ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்

Go down

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Empty மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்

Post by பது Thu Jun 02, 2011 9:58 pm






Share






மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  DSC05242-300
“அந்தப் பொலிஸ் நிலையத்தில் இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள் ஏன் இப்படி வெறித்தனமான மிருகத்தைப்போல நடந்துகொள்கிறார்கள் என நான் நினைத்தேன்” என தாரீக் என்பவர் பொது நிகழ்வொன்றில் வெளிப்படையாகக் கூறியமை பல்வேறு வகையில், பல்வேறு தரப்பினரையும் சிந்திக்க வைக்கிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் பொதுமக்கள் சேவை ஸ்தாபகமும் இணைந்து இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது அனைவர் முன்னிலையிலும் பொலிஸ் நிலையங்களில் நடைபெற்ற கொடுமைச் சம்பவத்தை அவர் விபரித்தபோது அனைவர் கண்களிலும் ஆச்சரியம் தவழ்ந்தது.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

விரிவுரையாளர்கள் பலர் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான பல்வேறு தகவல்களை பரிமாறினார்கள். அதன் பின்னர் மனித உரிமை மீறல் குறித்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்தோர் தமது சுய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்து இதன்போது பரவலாக வலியுறுத்தப்பட்டது.

அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பலர் தமது அனுபவங்கள் குறித்த ஆதங்கத்தை பகிரங்கமாகக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றில் சிலரது கருத்துக்களை இங்கு தருகிறோம்.

சுந்தரராம குருக்கள் - புத்தளம்

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  02“நாடளாவிய ரீதியில் பஸ்களில் மதகுருமாருக்கு இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பஸ்களின் முன் இருக்கை மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் தெரிந்த விடயமாகும்.

எனினும் இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் மதகுருமாருக்கு அந்த இருக்கை வழங்கப்படுவதில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.

பௌத்த பிக்கு ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது எழுந்து இருக்கை கொடுக்கும் மக்கள் எம்மைப்போன்ற ஏனைய மதத்தவர்களுக்கு இருக்கை கொடுப்பதில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஏனைய மதகுருமார் நின்றுகொண்டு செல்வதை நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும்.

இவை அடிப்படையான சில விடயங்களாகும். இவற்றை மாற்றும்போதுதான் நமது சமூகமும் மாற்றமடையும்”

எம்.தாரீக் - புசல்லாவை

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  01“பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் அடாவடித்தனங்களால் மக்களை அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் நெறியான முறையில் நடந்தால்தான் ஏனையவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள்.

நான் ஒரு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். எந்தப் பொலிஸ் நிலையம் எனச் சொல்ல மாட்டேன். அங்கு இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள் ஏன் வெறித்தனமான மிருகத்தைப்போல நடந்துகொள்கிறார்கள் என நான் நினைத்தேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் ஒன்றும் பேசாமல் இருந்தனர்.

இது பாரியதொரு தனி மனித உரிமை மீறலாகும். இப்படிப் பல்வேறு சம்பவங்களை நான் கண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறேன்”

உம்மு சல்மா அமீர் ஹம்சா – மட்டக்களப்பு

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  03“வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இப்போதுதான் கொஞ்சம் சுதந்திரமாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். எனினும் சில இராணுவ கெடுபிடிகள் சில இருக்கத்தான் செய்கின்றன. அதனை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

யாராவது ஒரு நபரைக் கைது செய்யும்போது அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டு 24 மணி நேரங்களுக்குள் அவரது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்க வேண்டும். ஆனால் எமது பிரதேசத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை.

கிராமப்புற மக்களுக்கு இவ்வாறான விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற்றால் நிச்சயமாக மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த முடியும்”

நுஹ்மா ஆப்டீன் - கண்டி

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  04“என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என நினைக்கிறேன். மனிதர்களாகிய நாம் சிறப்புத் தேவையுடையவர்களை கருணை உள்ளத்துடன் நோக்க வேண்டும்.

மனித உரிமைகள் என்பது சிறப்புத் தேவையுடையவர்களுக்கு மிக அவசியமானதாகும். சிறப்புத் தேவையுடையோருக்காக நான் கண்டியின் பின்தங்கிய பகுதியில் இரு நிலையங்கள் அமைத்துள்ளேன்.

சிறப்புத் தேவையுடையவர்களின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்”
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமிழர் படுகொலை காணொளி
» இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'
» உலக மனித உரிமைகள் நாள்.
»  டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
» பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum