ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

Go down

மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Empty மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

Post by சிவா Wed Sep 09, 2009 11:10 pm

சிலாங்கூர் மாநிலச் செயலகத்திற்கு வெளியில் ஆகஸ்ட் மாதம் 28 ம் தேதி மாட்டுத் தலை ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட 12 பேர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

அந்த 12 பேரில் அறுவர் மீது மாட்டுத் தலை ஒன்றை காட்டியதுடன் அதனை மிதித்தன் மூலம் இனப்பதற்ற நிலையை உருவாக்கியதாக கூறும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அந்த அறுவரும் எஞ்சிய அறுவருடன் சட்ட விரோதமாகக் கூடிய இரண்டாவது குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளனர்.

தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1) ன் கீழ் அல்லது மாற்றாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 ன் கீழ் முதல் அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

42 வயதான இப்ராஹிம் சாப்ரி, 36 வயதான அகமட் மஹாயுடின் அப்துல் மனாப், 35 வயதான எய்ஸ்வா எஸ்ஹார் ராம்லி, 35 வயதான முகமட் அஸ்மிர் முகமட் ஜெயின் , 39 வயதான அகமட் சுஹாரி சாக்காரியா, 40 வயதான் முகம்ட் ஹில்மி நி ஆகியோரே அந்த அறுவர் ஆவார்.

மாட்டுத் தலையை மிதித்தாக முதல் இருவர் மீதும் அந்த விலங்குத் தலையைக் கொண்டு வந்ததாக மூன்றாவது நபர் மீதும் மாட்டுத் தலையைக் கொண்டு வந்து அதனை மிதித்ததாக எஞ்சிய மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும்/அல்லது 5,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஷா அலாம் செக்சன் 19 லிருந்து தங்களது குடியிருப்புப் பகுதிக்கு 150 ஆண்டு கால பழமையான கோவிலை இடமாற்றம் செய்வதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் செய்த முடிவை ஆட்சேபிக்கும் வகையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட பெரிய எண்ணிக்கையிலான மக்களில் அவர்களும் அடங்குவர்.

அந்த ஆறு பிரதிவாதிகளும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் 15,000 ரிங்கிட் பிணையில் ஜாமீன் வழங்குவதற்கு அரசாங்கத்தரப்பு வலியுறுத்தியது.

ஆனால் அது 500 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட வேண்டும் என்று பிரதிவாதிகளின் வழக்குரைஞர்களான சலேஹுடின் சைடினும் அபிபுடின் அஹ்மட் ஹபிபியும் விரும்பினர்.

ஷா அலாம் செஷன்ஸ் நீதி மன்ற நீதிபதி ஹாஸ்லின் ஹசான் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4,000 ரிங்கிட் ஜாமீனை அனுமதித்தார்.

அந்த வழக்கை விசாரணைக்கு மீண்டும் தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 21 ம் தேதியை அவர் நிர்ணயம் செய்தார்.


மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Empty Re: மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

Post by சிவா Wed Sep 09, 2009 11:14 pm

மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Charge


இரண்டாவது குற்றச்சாட்டு

பின்னர் அந்த அறுவர் மீது மற்ற அறுவர் மீதும் ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸ் சட்டத்தின் பிரிவு 27(5)(ஏ) யின் மீழ் சட்ட விரோதமாக கூடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர்கள் மாஜிஸ்திரேட் நோர்கமிலா அஜீஸ் முன்னிலையில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

தேச நிந்தனை வழக்கையும் எதிர்நோக்கும் அறுவருக்கும் தலா 300 ரிங்கிட் ஜாமீனையும் மற்ற அறுவருக்கும் தலா 500 ரிங்கிட் ஜாமீனையும் அவர் அனுமதித்தார்.

அந்த வழக்கும் அக்டோபர் 21 ம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்படும்.

இதனிடையே அந்த பன்னிரண்டு பேருக்கும் ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு ஷா அலாம் 23 ஐ சேர்ந்த 20 குடியிருப்பாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டனர்.

“நாங்கள் குற்றம் புரியவில்லை (அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டதற்காக) . நாங்கள் அனைவரும் அந்த விஷயத்தில் ஒன்றுபட்டுள்ளோம்,” என்று ஒரு குடியிருப்பாளர் நிருபர்களிடம் கூறினார்.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் மாட்டுத் தலையைக் கொண்டு சென்றதுடன் கடுமையான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர் -அது மலேசியர்களிடையே சினத்தை மூட்டி விட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் பிரதிவாதிகளுக்கு நியமிக்கப்பட்ட ஜாமீன் தொகை மிக அதிகம் என்று குடியிருப்பாளர்கள் கூறினர். அதற்கு நிதி திரட்டும் இயக்கம் ஒன்றை தொடங்கவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

‘புதிய இடம் ஏற்புடையது’

இன்னொரு நிலவரத்தில் அந்தக் கோவில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு அதே செக்சன் 23 ல் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய இடத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக குடியிருப்பாளர்களின் பேராளர் ஒருவர் கூறினார்.

குடியிருப்பாளர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் திங்கட்கிழமை புதிய இடத்தைன் அடையாளம் கண்டது.

புதிய இடம் வீடுகளிலிருந்து மேலும் தொலைவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

புதிய இடத்திற்கு கோவில் குழு ஒப்புக் கொள்ளும் என்றும் அந்தப் பேராளர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அந்த விவகாரம் தீர்ந்ததும் எங்களுக்கு எதிராக செய்த போலீஸ் புகார்களை இந்தியச் சகோதரர்கள் மீட்டுக் கொள்வர் என நாங்கள் நம்புகிறோம். பின்னர் அந்த வழக்கு கைவிடப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.


மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்
» மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது
» மலேசியா செல்லும் மன்மோகனுக்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
» பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!
» ரங்கசாமி மீது ஜெ., குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum