புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
80 Posts - 78%
heezulia
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
245 Posts - 77%
heezulia
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
8 Posts - 3%
prajai
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_m10சகாயத்துக்கு அடுத்த சவால்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகாயத்துக்கு அடுத்த சவால்..


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 8:09 am

''கிரானைட் கொள்ளைக்கும் முடிவு வருமா?''




'லஞ்சம் தவிர்த்து... நெஞ்சை நிமிர்த்து...’ என்று உரக்கச்சொல்லி, மதுரை மக்களின் ஹீரோவாகிவிட்ட மதுரை கலெக்டர் சகாயத்துக்கு மேலூர் கிரானைட் கொள்ளையைக் கட்டுப் படுத்த அழைப்பு விடுத்து இருக்கிறார்கள் மக்கள்.

இன்றைய நிலவரப்படி மேலூர், கீழையூர், கீழவளவு, திருமோகூர் பகுதிகளில் சுமார் 56 கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு குவாரிகளை விடவும் தனியார் பட்டா நிலத்தில் இயங்கும் குவாரிகளே அதிகம்! இந்த குவாரிகளால் வெளியூர்வாசிகள் சிலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்றால், உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்வா தாரத்தைத் தொலைத்து நிற்கிறார்கள்.

தனியார் பட்டா நிலங்களில் குவாரி நடத்துபவர்கள், அருகிலுள்ள புறம்போக்கு நிலங்களையும் வளைத்து, கோடிகளைச் சம்பாதிப்பது அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது. இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்காக இங்குள்ள கிரானைட் கம்பெனிகள் சில, அரசுத் துறையினருக்கு தனியாக மாத சம்பளமே வழங்குகிறார்களாம். இதனால், இந்தப் பகுதிகளில் வி.ஏ.ஓ. வேலைக்கு வருவதற்கே சில லட்சங்களைக் கப்பம் கட்டுகிறார்கள். அந்த அளவுக்குக் காஸ்ட்லியான ஏரியா. இந்த முறைகேடுகள் குறித்து அவ்வப்போது புகார்களும் போராட்டங்களும் வெடித்தாலும், அதிகாரிகள் அப்படியே அமுக்கிவிடுவார்கள்!

கனிமத்தைச் சுரண்டும் கும்பல், அருகிலுள்ள நீர் ஆதாரங்களையும் விளை நிலங்களையும் பாழ்படுத்துவதால் இந்தப் பகுதியில் விவசாயமும் படுத்து விட்டது. மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக சேவகருமான ஸ்டாலின், ''மேலூர் ஏரியாவில் இருந்து மாதம் சுமார் 100 கோடிக்கும் மேலாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து, ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் பாதிக்கும் மேல் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுபவை. தூத்துக்குடி துறைமுகம் செல்ல லாரிகளுக்கு வழங்கப்படும் நடைச் சீட்டு மூன்று நாட்களுக்கு செல்லுபடியாகும். இதை வைத்து மூன்று நாட் களில் நான்கு நடை லோடுகளை அனுப்பி விடுகிறார்கள். இதேபோல் சென்னைத் துறைமுகத்துக்கு எடுக்கப்படும் நடைச் சீட்டு ஏழு நாட்களுக்குச் செல்லுபடியாகும். இதை வைத்து நான்கு லோடுகளுக்குக் குறையாமல் கடத்தி விடுகிறார்கள். இதை அறிந்தும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.



நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனக் கால்வாய்களில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் குவாரிகள் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நாவினிக்கும்பட்டியில் இருந்து கீழையூர் வரை பெரியார் பாசன துணைக் கால்வாய்களை ஒட்டியே குவாரி கள் இருக்கின்றன. இந்த குவாரிகளில், விதிமுறை மீறி அதலபாதாளம் வரை தோண்டப்படுவதால் கால்வாய் தண்ணீர், குவாரிகளுக்குள் ஊற்றெடுத்து விரயமாகிறது. தெற்குத் தெரு ஏரியாவில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான மூன்று பாசனக் கால்வாய்களை மூடிவிட்டுத்தான் கிரானைட் கம்பெனி அமைத்து உள்ளார்கள். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்விதக் கழிவுகளையும் கொட்டக்கூடாது. ஆனால், இங்கே கண்மாய்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்ட, பொதுப்பணித் துறை அதிகாரிகளே அதிகாரபூர்வமாக அனுமதி கொடுக்கிறார்கள்.

15,000 டெபாசிட்டும் ஆண்டுக்கு 1,000 கட்டணமும் கட்டிவிட் டால் கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டிக் கொள்ளலாமாம். இப்படி ஆறு கண் மாய்களை அழித்துவிட்டார்கள். சில இடங்களில் குளங்களையே குவாரிகளாக்கி விட்டார்கள்.

இப்படி நீர் ஆதாரங்களை அழித்துவிட்ட தால், பாசனம் செய்ய முடியாமல் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி விட்டது. கிரானைட் முதலாளிகள் எதிர்பார்ப்பதும் இதைத்தான். பாசனம் படுத்துவிட்டால் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அவர்களின் திட்டம். இதுவரை அப்படித்தான் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள்வளைக்கப்பட்டன. பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் குவாரிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், இங்கே அந்த உத்தரவும் காற்றில் பறக்கிறது...'' என்று ஆதங்கப்பட்டவர்,

''பாசனக் கால்வாய்களை மூடுவது குறித்து கடந்த ஜூன் மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.'மூன்று மாதங்களுக்குள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!’ என்று மதுரை கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு இட்டது. ஆனால், கலெக்டர் அதைக் கண்டு கொள்ளவில்லை. அவருக்கு நான் அனுப்பிய நீதிமன்ற அவமதிப்பு நோட் டீஸுக்கும் பதில் இல்லை. விரைவில் இது விஷயமாக நீதிமன்றத்தில் மனு போட இருக்கிறேன்.

அதற்கு முன்னதாக எங்களுக்குக் கிடைத்த இன்னொரு வாய்ப்பு, இப்போது இருக்கும் கலெக்டர் சகாயம்! நேர்மையான அதிகாரியான அவரது பார்வை, கிரானைட் குவாரிகள் பக்கம் திரும்பினால் நல்லது; மேலூர் பகுதி மக்கள் அவருக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவார்கள். இது சம்பந்தமாக ஊர்மக்களைத் திரட்டி அவரை சந்திக்க இருக்கிறேன்...'' என்றார்.

''இந்த விஷயத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?'' என்று கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''ஏன் முடியாது? அத்துமீறும் குவாரிகளால் இந்தப் பகுதியின் ஜீவாதாரப் பிரச்னையான விவசாயம் பாதிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட்டு, முறைகேடுகளை ஒழிக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை!'' என்றார்.

கிரானைட் சுரண்டலைத் தடுக்க சகாயம் தொடர்ந்து மதுரையில் நீடிக்க வேண்டும். அது மட்டுமல்ல... ரவுடியிஸம், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட விஷயங்களை மனதில் வைத்து, 'மதுரையை மீட்பேன்’ என்று பிரசாரத்தின்போது ஜெயலலிதா சபதமிட்டார். அதனை சகாயத்தை வைத்து சாதிக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி



01-ஜூன் -2011
ஜி.விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 8:11 am

சகாயம் சாதிப்பார் என்று தான் நினைக்கிறேன் . ALL THE BEST சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 8:15 am

கே. பாலா wrote:சகாயம் சாதிப்பார் என்று தான் நினைக்கிறேன் . ALL THE BEST சூப்பருங்க

எனக்கும் அப்படி தான் தோணுது நண்பா சியர்ஸ்

சகாயம் சருக்கு வாழ்த்துக்கள் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 9:00 am

சாதனை மன்னன் சகாயம் வாழ்க.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 10:46 am

மகா பிரபு wrote:சாதனை மன்னன் சகாயம் வாழ்க.
சகாயத்துக்கு அடுத்த சவால்.. 359383 சகாயத்துக்கு அடுத்த சவால்.. 359383 சகாயத்துக்கு அடுத்த சவால்.. 359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சகாயத்துக்கு அடுத்த சவால்.. Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக