ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

I P L கிரிக்கெட்-

3 posters

Go down

I P L கிரிக்கெட்-  Empty I P L கிரிக்கெட்-

Post by கே. பாலா Fri May 27, 2011 6:27 am





நவீன கிரிக்கெட்டை எப்படி திறமையாக சந்தைப்படுத்தி விற்றுப் பணம் பண்ணுவது என்பதை ஐ.பி.எல். உலகுக்குக் கற்றுக் கொடுத்தது என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில் கிரிக்கெட்டில் இருந்து அதன் அடிப்படை விழுமியங்களை விலக்கி வேரற்றதாக, அடையாளமற்றதாகவும் மாற்ற முடியும் என்றும் கூடத்தான ஐ.பி.எல். நிரூபித்தது.

இந்தியாவில் இன்று மதமும் அரசியலும் தேசியமும் அடைந்துள்ள நிலையை கிரிக்கெட் உலகளவில் அடைந்துள்ளது. நமது அரசியல்வாதிகளிடம் மக்களும் சாமியார்களிடம் பக்தர்களும் வாடிக்கையாளர்களாகவும் நுகர்வோராகவும் இருக்கும் நிலையில் எப்படி அரசியலில் அரசியல் இல்லை, மதத்தில் மதம் இல்லையோ, அது போல் இன்று கிரிக்கெட்டில் கிரிக்கெட்டும் இல்லை. சமகால காட்பாதரைப் போல் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருப்பதாய் இந்தியா இன்று உலகுக்குச் சொல்லி அதைச் செய்தும் காட்டுகிறது. இரு உதாரணங்கள் சொல்லலாம்.

ஒருநாள் கிரிக்கெட் உச்சத்தில் இருந்த வேளையில் ஒவ்வொரு வீரரும் தன்னை டெஸ்ட் ஆட்டத்தில் நிரூபிக்கவே விரும்புவதாய் சொல்லப்பட்டது. அதன் மூலம் டெஸ்ட் ஆட்டத்தின் சமகால முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பல இளம் வீரர்கள் ஒருநாள் ஆட்டங்களில் தம்மை நிறுவி அதன் மூலம் டெஸ்ட் அணியில் நுழைய கனவு கண்டனர். அப்படிச் செய்வது சாதனையாகவும் சிலருக்கு வெறுங்கனவாகவும் இருந்தது. மிகச்சிறந்த திறமையாளர்கள் மட்டும் சச்சின், கங்குலி போல நேரடியாக இளமையிலேயே டெஸ்ட் வாய்ப்பை பெற்றனர். இங்கிலாந்தின் காலிங் வுட், தெ.ஆவின் ஜாண்டி ரோட்ஸ் போன்றோர் தொடர்ந்து போராடி தம் முப்பதுகளில் மட்டுமே டெஸ்ட் அணியில் ஸ்திரப்பட்ட கதைகள் செவ்வியல் அம்சம் கொண்டவை. அதே வேளையில் மைக்கேல் பெவன் போன்ற தலைசிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் கடைசி வரை டெஸ்ட் அணியில் நிலைக்க முடியாமல் போன துன்பியலும் கிரிக்கெட்டின் வாய்மொழி கதைகளில் மறக்க முடியாதது. ஆனால் இந்தக் காலகட்டம் ஐ.பி.எல்.லோடு காலாவதியானது.

இன்று இளம் வீரர்கள். தேசிய அணியில் ஆட முடியாவிட்டாலும் பரவாயில்லை squadஇல் ஒரு இடம் மட்டும் போதும் என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு சுற்றுப்பயணத்தின் போது எந்த ஆட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வெறுமனே ஒட்டிக் கொண்டு செல்லும் ஒரு வீரர் சர்வதேச வீரர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல் பேரத்தின் போது அதிக சந்தை மதிப்பை பெற்று அதிக விலைக்கு வாங்கப்படுகிறார். ஐ.பி.எல்.லில் நுழைந்த பின்னரும் ஒரு வீரர் நன்றாக ஆடி தன்னை நிலைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஒரு ஆட்டத்தில் கூட ஆடாமல் வெறுமனே ரிஸர்வாக மைதான எல்லைக்கோட்டுக்கு வெளியே நகத்தை கடடித்துக் கொண்டு ஒரு முழுபருவமும் அமர்ந்திருந்தாலும் ஒரு ஐ.பி.எல். வீரர் அரைகோடியாவது சம்பாதித்து விடலாம். பல இளம் வீரர்கள் கிளப் ஆட்டங்களில் கவனிக்கப்பட்டும், 18 வயதுக்குக் கீழானவர்களுக்கான ஆட்டத்தொடர்களில் சிறப்பாக ஆடியதன் மூலமும் ஐ.பி.எல்.லில் தேர்வாவதால், ஐ.பி.எல் ஆடியே தேசிய அணியிலும் நுழைய முடியும் என்பதாலும் ரஞ்சித் தொடர் ஆடுவது இந்திய கிரிக்கெட் வீரருக்கு இனிமேல் தேசிய வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு அல்ல. உதாரணமாக சமீப ரஞ்சி தொடரில் ஏகப்பட்ட ஓட்டங்கள் குவித்த சர்வதேச அனுபவம் கொண்ட வாசிம் ஜாபரை ஐ.பி.எல். பேரத்தில் யாரும் வாங்கவில்லை.

ஆனால் யாரென்றே தெரியாத ஆஸி தேசிய அணியில் கூட இரண்டு ஆட்டங்களுக்கு மேல் இடம் பெறாத டானியல் கிறிஸ்டியன் என்பவரைக் கோடி கொடுத்து வாங்கினார்கள். இதன் காரணம் செல்வாக்கை, சிபாரிசை முன்னிறுத்தும் இந்தியத்துவ தேர்வு பாணி. ஐ.பி.எல்.லில் ஒரு வீரரின் தரம் அவரது ஆட்ட வரலாறால் அல்ல, பயிற்சியாளர் அல்லது ஒரு மூத்த வீரரின் சிபாரிசால் தான் முடிவாகிறது. அநேக அணிகளில் பயிற்சியாளர்களும் நட்சத்திர வீரர்களும் ஆஸ்திரேலியர்கள் என்பதால் டானியல் கிறிஸ்டியன் போன்றவர்கள் எளிதில் பின்வாசல் வழியாக கௌரவமாக நுழைகிறார்கள்.

நிரந்தரமாக மூடப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் முன்வாசலுக்கு வெளியே எப்போதும் ஒரு நீண்ட வாய்ப்பு நாடுவோர் வரிசை நிற்கிறது. ஐ.பி.எல். பின்வாசல் வழி உள்ளே நுழையும் இன்றைய கிரிக்கெட் வீரருக்குத் தேசிய அணி வாய்ப்பு என்பது வெறும் மற்றொரு வாய்ப்பு மட்டுமே, முன்பு போல் ஜென்மாந்தரக் கனவு அல்ல. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது இன்றொரு இந்தியப் பிரச்சினை மட்டுமல்ல, சர்வதேச அளவில் பல நாட்டு வாரியங்களும் முழி பிதுங்குகின்றன.

ஐ.பி.எல்.லினால் சர்வதேச கிரிக்கெட்டில் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முதல் வருடத்தில் ஐ.பி.எல். நடக்கும் இருமாத காலத்தில் பல அந்நிய அணி வீரர்களை ஐ.பி.எல் அணிகள் இழந்தன. இது ஐ.பி.எல். அணிகளின் தரத்தைப் பெருமளவு பாதித்தன. உதாரணமாய் முதல் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இங்கிலாந்து ஆஸி வீரர்களை இழந்து தாக்குப்பிடிக்க திணறியது. ஆனால் தற்சமயம் ஐ.பி.எல். ஆட்ட வேளையில் சர்வதேச வாரியங்கள் தமது வீரர்களை ஐ.பி.எல்.லுக்கு இழந்து தவிக்கின்றன. கெய்ல் உள்ளிட்ட மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்கள் ஐ.பி.எல்.லுக்காக சொந்த நாட்டு அணியை பகிஷ்கரிக்கத் துணிந்தனர். மே.இ. வாரியத்துடன் நடந்த இழுபறியின் விளைவாய் கெய்ல் தற்போது நடந்து வரும் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விட்டார். கெய்ல் தான் காயமுற்றிருப்பதாய் சொல்லித் தான் விலகினார். ஆனால் அவர் எந்த சிரமமும் இன்றி ஐ.பி.எல் ஆடி வருகிறார். மே.இ. வாரியம் இதனை சமீபமாய் கண்டித்தது. கெய்ல் பொருட்படுத்தவே இல்லை. அநேகமாய்

இதே பாணியில் ஒரு காட்சி இலங்கையிலும் அரங்கேறியது. மலிங்கா காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்டு ஆட்ட பயணம் மேற்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டு, இங்கே சௌகரியமாக மும்பை இந்தியன்ஸுக்காக சர்வ அலட்சியமாக யார்க்கர்கள் எறிந்து வெற்றிகளை வாங்கித் தந்து கொண்டிருந்தார். அதெப்படி காயமடைந்த ஒருவர் நன்றாக ஒருபுறம் ஆடிக் கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய இலங்கை கிரிக்கெட் வாரியம், அவரை நாட்டுக்குத் திரும்பி தன் (இல்லாத ) காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வலியுறுத்தியது. மலிங்காவும் ஏதோ ஈ மொய்க்கிறது என்று அலட்சியமாக இருந்தார். பின்னர் ரொம்பத்தான் மொய்க்கிறதே என்று டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு அறிவித்தார். டெஸ்டு ஆட்டத்தின் மீது குவிக்கப்பட்ட அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் இந்திய கிரிக்கெட் இப்படி ஒரு வேடிக்கை சமாச்சாரமாக்கியது.

தனிப்பட்ட சிரமங்களை மறந்து சுயலாபங்களைத் தியாகம் செய்து அடைய இன்று ஒன்றுமே கிரிக்கெட்டில் இல்லை. எல்லா திறன்களைப் போலவும் கிரிக்கெட் ஆடுவதும் ஒரு திறன். அது ஒரு விற்பனை சரக்கு. ஒரு டெஸ்டு போட்டியில் சராசரியாக மலிங்கா நாற்பது ஓவர்கள் வீச வேண்டி வரும். சில லட்சங்கள் கிடைக்கும். அதே நாற்பது ஓவர்களை அவர் எட்டு ஐ.பி.எல். போட்டிகளில் தனித்தனியாக வீசலாம். கோடிக்கணக்கில் சன்மானம் வரும். இதனால் அவர் அதிக வருவாய் மார்க்கத்தைத் தேர்ந்தெடுப்பது தவறில்லை எனலாம். இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் ஆடினாலே விரைவிலே உடல் தகுதி இழந்து விடும் அளவுக்குப் பலவீனரான அவர் அதையே இரண்டு ஐ.பி.எல். பருவங்களாக ஆடி தன் எதிர்காலத்தை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இதனால் மோசமான உடல்தகுதி கொண்ட திறமையாளர்களுக்குத் தங்கள் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு ஐ.பி.எல். என்று ஒரு தரப்பு நியாயம் உள்ளது. ஆனால் மலிங்கா, கெய்ல் போன்றோரை வளர்த்தெடுத்த நாடுகளுக்கும் அவற்றின் வாரியங்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகாதா இச்செயல்? சமகாலத்தில் மதிப்பிழந்த எத்தனையோ விழுமியங்களில் ஒன்றுதான் விசுவாசம் என்பது இதற்கான ஒரே பதில். இன்று விசுவாசம் ஒரு நிலப்பிரபுத்துவ மதிப்பீடு என்று எளிதில் நாம் அடையாளப்படுத்தி நிராகரிக்க முடியும். அணி உணர்வுக்காக அதிகம் போற்றப்பட்ட இலங்கை அணியினர் தமது தலைவர் தில்ஷானுடன் உள்ளிட்டு வரப்போகும் இங்கிலாந்து தொடரில் தாமதமாய் பங்கேற்கப் போகின்றனர். காரணம், ஐ.பி.எல். உலக கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு நாட்டின் உள்ளூர் ஆட்டத்தொடருக்காக ஒரு சர்வதேச தொடர் அலட்சியப்படுத்தப்படுவது இது முதல்முறையே. இது ஒரு துவக்கம் மட்டுமே என்று பலரும் கருதுகின்றனர். ஐ.பி.எல். வேளையில் பிற சர்வதேச ஆட்டங்களை நடத்தாமல் இருப்பது ஒரு தீர்வு என்று பல வீரர்களும் வேண்டுகிறார்கள். அனைத்தும் தலைகீழாகி விட்டதற்கு இந்த வேண்டுகோள் ஒரு இறுதி உதாரணம்.

நன்றி: உயிரோசை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

I P L கிரிக்கெட்-  Empty Re: I P L கிரிக்கெட்-

Post by மகா பிரபு Fri May 27, 2011 7:04 am

எல்லாம் பணம் பண்ணுகிற வேலை.

பகிர்வுக்கு நன்றி பாலா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

I P L கிரிக்கெட்-  Empty Re: I P L கிரிக்கெட்-

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 7:25 am

பல வருடங்களாக ரஞ்சி போட்டியில் விளையாடும் வீரர்களை யாருக்கும் தெரிவதில்லை ஆனால் ஐ.பி.எல் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் அடித்து விட்டால் அவர் மீதான எதிர்பார்பானது உருவாகிறது ஒரே நாளில் அவர் ஹிரோ ஆகிறார் காரணம் ரஞ்சி போட்டிகளின் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை இந்திய அணியில் இடம் பிடிக்க இளம் வீரர்களுக்கு இது எளிதாக உள்ளது ஆனால் மலிங்கா நாட்டிற்காக விளையாடாமல் இருப்பது தவறான செயல்
ஐ.பி.எல் லின் ஆதிக்கம் தொடர்ந்தால் டெஸ்ட் கிரிக்கெட் விரைவில் அழிந்து விடும்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

I P L கிரிக்கெட்-  Empty Re: I P L கிரிக்கெட்-

Post by மகா பிரபு Fri May 27, 2011 7:38 am

உண்மைதான் ரமேஷ். டெண்டுல்கர் கூட பணத்திற்காக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். அப்புறம் ஏன் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மறுக்கிறார்? கேட்டால் இளம் தலைமுறைக்கு வழிவிடுகிறேன் என்கிறார். அப்படியென்றால் ஐபிஎல் லில் இருந்தும் விலகி கொள்ள வேண்டியதுதானே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

I P L கிரிக்கெட்-  Empty Re: I P L கிரிக்கெட்-

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 8:55 am

மகா பிரபு wrote:உண்மைதான் ரமேஷ். டெண்டுல்கர் கூட பணத்திற்காக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். அப்புறம் ஏன் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மறுக்கிறார்? கேட்டால் இளம் தலைமுறைக்கு வழிவிடுகிறேன் என்கிறார். அப்படியென்றால் ஐபிஎல் லில் இருந்தும் விலகி கொள்ள வேண்டியதுதானே!
சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

I P L கிரிக்கெட்-  Empty Re: I P L கிரிக்கெட்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum