ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

Top posting users this week
ayyasamy ram
அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_c10அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_m10அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_c10 
heezulia
அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_c10அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_m10அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_c10அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_m10அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்கள்... குழந்தைகள்...

+2
அசுரன்
இரா.எட்வின்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Empty அவர்கள்... குழந்தைகள்...

Post by இரா.எட்வின் Thu May 26, 2011 10:46 pm

First topic message reminder :


தங்கையின் திருமண அழைப்பிதழை வைப்பதற்காக திருவையாறு சென்றுவிட்டு திரும்புவதற்காக திருவையாறு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். வருகிற பேருந்துகள் எல்லாம் பிதுங்கிக் கொண்டு வந்தன. இரண்டு படிக்கட்டுகளிலும் ஒரு பேருந்துக்கான கூட்டம் தொங்கிக் கொண்டு போனது.சரியான முகூர்த்த நாள் என்பது தெரியாமல் புறப்பட்டது தவறாகப் போனது.

பேருந்து நிலயத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போனதே அல்லாமல் குறைந்தபாடில்லை. கும்பகோணம் போகிற பேருந்து காலியாகப் போனது. திருக்காட்டுப் பள்ளி, மற்றும் தஞ்சை போகிற பேருந்துகளும் காலியாகவே போயின. அதில் அமர்ந்து போகிறவர்களைப் பார்த்தால் ஒரு வித பொறாமையே வந்தது. ஆக இருக்கிற கூட்டமெல்லாம் அரியலூர் வருகிற கூட்டம் தான் போல. அந்த எண்ணமே ஒரு வித அயர்வை ஏற்படுத்தியது. பத்துப் பேருந்துகள் சுத்தமாய் காலியாய் வந்தாலும் இருக்கிற ஜனங்களுக்கு காணாது என்றே பட்டது. சரி, உட்கார இடத்தோடு பேருந்து வருகிறவரை காத்திருப்பது என்று முடிவெடுத்தோம்.

ஓரமாய் மூடிக் கிடக்கும் ஒரு கடையின் படியில் அமரலாம் என்று போனோம். படிக்கட்டின் ஒரு மூலையில் ஏற்கனவே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. ஒரு இளைய ஜோடி அமர்ந்திருந்தார்கள். அவர்களது பையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது அவன் மீதும் அவர்களுக்கு கவனம் இருக்கவே செய்தது. “: ஏய், மண்ணுலவிளையாடாத , சிரங்கு வந்துடும். அப்புறம் டாக்டர்ட்ட தூக்கிட்டுப் போய் ஊசி போட்டுடுவேன்” என்று அவனது அப்பா சொன்னதுதான் தாமதம் “நான் பெரிய பையனா வந்து நம்ம ஸ்ப்லெண்டர எடுச்த்துட்டு போயி அந்தக் கொரங்கு மாமா மேல ஏத்தி அரைக்கப் போறேன்” என்று விளையாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமலே சொன்னான்.

இதைக் கேட்டதும் நானும் விக்டோரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். இருவர் மனதிலுமே ஒரு பழைய சம்பவம் மலரும் நிணைவாய் வந்து எங்கள் புன்னகையை ஆழமாய் அர்த்தப் படுத்தியது.

அப்போது நாங்கள் பெருமாள் பாளையத்தில் குடியிருந்தோம்.கிஷோருக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். அவனுக்கான சளிப் பிரச்சினைக்கு மருத்துவர் நரசிம்மனிடம் ஹோமியோ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அவரது மருத்துவமனை நொச்சியத்தில் இருந்தது. ஒரு முறை அவனை வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவரிடம் கிளம்பினோம். போகும் வழியெல்லாம் எதையாவது கேட்டுக் கொண்டே வருவான். நானோ விக்டோரியாவோ ஒருபோதும் அவனது கேள்விகளை அலட்சியப் படுத்தியதே இல்லை.

நொச்சியம் நெருங்கிய பொழுது சாலை ஓரத்தில் மரங்களி தென்பட்ட குரங்குகளைப் பார்த்து விட்டான். குரங்குகளை பறிய கேள்விகளாய்க் கேட்டு ஒரு வழி செய்துவிட்டான். அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் இடையே நடந்த உரையாடல்களுள் ஒரு மெல்லியப் பகுதியைப் பார்ப்போம்,

“ பாப்பாக் குரங்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகுமா?

“போகும்”

“அவங்களுக்கு யார் ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பா?”

“ கொரங்கு மிஸ்”

”கொரங்கு மிஸ் அவங்கள ஸ்கேல்ல அடிப்பாங்களா?”

“மாட்டாங்க”

“ அப்புறம் ஏன் எங்க மிஸ் மட்டும் அடிக்கிறாங்க”

“ ஏன்னா அவங்க மனுஷ மிஸ்” (அய்யோ, விக்டோரியா எவ்வளவு ஆழமான பதிலை இவ்வளவு லாவகமாகவும் அலட்சியமாகவும் சொல்வதைக் கேட்டு சத்தியத்திற்கும் சிலிர்த்தே போனேன்)

“ஓ!, பாப்பாக் கொரங்குக்கு சளிப் புடிச்சா யாரு மருந்து கொடுப்பா?”

“ கொரங்கு டாக்டர்”

இப்படியாக குரங்குகளைச் சுற்றியே அவர்களது பேச்சு சுழன்று கொண்டிருக்க மருத்துவ மனை வந்து விட்டது. காத்திருக்கும் தேவை அன்று ஏற்படவில்லை.

அவருக்கு கிஷோரை மிகவும் பிடிக்கும். “ஹாய் கிச்சு, எப்ப வந்தீங்க?”

” தம்பி சாருக்கு வணக்கம் சொல்லு”

“ சாரெல்லாம் இல்ல மாமாதான்.கிச்சு , எங்க மாமா பேர சொல்லுங்க பார்ப்போம்?”

சட்டென சொன்னான் “கொரங்கு மாமா”

சிரி சிரியென்று சிரித்தார். எங்களுக்கு மிகவும் சிரமமாய் போய்விட்டது. ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டோம். வரும் வழியில் குரங்குகளைப் பார்த்ததையும் , தொடர்ந்து அவன் குரங்குகளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்ததையும் அதன் விளைவாகத்தான் இப்படிப் பேசிவிட்டான் என்றும் நாங்கள் சொல்லச் சொல்ல அதையெல்லாம் சற்றும் சட்டை செய்யாதவராய் அவனுக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி வைத்துக் கொண்டு “ எங்க இன்னொரு தரம் சொல்லு” என்று அவனோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை “கொரங்கு டாக்டர்” என்று சொன்னதும் எங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது. விக்டோரியா அவனை நோக்கி கையை நீட்டி சிரிக்கவே விக்டோரியாவை நோக்கி தாவிக் குதித்து ஓடி வந்தான்.

“ தம்பிப் பேரு என்ன?”

“தனுஷ்”

“ஓ! என்னப் படிக்கிறீங்க”

“யு.கே.ஜி” என்றவன் என்னை நோக்கி கை நீட்டி “இவங்கதான் மாமாவா?”

“ஆமாம்”

“அய்ய, நல்லாவே இல்ல, வேணாம்”

“சரி என்ன செய்யலாம்?”

“கா விட்டு தொறத்தி விடுங்க ஆண்டி”

“ சரி செஞ்சுடலாம். நீ ஆண்டியக் கட்டிக்கிறியா?”

இதைக் கேட்டதும் “சரி” என்றவன் விக்டோரியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓ.கே வா?” என்றான்.

"ஓகே, ஓகே” விக்டோரியாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“ டேய் பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல” என்று சொல்லிக் கொண்டேஅவனை வாங்க
எழுந்து வந்தார். விக்டோரியா அவனைத் தராமல் இழுத்து வைத்துக் கொண்டு “ விடுங்க சின்னப் பிள்ளைதானே, போகவும் அவன் சரியாய்த் தானே சொன்னான்” என்று சொல்லவும் அவனது அம்மாவும் அப்பாவும் எங்களோடு சேர்ந்து சிரித்தனர்.

குழந்தைகளைக் கவனித்தால் எதையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிரித்துக் கொண்டே கற்கலாம். எவனோ ஒருவன் அரை போதையில் உளறி இருக்கிறான் “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று. எந்தக் குழந்தைக்காவது இது புரியும் என்றால் அது சொல்பவனைக் கொன்றே போடும். இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு நிகர் எதுவுமே இல்லை.

அவர்கள் போக வேண்டிய பேருந்து வரவே அவனை வாங்கிக் கொண்டு கிளம்பினர். முத்தம் கொடுத்து டாடா சொல்லி விக்டோரியா அனுப்பிவைக்கவே பையன் காற்றிலே ஒரு முத்தம் அனுப்பினான். அதில் ஒரு துளி என் மீதும் விழுந்தது. அயர்வு முழுக்க பறந்தே போனது.

“ பேசாம அவங்க முகவரிய வாங்கி வச்சிருந்தா போயி அப்பப்ப கொஞ்சலாம்ல”

“அதுக்கு அங்க போகனும்னு அவசியமேயில்ல”

”அப்புறம்”

“ஊர்ல இருக்கிற எல்லாக் குழந்தைகளுமே அவந்தான். எல்லாக் குழந்தைகளுமே ஒரே மோல்டுதாங்க” அப்பா, எவ்வளவு ஞானம். இவ்வளவு நாள் இதை எப்படி கண்டு கொள்ளாமல் போனோம்.

ஒரு வழியாய் எங்களுக்கும் ஒரு பேருந்து வந்தது. நின்று கொண்டுதான் போக வேண்டும். உள்ளே நுழைவதற்கு இடம் கிடைக்கவே ஏறி விட்டோம்.

ஏறிய பின்புதான் ஏன் ஏறினோம் என்று தோன்றியது. முன்னே இருப்பவர்களை பின்னே போகுமாறும் பின்னே இருப்பவர்களை முன்னே போகுமாறும் ஒவ்வொறு முறை நடத்துனர் தள்ளும் பொழுதும் ஒவ்வொருவரும் எரிச்சலடைந்து சிலர் அவரை கண்டபடி சபிக்கவே செய்தோம்.

ஒவ்வொரு நிறுத்ததிலும் ஏறிக் கொண்டேதான் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் நடத்துனரை சபித்துக் கொண்டேதான் வந்தோம். “இப்படிச் சம்பாரிக்கறதுக்கு பதிலா...” என்றுகூட சிலர் அசிங்கமாய் திட்டவே செய்தனர்.

சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து , கசங்கி , இதில் அடிக்கடி நடத்துனர் டிக்கட் போடுவதற்காய் இப்படியும் அப்படியுமாய் நுழைந்து போவது என்பதெல்லாம் சேர்த்து உயிரே போனது.

இந்த நேரம் பார்த்து மழை வேறு வந்துவிடவே இன்னௌம் துயரம் அதிகமானது. எல்லா இடங்களிலும் ஒழுகியது. இரண்டு பக்கங்களிலும் ஜன்னல் கண்ணாடிகள் சரியாக வேலை செய்யாததால் சாரல் வேறு. ஏறத்தாழ குளித்தோம்.

ஒரு வழியாய் பேருந்து அரியலூர் வந்தது. எல்லோருக்கும் அப்பாடா என்றிருந்தது. சிலர் அதை கொஞ்சம் சத்தமாகவே வெளிப் படுத்தினர்.

இறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கேட்டான், “ இந்த பஸ் திரும்ப எப்பக் கிளம்பும்?”

“அதை ஏன் கேக்குற. எவ்வளவு ஒழுகுனாலும் உடனே கிளப்பிடுவாங்க”

“ பாவம் இல்ல அந்த கண்டக்டர்”

அதை யாரும் சட்டை செய்தார்களா என்று தெருயவில்லை. ஆனால் எனக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது.

ஆம் நாம் ஏன் இப்படி யோசிப்பது இல்லை. அல்லது குழந்தைகள் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?

அவர்கள் குழந்தைகள்.

எனக்கொரு ஆசை, என்னைத் தவிர எல்லோரும் குழந்தைகளாய் மாறிவிட வேண்டும். அல்லது என்னோடு தொடர்புடைய அனைவருமாவது குழந்தைகளாய் மாறிவிட வேண்டும்.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவர்கள்... குழந்தைகள்... - Page 2 38691590

இரா.எட்வின்

அவர்கள்... குழந்தைகள்... - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down


அவர்கள்... குழந்தைகள்... - Page 2 Empty Re: அவர்கள்... குழந்தைகள்...

Post by இரா.எட்வின் Fri May 27, 2011 11:29 pm

அருள்மொழியான் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி தோழர்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவர்கள்... குழந்தைகள்... - Page 2 38691590

இரா.எட்வின்

அவர்கள்... குழந்தைகள்... - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum