ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதப் படிக்கத் தெரியாததால் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் இந்திய தொழிலாளர்கள்

Go down

எழுதப் படிக்கத் தெரியாததால் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் இந்திய தொழிலாளர்கள் Empty எழுதப் படிக்கத் தெரியாததால் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் இந்திய தொழிலாளர்கள்

Post by jesudoss Mon May 30, 2011 6:00 pm

வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கிராமப்புறங்களில் விவசாய தொழில் நசிந்து வருவதால், நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு, பெரும்பாலானோர் விரும்புகின்றனர். முறையான விதிமுறைகளை பின்பற்றி, சரியான நபரின் வழிகாட்டுதலில், வெளிநாட்டிற்குச் சென்று, குறிப்பிட்ட சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தால், தங்கள் ஊரில் சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஏதேனும் தொழில் செய்வதற்கான முதலீடு போன்றவற்றிற்குத் தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.வளைகுடா நாடுகளில், கட்டட வேலை, வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்கு தொழிலாளர்களாக செல்ல, ஆந்திராவில் கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில், கடந்தாண்டு, வெளிநாட்டில் கூலி வேலைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 4 லட்சத்து 50 ஆயிரம். இந்திய வரலாற்றில், இது மிக அதிகபட்ச எண்ணிக்கையாக கூறப்படுகிறது. மேலும், இது இந்த ஆண்டில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜன்டுகள், முறைப்படி பாஸ்போர்ட், விசா பெற்று, வேலைக்கான நியமன கடிதம் மற்றும் ஒப்பந்தக் கடிதம், வேலை விவரம், ஊதியம் உள்ளிட்ட விவரங்களை, கொடுத்து அனுப்ப வேண்டும்.
ஆனால், இந்த அனைத்து விதிமுறை மற்றும் நடைமுறைகளை, ஏஜன்டுகள் பின்பற்றுவதில்லை. விளைவாக, வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், தனிப்பட்ட பிரச்னைகள், வேலையிடத்தில் நெருக்கடி, நிதி, வேலைப்பளு, குடும்பச்சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக, தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஜூலை 2008 முதல் நவம்பர் 2010 ஆண்டு வரையிலான கால கட்டத்தில், ஆந்திராவிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களில் 270 பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு, பெரும்பாலும் பணியிடங்களில் ஏற்படும் நெருக்கடிகளே காரணமாக அமைகிறது.
ஆந்திர மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமுனா என்பவரின் கணவர், 2007ம் ஆண்டு துபாய்க்கு கட்டட வேலைக்குச் சென்றார். இதற்காக, இவர் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். தனது செலவுகள் போக, வீட்டிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பலாம் என, ஏஜன்டுகள் சொன்னதை நம்பிச் சென்றார். ஆனால், 18 மாதம் வரை அங்கு வேலை செய்த அவரால், வெறும் 30 ஆயிரம் மட்டுமே அனுப்பினார். ஊரில், அவர் வாங்கிய கடன் தொகைக்கு, வட்டி அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் இறப்புக்காக, அந்த கட்டுமான நிறுவனம் இழப்பீடு என்று எதுவும் தரவில்லை. பிரச்னை இதோடு ஓயவில்லை. ஊரில் கடன்காரர்களின் தொல்லை ஒரு பக்கம், பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், மாற்று உடை, உணவுக்கும் வழியில்லாமல் ஜமுனா கண்ணீரும், கம்பலையுமாக நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். இது வெறும் ஒரு சோற்றுப் பதம். இதைவிட, அதிகமான சோகங்களை சுமந்து கொண்டு, அரசு உதவி ஏதாவது கிடைக்குமா என்று வளைகுடா நாடுகளில், தங்கள் கணவன்களை இழந்த மனைவிகள் நடையாய் நடந்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரின் பின்னணி கதைகளும், ரத்தக் கண்ணீரை வரவழைப்பவை.இது போன்று, தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர்களும், தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர். இவற்றை மீறி, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாடு திரும்புபவர்கள் மிகவும் அரிதே.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிலிருந்து, ஏராளமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்குச் கட்டட தொழில், வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்குச் செல்கின்றனர். ஆனால், தவறான ஏஜன்டுகளிடம் இவர்கள் சிக்கிக் கொள்வதால், அவர்களும், அவர்களின் குடும்பமும் சீரழிந்து விடுகிறது. இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல, 65 ஆயிரம் ரூபாய் முதல் 1.6 லட்சம் வரை செலவாகிறது. இது தவிர, ஏஜன்ட் கமிஷன் தனி. வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, ஊரில் உள்ள நில புலன்களை விற்றும், லட்சக்கணக்கில் கடன் வாங்கியும், வெளிநாடு செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள், தங்கள் வேலை செய்யும் நிறுவனம், சம்பளம் உள்ளிட்ட எதைப் பற்றியுமே தெரிந்து கொள்ளாமல் செல்கின்றனர். அங்கு போன பின்னரே, என்ன வேலை செய்யப் போகிறோம் என்றே பலருக்கு தெரியவருகிறது.
அங்கு போனதும், முதல்வேலையாக, அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பிடுங்கி வைத்துக் கொள்கின்றனர்.வேலை தொடர்பான ஒப்பந்தங்களும், ஆங்கிலம் அல்லது அரபு மொழிகளில் இருப்பதால், எழுதப் படிக்கத் தெரியாத தொழிலாளர்களுக்கு, அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல், கையெழுத்துப் போடுகின்றனர். ஏஜன்டுகள் இங்கு சொன்ன சம்பளத்தை விட, பலமடங்கு குறைவாகவே இருக்கிறது. தினசரி 12 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் கூட, "ஓவர் டைம்' என்ற பெயரில் வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் மிக மோசமாக இருக்கும்.நான்கு பேர் தங்கக் கூடிய சிறிய அறையில் 10 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருப்பர். சரியான உணவு வழங்கப்படுவதில்லை. பெரும்பாலும், ரொட்டியும், தாலும் வழங்கப்படும். சில நேரங்களில் பிரட் தரப்படும். சைவ உணவு சாப்பிடுபவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சரியான உணவு, ஓய்வு இல்லாததாலும், அதைவிட முக்கியமாக, தங்கள் எதிர்பார்த்து வந்ததைவிட, மிகவும் குறைவாக சம்பளம் தரப்படுவதாலும் தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவர். மேலும், சில இடங்களில், ஒப்பந்தக்காலம் முடிந்ததும் அவர்களை தங்களது நாட்டிற்குத் திரும்ப சில நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருப்பதால், அவர்களால் வெளியே எங்கும் செல்ல முடியாது. கொத்தடிமைகளைப் போல் நாட்களை நகர்த்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இதனால், விரக்தியின் உச்சத்திற்குச் சென்று தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இந்த பிரச்னை அவர்களோடு முடிவதில்லை. தற்கொலை செய்துக்கொண்ட நபரின் உடலை, இந்தியாவிற்கு கொண்டுவர அவர்களின் குடும்பத்தினர் பெரும் சிரமப்பட வேண்டும். பொருளாதார வசதிகள் தவிர, சட்ட உதவிகளும் தேவை. சிலர், வெளிநாடுகளில் இறந்த தங்களது உறவினரின் உடலை கொண்டுவர, பல மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.தங்கள் குடும்பத்தை வளமாக வாழ வைக்க வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று, அங்கு வேறு விதமான முடிவை தேடிக்கொண்ட நபரின் குடும்பம், மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்
» 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்
» ரூ. ஆறு லட்சம் கோடி இந்திய பணம் வெளிநாடுகளில் முடக்கம்
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum