ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்)

2 posters

Go down

பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்) Empty பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்)

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:45 pm

''மூன்று முறை தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சையை, சட்டசபைக்குள் காலடிவைப்பதற்கு முன்பே காலன் அழைத்துக்​கொண்டானே...'' என்றபடியே 'உச்’ கொட்டி அமர்ந்த கழுகாரிடம், ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்குப் போயிருந்தீரா?'' என்றோம்.
''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே திங்கள்கிழமை அதிகாலையில் மந்திரி மரியம்பிச்சையின் மரணச் செய்தி வந்தது. அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட். சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார். முதல் நாள் சட்டசபைக்குச் செல்லும் நாளில் இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? 'சட்டசபையில் பதவி ஏற்பு நடக்குமா?’ என்று பேச்சுகள் கிளம்பிவிட்டன. ஆனாலும் திட்டமிட்டப்படி புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவை நடத்த முடிவு செய்ததாம் அரசு. 'நான் பதவி ஏற்றதும் உடனே திருச்சி சென்றுவிடுவேன். எனவே, இதைத் தள்ளிவைக்க வேண்டாம்’ என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டாராம் முதல்வர்.''

பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்) P46a
''புதுப்பிக்கப்பட்ட பழைய சட்டசபை எப்படி இருக்கிறது?''
''முந்தைய தி.மு.க. அரசு பழைய சட்டசபையை மாற்றிவிட்ட பிறகு, அங்கே செம்மொழி ஆய்வு நூலகம் இருந்தது. அதைத்தான் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி இருக்கிறார்கள். இதில் முக்கியமாக ஒரு மாற்றம் செய்யப் போவதாக கடந்த முறை உமக்குக் கோடிட்டுக் காட்டி இருந்தேன். அதையே கனகச்சிதமாகச் செய்து இருக்கிறார்கள். ஆளும் கட்சி இருந்த பகுதியை எதிர்க் கட்சியாகவும், எதிர்க் கட்சி இருந்த ஏரியாவை ஆளும் கட்சியாகவும் மாற்றி இருக்கிறார்கள். அதாவது, முன்பு மேற்கு நோக்கி இருந்த முதல்வரின் இருக்கை, இப்போது கடற்கரையைப் பார்த்துக் கிழக்கு நோக்கி அமரும் வகையில் மாறி இருக்கிறது. ஜோதிடர்கள் கொடுத்த ஐடியாவினால்தான் மாற்றமாம். சபாநாயகர் இருக்கையும் அப்படியே எதிர்ப் புறமாக மாற்றிவிட்டார்கள். கேன்டீன் இருந்த பகுதி, சபாநாயகர் அறையாகுமாம். பழைய மேலவை இருந்த இடத்தில்தான், முதல்வர் அறையைப் புதுசாகக் கொண்டுவரப்போகிறார்களாம்.''
''தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ரியாக்ஷன் என்ன?''
''எதிர்க் கட்சிகள் எல்லாம் 4-ம் நம்பர் வாசல் வழியாக வந்தபோது, ஸ்டாலின் தலைமையில் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள், வி.ஐ.பி-க்கள் நுழையும் வாசல் வழியாக சட்ட​சபைக்கு வந்தனர். புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்காக, இரண்டு வரிசைகளை நீக்கிவிட்டு சேர்கள் பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்) P46போட்டிருந்தார்கள். இதனால், அவையில் நெருக்கி அடித்துக்கொண்டு எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்து இருந்தனர். தாமதமாக வந்த தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் இடம் கிடைக்காமல் அங்கும் இங்கும் அல்லாடியது பரிதாபம்!
கடைசி வரிசையில் ஸ்டாலின் இடம் பிடித்து உட்கார்ந்தார். மற்றவர்கள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்​களை இடித்துக்​கொண்டு உட்கார்ந்துகொண்டனர். கருணாநிதி அவைக்கு வரவில்லை. இன்னொரு நாளில் தனியாக வந்து பதவியேற்பாராம்.''
''கருணாநிதி டெல்லி சென்றுள்ளாரே?''
''கனிமொழி கைதைத் தொடர்ந்து ராஜாத்தி அம்மாள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி கிளம்பிச் சென்றார். அப்போது கருணாநிதிக்கும் ராஜாத்​திக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாம். 'மத்தியில் ஆட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, என் மகளை உங்களால் காப்பாத்த முடியலையா?’ என்று கொந்தளித்தாராம் ராஜாத்தி. தன்னுடைய இயலாமையை வார்த்தைகளால் சொல்ல முடியாமல் தவித்தாராம் கருணாநிதி. அன்று கனிமொழி சம்பந்தமான தீர்ப்பு வரும் நாள் என்பதால், முன்னாள் அமைச்சர்களில் பெருவாரியானவர்கள் கருணாநிதியுடன் சி.ஐ.டி. காலனி வீட்டில் கூடினார்கள். மதியம் 2.30-க்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதுமே குரல் உயர்த்தி அழ ஆரம்பித்துவிட்டாராம் கருணாநிதி. துரைமுருகன்தான் அருகில் இருந்து இருக்கிறார். 'தலைவரைக் கொஞ்சம் தனியாவிடுங்க’ என்று சொல்லி, மற்றவர்கள் அதைப் பார்க்காமல் மறைத்து இருக்கிறார். ராஜாத்தி அம்மாள் டெல்லி கிளம்ப... 'நானும் வர்றேன்’ என்று கருணாநிதியும் கிளம்ப... அதை அவர் ஏற்காமல் தனியே சென்றுவிட... நடந்தவை அனைத்தும் உணர்ச்சிமயமான போராட்டம். கருணாநிதி மறுநாள் டெல்லி செல்லலாம் என்று நினைத்தார். அப்போது மதுரையில் இருந்து போன். 'நான் ராத்திரி வர்றேன். அப்புறமா முடிவு பண்ணுங்க’ என்றாராம் அழகிரி. இரவு நெடுநேரம் வரைக்கும் தூக்கம் இல்லாமல் தவித்தார் கருணாநிதி.
ஸ்டாலினுடன் மாஜிக்கள் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். 'அவசரப்பட்டு மத்திய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டாம்’ என்பதுதான் அவர்களின் ஆலோசனை. இரவு நேரத்தில் அரக்கப்பரக்க வந்த அழகிரி, 'தமிழ்நாட்டில் எமர்ஜென்சி ஆரம்பித்துவிட்டது’ என்று பதறிப்போய்ச் சொன்னார்''
''கனிமொழி மேட்டரில் அவரது ரியாக்ஷன் என்ன?''
''அழகிரியைப் பார்த்ததும், கருணாநிதி மீண்டும் கதறினாராம். அப்பாவை ஆசுவாசப்படுத்துவதிலேயே நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. அத்தனை சம்பவங்​களும் காங்கிரஸ் மேலிடத்தின் கண் அசைவில் நடப்பதாகத்தான் நினைக்கிறார்கள் இவர்கள். இந்த நிலையில் அமைச்சராக நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைக்கிறாராம் அழகிரி. 'இந்த மாதிரி நேரத்துலதான் நாம ஒற்றுமையாக இருக்கணும்’ என்று சொல்ல... 'நான் போய் கனிமொழியை சிறையிலோ, கோர்ட்டிலோ பார்க்க முடியாது. என் மந்திரி பதவி தடுக்குது. என் மனைவியைப் போய்ப் பார்க்கச் சொல்றேன்’ என்றாராம். 'அந்தக் குடும்பம் கைவிட்டுருச்சுனுராஜாத்தி நினைக்கிறமாதிரி நடந்துக்காதீங்கப்பா’ என்றாராம் கருணாநிதி எமோஷனலாக. இதைத் தொடர்ந்துதான் திங்கள்கிழமை அன்று டெல்லி செல்லும் திட்டம் முடிவானது.''
பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்) P47a''ஞாயிற்றுக்கிழமை, மத்திய ஆட்சியின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நடந்ததே?''
''ஞாயிறு காலையில் கிளம்பினால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி வரும் என்பதால்தான், தனது பயணத்தை திங்களுக்கு மாற்றினாராம் கருணாநிதி. அவரை அந்தக் கூட்டத்துக்கு வரச் சொல்லி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் பேசியதாகச் சொல்கிறார்கள். சுரத்தே இல்லாமல் பேசிய கருணாநிதி, 'தி.மு.க. சார்பில் யாராவது வருவாங்க’ என்று பொதுவாகச் சொன்னாராம். டி.ஆர்.பாலுதான் கலந்துகொண்டார். அவருக்கு விருந்தில் பிரதான இடத்தைக் கொடுத்து அங்கே மகிழ்வித்து இருக்கிறார்கள்.''
''டெல்லி சென்ற கருணாநிதி, டெல்லி மேலிடத்தைச் சந்திக்க முயற்சிக்கவில்லையா?''
''அவரது பயணம், கனிமொழியைப் பார்க்க மட்டும்தான். 'சோனியாவை சந்திப்பீர்களா?’ என்று கேட்டபோது, 'வாய்ப்பு இருக்காது என்றே நினைக்​கிறேன்’ என்று பொதுவாகச் சொல்லித் தட்டிக் கழித்தார் கருணாநிதி. டெல்லி தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்த கருணாநிதியை, காங்கிரஸ் ஆட்கள் யாரும் சந்திக்கவில்லை. திக்விஜய் சிங் மட்டும் ஹோட்டலுக்கு வந்தார். அவரும் வேறு யாரையோ பார்த்துவிட்டுப் போனார். மாலை 5 மணிக்கு திகார் சிறைக்குச் சென்ற கருணாநிதி, கனிமொழியையும் ஆ.ராசாவையும் சந்தித்தார். கனிமொழியைப் பார்த்ததும் கண் கலங்கினார். கனிமொழிதான் ஆறுதல்படுத்தினார். 'நீங்க எதுக்குப்பா உங்களைச் சிரமப்படுத்திக்கிட்டு இங்க வர்றீங்க...’ என்றாராம் தழுதழுப்பாக. 'இதைவிட எனக்கு என்னம்மா வேலை?’ என்று உருகினாராம். தலைவரின் காலைத் தொட்டு வணங்கினார் ராசா என்கிறார்கள். 'மனசுல எதையும் வெச்சுக்காத! உன்னைக் கட்சி காப்பாத்தும்’ என்று வாக்குறுதி கொடுத்தாராம். ஆறுதல் சொல்லப்போன கருணாநிதிக்கு, அவர்கள் இருவரும் ஆறுதல் தந்து அனுப்பிவைத்தனராம்.''
''ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் போட்ட ஐந்து பேருக்கு டெல்லி ஹை-கோர்ட் மறுத்துவிட்டதே?''
''அதிரடி க்ளைமாக்ஸ் இன்னும் இருப்பதாகவே சொல்கிறது டெல்லி. கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட விவகாரத்தில், ஒரு விஷயத்தை நீதிபதி சொல்லி இருக்கிறாராம். 'சென்னையில் ஒரு வர்த்தகக் கட்டடத்தைக் கைமாற்றியது குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது’ என்று சொல்லப்பட்டு உள்ளது. வோல்டாஸ் இடம், ராஜாத்தி அம்மாளின் உதவியாளர் சரவணன் பெயருக்கு மாற்றப்பட்ட விவகாரம்தான். அதை சி.பி.ஐ. கையில் எடுத்தால், ராஜாத்திக்கே சிக்கல் ஆகலாம் என்கிறார்கள். மேலும் ராசாவின் உதவியாளராக இருந்து இன்று சி.பி.ஐ-யின் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும் ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலத்தில், தமிழக மாஜி மந்திரிகள் மூவரின் பெயர்கள் வருகின்றனவாம். வந்த பணத்தை யாரிடம் பிரித்துக் கொடுத்தோம் என்ற வரிசையில் அந்த மாஜிக்கள் வருகிறார்கள். அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சி.பி.ஐ. திட்டமிட்டு உள்ளதாம். டெல்லி நிருபர் தரும் தகவல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்... இங்கேயும் உமது நிருபர் படையை முடுக்கிவிடும்...'' என்றபடியே விண்ணில் பாய்ந்தார் கழுகார் வேகமாக!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்) Empty Re: பெரும் சிக்கலில் நான்கு பிரபலங்கள்! (மிஸ்டர் கழுகு செய்திகள்)

Post by கே. பாலா Thu May 26, 2011 12:52 pm

தப்பு கணக்கிட்டு தான் ஒன்றை எதிர் பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி!
அப்போதைக்கு அப்போது அளிக்கும் சரி விளைவை!
எப்போதும் துன்புற்று இடர் பாடுவார்
இதை உணரதார்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum