ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்?

4 posters

Go down

அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்? Empty அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்?

Post by realvampire Wed May 25, 2011 1:26 am

பகுதி-1 மதுரை, இந்தியா


மதுரை சாம்ராச்சியம் கிடுகிடுவென ஆட்டம் கண்டதில் ஏக டென்ஷனில்
இருக்கிறார் அஞ்சாநெஞ்சன். மதுரையில் தொடர்ந்தும் இருப்பது ‘விரும்பத்தகாத’
விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாம்.
அழகிரியின் விசுவாசிகளாக இருந்த பொலீஸ் அதிகாரிகள் கிட்டத்தட்ட
அனைவருமே, மதுரையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டு விட்டனர்.
வெளிமாவட்டங்களில் போஸ்டிங் போடப்பட்டுள்ள அவர்களில் சிலருடன், அழகிரி
இன்னமும் நல்ல தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அப்படியான அதிகாரிகளில் சிலர்தான், அழகிரி மதுரையில் இருப்பது நல்லதல்ல என்று அட்வைஸ் கொடுத்துள்ளனராம்.
அழகிரியும் மதுரையைவிட்டு வெளியேறும் மூடிலேயே இருக்கிறார் என்று
சொல்கிறார்கள். ஆனால் எங்கே செல்வது என்பதில்தான் குழப்பம் நிலவுகின்றதாம்.
கடந்த சில நாட்களாக, மதுரை ஆண்டாள்புரம் பகுதியிலுள்ள பிரபல ஹவுஸிங்
காம்பிளக்ஸிலுள்ள தனி வீடு ஒன்றில், இந்த ஆலோசனைகள் நடைபெறுவதாகத்
தெரிகின்றது. குறிப்பிட்ட இந்த வீட்டில் யாரும் நிரந்தரமாகத்
தங்கியிருப்பதில்லை என்றாலும், ஆண்டாள்புரம் வீடு அழகிரிக்குச் சொந்தமானது
என்று கூறப்படுகின்றது.அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்? 20110522-ALZ-2
அங்கிருந்தும் அண்ணன் தொடர்பில் இருப்பார்தானே?

தி.மு.க. ஆட்சி நடந்ததுவரை இந்த வீட்டுக்கு அழகிரி வருவதில்லை. ஆனால்,
இன்று ஆட்சி கையில் இல்லை. இப்போதெல்லாம் இங்குதான் அழகிரி தனது முக்கிய
ஆலோசகர்களுடன் அவ்வப்போது வந்து ஆலோசனை நடாத்துவதாகக் கூறப்படுகின்றது.
ஆலோசனையில் அதிகம் பேசப்படும் விஷயம், மதுரையிலிருந்து வெளியேறினால் எங்கு செல்வது என்பதுதானாம்.
ஆரம்பத்தில் அழகிரி, மதுரையிலிருந்து வெளியேறுவது பற்றிப் பெரிதாக
அலட்டிக்கொள்ளவில்லையாம். இன்னமும் மத்திய அமைச்சராக இருக்கும் தன்மீது
கைவைக்க முடியாது என்று கூறிக்கொண்டிருந்தாராம்.
ஆனால் இப்போது? கனிமொழியின் கேஸ் அவரை யோசிக்க வைத்திருக்கிறது.
கனிமொழி, ராஜ்யசபா எம்.பி.யாகவும், ஒரு பெண்ணாகவும் இருந்தபோதிலும்
அவருக்கு நேர்ந்த கதி அழகிரியைக் கலங்க வைத்திருக்கின்றதாம்.
தன்மீது கைவைக்க முடிவெடுத்தால், நிச்சயம் கைவைப்பார்கள் என்பது
அவருக்குப் புரிந்திருக்கின்றது. இதனால்தான் மதுரையிலிருந்து வெளியேறும்
ஆலோசனைகள் தீவிரம்!
விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக நாம் விசாரிக்கத் தொடங்கியபோது,
எமக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து மூன்று சாய்ஸ்கள் பற்றி
ஆராயப்பட்டிருக்கின்றன.
முதலாவது, ஜாகையை சென்னைக்கு மாற்றிக்கொள்வது. இரண்டாவது, தமிழ்நாடே
வேண்டாமென்று, வெளி மாநிலம் ஒன்றுக்குச் செல்வது. மூன்றாவது, கடினமான
சாய்ஸ்தான். அது, சிறிது காலத்துக்கு வெளிநாடு ஒன்றில் வசிப்பது.
சென்னையில் ஏற்கனவே ஒரு வீடு தயாராகி வருவதாக கதை அடிபடுகின்றது. ஆனால், அழகிரிக்கு சென்னைக்குப் போவதில் இஷ்டமில்லையாம்.
வெளி மாநிலம் என்று வரும்போது, இவர்களது சாய்சாக இருப்பது பங்களுரு.
ஆனால், அதிலுள்ள சிக்கல், தமிழ்நாட்டுக் காவல்துறையின் கைகள் கர்நாடக
பொலீஸின் துணையுடன் அங்குவரை நீளலாம். தவிர, கர்நாடக அரசு இவர்களுடன்
நெருக்கமாக இல்லை.
எமக்குக் கிடைத்த தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், அழகிரி மிகவும்
சீரியசாக கன்சிடர் பண்ணுவது இந்தியாவுக்கு வெளியே செல்வதைத்தான். தமக்கு
நெருக்கமானவர்கள் சிலருடன் அழகிரி இதுபற்றிப் பேசியிருக்கிறார். எமக்குக்
கிடைத்திருப்பது, வெளிநாட்டு ஆப்ஷனில் அவர் அதிகமாகவே ஆர்வம் காட்டுவதாக,
அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்.
அழகிரி கண்வைத்திருக்கும் வெளிநாடு, மலேசியா.
இதோ, கட்டுரை ஹான்ட் ஓவர் டு மலேசியா… வாசகர்களும் எங்களுடன் மதுரையிலிருந்து வாருங்கள் மலேசியாவுக்கு..
பகுதி-2 கோலம்பூர், மலேசியா


மதுரையில் அரசாண்ட காலத்திலேயே அழகிரிக்கு நிறையவே மலேசியத் தொடர்புகள்
உண்டு. இவற்றில் மனைவி வழி உறவுகளின் தொடர்புகள் ஓரிரெண்டு இருந்தாலும்,
வியாபாரத் தொடர்புகளே நெருக்கம் அதிகம்.
இரண்டு வருடங்களுக்குமுன் ஏற்பட்ட தொடர்புகள் அவை. 2009ம் ஆண்டு
நவம்பரில் அழகிரி மலேசியா வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்த சில
இந்திய வம்சாவழி மலேசியத் தொழிலதிபர்கள், அவருடன் நெருக்கமாகினர். அப்படிக்
கிடைத்த புதிய நண்பர்களில் ஒருவர், தமிழகத்தில் கோவில்பட்டிக்கு
அருகேயுள்ள ஒரு ஊரைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பது விறுவிறுப்பு.காம்
பெற்றுள்ள தகவல்.
கடந்த வருடம் (2010) இந்த மலேசிய நண்பரின் தமிழக தொழில் முயற்சிகள் சில
வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டன. அந்தத் தொழில் முயற்சிகளில் மூன்று
பார்ட்னர்கள். மூலதனம் போட்ட முதலிரு பார்ட்னர்களும் மலேசியப் பிரஜைகள்.
மூன்றாவது பார்ட்னர் இந்தியர். அவர் அந்த நாளைய மதுரை மையத்தின் பினாமி!
அந்த விவகாரத்தை மேலும் கிளறினால் கட்டுரை நீளமாகிவிடும். அதை
விட்டுவிடுவோம். நமது கட்டுரைக்குத் தேவையான விஷயம் என்னவென்றால், இந்தத்
தொடர்புதான் தற்போது அழகிரியை மலேசியா செல்வதைப் பற்றி சீரியசாக யோசிக்க
வைத்திருக்கின்றது!
அழகிரி முடிவெடுக்கிறாரோ, இல்லையோ, மலேசியாவில் அதற்கான முன்னேற்பாடுகள் முழுவேகத்தில் நடக்கின்றன.
மலேசியத் தொழிலதிபர், மலேசியாவிலுள்ள இந்தியச் சங்கம் ஒன்றின் பிரமுகர்
ஒருவருடன் கடந்த வாரத்தில் ஒருநாள் அப்பாயின்ட்மென்ட் ஒன்றுக்குச்
சென்றிருக்கிறார். அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்ட இடம், கோலாலம்பூர் புட்ரா
வேர்ல்ட் ட்ரேட் சென்டரில், 23வது மாடியிலுள்ள ஒரு அலுவலகம்.
மலேசியக் குடிவரவுடன் தொடர்புடைய இந்த அலுவலகத்தில், அழகிரி
குடும்பத்தினருக்கு மலேசியாவில் தங்கியிருக்க நீண்டகால விசா வழங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்வதற்கே இருவரும் சென்றிருந்தனர். அழகிரி
குடும்பத்தினருக்காக இந்தத் தொழிலதிபரால் முயற்சிக்கப்படும் நீண்டகால
விசாவுக்குப் பெயர், ‘MM2H’ அனுமதி.
மலேசியாவில் ‘MM2H’ அனுமதி என்று அழைக்கப்படுவது என்னவென்றால்,
குறிப்பிட்ட சில தகுதிகளையுடைய வெளிநாட்டுப் பிரஜைகள் 10 வருடங்களுக்கு
மலேசியாவில் தங்கியிருப்பதற்கான அனுமதி. இந்த 10 வருட காலப்பகுதியில்,
எத்தனை தடவையும் மலேசியாவுக்கு வெளியே சென்று, மீண்டும் திரும்ப முடியும்.
அதாவது, இந்தியாவுக்கு எப்போதுவேண்டுமானாலும் சென்று திரும்பலாம்.
திரும்பிவர விசா தேவையில்லை. இந்த அனுமதிப் பத்திரத்தை வைத்து மலேசியாவில்
பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்கலாம். கிட்டத்தட்ட, பல மேலை நாடுகளிலுள்ள
Permanent residency போன்றதொரு சமாச்சாரம் இது.
அழகிரி குடும்பம் மலேசியாவில் தங்குவதற்கான குடிவரவு அனுமதி பெறும்
வேலைகள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபக்கமாக அவர்களுக்கு வீடு
தேடும் படலம் மற்றொரு பக்கமாக நடந்துகொண்டிருக்கின்றது.
வீடு தேடப்படும் ஏரியாவின் பெயர் டமன்சாரா ஹெயிட்ஸ்.
பிரபலமானவர்கள் பலர் வசிக்கும் பாங்சார் ஏரியாவிலிருந்து 5 நிமிடப்
பயணத் தொலைவிலுள்ள பகுதி இது. இங்கு இரண்டு வீடுகள் பார்க்கப்பட்டுள்ளன.
அவற்றில் எது அழகிரி குடும்பத்தினருக்குப் பிடிக்கிறதோ, அதை எடுத்துக்
கொள்ளலாம்; அல்லது, இரண்டு வீடுகளையும் அவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று
கூறப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த ஏற்பாடுகளைச் செய்வதும் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட இந்திய வம்சாவழி
மலேசியத் தொழிலதிபர்தான். “விரைவில் அழகிரி கோலாலம்பூருக்கு நேரில் வந்து
இந்த வீடுகளைப் பார்த்துச் சென்றபின்னரே, எந்த வீடு தேவை என்ற முடிவைக்
கூறமுடியும்” என்று மலே ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு அவர்
கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் மலேசிய ஏற்பாடுகள் பக்காவாகச் செய்யப்படுகின்றன. அழகிரி
என்ன முடிவெடுக்கிறாரோ, அதன்படியே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.
தமிழகத்தில் அரசியல் எப்படி நகர்கிறதோ, அதன்படி அழகிரி முடிவெடுக்கலாம்.
நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்? Empty Re: அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்?

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 1:39 am

சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்? Empty Re: அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்?

Post by puthuvaipraba Wed May 25, 2011 5:41 am

அதான் ஓய்வெடுக்க சொல்லிட்டீங்களே. . .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்? Empty Re: அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்?

Post by மகா பிரபு Wed May 25, 2011 6:59 am

பகிர்வுக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்? Empty Re: அழகிரி மலேசியாவுக்கு எஸ்கேப்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum