ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை ப்ரெட் சமையல்...

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:56 pm

30 வகை பிரெட் சமையல்



30 வகை ப்ரெட் சமையல்... 0'பிரெட்' என்றாலே, ''உடம்பு சரியில்லாதவங்க சாப்பிடறது'' என்கிற காலமெல்லாம் மலையேறி, 'பிரெட் இன்றியமையாத உணவு' என்பதாகிவிட்ட காலம் இது. வகை வகையாக ஹோட்டல்களில் கிடைக்கும் பிரெட் உணவுகளைப் பார்க்கும்போது... 'இதையெல்லாம் நாமும் செய்து பார்த்தால் என்ன?' என்று தோன்றும்தானே!
இதோ, ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’' என்று சொல்லும் 'சமையல்கலை நிபுணர்', நங்கநல்லூர் பத்மா, அப்பம் முதல் அல்வா வரை 30 வகை ரெசிபிகளை பிரெட்டிலேயே தயாரித்து பிரமிக்க வைத்திருக்கிறார். அவையெல்லாம், செஃப் ரஜினியின் அலங்கரிப்பில் இங்கே அசத்தலாக இடம் பிடிக்கின்றன - நீங்கள், உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துவதற்காக!

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:57 pm

சமையல் டிப்ஸ்... பிரெட் மற்றும் பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருப்பதால், இதில் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். சாதம் வைத்த குக்கர் சூடாக இருக்கும்போதே, அதன் மீது இரண்டு பிரெட் துண்டுகளை வைத்தால்... நன்கு ரோஸ்டாகிவிடும். பொடி வகைகளை செய்யும்போது, சிறிது கல் உப்பை சேர்ப்பதால், அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது, நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால், பாகு இளகியே இருக்கும். டீ தூள் போட்டு கொதிக்க வைக்கும்போதே சர்க்கரை சேர்த்தால், சுவை குறைந்துவிடும். கடைசியாகத்தான் சேர்க்க வேண்டும். தக்காளி ரசம் செய்யும்போது தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்காமல், புளியுடன் சேர்த்து நன்றாகக் கரைத்து (அ) மிக்ஸியில் அரைத்து வடிகட்டி செய்யுங்கள். சூப் போல் தக்காளி ரசமும் சூப்பராக இருக்கும். கொழுக்கட்டை செய்ய மேல் மாவுக்கு கிளறும்போது, சரியாக வேகாமல் கட்டி தட்டிவிடும். அரிசியை ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரையுங்கள். அடுப்பில் ஒரு கடாயை ஏற்றி, கரைத்த மாவை அதில் போட்டுக் கிளறி, பந்து போல் கையில் ஒட்டாமல் வந்ததும் எடுத்து, கொழுக்கட்டை செய்தால் நன்றாக வரும். கேரட்டைத் துருவுவதற்கு முன்பு ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துத் துருவினால், ஈஸியாக துருவ முடியும். வெண்டைக்காயில் பொரியல் செய்யும்போது, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் உதிராக இருப்பதுடன் ருசியும் நன்றாக இருக்கும். கீரை மசியல் செய்யும்போது, சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும். சாம்பார் பொடியை மொத்தமாக அரைப்பதால், அதன் மணமும், குணமும் குறைந்துவிடும். ஒரு வாரத்துக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் அரைத்து, பாலிதீன் கவரில் போட்டு, ஒரு டப்பாவில் சேமிக்கலாம். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே வாசனையாக இருக்கும்.

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:58 pm

பிரெட் காரப்பணியாரம்

30 வகை ப்ரெட் சமையல்... 1
தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம். சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:59 pm

புலாவ் வித் பிரெட்

30 வகை ப்ரெட் சமையல்... 2
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கேரட், வெங்காயம் - தலா 2, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - 1, பிரெட் துண்டு - 2, நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி - தலா 10, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசிக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு... பச்சைப் பட்டாணி, வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். பிஸ்தா, முந்திரி, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். வெறும் கடாயில் புதினாவை வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் சாதத்துடன் கலக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.
வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி இதற்கு அருமையாக இருக்கும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:02 pm

பிரெட் பாயசம்

30 வகை ப்ரெட் சமையல்... 3
தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, நெய்யில் வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 500 மில்லி.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து... பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:03 pm

பிரெட் பக்கோடா

30 வகை ப்ரெட் சமையல்... 4
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1, முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்), வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பொடித்து, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:04 pm

பிரெட் போண்டா
தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், பிரெட் துண்டுகள் - 10, உருளைக்கிழங்கு - 4, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை ப்ரெட் சமையல்... 5
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து... இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரெட் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by உதயசுதா Thu May 26, 2011 2:05 pm

ஐயாயோ அவள் விகடனும் வந்துடுத்தா?இன்னிக்கு பூரா இவங்க அதில இருந்தே விஷயங்களை போடுவாங்களே.அடி ஆத்தா அங்களா பரமேஸ்வரி உன் புண்ணியத்தாளா இனி நான் அவள் விகடன் சந்தா கட்ட வேண்டாம்.


30 வகை ப்ரெட் சமையல்... U30 வகை ப்ரெட் சமையல்... D30 வகை ப்ரெட் சமையல்... A30 வகை ப்ரெட் சமையல்... Y30 வகை ப்ரெட் சமையல்... A30 வகை ப்ரெட் சமையல்... S30 வகை ப்ரெட் சமையல்... U30 வகை ப்ரெட் சமையல்... D30 வகை ப்ரெட் சமையல்... H30 வகை ப்ரெட் சமையல்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:05 pm

பிரெட் வெஜிடபிள் கட்லெட்
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா 2, குடமிளகாய் - 1, கொத்தமல்- சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - கால் டீஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை ப்ரெட் சமையல்... 6
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயையும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும்.
சில்சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 2:06 pm

பிரெட் பூரண போளி
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், தேங்காய் துருவல் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கேசரி பவுடர் - சிறிதளவு.

30 வகை ப்ரெட் சமையல்... 7
செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை ப்ரெட் சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை ப்ரெட் சமையல்... Empty Re: 30 வகை ப்ரெட் சமையல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum