ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்

4 posters

Go down

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Empty மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்

Post by தாமு Mon May 30, 2011 8:11 am

உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் ஊழல் வழக்குகள்!


தி.மு.க. மந்திரிகள் '2006-ல் என்ன சொத்து மதிப்பைத் தேர்தல் கமிஷனிடம் காட்டினார்கள்? 2011-ல் என்ன காட்டினார்கள்? அவர்களின் பினாமிகள், குடும்பத்தினர், நண்பர்கள்... எவ்வளவு சொத்து சேர்த்தனர்? எந்தெந்த வகைகளில் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்? என்பதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்வதில் முதல்வர் ஆர்வமாக இருக்கிறார்!’ என்ற தகவல் அதிகாரிகள் மத்தியில் பரவியது. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக, சென்னை தலைமைச் செயலகம் உட்பட வெளியூரில் உள்ள அரசுத் துறைகளில், ஊழல் தொடர்​பான தகவல் சேகரிப்புப் படலம்தான் முழு வீச்சில் நடக்கிறது!

ஊழல் புகார்கள் குவிகின்றன!

உதாரணத்துக்கு ஒன்று - தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், கோடிக்கணக்கில் மின் திருட்டு செய்யும் இரண்டு முக்கியப் புள்ளிகள், தி.மு.க. ஆட்சி வந்ததும் தங்கள் கம்பெனியைத் திறப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தால், அப்படியே மூடிவிடுவார்களாம். இவர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுமாம். எல்லாமே திருட்டு மின்சாரம் மூலம் வந்த பணம். எந்தெந்த வகையில் இந்த மின் திருட்டு நடந்தது, அதிகாரிகள் யார் யார் உடந்தை என்று, விரிவான தகவல்​களுடன் வந்த கடிதம் ஒன்று, மின் வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டி.ஜி.பி-யான ராதாகிருஷ்ணன் மேஜையில் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது!



முதல் போணி யார்?

'உள்துறை, மின் துறை, உணவு, விவசாயம், வருவாய், வீட்டு வசதி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், தொழில் துறை, கல்வி, சுகாதாரம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து என 13 துறைகளில் ஊழல் நடந்து உள்ளதா?’ என்று ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறுப்பை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிடம் ஒப்படைத்து இருக்கிறார் முதல்வர்.

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்த ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் போன்ற துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் பிரிவை முடுக்கிவிட்டு, தகவல் சேகரிக்கச் சொல்லி இருக்கிறாராம்.

இதே போல், டெண்டர், கான்ட்ராக்ட்கள், அலைக்​கழிப்பு, டார்ச்சர் போன்றவற்றை சந்தித்த தனியார் நிறுவனங்களைத் தேடிப் பிடித்து, முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களைப்பற்றி புகாராகக் கேட்டு வாங்கும் வேலையை, தனியார் கம்பெனி முதலாளிகள் சிண்டிகேட் ஒன்று கனகச்சிதமாகச் செய்து வருகிறதாம். 'பல்வேறு சேனல்களில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து, பொது நல வழக்கு போட்டு நீதிமன்றம் மூலமே டைரக்ஷன் வாங்கி, சி.பி.சி.ஐ.டி. பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஊழல் விசாரணை துரிதப்படுத்தலாமா?’ என்கிற கோணத்திலும் சட்ட ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிப்​பதைப்​போல, 'தி.மு.க. மந்திரிகளின் ஊழல் புகார்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்ற ரீதியில் சமூக ஆர்வலர்கள் யாராவது நீதிமன்றப் படி ஏறவும் வாய்ப்புகள் உண்டு.

தகவல் சேகரிப்பு சேனல்கள் எவை?

13 துறைகளை நிர்வகித்த மந்திரிகள், அந்தத் துறைகளின் உயர் அதிகாரிகள் என இரண்டு தரப்பினரின் பி.ஏ-க்கள், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்​கள், வீட்டு வேலையாட்கள் யார் யார் என்ற பட்டியலை, ரகசியமாகச் சேகரித்துவிட்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் மந்திரிகளுக்கு நிர்வாகத்தில் உதவ அரசு நியமித்த பி.ஏ-க்கள் ஓரிருவர். ஆனால், வசூல் வேட்டை, பேரம் பேசுவது, அதிகார மிரட்டல் போன்ற 'நம்பர் 2’ விவகாரங்களை கவனிப்பதற்கு என்றே பொலிட்டிக்கல் பி.ஏ-க்கள் என்கிற பெயரில் பலர் இருந்திருக்கார்கள். 15 பி.ஏ-க்களை வைத்துக்கொண்ட அமைச்சர்களும் உண்டாம். மந்திரியை நன்றாகக் குளிர்வித்து தனது பைக்குள் வைத்துக்கொண்ட பொலிடிக்கல் பி.ஏ-வுக்கு மற்ற அனைவரும் அடிமைகள். இந்த வகையில், தினப்படி அலுவலக வேலைகளை மூச்சுத் திணறச் செய்ததோடு, மற்றவர்களின் அவமானங்கள், அவதூறுகளைச் சந்தித்து நொந்துபோன அரசு தரப்பு பி.ஏ-க்கள் சிலர், 'ஏ டு இசட்’ விஷயங்களை வெளியில் சொல்​லத் தயாராகிவிட்டார்கள். இந்த ரீதியிலும் தகவல் சேகரிப்பு நடக்கிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய கேப்டன் யார்?

சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனர் பதவியில் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாலகிருஷ்ணன் இருக்கிறார். அவர் மேற்பார்வையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் செயல்படுவார். இந்தப் பதவியில் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவது வழக்கம். இப்போது அந்த இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஷியாம் சுந்தரை நியமித்துவிட்டு, திடீரென அவரை வேறு பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். இதே பிரிவில், எஸ்.ஐ.யூ. என்று அழைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழு செயல்படுகிறது. அரசியல் தலைவர்களின் ஊழல்களை மட்டுமே இந்தக் குழு விசாரிக்கும். பெங்களூருவில் நடக்கும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கண்ணப்பன், நத்தம் விசுவநாதன் போன்ற சிலர் மீதான வழக்குகளை இந்தக் குழுதான் கவனித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இந்தக் குழுவின் தலைவராக இருந்தவர், கூடுதல் டி.ஜி.பி-யான துக்கையாண்டி. அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், அவரைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் ஐ.ஜி-யான குணசீலன், எஸ்.பி. அந்தஸ்தில் வெங்கடேஸ்வரன் இருவரையும் நியமித்து இருக்கிறார்கள். இருவரும் தங்களுக்குத் தரப்பட உள்ள அசைன்மென்ட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு இயக்குநர் பதவியில் முதலில் யாரையாவது நியமித்தால்தான், இவர்களது அதிரடி வேலைகள் துவங்கும்!

சி.பி.சி.ஐ.டி-யிலும் மாற்றம்?

கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவின் தலைமை அலுவலகம் இன்னமும் சுறுசுறுப்பு அடையவில்லை. தற்போது இங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரம், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுவதால், புதியவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது இந்தப் பிரிவு. தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டிய அப்போதைய பொதுப் பணித் துறை செயலாளர் ராமசுந்தரத்தின் மனைவி இவர். தமிழகக் காவல் துறையில் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். ஆனால், அவரது கணவரோ... தலைமைச் செயலகக் கட்டட வேலை முடிந்ததும், அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்ந்துவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் முழு கவனமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விழுங்கிய இந்தக் கட்டட ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாகவே இருக்கிறது. சில சந்தேகங்களின் அடிப்படையில் ஏதாவது விசாரணை வரும்பட்சத்தில், ராமசுந்தரத்திடமும் விளக்கம் கேட்கப்​படலாம். அந்த நேரத்தில், சி.பி.சி.ஐ.டி-யின் தலைமைப் பதவியில் அர்ச்சனா இருந்தால், தர்மசங்கடம் ஏற்படும். அதைத் தவிர்க்கவே, முன்கூட்டியே அர்ச்சனா வேறு பதவிக்கு மாற்றப்படலாம்!

- ஜூ.வி. கிரைம் டீம்



ஜீ.விகடன் 01-ஜூன் -2011



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Empty Re: மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்

Post by மகா பிரபு Mon May 30, 2011 8:46 am

தகவலுக்கு நன்றி தாமு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Empty Re: மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்

Post by தாமு Mon May 30, 2011 8:55 am

புன்னகை நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Empty Re: மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்

Post by மஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:28 am

ஐயோ பாவம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Empty Re: மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்

Post by ரபீக் Mon May 30, 2011 10:30 am

போக்குவரத்து துறையில் சீக்கிரம் நடவடிக்கை எடுங்கப்பா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல் Empty Re: மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» மண்ணைக் கவ்வும் மந்திரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum