ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு

5 posters

Go down

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  Empty இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு

Post by தாமு Mon May 30, 2011 8:31 am

புதுடெல்லி, மே.30-



இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இன்னும் 16 மாதங்களுக்குள் மொத்த கறுப்பு பணத்தையும் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தீவிரமாக விசாரித்து வருகிறது. கறுப்பு பண விவகாரத்தில் போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சந்தேகம் எழுப்பியது.

மேலும், ஊழல் மூலமாக கறுப்பு பணம் குவிக்கப்படுவதால் ஊழல்வாதிகளை தண்டிக்கும் `லோக்பால் சட்ட மசோதா'வை நிறைவேற்றும் பணியை முடுக்கி விடுமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ், வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கறுப்பு பணத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டியை நேற்று முன்தினம் மத்திய அரசு அமைத்தது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் பற்றிய அறிக்கையை 6 மாதங்களுக்குள் அந்த கமிட்டி அளிக்கும். கறுப்பு பணத்தை `தேசிய சொத்து' என அறிவிக்க வகை செய்யும் சட்ட வரையறையை கொண்டு வரும் யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக யோகா குரு ராம்தேவை மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்தனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மேலும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள மொத்த கறுப்பு பணம் எவ்வளவு? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்கிறது.

இந்த ஆய்வை, மத்திய அரசின் மூன்று உயர்மட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வை, `அப்ளைடு பொருளாதார ஆய்வு தேசிய கவுன்சில்', `பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்', `நிதி மேலாண்மை தேசிய நிறுவனம்' ஆகிய 3 நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இன்னும் 16 மாதங்களுக்குள் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 1985-ம் ஆண்டிலும் இதுபோல கறுப்பு பணத்தின் அளவு குறித்து `பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்' ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ரூ.23 லட்சம் கோடி முதல் ரூ.70 லட்சம் கோடி வரை இந்தியர்களின் கறுப்பு பணம் இருப்பதாக நிதி அமைச்சகம் கருதுகிறது. கணக்கில் காட்டப்படாமல் உள்ள இத்தகைய பணம் மற்றும் சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இது தவிர, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையே, பெரிய தொழில் நிறுவனங்களைப் போல ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுதோறும் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இந்திய தணிக்கை கணக்கு நிறுவனம் யோசனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை கடந்த 27-ந் தேதி அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெறும் நிதி குறித்த தகவல்களை ஆண்டு வரவு-செலவு தணிக்கை அறிக்கை மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த பரிந்துரைகளை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அது குறித்து விளக்கம் கேட்பதற்காக, பதிவு பெற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்ற நிதி விவகாரம் தொடர்பான மத்திய அரசு அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் கடிதம் அனுப்புகிறது. இந்த சூழ்நிலையில், கறுப்பு பணம் குறித்த வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சுதர்சன் ரெட்டி வருகிற ஜுலை 7-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.

ஏற்கனவே, `கறுப்பு பணம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு போன்ற பல்வேறு விசாரணை அமைப்புகளின் உயர் அதிகாரிகளை கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்' என நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜ்ஜார் ஆகியோர் தெரிவித்தனர்.

அதற்கு, மத்திய அரசு தயக்கம் காட்டியது. சிறப்பு விசாரணைக் குழுவுக்கு பதிலாக மத்திய வருவாய் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. இந்த நிலைமையில், நீதிபதி சுதர்சன் ரெட்டி ஓய்வு பெறுகிறார். கோடை விடுமுறைக்கு பிறகு ஜுலை 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு திறக்கப்படும். எனவே, ஜுலை 7-ந் தேதிக்கு பின்னர் புதிய நீதிபதியை கொண்டு அமைக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டு புதிய பெஞ்சு, கறுப்பு பண வழக்கை விசாரிக்கும். அப்போது, மத்திய அரசின் புதிய நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு செய்யும்.


மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  Empty Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு

Post by SK Mon May 30, 2011 10:13 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  Empty Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு

Post by கலைவேந்தன் Mon May 30, 2011 10:15 am

இப்பவாவது ஞானம் வந்ததே..! அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  Empty Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு

Post by மஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:15 am

இனி எல்லாம் வெளியே வரும் போல புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  Empty Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு

Post by ந.கார்த்தி Mon May 30, 2011 10:42 am

கலைவேந்தன் wrote:இப்பவாவது ஞானம் வந்ததே..! இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  502589
இதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான் அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு  Empty Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு?
» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
» கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum