புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
21 Posts - 4%
prajai
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இத்தனை சாமிகளா? Poll_c10இத்தனை சாமிகளா? Poll_m10இத்தனை சாமிகளா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தனை சாமிகளா?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat May 21, 2011 1:57 pm

வியர்க்க வியர்க்க வீட்டுக்குள் நுழைறேன். கிஷோர் வெளியேறிக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் சத்தமாக “ அம்மா, அப்பா எங்க போயி சுத்திட்டு வராருன்னு கொஞ்சம் விசாரிச்சு வை” என்று சொன்னவனிடம் “அது சரி அய்யா எங்க சுத்தப் போறீங்க?” என்றேன்.

“ நானும் வித்யாசாகரும் சாரநாதன்ல அப்ளிகேஷன் வாங்கப் போறோம்,”

“வெய்யிலுக்கு முன்ன போய்ட்டு வந்தா என்னடா?, சரி, பாத்து சூதானமா போயிட்டு சீக்கிரமா வந்து சேருங்க”

வண்டியை எடுத்துக்கொண்டுக் கிளம்பினான்.உள்ளே நுழைந்தால் பையன் பத்தவைத்துவிட்டுப் போன சீனிப் பட்டாசு சன்னமாய் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.

“ நானும் கரடியாத்தான் கத்துறேன். ரெண்டு ஆம்புளைங்க இருக்குறீங்கன்னுதான் பேரு. இங்க இருக்கறத அங்க நகத்தறதில்ல. சரி, ரேஷன் கடைக்காச்சும் போயி சக்கரைய வாங்கிட்டு வரக் கூடாதா? நடந்து போர தூரத்தில இருந்தா ஒங்கள யாரு எதிபார்க்கப் போறா?”

“ இன்னைக்கு ஏம்மா ஊருல உலகத்துல ஆம்புளைங்க எப்படி பொறுப்பா இருக்காங்கன்னு போய் பார்க்க சொல்லல” என்று நான் சிரித்துக் கொண்டே இடை மறிக்கவும், “ இந்த நக்கலுக்கெல்லாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல. போயி ஜோஸ்பின் மிஸ் வீட்லப் பாருங்க, அண்ணன் கிச்சன்ல எவ்வளவு உதவி செய்யிறாருன்னு. நானும் உங்களாட்டம்தானே வேலைக்குப் போயிட்டு வாரேன். கொஞ்சமும் மனசாட்சியே இல்லாத மனுஷங்க கிட்ட பேசி என்னத்துக்கு ஆவுது”

பேசாம முதல் சுற்றோடு சாப்பிடப் போயிருக்கலாம்.குறைந்த பட்சம் இந்த அளவிலாவது போயிருக்கலாம். சுழி விட்டால்தானே.

“ஏம்மா அவரு என்ன என்ன மாதிரி ரெண்டு மூணு புத்தகமா எழுதி இருக்காரு?” என்று முடிக்கக் கூட இல்லை,

“ ஏங்க பேசாம வந்து சாப்பிட உக்காருங்க. இல்லாட்டி நல்லா வந்துரும் ஆமா”

ஒரு வழியாய் சுதாரித்துக் கொண்டவனாய் , உடை மாற்றிக் கொண்டு, முகம் கழுவி, சாப்பிட அமர்ந்தேன்.சாப்பிட்டு முடிந்ததும் “சுகன்” இல் வந்திருந்த கிருஷ்ணப்ரியாவின் “வேறு வேறு சிகரங்கள்” என்ற கவிதையினை வாசிக்கத் தொடங்கினேன்.கவிதையில் மூன்று வரிகள் மிச்சம் இருக்கும் போது கிஷோரிடமிருந்து அழைப்பு.

”என்னடா?”

“கிஷோருங்களா”, வேறு யாரோ பேசினார்கள். பக்கத்தில் யார் யாரோ பேசுவது கேட்டது. ”நான் கிஷோரட அப்பா “ என்று பேசிக் கொண்டிருக்கும்போதே துண்டித்து விட்டார்கள். நான் அழைத்தாலும் எடுக்கவில்லை. உதறலெடுத்து விட்டது. பிள்ளைக்கு ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. யாரோடும் சண்டையா?. அவன் யாரோடும் சண்டைக்கெல்லாம் போகிறவனும் இல்லையே. குழம்பி போனவனாய் மீண்டும் மீண்டும் கிஷோர் எண்ணை அழைத்துக் கொண்டே இருந்தேன். கண்களில் கசிவதை உணர்ந்தேன். எனக்கும் அழுகை வரும் என்பது அப்போதுதான் தெரிந்தது.இதற்குள் மீண்டும் அவன் அலை பேசியிலிருந்து ஒரு வழியாய் மீண்டும்அழைப்பு. பதறிப்போய் எடுத்தேன்.

“ என்னப்பா?”

“சார், கிஷோரோட அப்பாங்களா?”

“ஆமாம்ப்பா, பிள்ளைக்கு என்னப்பா. ஏதேனும் பிரச்சினையா?”

“ ஒன்னும் இல்லைங்க சார், கிஷோருக்கு ஒன்னும் இல்ல , ஓட்டிட்டு வந்த பையனுக்குத்தான் கொஞ்சம் காலில் அடி”

புரிந்து போனது. திருச்சி தாண்டி இருக்கும் சாரநாதன் கல்லூரிக்கு வண்டியிலேயே போயிருக்கிறார்கள்.ஏதோ விபத்து நடந்திருக்கிறது. இதற்குள் விட்டுவிற்கும் லேசாக விஷயம் புரிய ஆரம்பிக்க “ ஏங்க , தம்பிக்கு என்னங்க? “ என்று அழ ஆரம்பிக்கவே,”கொஞ்சம் பொறும்மா, என்னன்னு கேப்போம்” என்று விட்டுவை சமாளித்துவிட்டு , “ ஏம்ப்பா, என்னையா நடந்துச்சு?” என்றேன்.

“சார் பேசறதுக்கெல்லாம் நேரமில்லை. நேரே வந்து சொல்கிறோம். இப்ப ஒரு வேன்ல ரெண்டு பேரையும் எடுத்துக் கொண்டு வரோம். ஒன்னும் பயப்படாதீங்க சார். ரெண்டு பேரும் ரொம்ப நல்லாத்தான் இருக்காங்க. அவுங்கள கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரதா? இல்ல வேற ஏதேனும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரட்டுங்களா?”

”பெரம்பலூர்ல, அன்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துடுங்கப்பா”

“அன்னை ஆஸ்பத்திரியா? அது எங்க சார் இருக்கு?”

“எனக்குத் தெரியுங்க அண்ண”

அப்பாடா, அது கிஷோரோட குரல்.

”தம்பி கொஞ்சம் கிஷோர்ட்ட போன கொடுங்களேன்”.

“அப்பா”

“என்ன சாமி, என்ன ஆச்சு?. வித்யா எப்படிப்பா இருக்கான்?”

”ஒன்னுமில்லப்பா. திடீர்னு ப்ரேக் போட்டான். விழுந்துட்டோம். எனக்கு லேசான சிராய்ப்புத்தான். வித்யாவுக்கு லேசா ப்ராக்‌ஷர் போல”

இதற்குள் விட்டுவிற்கு எல்லாம் ஒரு வழியாய் புரிந்து போகவே, உடை மாற்றிக் கொண்டு இருக்கிற பணத்தை எல்லாம் அள்ளிக் கொண்டு, முத்துவுக்கு தகவல் தரவே முத்து, மோகன், பிரபு என்று ஆளாளுக்கு இருப்பதை எல்லாம் எடுத்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். நாங்கள் போவதற்கும் வேன் வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு மினி லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தார்கள். நிறைய ரத்தம்.கிஷோர் நடந்தான். வித்யாவால் நடக்க முடியவில்லை. பிள்ளைகளோடு பத்துப் பேருக்கும் குறையாமல் வந்திருந்தார்கள். வித்யாவின் கால் அநேகமாக ஒடிந்திருக்க வேண்டும். நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது. அவன் காலை இரண்டு இளைஞர்கள் தங்கள் மடியில் போட்டுக் கொண்டு வந்தார்கள். அவர்களது பேண்ட் முழுவதும் ரத்தத்தால் ஊறிப் போயிருந்தது. வித்யா மிகவும் எடை உள்ளவன் என்பதால் மிகவும் சிரமப் பட்டு தூக்கி வந்து அறையில் கிடத்தினர்.

இதற்கிடையில் வித்யாவின் சித்தப்பாவிற்கு தகவல் தந்தோம். அவரும் வந்து விட்டார்.

“ வா கிஷோர், வீர விளையாட்டா?” என்றவாறே வந்த மருத்துவர். சரவணன் இருவரையும் பார்த்துவிட்டு ஒரு பத்து நிமிஷம் , மொதல்ல பசங்களுக்கு குடிக்க எதுனாச்சும் வாங்கிக் கொடுங்க ,வந்துடறேன் “ என்று சொல்லிவிட்டு என்னையும் வித்யாவின் சித்தப்பாவையும் பார்த்து, “ ஒன்னும் பயப்படாதீங்க, “ என்றவர் கண்களில் அழுதுகொண்டிருந்த விக்டோரியா படவே” டீச்சர் அழாதீங்க, ஒண்ணும் இல்ல, இதோ வந்துட்டேன்” என்றவாறு ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த நோயாளியைப் பார்க்கப் போய் விட்டார். இதற்கிடையில் முத்து இரண்டு பசங்களுக்கும் பதமான சூடில் காபி வாங்கி வந்திருந்தார்.

கிடைத்த இடை வெளியில் அழைத்து வந்தவர்களைத் தேடிப் போனோம். மரத்தடியிலும் , படிக்கட்டிலும் என்று கிடைத்த இடங்களில் அமர்ந்திருந்தனர்.

”வாங்க தம்பி, காபி சாப்பிடலாம்.”

”பொறுங்க சார், பசங்களுக்கு என்னான்னு மொதல்ல தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் அதை எல்லாம் பார்க்கலாம்”

மெதுவாய் விசாரித்தோம்.
கிஷோரும் வித்யாவும் வண்டியிலேயே கிளம்பிப் போயிருக்கிறார்கள். வித்யா வண்டியை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். ஆலத்தூர் கேட் அருகே திடீரென ப்ரேக்கைப் போடவே வண்டி விழுந்திருக்கிறது. வித்யா அங்கேயே விழுந்து கிடக்க கிஷோர் ஒரு முப்பது அடி தூரத்திற்கு வண்டியோடு இழுபட்டு போயிருக்கிறான். அது சென்னை திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலை. எப்போதும் நெரிசலாய் இருக்கும் சாலை. அந்த நேரத்தில் எந்த வண்டியும் வராத காரனத்தால் பிள்ளைகள் இருவரும் பிழைத்திருக்கிறார்கள். சாலையில் நெருப்புப் பொறி பறக்க பாய்ந்துபோன வண்டியையும் அதனோடு உருண்டு போன கிஷோரையும் பார்த்தவர்கள் கிஷோர் பிழைக்க மாட்டான் என்றுதான் நினைத்து ஓடி வந்திருக்கிறார்கள். அனால் கிஷோர் அவர்கள் ஓடிவரும் முன்னமே எழுந்து ஓடி வித்யாவை தூக்கிவிட முயன்றிருக்கிறான்.அவால் முடிய வில்லை. அதற்குள் எல்லோரும் ஓடி வந்து இருவரையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

கிஷோருக்கு உள்ளங்கை சதை முழுக்கத் தேய்ந்து போயிருந்தது. தொடையில் நிறையக் காயம், கைகளில் முதுகில் கால்களில் என்று காயம். சாலையில் உருண்டு போகவே தலையில் ஏதும் பிரச்சினையா என்று பார்க்க சி.டி ஸ்கேன் எடுத்தோம். ஒன்றுமில்லை.வித்யாவிற்கு காலில் அறுவை செய்து ப்ளேட் வைக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார். நாளை (வெள்ளி) இரவு அறுவை.

அழைத்து வந்தவர்களுக்கு என்னத் தருவது? நிறைய கேட்பார்கள் என்றும் . இதுமாதிரி ஆட்களிடம் ஈவு இரக்கமே இருக்காது என்றும் , முடிந்த வரைப் பிடுங்குவார்கள் என்றும், ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக அவர்களிடம் பேச வேண்டும் என்றும் எங்களிடம் சொல்லியிருந்தனர்.

அவர்களிடம் போனோம்.

”பசங்களுக்கு என்னா சார்?”

சொன்னோம்.

எல்லோரும் பசங்களிடம் போனார்கள். வித்யாவின் தலையை வருடிக் கொடுத்தார்கள். கிஷோர் தோளில் கை போட்டார்கள். “பயப்படாதீங்க”
தலை அசைத்துக் கிளம்பினார்கள்.

“ தம்பி காபி சாப்பிடலாம்”

“பரவா இல்ல சார்.“

எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்தார்கள்.

“ அந்த இடத்துல விபத்து நடந்து இதுவரை யாரும் பொழச்சதே இல்ல சார். விபத்து நடந்தா பொணமாத்தான் சார் எடுப்போம். நசுங்கி கிடக்கிற கார்களில் யாரையாச்சும் உசிரோட எடுக்க மாட்டோமான்னு கிடந்து தவிப்போம் சார். இப்பக் கூட கிஷோர் செத்துருப்பான்னுதான் சார் ஓடியாந்தோம். ரெண்டுப் பசங்களையும் உசிரோடப் பெத்தவங்ககிட்ட சேர்த்திருக்கோம் சார். ஆண்டவன் கொடுத்த இந்த மன நிம்மதி போதுங்க சார்.எதையாவது சாப்பிட்டு இந்த மன நிலைய டிஸ்டர்ப் பண்ணிக்க ஆசப் படலங்க சார். பசங்க நூறு வருஷம் நல்லா இருப்பாங்க சார்”

”வேனுக்கு ஏதாச்சும்...”

“ அடப் போங்க சார், ரெண்டு ஜீவனக் காப்பாத்தற பெரிய புன்னியத்த கடவுள் எங்களுக்கு இன்னைக்கு தந்திருக்கிறார். ஏற்கனவே உங்களுக்கு நிறைய செலாகும். எங்க கவலை எல்லாம் அதுல எங்களால பங்கெடுக்க முடியலையேன்னுதான் சார். யாரும் பசங்கள திட்டாதீங்க சார்.”

வண்டி பத்திரமாக இருப்பதாகவும். எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி முகவரியும் எண்ணும் தந்துவிட்டு காத்திருக்காமல் போய் விட்டார்கள்.

கை எடுத்துக் கும்பிட்டோம். தாரை தாரையாய் கண்கள் சுரக்க.

சாமி இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். இத்தனை சாமிகளா?

பிள்ளைகள் முற்றாய் குணமானதும் இவர்களிட்ம் அழைத்துப் போய் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாய் கொஞ்ச நேரம் கை எடுத்துக் கும்பிட வைக்கப் போகிறேன். அதை விட வேறென்ன செய்ய முடியும் என்னால்
--



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இத்தனை சாமிகளா? 38691590

இரா.எட்வின்

இத்தனை சாமிகளா? 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 2:03 pm

///“ அடப் போங்க சார், ரெண்டு ஜீவனக் காப்பாத்தற பெரிய புன்னியத்த கடவுள் எங்களுக்கு இன்னைக்கு தந்திருக்கிறார். ஏற்கனவே உங்களுக்கு நிறைய செலாகும். எங்க கவலை எல்லாம் அதுல எங்கலாள பங்கெடுக்க முடியலையேன்னுதான் சார். யாரும் பசங்கள திட்டாதீங்க சார்.”

////


இத்தனை சாமிகளா? 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 21, 2011 2:07 pm

நெகிழிச்சியான சம்பவம் - அண்ணே உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நாமலாம் கடவுளா நாலு கைய்யோட நாலு தலயோட தேடிக்கிட்டு இருக்கோம் ஆனா அவரு உங்கள மாதிரி என்னமாதிரி சர்வ சாதாரண பொதுஜனமாக உலா வராறு அதான் அவர நம்மால உணரமுடியல . உதவும் எண்ணமுள்ள ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான். அது சரி இது கதயா இல்ல சம்பவமா அத சொல்லலியே



ஈகரை தமிழ் களஞ்சியம் இத்தனை சாமிகளா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 2:13 pm

balakarthik wrote:நெகிழிச்சியான சம்பவம் - அண்ணே உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நாமலாம் கடவுளா நாலு கைய்யோட நாலு தலயோட தேடிக்கிட்டு இருக்கோம் ஆனா அவரு உங்கள மாதிரி என்னமாதிரி சர்வ சாதாரண பொதுஜனமாக உலா வராறு அதான் அவர நம்மால உணரமுடியல . உதவும் எண்ணமுள்ள ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான்.
என்ன அதுக்குனு இவ்வளவு புகழ கூடாது பாலா சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 21, 2011 2:15 pm

அருமை அருமை... இத்தனை சாமிகளா? 224747944




இத்தனை சாமிகளா? Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 21, 2011 2:15 pm

முரளிராஜா wrote:என்ன அதுக்குனு இவ்வளவு புகழ கூடாது பாலா சிரி

நீங்க நித்தியமும் வனங்கும் ரஞ்சிதமான கடவுள் நீங்க இந்த லிஸ்ட்டுல வரமாட்டீங்க புன்னகை புன்னகை புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் இத்தனை சாமிகளா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 2:17 pm

இது உண்மை சம்பவமா எட்வின்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 2:22 pm

balakarthik wrote:நெகிழிச்சியான சம்பவம் - அண்ணே உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நாமலாம் கடவுளா நாலு கைய்யோட நாலு தலயோட தேடிக்கிட்டு இருக்கோம் ஆனா அவரு உங்கள மாதிரி என்னமாதிரி சர்வ சாதாரண பொதுஜனமாக உலா வராறு அதான் அவர நம்மால உணரமுடியல . உதவும் எண்ணமுள்ள ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான். அது சரி இது கதயா இல்ல சம்பவமா அத சொல்லலியே

இத்தனை சாமிகளா? 359383




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat May 21, 2011 2:24 pm

தாமு wrote:///“ அடப் போங்க சார், ரெண்டு ஜீவனக் காப்பாத்தற பெரிய புன்னியத்த கடவுள் எங்களுக்கு இன்னைக்கு தந்திருக்கிறார். ஏற்கனவே உங்களுக்கு நிறைய செலாகும். எங்க கவலை எல்லாம் அதுல எங்கலாள பங்கெடுக்க முடியலையேன்னுதான் சார். யாரும் பசங்கள திட்டாதீங்க சார்.”

////


இத்தனை சாமிகளா? 224747944

மிக்க நன்றி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இத்தனை சாமிகளா? 38691590

இரா.எட்வின்

இத்தனை சாமிகளா? 9892-41
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 2:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக