புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
171 Posts - 80%
heezulia
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
3 Posts - 1%
Pampu
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
1 Post - 0%
prajai
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
336 Posts - 79%
heezulia
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_m10சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்

Page 1 of 2 1, 2  Next

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Thu May 26, 2011 3:12 pm

சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-3

பால் ப்ரண்டன் இந்தியாவில் கண்ட அபூர்வசக்திகள் படைத்தவர்கள் அனைவருமே யோகிகள் அல்ல. இங்கிலாந்தில் அவரிடம் அந்த இந்தியர் சொன்னபடி முறைப்படி ஏதாவதொரு விதத்தில் அந்த சக்திகளைப் பெற்றிருந்த, யோகிகள் வரிசையில் சேர்க்க முடியாத மனிதர்களும் இருந்தார்கள். அப்படி ஒரு பக்கிரியை அவர் பர்ஹாம்பூரில் பார்த்தார். பணம் கேட்டு வந்த அந்தப் பக்கிரி தன்னிடம் விசேஷ சக்தி இருப்பதாகச் சொல்ல பால் ப்ரண்டன் அதைக் காண்பிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கிரி பால் ப்ரண்டனின் முன்னிலையில் தன் வலது கண்ணைத் தோண்டி எடுத்தார். அதைக் காண சகிக்காத பால் ப்ரண்டன் திரும்பவும் வைத்துக் கொள்ளச் சொல்ல அந்தப் பக்கிரி அப்படியே அந்தக் கண்ணைத் திரும்பவும் சுலபமாகப் பொருத்திக் கொண்டார். கண்ணுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எந்த உபகரணங்களும் இல்லாமல் சர்வ சகஜமாக அப்படி எடுக்கவும் திரும்ப பொருத்திக் கொள்ளவும் முடிந்த அந்தப் பக்கிரியிடம் "இது எப்படி சாத்தியமாகிறது?" என்று பால் ப்ரண்டன் கேட்க அந்தப் பக்கிரி அதை விளக்க மறுத்து விட்டார். "ஐயா, இது ஒரு குடும்ப ரகசியம். இந்த வித்தை தந்தை மகனுக்கு, மகன் தன் மகனுக்கு என பரம்பரை வழிகளில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது" என்றார்.

இது போன்ற வித்தைகளால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்வி பால் ப்ரண்டன் மனதில் எழுந்தது. அவர் தன்னிடமிருந்த பணம் சிறிது கொடுத்து அவரை அனுப்பி விட்டார். இது போன்ற காசு பணத்திற்காக வித்தை காட்டும் மனிதர்கள் இருக்கும் இந்த தேசத்தில் ராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற மகா சித்தர் இருந்திருக்கிறார் என்பதை அறிந்த பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நேரடி சீடர்களில் ஒருவரான மஹாசாயா என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மஹாசாயாவிற்கு மிகவும் வயதாகியிருந்தது. மஹாசாயா கல்கத்தா கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், வரலாறு, அரசியல் பொருளாதாரம் என்ற மூன்று துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அப்படிப்பட்ட ஒரு உயர் கல்வியாளர் ராமகிருஷ்ணர் என்ற கல்வியறிவில்லாத ஞான சித்தரிடம் ஈர்க்கப்பட்டு சீடராக மாறியது பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ணரின் ஞான சக்தியின் மேன்மையை உணர்த்தியது. ராமகிருஷ்ணரைப் பற்றி அந்த நேரடி சீடரிடம் நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மஹாசாயா தன் குருவைப் பற்றிப் பேசும் போது புதிய மனிதராகவே மாறி விட்டார். ".....ராமகிருஷ்ணர் பணம், பதவி, புகழ், கர்வம், சொத்துக்கள் எல்லாம் ஆத்ம ஞானத்தின் முன் தூசுகளே என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தார். அந்த நாட்கள் அருமையானவை. அந்த மகான் யோக நிலைக்குச் சென்று அமர்ந்திருப்பார். சுற்றியுள்ள நாங்கள் அவரைக் குருவாக அல்லாமல் இறைவனாகவே கண்டோம்....அப்படிப்பட்ட சக்தி அவர் இருக்கும் அந்த அறையெங்கும் பரவியிருக்கும். அவர் ஒருவரிடம் இறையுணர்வு ஏற்படுத்த, தானிருக்கும் யோக நிலைக்கு இழுத்துச் செல்ல பெரிதாக எதுவும் செய்யத் தேவையிருக்கவில்ல. அவர் லேசாகத் தொட்டால் போதும். அந்த தெய்வானுபவம் கிடைத்து விடும். அந்த அனுபவத்தின் பேரானந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை......"

ஜென்ம ஜென்மங்களாக தவமிருந்து பெறக் கிடைக்கும் அனுபவத்தை தன் தொடுதலாலேயே ஏற்படுத்த முடிவது ஒரு ஒப்பற்ற சக்தியல்லவா? விவேகானந்தருக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்தி அல்லவா அவர் தன் வழிக்கு இழுத்தார். ஒரு நரேந்திரனை விவேகானந்தராக்கிய பெருமை அதனாலல்லவா கிடைத்தது.? ராமகிருஷ்ணரை நேரில் சந்திக்க முடிந்த காலத்தில் இந்தியா வராவிட்டாலும் மஹாசாயா போன்ற அவரது நேரடி சீடரைச் சந்திக்க முடிந்ததில் பால் ப்ரண்டன் மனம் நிறைவாக இருந்தது.

கல்கத்தாவில் மருத்துவராக இருந்த டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் பால் ப்ரண்டனுக்கு யோகிகள், யோக சக்திகள் மேல் இருந்த ஆர்வத்தை அறிந்து யோகி நரசிங்கஸ்வாமி பற்றி சொன்னார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா சொன்னார்.

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

(பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார். இயற்கைக்கு மாறாக மனிதனால் எத்தனையோ செய்து காட்ட முடியும் என்றாலும் அதில் அதிகக் கவனம் வேண்டும். கவனக் குறைவும், சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் அலட்சியமும் உயிரையும் குடித்து விடும் என்பதற்கு நரசிங்கஸ்வாமி ஒரு நல்ல உதாரணம்)

பால் ப்ரண்டன் சந்தித்த மற்ற சக்தியாளர்களையும் அவர் மனதில் இருந்த யோகிகளின் குணாதிசயங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர் கண்ட மஹா யோகியையும் அடுத்த பதிவில் காணலாமா?

(தொடரும்)
என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 3:26 pm

அதிசய மனிதன் தான். தகவல்களுக்கு நன்றி. :வணக்கம்:

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Dove_branch
சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Dசயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Iசயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Vசயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Yசயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Aசயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 3:28 pm

கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றையும் ஒரு மனிதன் குடித்துவிட்டு மீண்டும் உயிரோடு இருந்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு அதிசயம்! ஆனால் இதனாலேயே இவரது உயிர் போனது என்பதைப் படித்தவுடன் மனது கனத்துவிட்டது!

நரசிங்கஸ்வாமி பற்றிய அதிசயத் தகவலுக்கு நன்றி அண்ணா! அடுத்து வரும் அற்புதத் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்!

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 3:32 pm

நரசிங்கஸ்வாமி பற்றிய தகவல்களை எங்கு அறியலாம்! இணையத்தில் கிடைக்கவில்லையே?

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 3:50 pm

வியக்கத்தக்க விடயங்களைப் பகிரும் என் கணேசன் அவர்களுக்கு எவ்வகையில் கைம்மாறு செய்ய இயலும் என வியக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 3:54 pm

சிவா wrote:நரசிங்கஸ்வாமி பற்றிய தகவல்களை எங்கு அறியலாம்! இணையத்தில் கிடைக்கவில்லையே?

நரசிம்ம ஸ்வாமி ( தெய்வத்தை தான் சொல்லுரிங்களா அப்படின்னு சரியா தெரியலை ) ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 4:38 pm

தாமு wrote:
சிவா wrote:நரசிங்கஸ்வாமி பற்றிய தகவல்களை எங்கு அறியலாம்! இணையத்தில் கிடைக்கவில்லையே?

நரசிம்ம ஸ்வாமி ( தெய்வத்தை தான் சொல்லுரிங்களா அப்படின்னு சரியா தெரியலை ) சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் 838572

தெய்வம் இல்லை! மனிதர் தான்!

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 26, 2011 5:13 pm

வியப்பான விஷயங்களை பதிகிறீர்கள். நன்றி! - தொடருங்கள்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 8:49 pm

யோகியின் சுய சரிதை புத்தகத்தில் மகாசயர் பற்றி நிராய தகவல்கள் உள்ளது அது மட்டுமின்றி ஏராளமான யோக சாதனை புரிந்தவர்கள் குறிப்பும் உள்ளது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 26, 2011 9:07 pm

சயனைடு சாப்பிட்ட உடனேயே மரணம் சம்பவிக்கும்.ஒரு சில வினாடிகளே போதுமானது. அதனால் சயனைடின் ருசி என்ன என்பதை யாராலும் அறியமுடியவில்லை. சயனைடின் ருசியை உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு விஞ்ஞானி தன் உதவியாளரிடம் ஒரு ஏற்பாடு செய்து கொண்டார். வாயில் சயனைடை நாக்கின் நுனியில் வைத்துக்கொண்டு உடனே
ருசி பார்த்து சொல்வேன் /அதை உலகுக்கு தெரியப்படுத்தவும் எனக் கூறி பரிசோதனைக்கு
உட்பட்டார். ஆனால் ருசியை கூறுவதற்க்கு முன் மரணம் ஏற்பட்டு விட்டது. சயனைடின்
ருசியை விண்டவர் எவருமில்லை.
சித்தர்கள் இருந்தால் அவர்கள் மூலம் ருசியை அறியலாம்.நம்பலாம் .
நம்பாதவர்கள், சித்தர்கள் கூறுவது சரியா /இல்லையா என்பதை அவர்களே ருசி பார்த்து நமக்கு கூறலாம்.
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக