ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியின்-சிறப்பு

2 posters

Go down

தமிழ்மொழியின்-சிறப்பு Empty தமிழ்மொழியின்-சிறப்பு

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 8:16 am

ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False History) பொய் வரலாறு அல்லது (False story) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.

இப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே!. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.

நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

1, பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்
2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
4. இலக்கியச் சான்றுகள்
5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6. பழைய நாணயங்கள்
7. அரசு சாசனங்கள்
8. அரசர்களின் ஆவணங்கள்
9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10. கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.

இது போன்ற சான்றுகள் பல பல உள்ளன. தமிழைத் தெரிய தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும், உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கிறது.
தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

அவைகள்:
1, தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துக்கள்
3. கோலெழுதுக்கள் மற்றும்
4. மலையாண்மை,

என்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்
தமிழ் நாட்டில் முதன் முதலில், 1906 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்று 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி. சுப்ரமணிய அய்யராவார். அடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்

1) திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
2) ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்.
3) தமிழ்ப் பிராமி எழுத்து முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்தொற்றுமையும் மிக அதிகமாக்க் காணப்படுவதால் செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத்தொடர்புகள் உண்டு என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
4) சிந்துச் சமவெளியில் இரு பெருநகரங்களாகி மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் திராவிடர்களே! என்றும் சிந்துச் சமவெளியில்பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் மொழியும் எழுத்தும் ஒன்றே என்று திரு. ரெ.வ. ஹீராஸ் என்னும் வரலாற்று மேதை கூறுகிறார்.
5) இதே கருத்தை சர்.ஜான்மார்ஸல் என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார்.
6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச்சொந்தமானது என்று, இரகசிய அறிஞர்களாகிய திரு. ஜ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு. என்.வி. குரோ போன்றோர் கருதுகின்றனர்.
7) கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில் அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூட காணலாம்.
நந்தி வர்ம பல்லவ மன்னனுடைய கல்வெட்டென்று தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று கூறுகிறது.
9) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினோசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் Dr. R.R. தீட்சிதர்.
10) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்….
11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கிறிஸ்து பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு ஐராவதும் மகாதேவன் அவர்கள். மேலும் அவர், தமிழ்ப் பிராமியைப் பற்றிக் கூறுகையில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். என்கிறார்.
12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து, வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக டாக்டர், நாகசாமி கூறுகிறார்.
13) ரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் துணைகொண்டு, கிறிஸ்துபிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீனதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்ப்பும், வாணிகத் தொடர்பும் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன.

அவ்வண்ணமே! தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற இலக்கிய ஆதாரங்கள் தக்கதோர் புறச்சான்றுகளாக உள்ளன. மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணமுள்ளது.

உண்மை வரலாறு

தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே. குமரிக்கண்டத்தில், கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சகட்டமெட்டினர். பழம்பாண்டி நாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

புகழ்க்கொடி நாட்டியது

குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக்கொண்ட திராவிடத் தமிழன் உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வாணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை உருவாக்கி உலகெங்கும் நிலைத்தான். நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை,நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்து நாசமாகியது.

முக்கியக் குறிப்பு

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால் திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்னும் பெருநகர நாகரித்தைப் படைத்த தமிழ்த் திராவிடன் வடக்கிலும் இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே! இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்.
தமிழ் நண்பர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழ்மொழியின்-சிறப்பு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழ்மொழியின்-சிறப்பு Empty Re: தமிழ்மொழியின்-சிறப்பு

Post by சதாசிவம் Sat May 28, 2011 8:25 am

மிக அருமையான பதிவு நண்பரே,
இந்திய மொழிகளில் செம்மொழிக்கு உரிய அனைத்து இலக்கணகளை உடையது என்ற பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே பொருந்தும் . இதை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும்.

நன்றி, உங்களின் பதிவுகள் தொடரட்டும்.
தமிழ்மொழியின்-சிறப்பு 677196 தமிழ்மொழியின்-சிறப்பு 677196 தமிழ்மொழியின்-சிறப்பு 677196


சதாசிவம்
தமிழ்மொழியின்-சிறப்பு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum