புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
32 Posts - 55%
heezulia
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
32 Posts - 55%
heezulia
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_m10திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம் - வாரணம் ஆயிரம்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 25, 2008 10:57 pm

சூர்யா அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து, நம்முள்ளும் இருக்கும் அப்பா - மகன் செண்டிமென்ட்டை கன கச்சிதமாக வெளிக் கொண்டு வந்து கண்ணீர் விட வைத்திருக்கும் படம்தான் வாரணம் ஆயிரம்!

தன் தந்தையை ரோல் மாடலாக கொண்டு சிறு வயது முதல் வளரும் மகனுக்கும், பருவ வயதில் தனது தந்தைக்கும் - தாய்க்கும் ஏற்பட்ட மாதிரியே ஒரு பெண்ணிடம் காதல் அனுபவம் ஏற்படுகிறது. காதல் கை கூடும் வேளையில் விதி விளையாட... காதலி மரித்துப் போகிறாள். காதல் தோல்வியில் தாடி வளர்த்து, போதை ஏற்றிக்‌ கொண்டு தேவதாசாக திரியும் மகனது வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வந்ததா, காதல் மலர்ந்ததா என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போகும் தந்தையாகவும், அவர் மீதும் அவர் மூலம் புரிந்து கொண்ட உலகத்தின் மீதும் பாசம் கொண்ட மகனாகவும் சூர்யா மாறுபட்ட இரு வேடங்களில் நன்றாக நடித்திருக்கிறார். அப்பா சூர்யாவை ஆரம்ப காட்சிகளில் சூர்யாதான் என்று அடையாளம் காண்பதே சிரமமாக இருக்கிறது. அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். சபாஷ்!

அம்மா வேடத்தில் சிம்ரன் கச்சிதம் என்றாலும் ஆரம்ப கால அப்பா சூர்யாவுடனான காதல் காட்சிகளில் ஆன்ட்டியாக தெரிவதையும் சொல்லி ஆக வேண்டும். மகன் சூர்யாவின் காதலிகள் சமீரா ரெட்டி, திவ்யா இருவரில் சமீரா ஜெயித்து விடுகிறார். திவ்யா சற்றே அலட்டல் நடிப்பை அடக்கி வாசித்திருக்கலாம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு சூர்யா, மிலிட்டரி மேஜர் ஆவதும், அமெரிக்கா வரை அவர் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்து முடிவதும் நம்ப முடியாத மேஜிக். சமீரா ரெட்டி இறந்த பின் திவ்யா காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் போர் ரகம்.

சூர்யாவின் நண்பரின் குழந்தை கடத்தப்படுவதும், கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் சாகஸங்களிலும் காஷ்மீர் ராணுவ பிரவேசங்களிலும் மீண்டும் கதை பிடிப்பது சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டு வருகிறது. ஆனால் க்ளைமாக்ஸில் வயதான சூர்யாவின் ஈம சடங்குகளுடன் அழுத்தம் இல்லாமல் முடிவது வருத்தமளிக்கிறது.

மற்றபடி ஹிரீஸ் ஜெயராஜின் பின்னணி இசையும் பாடல்கள் இசையும் படத்திற்கு பலம்! அதேபோன்று ரத்னவேலுவின் காமிராவில் சென்னை, காஷ்மீர் முதல் அமெரிக்கா வரை சகலமும் பளீச். ஒவ்வொரு மகனுக்குள்ளும் இருக்கும் அப்பா பாசத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ள படம் இது என்பதால் இந்தக்கால இளைஞர்களுக்கு இது படமல்ல... பாடம்!

வாரணம் ஆயிரம் : பலமும் பலவீனமும்!

தினமலர் விமர்சனம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 25, 2008 10:58 pm

குமுதம் விமர்சனம்

அதிரடியான ஆரம்பம், ஒவ்வொரு காட்சியிலும் கூடுகிற ஸ்பீடு, எதிர்பார்ப்பை தூண்டுகிற க்ளைமாக்ஸ் என்ற வழக்கமான விதிமுறைகளை தைரியமாக மீறியிருக்கிறார் டைரக்டர் கௌதம் வாசுதேவ்மேனன்.

தமிழ் சினிமாவுக்கு நன்கு பழக்கமான அப்பா - மகன் கதையை கௌதம் தன் போக்கில் சொல்லியிருக்கிறார். பெல்பாட்டம் காலத்துப் பாடல்களின் பின்னணியில் கிராம போன் சுற்றுகிற டைட்டில் சீனிலேயே நம்மை ஒரு லைஃப் ஹிஸ்டரி கதைக்கு தயார்படுத்தி விடுகிறார்கள்.

இடது கைப்பழக்கம், ஆங்கில நாவல் வாசிக்கும் வழக்கம் என ஜென்டிலான அப்பா கேரக்டரில் சூர்யா நிறைய உழைத்திருக்கிறார் பாத்ரூமில் சத்தமில்லாமல் ரத்த வாந்தி எடுப்பதும், அதைத் தட்டுத் தடுமாறி துடைத்து கழுவ முற்படுவதுமாக வயதானவரின் மேனரிசத்தை அப்படியே கொண்டு வந்ததில் சூர்யாவுக்கு பாஸ்மார்க். அம்மாவாக வரும் சிம்ரனும் அப்படியே.

சூர்யாவின் சிக்ஸ் பேக் ஒரு பக்கம் ஆச்சர்யப்படுத்தியது போக, பள்ளி மாணவனின் பாடிலாங்குவேஜும் கன கச்சிதம். எம்.எஸ்.படிக்க யு.எஸ். கிளம்பி நிற்கும் ஷமிரா ரெட்டியை மிஸ் பண்ண முடியாமல் யு.ஜி.யில் ஏதாவது ஒரு அரியர் விழுந்துட்டா என்ன பண்ணுவீங்க? என்று சூர்யா கேட்பது ஜாலி ரவுசு.

தாமரையின் வரிகளும் ஹாரீஸ் ஜெயராஜின் இசையும் கூடுதல் பலம் முன்தினம், அஞ்சலை பாடல்கள் இளைஞர்களை நிச்சயம் தாளம் போட வைக்கும். அப்பா, அம்மா, மகன் என எல்லோரும் தடுக்கி விழுந்தால்கூட ஐயாம் இன் லவ் சொல்வது தேவையா? அதிலும் இடைவேளைக்கு பின் வரும் சூர்யா - ரம்யா காதல் இழுவையிலும் இழுவை.

திடீரென நாயகனுக்கு மிலிடரி ஆசை வருகிறது எதற்கு? அந்த ஆசைக்கு ஒரு லாஜிக் வேண்டும் என்பதற்காக திடீர் வில்லன், குழந்தை கடத்தல் என ஏகமாய் குழம்பியிருக்கிறார் இயக்குநர். இந்த குழப்பத்தில் அப்பா - மகன் உறவை சொல்ல வந்தவர் அப்பா - மகனின் வாழ்க்கையை தனித்தனி கதையாக்கி ஒன்றோடொன்று ஒட்டாமல் செய்து விட்டார். அதனால் ரசிகர்களும் கதையோடு ஒன்ற முடியாமல் பாதி படத்தில் கொட்டாவி விடுகின்றனர்.

வாரணம் ஆயிரம் - அழகில் யானை; ஆயுளில் ஈசல்!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 25, 2008 10:59 pm

விகடன் விமர்சனம்

வாரணம் ஆயிரம் (41/100)


அப்பாவுக்கு ஆயிரம் காரணங்களுடன் அஞ்சலி செலுத்தும் மகனின் நினைவுப் பயணமே, "வாரணம் ஆயிரம்!'

பக்கா டபுள் ஷாட் வேடத்தில் சூர்யா. அப்பா சூர்யா, மகன் சூர்யாவின் அத்தனை விருப்பங்களுக்கும் இடம் கொடுப்பவர் காதல் தோல்வியால் போதையின் பாதையில் திரும்பும் மகன் சூர்யா,.ஒரு ஃப்ளாஷில் திருந்தி ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லவராக வாழ்கிறார். புகை பிடிக்கும் பழக்கத்தால் தொண்டைப் புற்றுநோய்க்கு ஆளாகும் அப்பா, மரணப் படுக்கையில் இருக்கும் சமயம். மகன் எல்லை தாண்டிய அதிரடி மீட்பு நடவடிக்கையில் இருக்கிறார். மென்சோகப் பகிர்தல்களுடன் முடிகிறது படம்!

"தவமாய் தவமிருந்து' படத்தில் கிடார், சிட்டி காலேஜ். அமெரிக்கன் இங்கிலீஷ் ஆர்மி புல்லட், சிக்ஸ்பேக், லிவிங் டுகெதர் சேர்த்து அப்டேட் செய்தால் வருவது, வாரணம் ஆயிரம். ஆனாலும் அசத்தல் வித்தியாசம் தந்து படத்துக்குத் தனி கலர் சேர்ப்பது சூர்யா!

சந்தேகமே இல்லாமல் சூர்யாவின் கேரியரில் இப்படம் ஒரு மைல்கல். அரும்பு மீசை, குறும்புப் பார்வை 16 வயதுப் பையனாக வரும்போது சூர்யா நடிப்பில் ஆறு அல்ல... நூறு வித்தியாசம். மைனர் மாணவனாக விடலை வித்தை புரிவது, ராணுவ அதிகாரியாக அதிரடி சாகசம் செய்வது, சமீராவைப் பார்க்கும்போதெல்லாம் தன் இதயம் குத்தி காதல் பாஷை பேசுவது என பியூட்டிஃபுல் சூர்யா!

படத்தைத் தாங்கிப் பிடிக்கத் தோள் கொடுப்பவை பாடல்களும் ஒளிப்பதிவும் ஹாரிஸ் ஜெயராஜின் ஈர்க்குமு“ இசையும் கவிஙர் தாமரையின் வருடும் வரிகளுமாக ஒவ்வொரு பாடலும் இனிப்பு இன்னிங்ஸ். காட்சிகள் கடந்து செல்வதே தெரியாமல் நழுவும் மேஜிக் ரத்னவேலின் ஒளிப்பதிவுக்கே சொந்தம். முன்பாதி முழுக்க ஆக்கிரமிக்கும் சூர்யா சமீரா காதல் போர்ஷன் ஐஸ் கோல்ட் ஹைக்கூ. சமீரா.. இத்தனை நாளாக எங்கிருந்தாய்!

முதல் பாதியில் மனம் வருடம் இயக்குநர் கௌதம், பின் பாதியில் ஏனோ வறட்சித் தாகம் உண்டாக்குகிறார். சூர்யாவின் அத்தனை நுணுக்க மேனரிசங்களுக்கும் மெனக்கெட்டவர். பின்பாதியில் அல்லாடும் திரைக்கதையைச் செதுக்குவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தில் சூர்யாவின் நடிப்புக்கு இணையாகவோ துணையாகவோ எவரையும் குறிப்பிட முடியாது. சமீராவின் ஆச்சர்யம் காட்டும் கண்களும், சூர்யாவை ரசிக்கும் சிம்ரனின் ரகசிய ரசனைகளும்தான் கொஞ்சம் கவனம் கலைக்கிறது.

ஒரே பாட்டிலேயே வீடு கட்டுவது ராணுவத்தில் சூர்யா சேர்ந்ததும் மேஜராவது எல்லாமே ஹைடெக் "விக்ரமன்' எஃபெக்ட்! சூர்யா எதற்கு காஷ்மீர் போகிறார் என்பதே புரியாதபோது, அந்தக் காட்சிகள் மைல் நீளத்துக்கு நீள்வது சோதனை. சிக்ஸ்பேக் அவதாரம் எடுத்ததும் சட்டையைச் சட்டையே பண்ணாமல், வெற்றுடம்புடனேயே வலம் வருகிறார்.

இத்தனை அப்பிராணி அப்பாவா? மகன் சூர்யாவுக்கு அவர் கொடுக்கும் சுதந்திரத்தைப் பார்த்தால் போகிற போக்கில் அவரே பெத்தடின் ஊசியை மகனுக்குப் போட்டுவிடுவாரோ என்று நமக்கு பதற்றம் ஏற்படுகிறது. அப்பாவின் நினைவஞ்சலி கதையில் ஆங்காங்கேதான் அப்பா தட்டுப்படுகிறார். மற்றபடி காதல், ஆக்ஷன், போதை என்று மகனின் வாழ்க்கைக் குறிப்புகளாகவே போகிறது படம். இதனால் அத்தனை பாசமான அப்பா கஷ்டப்படும்போது பதற்றமில்லாத பாரர்வையாளராகவே அமர்ந்திருக்கிறோம். திரைக்கதையை இழுத்துப் பிடித்துத் திருத்தியிருந்தால், "வாரணம் ஆயு‘ரம்' தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படமாக இருந்திருக்கும். என்ன செய்ய... காரணம் ஆயிரம்?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 25, 2008 10:59 pm

கல்கி விமர்சனம்

அப்பாவை ஆராதிக்கும் பிள்ளையின் கதை. அப்பா மகனாக முறையே ஏற்றத்தோடும் சீற்றத்தோடும் வசீகரிக்கிறார் சூர்யா. அதுவும் ஷமீரா ரெட்டி சூர்யாவின் காதல் காட்சிகள் டீன் ஏஜ் கவிதை. ஷமீராவைப் பார்க்கும் போதெல்லாம் கிடாரில் ட்யூன் போடும் சூர்யா, தன் காதலை அவர் ஒப்புக் கொண்டதும், இளையராஜா சாங் போல இருக்குப்பா எங்க காதல்' என்று உருகுவது அவர் நடிப்பின் இனிமையான பக்கங்கள்.

ஹீரோயின் ஷமீரா ரெட்டி, தமிழ் ஹீரோயின்களில் ஹெல்த்தியான வரவு. அவர் ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் பூ உதிர்வது போன்ற அதிர்வுகள் மனசுக்குள் ரீங்கரிக்கின்றன. ஆனாலும் நடிப்பு ரொம்ப முக்கியம் என்பதை யாராவது அவரிடம் சொல்லியே ஆகவேண்டும். எப்போதும் போல் கலக்குகிறார் சிம்ரன். அதுவும் அம்மா வேடத்தில் அவரின் நடிப்பில் அடர்த்தி கூடுதல். இனி வெரைட்டியான ரோல்கள் அவரை நோக்கிப் படையெடுக்கலாம். அப்பா சூர்யா, மனத்தில் ஒட்ட மறுக்கிறார். அவர் புற்றுநோயால் அவதிப்படுகையில் கதை படுத்துவிடுகிறது! சூர்யாவின் மனைவியாக வரும் திவ்யா நடிப்பில் தேஜஸ். பொறுப்பும் திகைப்புமாக அவர் நிகழ்த்தும் மேனரிசங்களில் மனசில் நிற்கிறார். சிம்ரன் அப்பா சூர்யாவின் காதல் காட்சிகள் ப்ளாக் அண்ட் வொய்ட் கவிதை.

படத்தின் முக்கியமான துõண் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். பின்னணி இசையிலும், பாடல்களிலும் இசை உற்சவம்! கௌதம் ஹாரிஸ் கூட்டணியில் மட்டும் பாடலாசிரியர் தாமரை தனித்துத் தெரிவது என்ன மாயமோ தெரிய வில்லை. ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் அமெரிக்கா கொள்ளை அழகு. வசனங்களில் அநியாயத்துக்கு ஆங்கிலம், திரைக்கதையில் தேவைக்கு அதிகமான தொய்வு போன்ற இன்னும் பிற குறைகள் இருப்பினும் ஒவ்வொரு படத்துக்கும் இயக்குநர் கௌதம்வாசுதேவ் மேனன் வைக்கும் நல்ல கவிதைத் தலைப்புக்காகவும், இந்தப் படத்தில் ஆபாசம் திணிக்காத நேர்மைக்காகவும் ஃப்ரண்ட்லி சல்யூட்!

வாரணம் ஆயிரம் - வலிமையான உணர்வு கவிதை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக