புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
65 Posts - 64%
heezulia
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
257 Posts - 44%
heezulia
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
16 Posts - 3%
prajai
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_m10இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:19 pm

னது பால்யப் பருவத்தையும் பள்ளிக்கூட நாட்களையும் நினைத்துக்கொண்டால், பட்டென்று மனசில் படர்வது எங்கள் இந்து டீச்சரின் இனிய முகம்தான். மல்லிப்பூவும் சந்தன சோப்பும் சேர்ந்த அவரது பிரத்யேக நறுமணம்தான்.
பனி படர்ந்த ஒரு காலைப் பொழுதில், பார்வையில் கனிவும் பாதத்தில் கொலுசுமாக இந்து டீச்சர் எங்கள் வகுப்பில் நுழைந்த அந்த விநாடியிலேயே, எனக்கும் ரகுவுக்கும் பட்டாபிக்கும் புரிந்துவிட்டது - நாங்கள் படுமோசமாகக் காதல் வயப்பட்டுவிட்டோம் என்று.
அப்போது எனக்கு வயது 12. ரகு கொஞ்சம் சிறியவன். பட்டாபி கொஞ்சம் பெரியவன். ஐந்தாம் கிளாஸில் நாங்கள் மூவரும் ஒரு செட். அவரவர் வீட்டில் தூங்கும் நேரம் தவிர, மற்றபடி எங்கும், எதற்கும், எப்போதும் நாங்கள் மூவரும் ஒன்று.
வகுப்பில் நுழைந்த அந்த விநாடியில், இந்து டீச்சரின் பார்வை முதன் முதலில் யார் மீது பதிந்தது என்ற விஷயத்தில் மட்டும் நீண்ட நெடுங்காலமாக எங்களிடையே பலத்த கருத்து வேறுபாடு இருந்தது.

இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) P67a
கடுமையான சர்ச்சைக்குப் பின் பரஸ்பரம் நட்பு கருதி 'மூவரையும் ஒரே சமயத்தில்தான் பார்த்தார்’ என்று ஒப்புக்கொண்டபோதும், தனித்தனியே ரகசியமாக 'என்னைத்தான்’ என்று ஒவ்வொரு வனும் எண்ணிக்கொண்டோம்.
பக்கத்து டவுனில் 12-ம் கிளாஸ் வரை படித்துவிட்டு, எங்கள் பட்டிக்காட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வந்தார் இந்து டீச்சர். மிஞ்சிப்போனால், அப்போது அவருக்கு 18 வயதுதான் இருந்திருக்க வேண்டும். மொத்து மொத்தென்று முறுக்கித் திரண்ட எங்கள் கிராமத்துத் தடிச்சிகளைப் பார்த்துப் பழகிப்போன கண்களுக்கு, இந்து டீச்சர் சற்று ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக, ரொம்ப அழகாக இருந்தார்கள். சிரிக்கும்போது மட்டும் தெரிந்து மறையும் தெற்றுப்பல், இன்னும் அழகாக இருக்கும். முருகன் கோயில் மூலஸ்தானத்தின் இருளில் இருந்து முழுவதுமாகப் பிய்த்துக்கொண்டு வெளியே கேட்கும் வெண்கல மணிச் சத்தம் மாதிரியான அவருடைய சன்னக் குரல், எங்கள் செவிகளில் தேனாய், தித்திப்பாய், தெவிட்டாத தெம்மாங்காய் மெள்ள இறங்கும்.
ஜனவரி 26-ம் தேதி அவர் 'ஜனகணமன’ பாடியபோது, பள்ளிக்கூடத்துக்கே அந்தப் பாடல் மனப்பாடமாகிவிட்டது. எங்கள் பெரிய வாத்தியாருக்குக்கூட கண்களில் நீர் நிறைந்தது. தூசி விழுந்ததாகப் பாவ்லா பண்ணித் துடைத்துக்கொண்டார். இந்து டீச்சர் லேசாகச் சிரித்துக்கொண்டதையும் அன்றுதான் பார்த்தோம்.
இன்று வரை நினைவில் நிற்கும் பாரதி பாடல்களும் தேவாரம், திருப்புகழ் போன்றவையும் எங்களுக்கு இந்து டீச்சர் கற்றுக் கொடுத்தவைதான்.
அவர் பாடம் சொல்லிக் கொடுப்பதே தனி... எப்போது பாடம் சொல்லிக் கொடுக்கிறார். எப்போது எங்களுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று பிரித்தறிய முடியாது. வகுப்புகள் இனிமையும் சிரிப்பும் கும்மாளமுமாகத்தான் இருக்கும். ஆனால், பரீட்சைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பாடங்கள் எல்லாம் முடிந்துவிடும்.
எங்கள் மூவரையும், ''என்னப்பா திருமூர்த்திகளா...'' என்றுதான் செல்லமாக அழைப்பார். என் மீது மட்டும் மற்றவன்களைவிட ஒரு இத்தூண்டு பிரியம் அதிகம். மற்றவன்களுக்கு இது தெரியும். உள்ளே ரகசியமான பொறாமையும்கூட. ஆனால், என்றும் ஏற்றுக்கொண்டது இல்லை.
பள்ளிக்கூட பிக்னிக்குக்காக ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போக நேர்ந்த அன்று, என் கையைப் பற்றிக்கொண்டுதான் படகில் ஏறினார் இந்து டீச்சர். துடுப்பு தவறாக விழுந்து, என் மீது தெறித்த ஆற்று நீரை 'ஐயையோ’ என்று சிரித்தபடி தன் முந்தானையால் துடைத்துவிட்டார். எனக்கு ரோமாஞ்சனமாகிவிட்டது. பட்டாபியும் ரகுவும் மதியம் வரை என்னுடன் பேசவில்லை. அது வேறு ரொம்பவும் திருப்தியாக இருந்தது. சாயந்தரம் படகில் திரும்பும்போது களைப்பு மிகுதியால் கண் அயர்வதுபோல டீச்சரின் தோளில் மெதுவாகச் சாய்ந்துகொண்டேன். ''இப்படிப் படுத்துக்க!'' என்று என்னைத் தன் மடியில் படுக்கவைத்துக்கொண்டார். அவ்வளவுதான், பட்டாபியும் ரகுவும் செத்தான்கள். நான்கைந்து நாட்கள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான்கள்.
வகுப்பில் நோட்டுப் புஸ்தகங்கள் திருத்துகையில், சம்பந்தப்பட்ட மாணவனைப் பக்கத்திலேயே நிற்கவைத்து அவனிடம் பேசிக்கொண்டே, பிழைகளைச் சுட்டிக் காண்பித்துத் திருத்தங்கள் கூறிய படி செயல்படுவது டீச்சரின் வழக்கம்!
என்னைப் பக்கத்தில் நிற்கவைக்கும் நேரங்களில், டெஸ்க்குக்கு அடியில் அவருக்குத் தெரியாமலே அவரது புடவையின் ஏதோ ஒரு நுனியை நான் மெதுவாகப் பிடித்தபடி நிற்பேன். உட்கார்ந்து இருக்கும் அத்தனை மாணவர்களுக்கும் இது கண்ணில் படும். பட்டாபியும் ரகுவும் பதறுவார்கள். ''முடிந்தால் செய்து பாருங்கள்!'' என்று நான் சவால் வேறு விட்டேன். பட்டாபி ஒரு தடவை முயற்சி செய்தான். டீச்சர் பார்த்துவிட்டார். ''என்ன பட்டாபி?'' என்ற அவர் கேள்விக்கு, ''புடவையில் ஏதோ பூச்சி டீச்சர்...'' என்று பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டான்.
விடுதலை நாட்களில் வெப்பம் மிகுந்த ஒரு சாயந்தர வேளையில் ரகுவையும் பட்டாபியையும் எப்படியோ கழற்றிவிட்டுவிட்டு, அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் டீச்சர் வீட்டுக்குத் தனியாகப் போகிறேன். வீட்டில் யாரும் இல்லைபோல் தோன்றுகிறது. வாசலில், முன்கட்டில், கூடத்தில்... ஆள் நடமாட்டம் இல்லை. படுக்கை அறைப் பக்கம் மெதுவாக எட்டிப் பார்க்கிறேன்.
இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) P67bஅங்கு கட்டிலில் ஜன்னல் வழியே தெரிந்த ஏகாந்த வெளியை நோக்கியபடி இந்து டீச்சர்.
கூப்பிடலாமா... வேண்டாமா என்று நான் தீர்மானமற்று நின்ற அந்தத் திகைப்பான விநாடிகளில், அள்ளிக் கட்டிய கொண்டையின் அடிப்பகுதியில் அமைந்து படிந்த தோள்களின் மேல் - கழுத்தின் மையத்தில் விழுந்து குறுகுறுத்த என் கூரிய பார்வையின் குவிந்த ஸ்பரிசத்தில் பட்டென்று திரும்பிப் பார்க்கிறார் இந்து டீச்சர்.
எதிர்பாராத அந்த இடர்கொண்ட வேளையில், என்னை நான் சுதாரித்துக்கொள்ளும் முன் - டீச்சரை வெறுமனே பார்த்து அசட்டுச் சிரிப்புடன் பேச முயலுகையில்...
''வா பாலு... எப்ப வந்தே?'' என்று நிதானமாக எழுந்திருக்கையில், கண்களில் வழிந்திருந்த நீரை அவர் துடைத்துவிட்டுக்கொள்கிறார்.
ஸ்டார்ச் போட்ட காட்டன் புடவையில் மகா பெரிய மனுஷியாகத் தெரியும் அவர், பாவாடை தாவணியில் பட்டென்று எங்கள் வயசுக்காரி போல்... அடேயப்பா, எவ்வளவு பெரிய மாற்றம்!
கூடத்தில் உட்காரச் சொல்லி, காபி கலந்து கொடுத்து அன்புடன் விசாரிக்கிறார். சிரிப்பில் சோகம் கலந்து இருக்கிறது. ''எதுக்கு டீச்சர் அழுதுக்கிட்டு இருந்தீங்க?'' என்ற கேள்வி பல தடவை என் வாய் வரை வந்து, கேட்கப்படாமலே கரைந்துபோகிறது.
இனிமையும் மென்மையும் கலந்த அந்த இதயத்தில் எண்ணி அழும்படி அப்படி என்ன துக்கம்? இன்று வரை எனக்குத் தெரியாத ஒன்று.
இதெல்லாம் நடந்து ஏறத்தாழ 30 வருடங்கள் ஓடிவிட்டன... இருந்தும், 'பொய்யாய் பழங்கதையாய்’ மெள்ளப் போக மறுக்கும் நினைவுகள் மட்டும் நெஞ்சின் ஆழத்தில் இருந்து - மூச்சுவிட நீர் மட்டத்துக்கு வரும் ஆமையாக - அவ்வப்போது மேல் வந்து, மென்மை தந்து...
பின்குறிப்பு:
76-ன் பிற்பகுதியில் இந்து டீச்சர் இறந்துவிட்ட செய்தி, விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு ஊரோடு தங்கிவிட்ட பட்டாபி மூலம் தெரிந்தது.
77-ல், நான் இயக்கிய முதல் தமிழ்ப் படமான 'அழியாத கோலங்’களில் என் இந்து டீச்சரை இறவாத பாத்திரமாக்கி நிரந்தரப்படுத்திக்கொண்டேன்!

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்து டீச்சர்! (பாலுமகேந்திராவின் மலரும் நினைவுகள்) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக