆயுதந்தாங்கிய தமிழ் குழுக்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்குச் சமாந்தரமாக சிங்கள தேசியவாதிகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அடக்கு முறை தீவிரமடைந்தது. 1977, 1979, 1981 மற்றும் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கத்தில் இருந்த சில சக்திகள் உற்சாகப்படுத்தின அல்லது சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு அனுசரணை வழங்கின. இந்த வன்முறை 1983இல் ஆகப் பரவலாக நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்ச நிலையை அடைந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் சிங்களக் கும்பல்கள் போக்குவரத்துச் செய்யப்பட்டதோடு தமிழர்களை இனங்கண்டு அவர்களை இலக்குப் பார்ப்பதற்காக உத்தியோகபூர்வமான வாக்காளர் பதிவேடுகள் பிரயோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பாரிய அளவில் இடம் பெயர்வு, தமிழர்களின் சொத்துக்களுக்கான சேதம் அத்துடன் தமிழர்களின் புலம்பெயர்வு நேர்ந்தது. வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் 13 இலங்கை இராணுவ வீரர்களை எல்.ரி.ரி.ஈ. கொலை செய்ததற்குப் பதிலாக இத்தாக்குதல்கள் நடைபெற்றதாக அரசாங்கம் உறுதியாகக் கூறியது. இவ்வாறாக, 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் இரு தரப்பினருக்கிடையிலான வன்செயல்கள் நேர்ந்த போதிலும், அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. இனருக்கும் இடையிலான யுத்தத்தின் ஆரம்பம் 1983 எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. 2. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) 31. 1983ஆம் ஆண்டின் இனக் கலவரங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை மும்முரமடைந்த போது, தமிழ் சமூகமும் மேலும் தீவிரவாதத்தில் ஆழ்ந்து, தமிழ் நாட்டில் பயிற்சி மற்றும் அமைப்புக்கு ஏதுவான சூழலைப் பிரயோசனப் படுத்தியதோடு, தீவிரவாதக் குழுக்களின் அணிகளும் அதிகரித்தன. தமிழ் விடுதலை இயக்கமாக ஆரம்பித்த எல்.ரி.ரி.ஈ, நாளடைவில் மிகவும் ஒழுங்கு சார்ந்த மற்றும் தமிழ் தீவிரவாதக் குழுக்களிடையே மிகவும் தேசியவாதத்தைக் கொண்டதாகவும் மாறி 1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை அரவணைக்கும் தலையாய சக்தியாக தலைதூக்கியது. இக்கால கட்டத்தின் போது, எல்.ரி.ரி.ஈ. ஏனைய தமிழ் குழுக்களை பணிய வைப்பதற்காக கூடிய அளவிலான வன்முறைப் போக்கினைக் கடைப்பிடித்ததோடு, தாமாகவே நியமிக்கப்பட்டட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். அதன் புதிரான தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன், முழுமையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகாரத்துடன் கோரியதோடு பக்தி சார்ந்ததொரு ஆதரவாளர்களை உருவாக்கினார். தமக்குள்ளே எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் சகிக்காததோடு, அரசாங்கத்துடன் செயற்படுவோர் அல்லது ஒத்துழைப்போர் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அநேகமாக எல்.ரி.ரி.ஈ. இனால் கொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இன் வன்முறை தமிழ் சமுதாயத்தினுள் ஆழ்ந்த பயத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்தது. |
கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பாகம் 03 |
32. எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தோற்றுவித்து, இரா ணுவ, அரசியல் மற்றும் சிவில் இலக்குகளுக்கு எதிராக அதனைப் பிரயோகித்தது. இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி (1991) அத்துடன் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (1993) மற்றும் அதிக எண்ணிக்கையிலான இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிதவாதப் போக்குடைய தமிழ் அரசியல் தலைவர்களின் கொலைகளுக்கு ஆண் மற்றும் பெண் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுதாரிகள் பொறுப்பாகவிருந்தனர். அநேகமான சந்தர்ப்பங்களில் பல சிவில் பிரஜைகளின் உயிர்களைப் பறித்த பொருளாதார மற்றும் சமய இலக்குகள் மீதும் அது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டது. எல்.ரி.ரி.ஈ. புறந்தள்ளும் அரசியலைப் பின்பற்றியதோடு, 1990 ஆம் ஆண்டில் வடக்கில் தம் வீடுகளில் இருந்து முஸ்லிம் மக்களை துரத்தியதோடு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைக் கிராமங்களில் வசித்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்தது. தமிழ் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அதிகமாக வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலை எல்.ரி.ரி.ஈ.பிரயோகித்தது. வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பதில், சிறுவர்கள் சிறுமியரை உள்ளிட்ட வயது குறைந்தவர்களை படைவீரர்களாகப் பாவிப்பதில் எல்.ரி.ரி.ஈ. ஈடுபட்டதும் தெரிந்த விடயமே. அதன் நடைமுறை காரணமாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஐக்கிய இராஜதானி மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு ஆகியவற்றை உள்ளிட்ட நாடுகள் இவ்வமைப்பை தடை செய்ததோடு, 2001 செப்டெம்பர் 11 இன் பின்னர் தடை செய்வது மேலும் தீவிரமடைந்தது. 33. 1990ஆம் ஆண்டுகள் தொடக்கம் மே 2009 வரை, எல்.ரி.ரி.ஈ. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய நிலப்பரப்பினை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்ததோடு, அரசாங்கப் படையினரும் எல்.ரி.ரி.ஈ.இனரும் பிரதேசத்தின் கட்டுப்பாட்டுக்காக போட்டியிட்ட போது, நாளடைவில் இந்த எல்லைக் கோடு மாற்றமடைந்தது. நடப்பிலுள்ள ஒரு தேசத்தை அது செயற்படுத்தி தானே அது என்ற தோற்றத்தை முன்வைக்க முனைந்தது. இதனை நோக்காகக் கொண்டு நன்கு வடிவமைக்கப்பட்ட சர்வதேச உபாயம் ஒன்றை அது அபிவிருத்தி செய்ததோடு, தன் கட்டுபாட்டில் உள்ள பிரதேசத்தில் அதன் காவல் அமைப்பு, சிறைச்சாலைகள், நீதி மன்றங்கள், உள்வரவுத் திணைக்களம் வங்கிகள், மற்றும் சில சமூக சேவைகள் ஆகியவற்றை நிறுவியது. தரை, வான் மற்றும் கடல் திறன்கொண்ட முன்னேறியதொரு இராணுவத்தையும் அதுகட்டியெழுப்பியதோடு, விரிவானதொரு உளவு பார்க்கும் அமைப்பின் உதவியுடன் கெரில்லா மற்றும் பாரம்பரிய நடைமுறைகளையும் மேற்கொண்டது. 34. வன்முறை மற்றும் அரச அடக்குமுறை காரணமாக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் மற்றும்“ ஏனையோர் சிறந்த பொருளாதார சந்தர்ப்பங்களுக்காக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழ் சனத்தொகை உலகின் பல பாகங்களிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரை 1980ஆம் ஆண்டுகள் முதல் வளர்ச்சியடைந்து புலம்பெயர்ந்தவர்கள் யுத்தம் நடைபெற்ற காலம் பூராவும், அவர்களுள் சிலர் ஏன் ஏது என்று கேட்காது எல்ரிரிஈ இனருக்கு ஆதரவு வழங்கி, யுத்தம் நடைபெற்ற முழுக்காலப்பகுதியிலும் நிதிகளை வழங்கி, எல்ரிரிஈ தவறிழைக்கவில்லை என வாதாடி முக்கியதொரு பங்கினை வகித்தனர். ஆயினும், ஆதரவு அனைத்தும் சுயமாகவே வழங்கப்படவில்லை. இலங்கைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான தமிழ் அகதிகள் வாழும் நாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ. அச்சுறுத்தலை உள்ளிட்ட அதன் நடைமுறைகளை விரிவாக்கி, அதனை தனிநாட்டுக்கான தமிழ் மக்களின் அபிலாசை என வருணனை செய்து அதனை அடைவதற்கான வழியாகப் பிரயோகித்தது. அது எவ்வித விமர்சனத்தையும் சகிக்காததோடு, எல்ரிரிஈ இன் வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்புவதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அளிக்கவில்லை. (14) ஆ. சட்டத்தின் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் படிப்படியாக அழிந்துபோதல் 35. இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு நாட்டின் கூறுபடாத சுபாவத்தை வலியுறுத்துவதோடு, தேசத்தின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி ஆக பதவி வகிக்கும் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு பரவலான மற்றும் குவிசார்ந்த அதிகாரங்களை வழங்குகிறது“ மேலும், தனது வரையறைக்கு உட்பட்டவாறு ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுக்கும் தலைமை தாங்கலாம். தற்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு, நிதி மற்றும் திட்டமிடல், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய ஐந்து அமைச்சுக்களுக்குப் பொறுப்பாகவுள்ளார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதி மன்றம் ஆகியவற்றுக்கான தலைவர்களையும் நீதிபதிகளையும் நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அரசியல் யாப்பு நிலைநாட்டுகிறது. மேலும், நெருங்கிய குடும்பத்தினரை ஜனாதிபதி நியமிப்பதற்கான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதேர்டு, அத்தகைய தெரிவுகளைப் பாவிப்பதால், தற்போதைய அரசாங்கம் உறவினர்களுக்குச் சலுகை அளிக்கிறது என்ற விமர்சனத்தை எதிர்நோக்குகிறது. 36. அவசரகாலச் சட்டத்தின் கீழான நீடிக் கப்பட்ட காலப்பகுதிகள், அரசியல் யாப்பு அனுமதித்த அவசரகால ஒழுங்குவிதிகளைப் பாவித்தல், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தல், அது போன்று நீதித்துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அரசியல் ஈடுபாடு அதிகரித்தல், அத்தோடு சுயாதீனமாகத் தட்டிக் கேட்பதை நலிவடையச் செய்தல். 1989 இல் சிறியதொரு இடைவெளியைத் தவிர 1983 முதல் 2001 வரை மற்றும் மீண்டும் 2005 முதல் இன்று வரை அவசரகாலச் சட்ட ஆட்சி அமுலில் இருந்து வருகிறது. ஏனைய விடயங்களுள், தற்போது அமுலில் உள்ள அவசரகால ஒழுங்குவிதிகள் 1979 ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்துடன் சேர்ந்து, அரசாங்கத்துக்கு அசாதாரணமான அதிகாரங்களை வழங்குவதோடு, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மற்றும் உரிமைகள் மீறல்கள் பற்றி ஆராய்வதற்கான நீதி மன்றங்களின் ஆளுமையைக் கட்டுப்படுத்துகின்றன. ஏனைய சட்டங்களும், குறிப்பாக 1982ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க சட்டவிலக்கு உரிமைச் சட்டம் (1977 ஆகஸ்ட் முதல் 1988 டிசம்பர் 16 வரைக்கும் ஏற்புடைத்தான) பாரிய உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாங்கத்தின் கடமையை மிகுந்த அளவில் நலிவடையச் செய்துள்ளன. சட்டத்தை அமுல் செய்வதற்காக அல்லது வேறு விதமாக பொது மக்களின் அக்கறைக்காக நல்ல நோக்குடன் சட்டப்படி அல்லது சட்டவிரோதமாக எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும் எந்தவொரு அமைச்சர், இராணுவ அதிகாரி அல்லது அவர்கள் பணிப்பின் கீழ் செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதை இது தடை செய்துகிறது. தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையை முறைசார்ந்ததாக்குவதன் மூலம், சட்டவிலக்கு உரிமைச் சட்டம் பயங்கரமானதொரு முன்மாதிரியை வழங்குகிறது. 37. அநேகமாக சூத்திரகாரர்கள் தண்டிக்கப்படாத காணாமப்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமைகள் மீறல்கள், அத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எதிரான முறைசார்ந்த சட்ட மற்றும் அரசியலமைப்பின் கீழான பாதுகாப்புக்கள் இருந்த போதிலும், நேருவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்கு இந்நடைமுறைகள் உதவியுள்ளன. சட்டத்திலான பாதுகாப்பு இருந்த போதிலும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியலைப் பயன்படுத்தல் ஆகியவற்றை உள்ளிட்ட பாலியல் சார்ந்த வன்முறைகளும் நேர்ந்துள்ளன. வலுக்கட்டாயமான காணாமல்போதல்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய தொடர்ச்சியான அமைப்பினை ஆராய்வதற்கான பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், சில சந்தர்ப்பங்களில், உண்மையைக் கண்டறியும் முக்கிய தேவையை நிறைவு செய்துள்ளன. ஆயினும், இவை எதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது அல்லது மீறல்களின் முறைசார்ந்த சுபாவம் பற்றி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கவில்லை. இந்நோக்கில் பார்க்கும் போது, தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமைக்கு எதிராகச் செயற்படுவதற்கு, உண்மையை நிலைநாட்டுவதற்கு அல்லது நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழுக்கள் பயனுறு கருவியாக அமையவில்லை. 38. அரசாங்க நிறுவனங்களைப் பலப்படுத்தி அவற்றின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் 2001 இல் 17ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு வழிகோலின. ஜனாதிபதியின் அதிகாரங்களை அரசியல் யாப்பினூடாக கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்ட அது பொலிஸ், தேர்தல்கள், மனித உரிமைகள், லஞ்சம், நிதி மற்றும் பகிரங்கச் சேவை ஆகியவற்றுக்கான ஆணைக்குழுக்களின் நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன அரசியல் யாப்புச் சபையை ஏற்படுத்தியது. மேலும், ஏனையவற்றுக்குப் புறம்பாக, உயர் நீதித் துறை, நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் நியமனங்களை இச்சபை அனுமதிக்க வேண்டியிருந்தது. அண்மைக் கால ஜனாதிபதிகள் எவ்விதப் பாரிய விளைவுமின்றி அதனைப் புறக்கணிக்க முடியுமென்பதால் இத்திருத்தம் ஒப்பீட்டளவில் பயனற்றதாகியுள்ளது. 2010 செப்டெம்பரில் பாராளுமன்றம் 18ஆம் திருத்தத்தை நிறைவேற்றியது. அது 17ஆம் திருத்தத்தை பயனற்றதாக்கியதோடு, அதன் சுயாதீனக் கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை அகற்றி ஜனாதிபதியின் பதவிக்கால மட்டுப்படுத்தல்களை இல்லாமலாக்கியது. 39. மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற யுத்தம் காரணமாக சகல பிரஜைகளின் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டு, சுயாதீன நிறுவனங்கள் தரமிழந்து சட்டத்தின் நல்லாட்சி நலிவடைந்தது. எல்ரிரிஈ இக்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்கு அரசாங்கம் தயாராகிய போது, மனித உரிமைகள் மேலும் பாதிப்படைந்ததோடு, பல நடவடிக்கைகள் காரணமாக சுயாதீன செய்தி அறிக்கை விடுத்தல், கருத்து வேறுபாடு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குக் கூட மேலும் பாரிய கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. 2006 ஆரம்பத்தில் இருந்து, இராணுவ நடவடிக்கைகள் பற்றி அறிக்கை விடுக்கும் ஊடகவியலாளர்களுக்கு மேலும் கட்டுப்படுத்தும் வழிகாட்டல்களை பாதுகாப்புச் செயலாளர் விடுத்ததோடு, நடவடிக்கைகளை எதிர்மாறாகச் சித்தி ரிப்பது ஒரு குற்றச் செயலாக ஆக்கப்பட்டது. பிரபல்யமான தாக்குதல்கள், காணாமல்போதல்கள் மற்றும் கொலைகைளை உள்ளிட்ட ஊடகங்கள் மீதான மேலதிக தாக்கங்கள், அதிக அளவிலான சுய தணிக்கைக்கு வழிவகுத்தது. இனங்காணப்படாத மூலங்களில் இருந்து உள்நாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு, அதன் விளைவாக சிலர் நாட்டை விட்டுச் சென்றனர். விசா மறுத்தல் அதிகரிப்பு மற்றும் இரத்துச் செய்தல் சர்வதேச பணியாட்டொகுதியினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை அச்சத்துக்குள்ளாக்கியதோடு, சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தம் நிலைமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கலாம். (16) யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை நோக்கி 40. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களாக மாறுவதற்கான காட்சியை தோற்றுவிப்பதில் குறைந்த பட்சம் மூன்று மேலதிக காரணிகள் முக்கியமானவையாகும். 41. முதலாவதாக, இலங்கை அரசாங்கமும் எல்ரிரிஈயும் நோர்வையை அனுசரணையாளர்களாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டபோது 2000 ஆம் ஆண்டில் குறுகிய காலப்பகுதியொன் றிலான சமாதானச் செயற்பாடு ஆரம்பித்தது. பெப்ரவரி 2002 இல் தரப்பினர் போர் நிறுத்த உடன்படிக்கையொன்றுக்கு இணங்கியதோடு, நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்பதாக ஆண் பெண் பாகுபாடு பற்றிய உப குழுவொன்றை நிறுவுவதன் மூலம் எல்ரிரிஈ இன் பக்கத்தில் இருந்து மற்றும் தெற்கில் இருந்து பெண்கள் கலந்துரையாடுவதை உள்ளிட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. டோக்கியோ இணைத் தலைமைகள் ஊடாக (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு) அரசியல் முன்னேற்றத்தைக் கண்காணித்த மீளிணக்கப்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய டோக்கியோ மாநாட்டின் அடிப்படையில் (2003) சர்வதேச சமூகம் இச்செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்கியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன சர்வதேச அமைப்பான இலங்கைக் கண்காணிப்புத் தூதுக்குழு, அரசாங்கம் அதனைக் கலைத்து உத்தியோகபூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த 2008 ஜனவரி வரை கள மீறல்களைக் கண்காணித்து வந்ததது. ஏப்ரல் 2003 இல் எல்.ரி.ரி.ஈ.ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. அதன் பின்னர் போர் நடவடிக்கைகள் 2006 இல் மீண்டும் ஆரம்பித்ததைத் தொடர்ந்தும் போர் நிறுத்த ஒப்பந்தம் பெரும்பாலும் பெயரளவில் மாத்திரம் இருந்த போதிலும் அது தொடர்ந்தும் உத்தியோகபூர்வ ரீதியில் இருந்ததால் இலங்கை கண்காணிப்புத் தூதுக்குழுவின் நடைமுறையிலான சர்வதேச பிரசன்னத்தை அது உறுதி செய்தது. 42. தொடர்ச்சியான இனவாதப் பிரிவு மற்றும் சகிப்புத் தன்மை இன்மை ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற இரு தரப்பினரிடையேயும் காணப்பட்ட தீவிரப் போக்கு நீண்ட காலமாக இருந்து வந்த மோதலைத் தீர்ப்பதற்கான முன்னைய சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பட்டியலில் இவ்வாறாக இந்த சமாதானச் செயற்பாட்டையும் விரைவில் சேர்த்து விட்டது. கடுந்தீவிரப்போக்குடைய சிங்களத் தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை எதிர்த்தனர்“ மேலும், ஏப்பிரல் 2003 இல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எல்.ரி.ரி.ஈ. எடுத்த முடிவும் வடகிழக்கில் இடைக்கால சுயாட்சி அதிகார சபை ஒன்றை அமைப்பதற்கான அதன் ஒரு தலைப்பட்சமான பிரேரணையும் சிங்கள தேசியவாத எதிர்ப்பினை மேலும் உக்கிரமடையச் செய்து, அரசியல் கட்சிகளின் ஆழமான தேசிய கூட்டணியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை திடீரெனத் தோற்றுவித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் 2005 இல் நடைபெற்ற தேர்தல்களில் சுமாரான வெற்றியை ஈட்டியதோடு, இறுதி யுத்தத்தை மேற்கொள்வதற்கான அரசியல் ஆதரவையும் அது வழங்கியது. (17) 43. இரண்டாவதாக, மார்ச் 2004 இல் பொதுவாக கேணல் கருணா என்றழைக்கப்படும் எல்ரிரிஈ இன் கிழக்குத் தளபதி, விநாயகமூர்த்தி முரளீதரன், சுமார் 5,000 போராளிகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்.ரி.ரி.ஈ. இல் இருந்து பிரிந்து சென்றார். பின்னர் அவர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரிஎம்விபி) அமைப்பினை அமைத்து, அது துணை இராணுவப் பிரிவொன்றைப் பேணும் அதே வேளையில், பதவியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராகச் சேர்ந்தார். இப்பிளவு எல்.ரி.ரி.ஈ. இக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எல்ரிரிஈ இன் தலைமைத்துவத்தில் கருணாவிற்கு இருந்த இடத்தைக் கவனிக்குமிடத்து, மிகவும் இரகசியமான இவ்வமைப்புப் பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்ததோடு, இறுதி யுத்தத்திற்குத் தயாராகும் போது அரசாங்கம் அதனைப் பயனுறு விதத்தில் பாவித்துக் கொண்டது. மேலும், எல்.ரி.ரி.ஈ.பற்றி அதிருப்தி கொண்டிருந்த ரி.எம்.வி.பி.யி.ன் துணை இராணுவப் படைகள், அத்துடன் முன்னாள் தமிழ் போராளிக் குழுக்களின் உறுப்பினர்களை எல்ரிரிஈ க்கு எதிரான இராணுவ நடவடிக்கையிலும் தமிழ் பொதுமக்களுக்கு இடையே உளவு பார்க்கும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடுத்தியது. 44. மூன்றாவதாக, சர்வதேச காரணிகளும் முக்கியமானவையாக இருந்தன. பயங்கரவாத அமைப்புக்களுக்கு மற்றும் அவர்களின் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் நாடுகளுடன், "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம்' என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய அமெரிக்கக் குடியரசு மற்றும் ஏனைய மேற்கத்திய அரசாங்கங்கள் ஒத்துழைப்பதற்காக எடுத்த முயற்சி எல்.ரி.ரி.ஈ. இக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டிருந்தது. ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என பட்டியலிடப்பட்ட எல்.ரி.ரி.ஈ. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் மேலும் தனிமையாக்கப்பட்டு வந்தது. தமிழரான இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் 2005 இல் படுகொலை செய்ததானது இவ்வமைப்பின் சர்வதேச பின்புலத்துக்கு இறுதி அடியாக இருந்திருக்கலாம். இச்சூழலில் எல்ரிரிஈ க்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் பங்காளர் உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டது. 45. 2005 ஆம் ஆண்டில் நடந்தேறிய தேர்தல்களின் பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளைத் தாம் மதிக்கப் போவதாக அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. இனரும் உறுதியளித்த போதிலும், 2006 ஆகஸ்டில் மீண்டும் பாரிய அளவிலான ஆயுதந்தாங்கிய போராட்டம் ஆரம்பிக்கும் வரை இரு தரப்பினரும் தமது இராணுவச் சீண்டல்களைத் தொடர்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்கும் மாவில் ஆறு நீர்த்தேக்கத்தின் அணைக் கதவுகளை எல்ரிரிஈ மூடியதும், எல்.ரி.ரி.ஈ. இன் பிடியில் இருந்து கிழக்கு மாகாணத்தை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான படைவீரர்களை தாக்குதல் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுத்தியது. கருணாப் பிரிவினரின் உதவியுடன், சுமார் இரு தசாப்தங்களின் பின்னர் முதற்தடவையாக 2007 ஜூலை மாதத்தில் அரசாங்கம் முழுமையாக கிழக்கு மாகாணத்தைத் தன் வசப்படுத்தியது. (18) 46. கிழக்கு மாகாணத்தில் மற்றும் 2008 ஜனவரியில் வட மாகாணத்தின் சில பகுதிகளில் அரசாங்கப் படையினர் அடைந்த இராணுவ வெற்றி காரணமாக எல்.ரி.ரி.ஈ. வன்னிப் பிரதேசத்தில் மாத்திரம் பாரிய இடப்பரப்பை தன் ஆதிக்கத்தில் வைத்திருக்க முடிந்தது. குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களுள், தமது நடைமுறைத் தலைநகரான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்கள்“ எல்.ரி.ரி.ஈ. இன் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. வவுனியாவின் வட பகுதி, வடமேற்கு மன்னார் மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சிறிய சில நிலப்பரப்புக்களையும் அது தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. 47. கிழக்கில் கிடைத்த இராணுவ வெற்றியினால் உற்சாகமடைந்த அரசாங்கம், கிட்டத்தட்ட இரு வருடங்களாக மேற்கொண்ட போர்த் தந்திரத் தயாரிப்புக்களின் பின்னர் 2008 ஜனவரி 16ஆம் திகதி முழு அளவிலானதொரு இராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், டோக்கியோ இணைத் தலைமைகள் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கான மற்றும் இராணுவத் தீர்வொன்றைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்த போதிலும், அதன் இடப்பரப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் உரிமையையும் ஏற்றுக் கொண்டன. 2008 பெப்ரவரி நடுப்பகுதியளவில், நாடு பூராவும் தற்கொலைத் தாக்குதல்களை எல்ரிரிஈ தீவிரப்படுத்திய போது யுத்தப் பிரதேசத்துக்கு வெளியேயுள்ள பொதுமக்கள் மீதான யுத்தத்தின் தாக்கம் அச்சுறுத்தும் நிலையை அடைந்தது. அரசாங்கத்தின் வான் குண்டுத் தாக்குதல்களும் ஆழ ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளும் யுத்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை மேலும் தாக்கமுறச் செய்தன. 2008 செட்டெம்பரில் கிளிநொச்சியை நோக்கிய அதன் இறுதி இராணுவத் தாக்குதலை அரசாங்கம் மேற்கொண்டது. ஐஐஐ. குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை 48. அதன் ஆணைப் பிரகாரம், செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக "குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையைக் கவனத்துக்கெடுத்து' யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது (செப்டெம்பர் 2008 மே 2009) மற்றும் அதனை உடனடுத்து நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி இப்போது குழு கவனம் செலுத்துகிறது. குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையே குழு பொறுப்புக்கூறல் பற்றி வழங்கும் ஆலோசனையின் இயல்பை நிர்ணயிக்கிறது. அத்தியாயம் ஐஏ இல், இம்மீறல்கள், நிரூபிக்கப்படின், சர்வதேச சட்டத்தை மீறியதாக அமையுமா என்பதை நிர்ணயிப்பதற்காக இக்குற்றச்சாட்டுக்களை சட்டக் கண்ணோட்டத்தில் குழு சீர்தூக்கிப் பார்க்கிறது. (19) அ. குற்றச்சாட்டுக்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான முறைமை 49. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கவனமாக ஆராய்ந்து அவற்றின் உண்மையை எடைபோடுவதின் அடிப்படையில் குழுவின் மதிப்பீடு அமைந்துள்ளது. எழுத்து மூலமான தகவல்கள் மற்றும் பல்வேறு நபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியவற்றை குழுவின் பரிசீலனை உள்ளடக்கியது. அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு முகவர்கள், திணைக்களங்கள், நிதியங்கள், அலுவலகங்கள் மற்றும் ஐ.நா. வேலைத் திட்டங்கள், ஏனைய அரசாங்கத்துக்கிடையிலான அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அத்துடன் இலங்கை பற்றிய நிபுணர்களை உள்ளிட்ட தனி நபர்களினால் எழுதப்பட்ட ஏனைய விவரணங்கள் ஆகியவற்றை எழுத்து மூலமான மூலங்கள் கொண்டிருந்தன. (இன்னும் வரும்) |
ஐ நா வின் நிபுணர் குழு வெளியிட்ட இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் அடங்கிய ஆவணத்தின் தமிழாக்கம்
முழுதாக Pdf File ஆக தரவிறக்கிக்கொள்ளுங்க்ள்!
இங்கே!
http://www.mediafire.com/download.php?62sbqn14wc5m59d
இதன் Flip version மிக விரைவில்
முழுதாக Pdf File ஆக தரவிறக்கிக்கொள்ளுங்க்ள்!
இங்கே!
http://www.mediafire.com/download.php?62sbqn14wc5m59d
இதன் Flip version மிக விரைவில்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
kirikasan wrote:ஐ நா வின் நிபுணர் குழு வெளியிட்ட இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் அடங்கிய ஆவணத்தின் தமிழாக்கம்
முழுதாக Pdf File ஆக தரவிறக்கிக்கொள்ளுங்க்ள்!
இங்கே!
http://www.mediafire.com/download.php?62sbqn14wc5m59d
இதன் Flip version மிக விரைவில்
தரவிறக்க இணைப்பிற்கு மிக்க நன்றி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
» சமச்சீர் கல்விக் குழுவின் ஆய்வு முடிந்தது-ஜூலை 5ல் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!
» நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து பாதுகாப்புக் கவுன்சிலில் இறுதித் தீர்மானம்: பான் கீ மூன் முடிவு
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1