ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை என்ற இலட்சியப் பயணத்தில் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை: விடுதலைப்புலிகள்

Go down

விடுதலை என்ற இலட்சியப் பயணத்தில் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை: விடுதலைப்புலிகள் Empty விடுதலை என்ற இலட்சியப் பயணத்தில் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை: விடுதலைப்புலிகள்

Post by Guest Sun May 22, 2011 11:30 pm

விடுதலை என்ற இலட்சியப் பயணத்தில் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை: விடுதலைப்புலிகள் Kopie%2Bvon%2Bpulikkodi_newஅழிவின் விளிம்பை எட்டிய பொழுதும் நாம் அழிந்துவிடவில்லை. துயரத்தின்
எல்லைக்கு இட்டுச்செல்லப்பட்ட பொழுதும் நாம் துவண்டுவிடவில்லை. இன்றைய நாள்
எமது தேசத்திற்கு முடிவுரை எழுதப்பட்ட துக்க நாளன்று. சிங்களம் எழுதிய
முடிவுரையை புதிய அத்தியாயமாக நாம் மாற்றியெழுதிய நா...ளே இந்நாளாகும்.

நெருப்பில்
சுட்டெரிக்கப்பட்ட எமது தேசம் அக்கினிப்பறவையாக உயிர்த்தெழுந்த நாளே
இன்றைய நாளாகும் என அனைத்துலகத் தொடர்பகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தமிழீழம்
18.05.2011

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

21ம்
நூற்றாண்டில் உலக வரலாற்றில் மிகப்பெரும் இனவழிப்பு நடவடிக்கையை சிங்களம்
அரங்கேற்றிய நாள் இன்று. உயிரை வேலியாக்கி, குருதியை நீராக்கி, வாழ்வை
உரமாக்கி எமது தேசம் அமைத்த நடைமுறை அரசை, உலகம் கண்மூடி - வாய்புதைத்து
நிறக் , சிங்களம் சிதைத்தழித்த நாள் இன்று. விடுதலை வேண்டி நின்ற எமது
தேசத்தின் மீது சிங்களம் இனவெறித்தாண்டவமாடிய நாள் இது. குறுகிய
நிலப்பரப்பில் தஞ்சம்தேடி நின்ற எமது மக்கள் மீது கொடிய ஆயுதங்களை ஏவி
தமிழ்க் குருதியில் சிங்களம் ஆனந்தகளிப்புற்றதும் இன்றைய நாளிலேயாகும்.

எமது
தேசத்தின் இதயத்தில் ஆறாத வடுவாகப் பதிந்து நிற்கும் இந்நாள் நாம் துயர்
கொண்டு துவண்டழும் நாளன்று. துயரக்கனலில் மூழ்கி அந்நியரிடம் நாம் ஆசுவாசம்
தேடிக்கொள்ளும் நாளும் இதுவன்று.

அழிவின் விளிம்பை எட்டிய பொழுதும்
நாம் அழிந்துவிடவில்லை. துயரத்தின் எல்லைக்கு இட்டுச்செல்லப்பட்ட பொழுதும்
நாம் துவண்டுவிடவில்லை. இன்றைய நாள் எமது தேசத்திற்கு முடிவுரை எழுதப்பட்ட
துக்க நாளன்று. சிங்களம் எழுதிய முடிவுரையை புதிய அத்தியாயமாக நாம்
மாற்றியெழுதிய நாளே இந்நாளாகும். நெருப்பில் சுட்டெரிக்கப்பட்ட எமது தேசம்
அக்கினிப்பறவையாக உயிர்த்தெழுந்த நாளே இன்றைய நாளாகும்.

எமது அன்பார்ந்த மக்களே,

இரண்டாண்டுகளுக்கு
முன்னர் எமது மண்ணை ஆக்கிரமித்து ஆரவாரித்த சிங்களம் இன்று உலக அரங்கில்
என்றுமில்லா நெருக்கடிக்கு ஆளாகி நிற்கின்றது. வெற்றிக்களிப்பில் அன்று
திளைத்த சிங்களம் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றது. எமது
மாவீரர்கள் புரிந்த அதியுயர் ஈகங்களும், எமது மக்களின் மானச்சாவும் இன்று
எமது போராட்ட வரலாற்றில் புதிய அர்த்தபரிமாணத்தை தோற்றுவித்துள்ளன.
முள்ளிவாய்க்காலில் வழிந்தோடிய தமிழக்குருதி ஊழித்தீயாக எழுந்து சிங்களத்தை
சுட்டெரிக்கும் நாள் நெருங்கி வருவதையே இன்று உலக அரங்கில் நிகழ்ந்தேறும்
மாற்றங்கள் உணர்த்தி நிற்கின்றன.

அன்று சிங்களம் அரங்கேற்றிய
இனவழிப்பை வாய்பேசா மௌனியாக நினறு வேடிக்கை பார்த்த உலகம், இன்று
விழித்தெழுந்து உண்மையை உரைக்கத் தொடங்கிவிட்டது. வன்னிப் போரில் கண்மூடி
நின்ற ஐ.நா மன்றம் இன்று தனது நிபுணர் குழுவின் அறிக்கை ஊடாக எமது மண்ணில்
நிகழ்ந்தேறிய வரலாறு காணாத மனிதப்படுகொலையை வெளிக்கொணர்ந்துள்ளது. தேசிய
நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் உலக ஒழுங்கு என்பது என்றோ
ஒருநாள் உண்மையின் முன் தலைவணங்கியே ஆக வேண்டும் என்பதையே ஐ.நா நிபுணர்
குழுவின் அறிக்கை உணர்த்தி நிற்கின்றது.

சனநாயக மூலாம் பூசி,
இறையாண்மையைக் கவசமாகக் கொண்டு, மனிதநேயப் படை நடவடிக்கை என்ற போர்வையில்
சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு நடவடிக்கை இன்று உலகின் முன்னால்
பட்டவர்த்தனமாகி நிற்கின்றது. தனது முகத்திரை கிழித்தெறியப்பட்ட நிலையில்
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு ஆளாகும் அபாயத்தை எதிர் நோக்கி நிற்கும்
சிங்களம், நல்லிணக்கத்தின் பெயரில் நீதியைக் குழிதோண்டிப் புதைக்க
முற்படுகின்றது. நெருக்கடியின் உச்சத்தில் நினறாலும்கூட அரசியல் பேச்சு
வார்த்தை, அதிகாரப்பரவலாக்கம் என்று நாடகமாடி தமிழீழ தேசத்தின்
தன்னாட்சியுரிமைக்கு சாவுமணியடிப்பதற்கும் சிங்களம் பகீரதப் பிரயத்தனம்
செய்கின்றது.

எமது பாசத்திற்குரிய மக்களே,

சிங்களம்
வகுத்துள்ள அரசியல் வியூகத்தை உடைத்தெறிந்து எமது விடுதலைப் பயணத்தை
முழுவீச்சுடன் முன்னெடுக்கும் பொறுப்பு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு
இன்று அனைத்துத் தமிழர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. மாறிவரும் உலகின்
ஓட்டத்திற்கு ஏற்ப இன்று எமது போராட்ட செல்நெறியும் புதுவடிவம்
பெற்றுள்ளது. இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களையும்,
ஆயுதப் படைகளையும் அனைத்துலக அரங்கில் குற்றவாளிகளாக்கித் தண்டிக்கும்
பெரும் பொறுப்பை உலகத் தமிழினம் சுமந்து நிற்கின்றது. அதேநேரத்தில் எமது
விடுதலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும்
பொறுப்பும் உலகத் தமிழர்களையே சார்ந்துள்ளது.

இன்று உலக அரங்கில்
எமது தேசத்திற்கு சாதகமான புறச்சூழல் தோன்றிவருகையில், தாய்த் தமிழகத்தில்
மிகப்பெரும் சனநாயகப் புரட்சி நிகழ்ந்தேறியுள்ளது. ஈழத்தமிழர்
பிரச்சினையில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இரண்டு கட்சிகள், ஆளும்
கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் தோற்றம் பெற்றிருக்கும் விசித்திரம்
இன்று தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ளது. எமது தொப்புள் கொடி உறவுகளாகிய
தமிழக மக்கள் என்றென்றும் எமது தேசத்திற்கு உறுதுணையாக நிற்பார்கள்
என்பதையே தமிழகத்தின் நடந்து முடிந்த தேர்தல் சுட்டி நிற்கின்றது.

வன்னிப்
போரின் இறுதி நாட்களில் எமது மக்களுக்காகக் குரலெழுப்பித் தனி ஈழமே
இறுதித் தீர்வு என்று அன்று ஆணித்தரமாக உரைத்த செல்வி ஜெயலலிதா ஜெயராம்
அவர்கள் இன்று தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். தனது
ஆட்சிப்பணிகளில் ஒன்றாக ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கும்,
எமது மக்களின் கௌரவமான வாழ்விற்கு வழிசமைப்பதற்கும் மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் உறுதிபூண்டிருப்பது எமது தேசத்திற்கு மிகுந்த ஆறுதலை
அளிக்கின்றது. எமது மக்களின் துயர்துடைப்பதற்கு பாரத தேசத்தின்
மனச்சாட்சியை தமிழக முதலமைச்சர் தட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கை உண்டு.
எமது மக்களின் விடிவிற்கு வழிசமைப்பதற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சித்
தலைவர் விஜயகாந்த் அவர்களும், ஏனைய தமிழகத் தலைவர்களும் தமிழக அரசுக்கு
உறுதுணை நிற்பார்கள் எனபதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை. கடந்த ஆறு
தசாப்தங்களாக எமது மக்களுக்காக குரலெழுப்பி வரும் அனைத்துத் தமிழகத்
தலைவர்களும் ஈழத்தமிழர் பிரச்சனையில் தொடர்ந்தும் ஒருமித்த குரலில் எமக்கு
உறுதுணை நிற்க வேண்டும் என்று அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

இத்தருணத்தில்
எமது மக்களுக்காகக் குரலெழுப்பி, தமிழகத்தில் தமிழீழ ஆதரவுச் சூழலைக்
கட்டியெழுப்பிய மிகப்பெரும் வரலாற்றுப் பணியை ஆற்றிய அனைத்துத்
தலைவர்களுக்கும், உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

எமது அன்பார்ந்த மக்களே,

வன்னி
மண்ணில் நிகழ்ந்தேறிய தமிழினப் படுகொலையை ஒப்புக்கொள்வதில் தயக்கம்காட்டி
வந்த உலக சமூகம், முள்ளிவாய்க்காலில் சிங்களம் அரங்கேற்றியது பெரும்
போர்க்குற்றம் என்று இன்று ஒப்புக்கொண்டிருப்பது ஒருவகையில் எமது
தேசத்திற்கு கிடைத்த அரசியல் வெற்றியாகும். இந்த வகையில் கடந்த ஆறு
தசாப்தங்களுக்கு மேலாக தமிழீழ தேசத்தின் மீது சிங்களம் அரங்கேற்றுவது ஓர்
பெரும் இனவழிப்பு நடவடிக்கை என்பதையும் உலகம் ஒப்புக்கொள்ளும் நாள்
வெகுதொலைவில் இல்லை என்பதையே உலகின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
உணர்த்தி நிற்கின்றன.

இதற்கான அரசியல் புறச்சூழலை தோற்றுவிக்கும்
பரப்புரைப் பணிகளை முழுவீச்சுடன் முன்னெடுக்கும் தலையாய பணி இன்று ஒவ்வொரு
தமிழர்களுக்கும் உண்டு. இதுவே தமிழீழத் தனியரசை இறுதித் தீர்வாக உலகம்
முன்மொழியும் காலத்தையும் கனிய வைக்கும் என்பது திண்ணம். இவ்வரலாற்றுப்
பணியை ஏற்று விரைந்து செயலாற்றுமாறு எம்தமிழ் உறவுகளுக்கு நாம் அறைகூவல்
விடுக்கின்றோம்.

விடுதலை என்ற இலட்சியப் பயணத்தில் நாம்
ஓய்ந்துவிடப் போவதில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு ஏற்ப இன்று எமது
போராட்ட வடிவம் மாற்றம் பெற்றிருந்தாலும், எமது இலட்சியம் என்பது தமிழீழத்
தனியரசு என்ற நேரிய பாதையிலேயே பயணிக்கின்றது. எமது தலைவனின் வழிகாட்டலில்,
மாவீரர்களினதும், எமது மக்களினதும் கனவை நனவாக்கி தமிழீழ தேச விடுதலையை
வென்றெடுப்போம் என இந்நாளில் உறுதிபூணுவோமாக.

நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

வன்னி ஆன்லைன்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் தமிழர் இயக்கத்தில் தலைவன், தொண்டன் என்ற கருமாந்திரம் இருக்காது - சீ்மான்
» நாம் உயிரோடு வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை: பெண் போராளி
» முன்னாள் விடுதலைப்புலிகள் 866 பேரை, இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.
» நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலை
» ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கிழக்கில் மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு ஆரம்பம்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum