ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதித்து வருது குஜராத் கரன்ட்! ( மிஸ்டர் கழுகு )

Go down

குதித்து வருது குஜராத் கரன்ட்! ( மிஸ்டர் கழுகு ) Empty குதித்து வருது குஜராத் கரன்ட்! ( மிஸ்டர் கழுகு )

Post by தாமு Mon May 30, 2011 8:07 am



''அனலும் தகிக்கிறது... கூடவே லேசான குளிர் காற்றும் வீசுகிறது!'' என்று தான் அனுபவித்த வித்தியாசமான வானிலையை அறிவித்தபடி வந்து அமர்ந்தார் கழுகார்!

காரப் பணியாரங்கள் சுடச்சுட இருந்தன. ''ஓ, தொட்டுக்க மிளகாய் சட்னியா!'' - ஆர்வமாகச் சிரித்த​படியே ருசித்தார்!

''தேர்தல் சுனாமிக்குப் பிறகு அரசியல் சூழ்நிலைகளில் அப்படி ஒரு மாற்றம். ஆமாம், கருணாநிதியின் டெல்லிப் பயணம், வெற்றியா... தோல்வியா?'' என்று கேட்டோம்!

''நிச்சயம் சொல்கிறேன்! முதலில், மக்களுக்கு சந்தோஷமான சில விஷயங்கள்!'' என்று பீடிகை போட்டார் கழுகார்!

''நாடு முழுவதும் பெரிய பிரச்னையாக இருப்பது எது? விலைவாசியும் மின் வெட்டும்தானே! அதில் மின் வெட்டுக்கு அநேகமாக ஒரு தீர்வை முதல்வர் ஜெயலலிதா தொட்டுவிட்டார். அவருக்குக் கை கொடுத்து இருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி!''



''விளக்கமாகச் சொல்லும்!''

''குஜராத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாகக் கொண்டு செல்லும் நரேந்திர மோடியிடம் நான்கு நாட்களுக்கு முன்னால் ஜெயலலிதா பேசினார். மின் வெட்டுப் பிரச்னையைச் சொல்லி இருக்கிறார். 'தமிழ்நாட்டுக்கு 1216 மெகாவாட் பற்றாக்குறை இருப்பதால்தான், மின் வெட்டு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது’ என்று ஜெ. சொல்ல... 'எங்கள் மாநிலத்தில் உபரியாக இருக்கும் 630 மெகாவாட்டைத் தருவதற்குத் தயாராக இருக்கிறோம்’ என்று மோடி உறுதி தர, அம்மா முகத்தில் சந்தோஷம். உடனடியாகத் தமிழக அதிகாரிகள் குஜராத்துக்குப் போய்ப் பேசினார்கள். ஒப்பந்தம் போடும் வேலைகள் நடக்கின்றன. அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் மின் வெட்டு இதுவரை இருந்ததைவிடப் கொஞ்சம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.''

''நடந்தால் நல்லதுதான். அடுத்த சந்தோஷச் செய்தி?''

''தேர்தல் அறிவிப்பில் ஜெயலலிதா சொன்னதில் முக்கியமானது 'பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப் தருவேன்’ என்பது. தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் சந்தோஷ்பாபுவை அழைத்த ஜெயலலிதா, 'உடனடியாக நாலரை லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியாக வேண்டும். அதற்கான பட்ஜெட் போடுங்கள். மார்க்கெட்டில் இருக்கும் லேப்டாப்கள் அதிகப்படியான விலைகொண்​டதாக உள்ளன. அதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான வடிவமைப்புடன் உருவாக்கினால் எவ்வளவு ஆகும் என்ற விவரங்கள் வேண்டும்’ என்று கேட்டுள்ளாராம். இந்த வருடமே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழக அரசின் லேப்டாப் வழங்கியாக வேண்டும் என்று ஜெ. திட்டமிட்டு உள்ளாராம்.''

''கருணாநிதி தந்த இலவசத் தொலைக்காட்சியை ஆன் செய்ததும் அவர் முகம் வருவதைப்போல, லேப்டாப் ஆன் செய்ததும் அம்மா முகம் வருமா?'' என்று நாம் கேட்க, சிரித்தபடி கருணாநிதி சப்ஜெக்ட்டை எடுத்தார் கழுகார்!

''கருணாநிதியின் டெல்லிப் பயணம் வெற்றியா தோல்வியா என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? மகளைப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று போனார். பார்த்தார். வந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால், வெற்றிதான். 'கனிக்கு டெல்லி ஹை கோர்ட் ஜாமீன் கொடுத்துவிடும். அவளை அழைத்துக்கொண்டுதான் சென்னை செல்வேன்’ என்று கருணாநிதி முதல் நாள் சொன்னார். ஆனால், டெல்லி ஹை கோர்ட் இந்த விசாரணையை மே 30-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது, கருணாநிதியைப் பொறுத்த வரை தோல்விதான்!''

''டெல்லியில் ஏதோ உடல்நிலை சரி இல்லையாமே கருணாநிதிக்கு?''

''மன நோவு இருந்தால், உடல் நோவும் வரத்தானே செய்யும். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மோசமாகவில்லை. டெல்லியில் கடுமையான வெயில் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவரது சக்கர நாற்காலிச் சங்கடங்கள். சென்னையில் அவர் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை டெல்லிக்கு உடனடியாகக் கொண்டுவர முடியவில்லை. டெல்லிக்கு வந்தால், தமிழ்நாடு ஹவுஸில்தான் முதல்வர் என்கிறமுறையில் தங்குவார். அவருக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சக்கர நாற்காலியுடன் கூடிய கார் சென்னையில் இருந்து வந்து தயாராக இருக்கும். ரயிலிலோ, விமானத்திலோ முன்னதாகக் கொண்டுவந்து வைத்து இருப்பார்கள். மேலும், கருணாநிதியின் பயணம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது என்பதால், அதற்கெல்லாம் நேரம் இல்லை. டெல்லியில் கருணாநிதியை வரவேற்கக் காத்து இருந்தவர்களும் வீல் சேர் பற்றிய நினைவே இல்லாமல்தான் இருந்தார்கள். பிறகு அவசர அவசரமாக விமான நிலையத்தில் இருக்கும் சக்கர நாற்காலியைக் கொண்டுவந்து, கருணா​நிதியைத் தூக்கி அதில் உட்கார வைத்தார்கள். பின்னர் அதில் இருந்து தூக்கி காரில் உட்கார வைத்தார்கள். அது சரியாகச் செயல்படவும் இல்லை. சக்கர நாற்காலியின் உயரமும் காரின் உயரமும் பொருந்தவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தூக்கி உட்காரவைத்தனர். டெல்லியில் மான்சிங் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில்தான் தங்கியிருந்தார். இந்த ஹோட்டலிலும் கருணாநிதிக்கு பல வசதிக் குறைபாடுகள் இருந்தனவாம்.''

''அதனால்தான், அந்த ஹோட்டலைவிட்டு உடனடியாக மாறினாரா?''

''இந்த ஹோட்டலில் இருந்த வீல் சேரும் சரியாக வேலை செய்யவில்லை. பின்னர், அப்போலோ மருத்துவமனைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அங்கே இருந்து ஒரு சக்கர நாற்காலி கொண்டுவரப்பட்டது. இதே தாஜ் ஹோட்டலில் இன்னொரு சிக்கல். அங்கு பாத்ரூம் கதவு மிகக் குறுகியதாம். வீல் சேர் நுழையும் இட வசதி இல்லை. இதைத் தொடர்ந்துதான் மௌரியா ஷெரட்டன் ஹோட்டலுக்கு மாறினார் கருணாநிதி.''

''ம்!''

''லட்ச ரூபாய் செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தாலும், கருணாநிதி விரும்பிச் சாப்பிட்டது, அழகிரி வீட்டுச் சாப்பாட்டைத்தான். ஆனால், உடல் சூடு காரணமாக, அவர் சிரமப்பட்டார். திகார் சிறைக்கு, கனிமொழியை சந்திக்கச் சென்ற கருணாநிதியின் கார், ஜன்பத் - ஷாஜகான் ரோடு மற்றும் ராஜேஷ் பைலட் ரோடு சந்திப்பில் சில நிமிடங்கள் நின்றது ஏன் என்று டெல்லியில் பரவலாகப் பேசப்படுகிறது. திகாரில் இருந்து நேராக டெல்லி விமான நிலையத்துக்கு செல்ல கருணாநிதி திட்டமிட்டு இருந்ததார். ஆனால், அவரைச் சந்திக்க நினைத்தார் ப.சிதம்பரம். அவர் கருணாநிதிக்கு போன் செய்ய, வாகனத்தை நிறுத்திவிட்டுச் சில நிமிடங்கள் பேசினார் கருணாநிதி.''

''என்ன சொல்கிறார் சிதம்பரம்?''

''கருணாநிதியைச் சந்திக்க சிதம்பரம் உள்ளே சென்றபோது, வெளியில் இருந்த தி.மு.க. பிரமுகர்கள் கோபம் கொப்பளிக்க அவரை விமர்சித்துக்கொண்டு இருந்தார்கள். 'சென்னைக்கு வந்தாலும் சந்திக்கிறார். டெல்லி வந்தாலும் சந்திக்கிறார். ஆனால், நமக்கு எந்த உதவியும் பண்ணினதுஇல்லை’ என்று ஒருவர் சொல்ல... 'அவங்க கட்சிக்காரங்களுக்கே அவர்எதையும் செய்தது இல்லை’ என்று இன்னொருவர் கமென்ட் அடித்தார். மழுப்பலான வார்த்தைகளால் கருணாநிதியை சமாதானப்படுத்திய ப.சிதம்பரம், சோனி​யாவை சந்தியுங்கள் என்று அறிவுரையும் சொன்னாராம். சோனியாவைச் சந்திப்பது இல்லை என்ற முடிவோடு டெல்லி வந்தவர் கருணாநிதி. எனவே, அவர் அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. 'இப்பப் போய்ப் பார்த்தால் மகளைக் காப்பாத்த கெஞ்சினார்னு சொல்லுவாங்க! எங்களுக்கு வந்த பிரச்னையை நாங்களே பார்த்துப்போம்’ என்று கோபமாகவே சொன்னாராம். அடுத்து, கருணாநிதியைச் சந்தித்தார் குலாம்நபி ஆசாத். அவரது பேச்சையும் கருணாநிதி ரசிக்கவில்லை.''

''ஏன்?''

'' 'காங்கிரஸ் இதுவரைக்கும் பொலிட்​டிக்கல் அட்மின் பண்ணியது இல்லை. எனவே, எங்களால் இதில் தலையிட முடியாது’ என்ற அர்த்தத்தில் கை விரித்தாராம் குலாம் நபி. 'எங்களுடைய கல்மாடியே சிறையில் இருக்கிறார். அதிலேயே எங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறோம்’ என்ற ஆசாத், 'இந்த விவகாரம் முழுமையாக சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் போகும் என்று ஆரம்பத்தில் நாங்​களும் நினைக்கவில்லை’ என்று பொதுவாகச் சொன்னாராம்.

இந்த கோபத்தைத்தான் சென்னை வந்த கருணாநிதி வெளிப்படையாகவே காட்டினார். 'சோனியாவை ஏன் சந்திக்கவில்லை?’ என்று ஒரு நிருபர், கருணாநிதியைக் கேட்டார். 'சந்திக்க நேரம் இருந்தும் சந்திக்கவில்லை. கனிமொழி சிறையில் இருக்கும்போது, சோனியாவைச் சந்திப்பது, முறையாக இருக்காது. நான் சோனியாவைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டேன்’ என்று பட்ட​வர்த்​த​னமாகப் போட்டு உடைத்தார் கருணாநிதி.சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்கக் காத்திருந்தவர்கள்கூட சில விநாடிகள் பேச முடியாத அளவுக்கு கருணாநிதி முகம் அன்று கடுகடுவென இருந்தது.''



''தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் என்ன நடந்ததாம்?''

''ஸ்டாலினை சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், துரைமுருகன் துணைத் தலைவராகவும், ஒட்டன்சத்திரம் சக்கரபாணி கட்சிக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். 'நான்தான் கொறடா’ என்று சொல்லிக்கொண்டு இருந்த எ.வ.வேலுவுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம். கருணாநிதி வருவதற்கு முன்னதாக வந்து வருத்தத்துடன் உட்கார்ந்து இருந்தார் வேலு. அப்போது சக்கரபாணி வந்தாராம். 'உட்காருய்யா! நீதான் ரொம்பப் பொறுப்பான ஆளாம்’ என்று கிண்டல் அடித்தாராம் வேலு. பக்கத்தில் இருந்தவர்கள் யாருக்கும் வேலு ஏன் இப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லையாம். அடுத்த சில நிமிடங்களில் உள்ளே வந்த கருணாநிதி, இந்த மூன்று பேர் பெயரையும் வாசிக்க ஆரம்பித்த பிறகுதான் வேலுவின் கிண்டலுக்கு அர்த்தம் தெரிந்தது.''

''வேலுவைவிட சக்கரபாணி சீனியர்தானே?''

''இருக்கலாம்! ஆனால் கட்சி மாறி வந்த ஜூனியர்கள்தானே, கட்சியில் அதிக ஆட்டம் போடுகிறார்கள். அதைவைத்து தனக்குப் பதவி உறுதி என்று நினைத்தார் வேலு. 'கடந்த முறை கொறடாவாக இருந்த சக்கரபாணியே இருக்கட்டும்’ என்று கருணாநிதி கறாராகச் சொன்னாராம். இதை ஸ்டாலினாலும் மறுக்க முடியவில்லை!''

''கூட்டத்தில்..?''

''சபாநாயகர் தேர்தல் நடக்கும்​போது சபைக்குச் செல்லலாமா வேண்​டாமா என்றுதான் கூட்டத்தில் விவாதிக்கப்​பட்டதாம். 'நாம் கட்டிய கட்டடத்தையே புறக்கணித்திருக்கிறார் ஜெயலலிதா. அதைக் கண்டிக்கும் வகையில், சபையைப் புறக்கணிக்கலாம்’ என்று சிலர் சொல்ல... அதை ஸ்டாலின் மட்டும் கடுமையாக மறுத்தாராம். 'ஐந்து வருஷமும் சபாநாயகரை வைத்துத்தான் நாம் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். எனவே, சபாநாயகரை பகைத்துக்கொள்ளத் தேவை இல்லை. அன்று கலந்துகொள்ளத்தான் வேண்டும்’ என்றாராம் ஸ்டாலின். 'எப்போதும் நமது உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருக்க வேண்டும். அப்போதுதான் சபையில் பேசும் நமது கட்சி உறுப்பினர்களுக்கு உற்சாகமாக இருக்கும்’ என்று கருணாநிதி அறிவுரை சொன்னாராம். 'சபை நடவடிக்கைகளில் கருணாநிதி பங்கேற்க மாட்டார். அது நல்லதும் அல்ல’ என்று மற்ற உறுப்பினர்கள் ஆலோசனை சொல்லி இருக்கிறார்களாம். பார்ப்போம்!'' என்றபடி கிளம்பினார் கழுகார்.

படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்

அதி அவசர சிகிச்சை... லண்டன்?

'சிகிச்சைக்காக ரஜினி வெளிநாடு செல்கிறார்’ என்று முதலில் நாம் சொன்னபோது, 'அந்த அளவுக்கு ஒன்றும் இல்லை!’ என்று மறுத்தனர். ஆனால், இப்போது ரஜினியை லண்டனுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடு நடக்கிறது. அநேகமாக ஓரிரு நாளில் இந்தப் பயணம் இருக்குமாம்? ரசிகர்களின் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போவதால், ரஜினியின் உடல்நிலை முன்னேற்றத்தை வீடியோ எடுத்து காட்டும் திட்டமும் ரஜினி குடும்பத்திடம் இருக்கிறது.

'இன்று பார்க்கலாமா, நாளை வரலாமா?’ என்று, ரஜினி குடும்பத்துக்கு போயஸ் கார்டனில் இருந்து தொடர்ந்து விசாரிப்புகள். ''நீங்கள் வரும்போது, ரெண்டு வார்த்தையாவது பேசினால் நன்றாக இருக்கும். அந்த நிலை வந்தவுடன், முதலில் உங்களுக்குத்தான் தகவல் சொல்வோம். நீங்கள் வந்து ரஜினியை சந்திக்கிற காட்சியை வீடியோவாகப் படம் பிடித்து மீடியாவுக்கும் தருவோம்...'' என்று, கார்டன் தலைவிக்கு பதில் சொல்லி இருக்கிறது ரஜினி குடும்பம்.



ஜீனியர் விகடன்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum