ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

+6
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
SK
அருண்
ரபீக்
தாமு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by தாமு Mon May 23, 2011 8:59 am

ஒரு பெரிய வீழ்ச்சி என்று இதைச் சொல்லிவிடமுடியாது. ஒரு சிறிய Set Back என்று வேண்டுமானால் சொல்லலாம். இதைவிட பெரிய தோல்விகளைக் கண்டபோதெல்லாம் கூட உங்கள் தலைவரும், தந்தையுமான கலைஞர் அநாயாசமாக அடுத்த நாளே உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தி அறிக்கை விடுத்துள்ளார். இன்று வரையிலும் கழகம் ஒரு இரும்புக் கோட்டையாக நிலைத்து நிற்பதற்கு உடன்பிறப்புகளுக்கான அவரது கடிதங்கள் காரணமாயிருக்கின்றன. மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்றோ இலங்கைப் பிரச்சினைக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் (மத்திய அரசுக்கு) அவர் எழுதிய கடிதங்களே, மக்களுடைய கோபத் தீயை கொழுந்து விட்டு எழச்செய்து இரும்புக் கோட்டையை, இளக்கிப் பார்த்திருக்கிறது. இதையும் மறுப்பதற்கில்லை.

ஸ்டாலின் அவர்களே, தளபதி என்ற பட்டத்துடன், கழக் தொண்டர்களுடனும், மக்களோடும் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நெருக்கமாக பழகிக்கொண்டு வந்துள்ள உங்களுக்கு இந்த உண்மை புரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவனுக்கு சாதாரணமாக சிறிய அளவில் கிடைக்கக் கூடிய அனுதாபத்தைக் கூட அறுவடை செய்ய இயலாத வகையிலும், மாறாக மேலும் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் அளவிலுமே உங்கள் தலைவரின் செயல்பாடுகள் கடந்த ஒரு வாரமாக அமைந்திருக்கின்றன.

முன்பு மக்கள் பிரச்சினைக்காக டெல்லிக்கு கடிதம் மட்டுமே அனுப்பினார் என்று தான் மக்கள் கொதித்தெழுந்தார்கள். இன்று அதில் எண்ணெய் வார்ப்பது போல் மகளுக்காக நேரடியாக டெல்லி செல்வதாக அறியப்படுகிறது. மகளுக்காக இன்று டெல்லி செல்ல வந்த வேகம், அன்று மக்களுக்காக வநதிருந்தால் மக்கள் இவ்வளவு கொதிப்படைந்திருக்க மாட்டார்களே? அல்லது இன்றும் அதேப்போல மகளுக்காக ஒரேஒரு கடிதம் மட்டுமே டெல்லிக்கு அனுப்பிவிட்டு இங்கு வேலையைக் கவனித்திருந்தால் மக்களிடம் ஏற்பட்ட கோபம் ஓரள்விற்கு தணிக்கப்பட்டிருக்குமே?

சரி அதையெல்லாம் விடுங்கள். தமிழக மக்கள் என்ன செய்தாலும் ஒவ்வொரு முறையும் ஆட்சியை மாற்றிவிடுவார்கள் என்ற அசட்டையில் அவர் இஷ்டப்படி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அடுத்தமுறை ஆட்சியை மாற்றுவதாய் இருந்தால் அதற்கு தயாராக கட்சியை வலுவாக வைத்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டாமா? தோல்வியில் துவண்டிருக்கும் தொண்டர்களை உற்சாகப் படுத்தி, சுற்றிச் சுழல வைத்து அடுத்த முறையாவது வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி கழகத்தை வலிமையுடன் வழிநடத்த முயற்சி மேற்கொள்ள வேண்டாமா?

தோற்றுப் போய் எட்டு நாள் கழித்து, எட்டாம் நாள் துக்கம் என்பார்கள் அதேப் போன்று ஒரு அறிக்கை வருகிறது. அதிலும் கழகக் கண்மனிகளை உற்சாகப்படுத்தி எந்த வாசகமும் இல்லை. கழுத்தறுத்த கூட்டாளிக்கு எந்த குட்டும் இல்லை. மாறாக தனக்கும் தன் மகளுக்கும் எதிராக கண்ணுக்குத் தெரியாதவர்களிடமிருந்து ஒரு மறைமுகப் போர் தொடுக்கப்பட்டதாகவும், அந்த இறுதிப் போரில் வெல்ல வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தளபதி அவர்களே உடன்பிறப்புகள் குழம்பிப் போயுள்ளனர், இந்த அறிக்கையைக் கண்டு. முதல் முறையாக கழகத்தின் எதிர்காலம் குறித்து லேசான ஒருவித பய உணர்ச்சி அவர்களிடம் தென்படுகிறது. இதற்கு நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும். 'மனோகரா' படத்தில் வரும் புருஷோத்தமரைப் போல் அவர், கழகத்தைப் பற்றியோ, தொண்டர்களைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நீங்களும் மனோகரனைப் போல் ஏதோவொரு காரணத்திற்காக தலைவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு உங்கள் அன்றாட கடமைகளை மட்டும் செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இனி அப்படி இருக்க முடியாது. காலம் கடந்து கொண்டிருக்கிறது. பொறுப்பதற்கு இனி ஏதும் இல்லை. பொங்கி எழ வேண்டிய தருணம் வந்துவிட்டது!!!
வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது தலைமை பதவி கேட்பவர்களும், கேளிக்கை கலை நிகழ்ச்சி நடத்துபவர்களும், அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில் வெளிவரமுடியாத நிலையில் இருக்கின்றார்கள். இனி அவர்களை மக்கள் மட்டுமல்ல, எந்த ஒரு மானமுள்ள திமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் உங்கள் முப்பத்தைந்து வருட பொது வாழ்வில் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தோடு பவனி வந்துள்ளீர்கள். மீதி இருபத்தி மூன்று ஆண்டுகள் மிகப் பெரிய மலைகளோடு முட்டி மோதி, ஆற்றுச் சுழலிலும், சமுத்திரச் சுனாமியிலும் எதிர் நீச்சல் போட்டு வந்துள்ளீர்கள்.

இன்றும் கூட கழகத்திற்கு மிகப்பெரிய வீழ்ச்சி இது என்று ஊடகங்களால் பரப்புரை செய்யப்படும் நிலையிலும், உங்களால் மட்டுமே, உங்கள் ஒருவரால் மட்டுமே திமுக வின் அடையாளமாக தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியில் வரமுடிகிறது, அல்லது வருகின்றீர்கள். மக்களை நேரிடையாக சந்திக்கின்றீர்கள். அவர்களும் உங்களை அன்போடு அரவணைக்கின்றார்கள். மிசா காலத்தில் ஒரு வருடத்திற்கும் மேல் மிக மோசமான சிறைக் கொடுமைகளை அனுபவித்திருக்கின்றீர்கள். நீங்கள் பதவி வகித்த காலங்களில் உங்கள் மேல் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் எழவில்லை, ஒரு முறை அப்படி குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடர்ந்தாலும், கட்டிய பாலங்களை தோண்டிப் பார்த்து நீங்கள் உத்தமர் என்ற உண்மை உலகிற்கு உரத்துச் சொல்லப்பட்டது.

இதற்கெல்லாம் பரிசாகத்தான், இப்படிப்பட்ட எதிர்ப்பு அலையிலும், உங்களுக்கு நிகராக மதிக்கப்படுகின்ற ஒரு மனிதருக்கும் எதிராக உங்களுக்கு வெற்றி மாலையை சூட்டியிருக்கின்றார்கள் மக்கள். இது உங்களுடைய தனிப்பட்ட உழைப்பிற்கும், திறமைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

சரி இதையெல்லாம் பேசி இனி பிரயோஜனம் இல்லை. இப்பொழுது மக்கள் குறிப்பாக இளைஞர்களும், யுவதிகளும் பாரம்பரியம், வரலாறு, கடந்த கால சாதனைகள் அல்லது வேதனைகள், நபர்களின் தகுதிகள் இத்தியாதிகள் எல்லாம் பார்த்து வாக்களிப்பதில்லை. ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தில் மிதப்பவர்கள், அன்றைய நிலையில் என்ன விஷயம் சூடாக இருக்கின்றது, அதை யார் எப்படி அன்றைக்கு டீல் செய்கிறார்கள், என்பதை அவ்வப்பொழுது வரும் தகவல்கள் அல்லது செய்திகளை வைத்து எடை போட்டு ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிலைமையில் தான் இருக்கின்றார்கள்.

இதில் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. காலத்திற்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால், காலம் கடந்து போய்க்கொண்டே இருக்கும். நாம் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு வேடிக்கைப்பார்க்க வேண்டியது தான். இன்று விஜயகாந்த் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியாக வந்துவிட்டார். நாளை அதிமுக அரசின் குறைபாடுகளை சட்டமன்றத்திலும், வெளியிலும் எதிர்த்துத் தீவிரமாக போராடினால், ஆட்சி அதிகாரத்தை அடுத்தமுறை, அவருக்கு மாற்றித்தர மக்கள் தயங்க மாட்டார்கள். இன்றைய சூழ்நிலையில் விஜயகாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள். இது தான் நிதர்சனம்!

என்ன காரணத்தாலோ, வீரபாண்டியார் போன்ற குற்றப்பின்னனி கொண்டவர்களையும், ஏ.கே.எஸ். விஜயன் போன்ற கோடறிக்காம்பான மாவட்டச் செயலர்களையும் பெறும் சுமையாக தூக்கிக் கொண்டு நீங்கள் ஓட வேண்டியிருக்கிறது. விஜயகாந்துக்கு இந்தச் சுமைகள் எல்லாம் இல்லை. அவரையே தூக்கிக் கொண்டு ஓடும் தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்சியில் இருக்கின்றார்கள். இதையெல்லாம் உங்களைக் குறைத்து மதிப்பிடச் சொல்லவில்லை. மாறாக, நீங்கள் உடனடியாக களம் இறங்கி ஆட வேண்டிய அவசிய அவசரத்தை உணர்த்தவே எழுதுகின்றேன்.

மக்களுக்கும், இளைஞர்களுக்கும் உங்கள் மேல் மிகுந்த மதிப்பிருக்கின்றது. ஆனால் நம்பிக்கை இல்லை. தந்தைக்கு அடி பணிந்து சோம்பி இருந்து விட்டீர்கள், இனியும் எழுந்து வர மாட்டீர்கள் என நினைக்கின்றார்கள்.

இந்த, உங்களுடைய இமேஜை உடைத்தெறியுங்கள், தலைமைப் பதவிக்கு தாவுங்கள், கருங்காலிகளையும், கோடறிக் காம்புகளையும் களை எடுத்து விடுங்கள். உங்கள் மேல் தான் மக்கள் மதிப்பு வைத்திருக்கின்றார்கள். விஜயகாந்த் சுட்டிக் காட்டிய முரசு சின்னத்திற்கு தான் மக்கள் வாக்களித்தார்கள், வேட்பாளர்களை யாரும் பார்க்கவில்லை. அது மட்டுமா, அதே வடிவிலிருந்த கூடை, தேங்காய்மூடி போன்ற சின்னங்களுக்கும் வாக்களித்திருக்கின்றார்கள்.

அதனால் பெரிய பலம் இருப்பதாக நினைத்துக் கொண்டு களைகளுக்கு எல்லாம் தண்ணீர் விட்டு வளர்த்து, தோளில் சுமந்து கொண்டு செல்லாமல், கழகத்திற்கு தலைமை ஏற்று, "வீழ்ந்த இடத்திலிருந்து எழுந்து, விட்ட இடத்தைப் பிடிக்க" ஓடி வாருங்கள் ஸ்டாலின் அவர்களே!!!

கொக்கரக்கோ



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by ரபீக் Mon May 23, 2011 10:09 am

அரசியலில் வீழ்ச்சியும் எழுச்சியும் சாதாரணம் என்பது அவர்களுக்கு தெரியாத என்ன ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by அருண் Mon May 23, 2011 11:20 am

இனி கஷ்டம் தான்.. ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by தாமு Mon May 23, 2011 11:28 am

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by SK Mon May 23, 2011 11:38 am

விஜயகாந்த் சுட்டிக் காட்டிய முரசு சின்னத்திற்கு தான் மக்கள் வாக்களித்தார்கள், வேட்பாளர்களை யாரும் பார்க்கவில்லை. அது மட்டுமா, அதே வடிவிலிருந்த கூடை, தேங்காய்மூடி போன்ற சின்னங்களுக்கும் வாக்களித்திருக்கின்றார்கள்.

விஜயகாந்த் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வந்ததற்கு இதுவே ஒரு சிறந்த சான்று
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by மஞ்சுபாஷிணி Mon May 23, 2011 11:58 am

முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை... விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 12:29 pm

இனி ஸ்டாலின் முன்னிலை படுத்தப்படுவார். தி மு க எனும் அரசியல் கட்சி சரியான நேரத்தில் பாடம் கற்றுள்ளது. ஸ்டாலின் தலைமையில் உண்மையான கழகத் தொண்டர்கள் அணிவகுக்க எதிர்காலத்தில் ஒரு கலப்படமில்லா தி மு க ஆட்சி அமைய வாழ்த்துகிறேன் ....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Aவிட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Bவிட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Dவிட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Uவிட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Lவிட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Lவிட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Aவிட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by தாமு Mon May 23, 2011 12:34 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by பிளேடு பக்கிரி Mon May 23, 2011 12:55 pm

வரும்ம்ம்ம்ம்..... ஆனா வராது... இனி மாற்று கட்சி கேப்டன் தான்



விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by உமா Mon May 23, 2011 1:09 pm

பிளேடு பக்கிரி wrote:வரும்ம்ம்ம்ம்..... ஆனா வராது... இனி மாற்று கட்சி கேப்டன் தான்


விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  359383 விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  359383 விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  359383 விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  359383 விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!  Empty Re: விட்ட இடத்தைப் பிடிக்க ஓடி வாருங்கள்...! ஸ்டாலின் அவர்களே!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 38 தங்கம் உள்பட 101 பதங்கங்களுடன் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்து சாதனை!
» ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறி அனாதைகளாகி விட்ட தலைவர்கள்-ஸ்டாலின்
» ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது?
»  கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ரயில்!
» கார் ரேஸ் - 7வது இடத்தைப் பிடித்த அஜீத்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum